மின்னஞ்சல், முகநூல், தொலைபேசி மூலம் நண்பர்கள் தெரிவிக்கும் வாழ்த்து மழையில் நனைந்தபடியே மூன்று நாட்களாக மொழிபெயர்ப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், அதுவரை அறிமுகமில்லாத ஒரு நண்பரின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அந்த நண்பர் நமது ஆடியோ கோப்புகளைக் குறித்துக் கேட்டார். நான், “ஆடியோ மட்டும் அல்ல நண்பரே, இப்போது வீடியோ புத்தகமாகவும் அளித்து வருகிறோம்” என்றேன். “வீடியோ புத்தகமா? அப்படியென்றால்…?” என்று கேட்டார் நண்பர்.
நான் அவரது அலுவலகத்தில் இருந்த கணினியைக் கேட்டு வாங்கி, விராடபர்வத்தின் 18வது பகுதியில் இருந்த காணொளி புத்தகத்தைக் காட்டினேன். பார்த்துக் கொண்டேயிருந்தபோது, “ஏங்க. இது கீசக வதம் பகுதில. விராட பர்வத்தில் கீசக வதம் படிச்சா மழை வரும்னு ஓர் ஐதீகம் இருக்கு கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்றார். நான், “இல்லையே!” என்றேன். “அப்படித்தான் சொல்வாங்கங்க.” என்று என்னைப் பார்த்தார். “அப்படியா! இதை நான் கேள்விப்பட்டது கிடையாதே” என்று கேட்டுவிட்டு, பிற விஷயங்களைப் பேசினோம். விடைபெறும் நேரம் வந்த போது, அவர், "கல்கியோட தியாக பூமினு நினைக்கிறேன். அதுல கூட கீசக வதம் மழையைத் தரும்னு ஒரு குறிப்பு இருக்குனு ஞாபகம். இன்னிக்கு பாருங்க மழை கொட்டப்போகுதுனு நினைக்கிறேன்" என்றார். "சரிங்க நல்லா பெய்யட்டும்!" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, நான் அந்த நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
சிரித்துவிட்டு வந்தேனே தவிர, அந்த நண்பர் சொன்ன வார்த்தைகள் என் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. கூகிளில் தேடினேன். ஏதோ ஒரு லிங்கில் "தமிழ்நாட்டில் பழங்காலங்களில் மழை வேண்டி கீசகவதம் தெருக்கூத்தாகவும் நிகழ்த்தப்பட்டு வந்தது" என்ற குறிப்பு கிடைத்தது.
மேலும், http://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_திரைப்பட_வரலாறு என்ற லிங்கில் தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் {ஒலியில்லாத சலனப்படம்} “கீசக வதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1916ல் அது வெளிவந்திருக்கிறது. 1912லேயே "ஹரிச்சந்திரா" வெளிவந்திருந்தாலும், இந்தியாவின் முதல்படம்தான் “ஹரிச்சந்திரா”வாம். அது மும்பையில் தயாரிக்கப்பட்ட படமாம். இதற்கு மழைக்கும் சம்பந்தம் இல்லைதான். எனினும் தென்னகத்தின் முதல் சலனப்படமே கீசக வதமா என்ற திகைப்பு ஏற்பட்டது.
அடுத்ததாக, கல்கியின் தியாக பூமி குறித்து நண்பர் சொன்னது நினைவுக்கு வரவே, அது குறித்துத் தேடுகையில், http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/thiyaga_boomi_2_1.html#.VGTJ-mf4bcc என்ற லிங்கில், தியாக பூமியின் இரண்டாவது பாகத்தில்
என்ற ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருந்தது. சரி அது ஒரு கற்பனைக் கதைதானே, நிஜத்திலா நிகழ்ந்துவிட்டது என்று நாளிதழ் செய்திகளில் ஏதாவது அப்படி வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.
மேலும், http://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_திரைப்பட_வரலாறு என்ற லிங்கில் தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் {ஒலியில்லாத சலனப்படம்} “கீசக வதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1916ல் அது வெளிவந்திருக்கிறது. 1912லேயே "ஹரிச்சந்திரா" வெளிவந்திருந்தாலும், இந்தியாவின் முதல்படம்தான் “ஹரிச்சந்திரா”வாம். அது மும்பையில் தயாரிக்கப்பட்ட படமாம். இதற்கு மழைக்கும் சம்பந்தம் இல்லைதான். எனினும் தென்னகத்தின் முதல் சலனப்படமே கீசக வதமா என்ற திகைப்பு ஏற்பட்டது.
அடுத்ததாக, கல்கியின் தியாக பூமி குறித்து நண்பர் சொன்னது நினைவுக்கு வரவே, அது குறித்துத் தேடுகையில், http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/thiyaga_boomi_2_1.html#.VGTJ-mf4bcc என்ற லிங்கில், தியாக பூமியின் இரண்டாவது பாகத்தில்
நல்லான் சிரித்துவிட்டு, "என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க! மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே!" என்றான்.
"ஆமாமப்பா, நல்லான்! நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள்? இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரியார்.
சம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. "ஒரு வேளை மழை வந்தாலும் வரும்" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.
பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.
என்ற ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டிருந்தது. சரி அது ஒரு கற்பனைக் கதைதானே, நிஜத்திலா நிகழ்ந்துவிட்டது என்று நாளிதழ் செய்திகளில் ஏதாவது அப்படி வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.
அப்படித் தேடிப் பார்த்ததில், http://www.dinamalar.com/news_detail.asp?id=1045988&Print=1 என்ற லிங்கில் ஒரு செய்தி கிடைத்தது. 2014 ஆகஸ்ட் 14ல் வெளிவந்த செய்தி அது. அதன் விபரம் கீழே…
பரமக்குடி : பரமக்குடியில் மழை வேண்டி மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தி வரும் நிலையில், சில நாட்களாக மழை வெளுத்துக்கட்டி வருகிறது.இங்கு மூன்று ஆண்டுகளாக மழை இன்றி, நிலத்தடி நீர் 150 அடிக்கு கீழே போய்விட்டது. மகாபாரதத்தில் "விராட பர்வம்' காதை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இதன்படி சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன், ஆக., 7 முதல் சொற்பொழிவு நடக்கிறது. அன்று முதல் தினமும் மழை பெய்கிறது. ஆக.,11ல் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித்தீர்த்தது. அடுத்து இரு நாட்களும் சாரல் மழை பெய்தது.
என்று அச்செய்திக்குறிப்பில் இருந்தது.
மேலும் http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/05/12/மகாபாரதம்-தொடர்-சொற்பொழிவு/article2219426.ece?service=print என்ற லிங்கில் - 2014 மே மாதம் 12 தேதியிட்ட தினமணி நாளிதழில் கீழ்க்கண்ட செய்தி இருக்கிறது..
மேலும் http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2014/05/12/மகாபாரதம்-தொடர்-சொற்பொழிவு/article2219426.ece?service=print என்ற லிங்கில் - 2014 மே மாதம் 12 தேதியிட்ட தினமணி நாளிதழில் கீழ்க்கண்ட செய்தி இருக்கிறது..
காரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.காரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கவிஞர் அரு. சோமசுந்தரன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வில்லி பாரதம் பத்துப் பருவங்கள் 4337 பாடல்கள். அவற்றில் விராட பருவம் 4ஆம் பருவம் 330 பாடல்கள்.பகவான் கிருஷ்ணரைத் துதித்து முதல் பாடல் தொடங்குகிறது. 5 சருக்கங்கள் மகாபாரதத்தில் நிகழும் காட்சிகள் அனைத்தும் விராட பருவத்தில் நிகழும். ஆகவே இதனை மினி பாரதம் அல்லது பிள்ளை பாரதம் என்பர்.மகாபாரதத்தில் துரியோதனாதியர் 100 பேர். தீயவர்கள் விராட பருவத்தில் கீசகன் மற்றும் அவன் தம்பியர் 104 பேர் தீயவர்கள். மகாபாரதத்தில் திரௌபதியை காந்தாரி துரியோதனனிடம் அனுப்புகிறாள். விராட பருவத்தில் மகாராணி சுதேஷ்னை திரௌபதியை கீசகனிடம் அனுப்புகிறாள். மகாபாரதத்தில் 18 நாள் போர். இதில் ஏராளமான மழைக்குறிப்புக்கள் உள்ளன. எனவே விராட பருவம் படித்தால் மழை பொழியும் என்றார்.
என்ற செய்திக்குறிப்பு இருந்தது.
இந்தச் செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. நண்பர் கீசக வத பர்வம் என்றார். ஆனால், நமக்குக் கிடைத்த தரவுகள் விராட பர்வம் என்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சரி.... திரு.அரு.சோமசுந்தரன் சொல்லியிருப்பதை தினமணியில் குறிப்பிட்ட்டிருப்பது போல, நமது மொழிபெயர்ப்பில் எங்காவது மழை சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறதா என்று பார்த்ததில் http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section14.html என்ற லிங்கில் மழையோடு சம்பந்தப்படுவது போல, திரௌபதியிடம் கீசகன் பேசும் கீழ்க்கண்ட வசனம் கிடைத்தது.
உன்னோடு சேர முடியும் என்று, எனது இதயம் கொள்ளும் நம்பிக்கையால் தூண்டப்பட்டு, எரியும் காட்டைப் போல, கடுமையாகச் சுடர்விட்டெரியும் ஆசைத்தீ {காமத்தீ} என்னைத் தீவிரமாக எரிக்கிறது. ஓ! பெரும் அழகு கொண்டவளே, உன்னுடன் இணைவது என்பது மழை நிறைந்த மேகமாகும். உன்னை நீ எனக்கு அளிப்பது, அந்த மேகத்தில் இருந்து பொழியும் துளியாகும். மன்மதனால் மூட்டப்பட்டுச் சுடர்விட்டெரியும் நெருப்பை நீ தணிப்பாயாக. ஓ! நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, உன்னுடனான சேர்க்கை எனும் ஆசையால் கூராக்கப்பட்டு அடிக்கப்பட்ட மன்மதனின் கடும் கணை, வெறிகொள்ளச் செய்யும் தனது மூர்க்கமான போக்கில், இந்த எனது இதயத்தைத் துளைத்து, அதன் மையத்தில் ஊடுருவிவிட்டது.
என்பதே அவ்வசனம். இன்னும் விராடபர்வத்தில் நிறைய பகுதிகள் இருக்கின்றன. நாம் இதுவரை 18 பகுதிகள்தான் செய்திருக்கிறோம். அவற்றில் ஏதும் மழைக்குறிப்புகள் இருக்கின்றனவா என்பதை நோக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.
நமது இந்திய மரபின் தொன்மங்கள் அனைத்தும் உருவகங்கள்தானே. இதுவும் இயற்கை குறித்த ஓர் உருவகமோ? அந்த உருவகத்தை நினைவுகூர்வதால் ஏதேனும் சக்தி தூண்டப்படுமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்போது வெளியே மழை “சோ”வெனப் பெய்து கொண்டிருக்கிறது... இயற்கையல்லவா நம்மைப் பார்த்து சிரிக்கின்றது...
இது குறித்து விவாதிக்க விரும்பும் நண்பர்கள், விவாத மேடை பகுதியைப் பயன்படுத்தலாமே!
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.