ஆதிபர்வத்தை அச்சிட நீண்ட நாட்களாக முயன்று வருகிறேன். பெரும் எழுத்தாளர்களே தங்கள் புத்தகங்களை விற்க சிரமப்படும் இவ்வேளையில், கடன் வாங்கி ஒரு பெருந்தொகையை செலவு செய்து, போட்ட பணத்தை எடுக்க முடியவில்லையென்றால், நமது அன்றாடப் பிழைப்பு கெட்டுவிடுமே என்ற அச்சத்தின் காரணமாகவும், அச்சில் இருக்கிறதோ இல்லையோ, வலைப்பூவில் என்றும் இருக்கப்போவதுதானே என்ற நினைப்பாலும், அச்சு காணாமல் இவ்வளவு நாட்களும் கடந்துவிட்டன.
இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த திரு.ரவிக்குமார் அவர்கள், "ஏன் இன்னும் முழுமஹாபாரதம் அச்சடிக்கப்படவில்லை" என்று அலைபேசினார். காரணத்தைத் தெரிவித்தேன். அதற்குத் தேவையான பணம் முழுவதையும் தருவதற்குத் தன்னால் இயலுமாயினும், ஊர்கூடி செய்த ஒரு பெருஞ்செயலாக இது இருக்க வேண்டும் என்று தான் கருதுவதாகவும், மற்றவர்களும் இப்பணியில் பங்குபெற, நமது முழுமஹாபாரத வலைப்பூவில் "நிதி கோரி" வாசகர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார். நண்பர்களிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்கிறேன் என்று நான் அவருக்குத் தெரிவித்தேன்.
வாசகர்களும் நண்பர்களும் ஆகிய உங்கள் அனைவரின் ஆலோசனையும் இவ்விஷயத்தில் எனக்குத் தேவைப்படுகிறது. உங்கள் கருத்துகளை arulselvaperarasan@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
Post by முழு மஹாபாரதம்.