Saturday, August 15, 2015

பாரதத்தின் ஆறுகள் மற்றும் நாடுகள்!- பீஷ்ம பர்வம் பகுதி - 009

The rivers and countries of Bharata! | Bhishma-Parva-Section-009 | Mahabharata In Tamil

(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 9)

பதிவின் சுருக்கம் : பாரதக் கண்டத்தைக் குறித்து விரிவாகச் சொல்லும்படி சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; பாரதத்தில் உள்ள முக்கியமான மலைகள், ஆறுகள், நாடுகள் ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; பூமியைப் பாதுகாப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்தும்; மன்னர்கள் பூமியின் மேல் ஏன் பேராசை கொள்கிறார்கள் என்பது குறித்தும் சஞ்சயன் சொல்வது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "இந்தப் புத்தியற்ற படை எங்குச் சேர்ந்திருக்கிறதோ, எதன் காரணமாக எனது மகனான இந்தத் துரியோதனன் இவ்வளவு பேராசை கொண்டவனாக இருக்கிறானோ, எதனை அடைய பாண்டுவின் மகன்களும் விரும்புகிறார்களோ, எது எனது மனதையும் பாவத்தில் ஆழ்த்துகிறதோ, எது பரதனின் பெயரால் அழைக்கப்படுகிறதோ, அப்படிப்பட்ட இந்த வர்ஷத்தைக் {கண்டத்தை - பாரதக்கண்டத்தைக்} குறித்த உண்மையை (ஓ! சஞ்சயா) எனக்குச் சொல்வாயாக. ஓ! எனது தீர்மானத்தின் படி நீ புத்திக்கூர்மையுள்ளவன் என்பதால், இதை எனக்குச் சொல்வாயாக."


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனது வார்த்தைகளைக் கேளும். இந்த நாட்டைக் குறித்துப் பேராசை கொண்டவர்களாகப் பாண்டுவின் மகன்கள் இல்லை. மறுபுறம், துரியோதனனே பேராசைக் கொண்டவனாக இருக்கிறான். சுபலனின் மகனான சகுனியும், மாகாணங்களின் ஆட்சியாளர்களாக இருக்கும் பிற க்ஷத்திரியர்களான பலரும் அப்படியே {பேராசை கொண்டவர்களாகவே} இருக்கிறார்கள். நான் இப்போது உமக்கு, பரதனின் பெயரால் அறியப்படும் நிலப்பகுதியைக் {பாரதக்கண்டத்தைக்} குறித்துச் சொல்கிறேன்.

இந்த நிலம் இந்திரனுக்குப் பிடித்தமானதாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரதனின் பெயரால் அழைக்கப்படும் இந்த நிலம் {இந்தப் பாரதக்கண்டம்}, விவஸ்வானின் மகனான மனு {வைவஸ்வதமனு}, பிருது, வைனியன், உயர்ஆன்ம இக்ஷவாகு, யயாதி, அம்பரீஷன், மாந்தாதா, நகுஷன், முசுகுந்தன், உசீநரனின் மகன் சிபி, ரிஷபன், ஐலன், நிருகன், குசிகன், ஓ! ஒப்பற்றவரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம காதி, சோமகன், ஓ! தடுக்கப்படமுடியாதவரே {திருதராஷ்டிரரே}, திலீபன் மற்றும் ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலசாலிகளான பிற க்ஷத்திரியர்கள் பலருக்கும் பிடித்தமானதாகும்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நான் அதைக் கேள்விப்பட்டபடியே, நான் இப்போது அந்த நாட்டைக் குறித்து விளக்கப் போகிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் என்னிடம் கேட்டதற்கு நான் சொல்வதை {நான் சொல்லும் பதிலைக்} கேளும். மகேந்திரம், மலயம் சஹ்யம், சுக்திமான், ரக்ஷவான் {ரிக்ஷவான்}, விந்தியம், பாரியாத்ரம் ஆகிய இவை ஏழும் (பாரத வர்ஷத்தின் {கண்டத்தின்}) கால-மலைகளாகும் {குலாசலங்களாகும்} [1].

[1] பிரிவு எல்லைகளை உருவாக்கும் மலைகள் என்பது இங்கே பொருள் என்கிறார் கங்குலி.

இவை தவிர்த்து ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடினமானவையும், பெரியதானவையும், அற்புத பள்ளத்தாக்குகளைக் கொண்டவையுமான அறியப்படாத பல மலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவை தவிர, காட்டுமிராண்டி இனத்தோரால் [2] வசிக்கப்படும் சிறு மலைகளும் இங்கே பல இருக்கின்றன. ஓ! கௌரவ்யா {திருதராஷ்டிரரே}, இரண்டு தனிமங்கள் {பூதங்கள்} கலந்தவர்களான ஆரியர்களும், மிலேச்சர்களும், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் [3], ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பிரம்மாண்டமான கங்கை, சிந்து, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, பெரும் நதியான யமுனை, திருஷத்வந்தி, விபாபை, விபாசை, ஸ்தூலவாலுகை, வேத்ரவதி ஆறு, கிருஷ்ண வேணி என்று அழைக்கப்படும் மற்றொன்று, இராவதி, விதஸ்தை, பயோஷ்ணி, தேவிகை, வேதஸ்மிருதை, வேதவதி, திரிதிவை, இக்ஷுமாலவி {இக்ஷூலை}, கரீஷ்ணி, சித்திரவாகை, சித்திரசேனை என்று அழைக்கப்படும் நதி, கோமதி, தூடபாதை, கந்தகி என்று அழைக்கப்படும் பெரும் நதி, கௌசிகி, நிஸ்சித்திரை, கிருத்யை, நிசிதை {நிசிதிரை}, லோகதாரணி {லோகிதாரணி}, ரஸசி {ரகஸ்யை}, சதகும்பை, சரயு, சர்மண்வதி, வேத்ரவதி, ஹஸ்திசோமை, திசை {திக்}, சராவதி என்று அழைக்கப்படும் நதி, வேணை, பீமரதி, காவேரி, சுலுகை, வீணை {வாணி}, சதபலை, நீவாரை, மகிளை {அஹிதை}, சுப்ரயோகை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பவித்ரை, குண்டலி, ராஜனி, புரமாலினி, பூர்வாபிராமை, வீரை, பீமை, ஓகவதி, பாலாசினி {பாசாசினி}, பாபஹரை. மகேந்திரை, பாடலாவதி, கரீஷிணி, அசிகனி, பெரும் நதியான குசசீரை, மகரி, பிரவாரை, மேனை, ஹேமை, திருதவதி, புராவதி, அனுஷ்ணை, சைப்யை, காபி, ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, சதாநீரை, அத்ரிஷ்யை, வலிமைமிக்க ஓடையான குசதாரை, சதாகாந்தை, சிவை, வீரவதி, வத்சு {வஸ்த்ரை}, சுவத்சு {சுவஸ்த்ரை}, கம்பனை, ஹிரண்யவதி, வரை, வலிமைமிக்க நதியான பஞ்சமி, ரதசித்ரை, ஜோதிரதை, விஸ்வாமித்ரை, கபிஞ்சலை, உபேந்திரை, பஹுலை, குசீரை {குவீரை}, மதுவாஹினி {அம்புவாஹினி}, விநதி, பிஞ்சலை, வேணை, பெரும் நதியான புங்கவேணை {துங்கவேணை}, விதிசை, கிருஷ்ணவேணை, தாம்ரை, கபிலை, சலு, சுவாமை, வேதாஸ்வை, பெரும் நதியான ஹரிஸ்ராவை, சீக்ரை, பிச்சிலை, பாரத்வாஜி நதி, கௌசிகி நதி, சோணை, சந்திரமை, துர்க்கமந்திரசிலை {துர்க்கை}, பிரம்மவேத்யை, ப்ருஹத்வதி, யவக்ஷை, ரோஹி, ஜாம்பூநதி, சுநசை, தமசை, தாசி, வசை {வஸாமன்யை}, வருணை, அசி, நீலை, திருமதி {திருதவதி}, வலிமைமிக்க நதியான பர்ணாசை, போமசி {மானவி}, விருஷபை, பிரம்மமேத்யை, பிருஹத்வநி என்ற ஆறுகளில் உள்ள நீரைக் குடிக்கின்றனர்.

[2] இங்கே வேறொரு பதிப்பில் குள்ளர்களின் வாசஸ்தலம் என்று இருக்கிறது. மூலத்தில் "ஹ்ரஸ்வோபஜீவிந:" என்று இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

[3] anye tato 'parijñātā hrasvā hrasvopajīvinaḥ
āryā mlecchāś ca kauravya tair miśrāḥ puruṣā vibho
nadīḥ pibanti என்பது மூலம்.

இவையும், இவை தவிரப் பிற பெரும் நதிகளான, சதோநிர்மாயை, கிருஷ்ணை, மந்தகை, மந்தவாஹினி, மஹாகௌரி, துர்க்கை, சித்ரோபலை, ஓ! பாரதா {திருதராஷ்டிரரே), ஆகியவையும் இருக்கின்றன. சித்ரரதை, மஞ்சுளை, வாஹினி, மந்தாகினி, வைதரணி, கோஷை, மகாநதி, சுக்திமதி, அனங்கை, புஷ்பவேணி, உத்பலவதி, லோஹித்யை, கரதோயை, விருஷசப்யை {விருஷகை}, குமாரி, ரிஷிகுல்யை, மாரிஷை, சரஸ்வதி, மந்தாகிநி. சுபுண்யை, சர்வசங்கை ஆகியவையும், ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, பெரும்பலனைக் கொடுக்க வல்லவையாக இருக்கின்றன. இவை அனைத்தும் இந்த அண்டத்தின் தாய்மார்களாக இருக்கின்றன. இவை தவிரவும், (பெயர்) அறியப்படாத நதிகள் இங்கே நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் எனது நினைவில் உள்ள நதிகள் அனைத்தையும் மட்டும் இங்கே நினைவுகூர்ந்திருக்கிறேன்.

இதன்பிறகு, நான் குறிப்பிடப்போகும் மாகாணங்களின் பெயர்களைக் குறித்துக் கேளும். குரு-பாஞ்சாலம், சால்வம், மாத்ரேயம், ஜாங்கலம், சூரசேனம், கலிங்கம், போதம், மாலம், மத்ஸ்யம், சௌவல்யம், குந்தலம், காசிகோசலம், சேதி, கரூசம், போஜம், சிந்து, புளிந்தகம், உத்தமம், தசார்ணம், மேகலம், உத்கலம், பாஞ்சாலம், கௌசிஜம், நைகபிருஷ்டம், துரந்தரம், சோதம், மத்ரபூஜிங்கம், காசி, அதிகாசி {அபரகாசி}, ஜடரம், குகுரம், ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, குந்தி, அவந்தி, தசார்ணம், அதிகுந்தி {அபரகுந்தி}, கோமந்தம், மந்தகம், சண்டம், விதர்ப்பம், ரூபவாஹிகம், அஸ்வகம், பான்சுராஷ்ட்ரம், கோபராஷ்ட்ரம், கரீதியம், அதிராஜ்யம், குலாத்யம், மல்லராஷ்டிரம், கேரளம், வாரத்ராஸ்யம், ஆபவாஹம், சக்ரம், வக்ரதபம், சகம், விதேகம், மகதம், ஸ்வக்ஷம், மலயம், விஜயம், அங்கம், வங்கம், களிங்கம், யகிருல்லோமம், மல்லம், சுதேளம், பிரனராதம், மாஹிகம், சசிகம், பாஹ்லீகம், வாடதானம், ஆபீரம், காலஜோஷகம், அபராந்தம், பராந்தம், பாநாபம், சர்மமண்டலம், அடவீசிகரம், மகாபூதம், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உபாவிருத்தம், அநுபாவிருத்தம், சுராஷ்ட்ரம், கேகயம், குதம், மாஹேயம், கக்ஷம் சமுத்ரநிஷ்குடம், ஆந்திரம், மேலும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையில் இருக்கும் பல மலை நாடுகள், மலைகளின் அடிவாரத்திலும் வெளிப்புறத்திலும் உள்ள பல நாடுகள், அங்கமலஜங்கள், மானவர்ஜகம், பிராவிருஷேயம், பார்க்கவம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புண்ட்ரம், பர்க்கம், கிராதம், சுதேஷ்ணம், யாமுனம், சகம், நிஷாதம் {நிஷதம்}, ஆனர்த்தம், நைருதம், துர்க்காலம், பிரதிமத்ஸ்யம், குந்தலம், குசலம், தீரக்ரஹம், ஈஜிகம், கன்யககுணம், திலபாரம், சமீரம், மதுமாதம் {மதுமான்}, சுகந்தகம், காஸ்மீரம், சிந்துசௌவீரம், காந்தர்வம், தர்சகம், அபீசாரம், உதூலம், சைவலம், பாஹ்லிகம், தார்வி, வானவம்தர்வம், வாதகம், அமாரதம், உரகம், பஹுவாத்யம், கௌரவ்யம், சுதாமானம், சுமல்லிகம், வத்ரம், கரீஷகம், களிந்தம், உபத்யகம், பதயானம், குசபிந்து, கச்சம், கோபாலகக்ஷம், குருவர்ணகம், கிராதம் பர்ப்பரம், சித்தம், வைதேஹம், தாம்ரலிப்தகம், ஔண்ட்ரம், பௌண்ட்ரம், சைசிகடம், பார்வதீயம் ஆகியன இருக்கின்றன.

மேலும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தெற்கில் பிற நாடுகளும் இருக்கின்றன. அவை, திராவிடம், கேரளம், பிரச்யம், மூஷிகம், வனவாசிகம், கர்நாடகம், மஹிஷகம், விகல்பம், மூஷகம், ஜில்லிகம், குந்தலம், சௌன்ருதம், நளகானனம், கான்குட்டகம், சோழம் {சோழ நாடு}, மாலவயகம், சமங்கம், கனகம், குகுரம், அங்கார-மாரிஷம், திவஜினி, உத்ஸவம், ஸங்கேதம், திரிகர்த்தம், சால்வசேனம், வகம், கோகரகம், பாஷ்திரியம், லாமவேகவசம், விந்தியசுலிகம், புளிந்தம், வல்கலம், மாலவம், வல்லவம், அதிவல்லவம் {அபரவல்லவம்}, குளிந்தம், காலவம், குண்டௌகம், கரடம், மிருஷகம், தனபாலம், சனீயம், அளிதம், பாசிவாடம், தநயம், சுலன்யம், ரிஷிகம், விதர்ப்பம், காகம், தங்கணம், அதிதங்கணம் {அபரதங்கணம்} ஆகிய நாடுகள் இருக்கின்றன.

மேலும் வடக்கேயுள்ள இனங்களில், மிலேச்சம், குரூரம், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, யவனம், சீனம், காம்போஜம், தாருணம், மிலேச்சர்கள் வசிக்கும் நாடு, சுக்ருத்பகம், குலத்தம், ஹூணம், பாரசீகம், ரமணம், தசமாலிகம் ஆகியன இருக்கின்றன. பல க்ஷத்திரிய, வைசிய, சூத்திர குலங்களைத் தவிர மேற்கண்ட நாடுகளும் இருக்கின்றன.

மேலும் இங்கே, சூத்திர-ஆபீரம், தரதம், காஸ்மீரம், பட்டி, காசீரம், ஆத்ரேயம், பரத்வாஜம், ஸ்தனபோஷிகம், புஷோகம், களிங்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த வேடர்கள் வசிக்கும் நாடு, தோமரம், ஹன்சமார்க்கம், கரமஞ்சகம் ஆகியவையும் இருக்கின்றன. இவையும், இன்னும் பிற நாடுகளும் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கின்றன.

அவற்றில் குறிப்பானவற்றைச் சுருக்கமாக உமக்குச் சொன்னேன். பூமியின் வளங்கள், அதன் தன்மை மற்றும் ஆற்றலுக்கு ஏற்ப முறையாக வளர்க்கப்பட்டால் {காக்கப்பட்டால்}, அஃது எப்போதும் செழிப்பைத் தரும் பசுவைப் போல [4] இருக்கும். அதனிடம் இருந்து அறம், பொருள், இன்பம் என்ற மூன்று வகைக் கனிகளை எப்போதும் கறக்கலாம். அறம் மற்றும் பொருளை அறிந்த வீரமிக்க மன்னர்களே பூமியிடம் பேராசை கொள்கின்றனர். செயல்பாடு மிக்க அவர்கள், செல்வத்தின் மீது கொண்ட பசியால், போரில் தங்கள் உயிர்களையும் துறப்பார்கள். மனித உடல்களைக் கொண்ட உயிரினங்களைப் போலவே தெய்வீக உடல்களைக் கொண்ட உயிரினங்களுக்கும் இந்தப் பூமி புகலிடமாக இருக்கிறது [5].

[4] எப்போதும் பாலைத் தரும் காமதேனுவைப் போல என்கிறார் கங்குலி.

[5] "இதை நீலகண்டர் இப்படி விளக்குகிறார். தேவர்கள், மனிதர்கள் செய்யும் வேள்விகளை நம்பியிருக்கின்றனர்; மனிதர்களைப் பொறுத்தவரை, அவர்களது உணவு பூமியால் கொடுக்கப்படுகிறது. எனவே, மேன்மையான அல்லது தாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் பூமியால் தாங்கப்படுகின்றன; அப்படியென்றால், பூமியே அவர்களது புகலிடமாகும். இந்தச் சுலோகங்களில் குறிப்பிடப்படும் பூமி என்ற சொல்லானது, சில வேளைகளில் உலகத்தைக் குறிப்பதாகவும், சில சமயங்களில் பூதமான நிலத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது" என்கிறார் கங்குலி.

ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பூமியை அனுபவிக்க விரும்பும் மன்னர்கள், ஒன்றிடம் இருந்து ஒன்று இறைச்சியைப் பிடுங்கும் நாய்களைப் போல ஆகிவிட்டனர். அவர்களது இலட்சியம் வரம்பற்றதாகவும், நிறைவை அறியாததாகவும் இருக்கிறது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இதற்காகவே குருக்களும் பாண்டவர்களும் பேச்சுவார்த்தையின் {சாமத்தின்} மூலமும், வேறுபாட்டின் {பேதத்தின்} மூலமும், தானத்தின் மூலமும், போரின் {தண்டத்தின்} மூலமும் பூமியை அடைய முயற்சிக்கிறார்கள். ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பூமி நன்றாகப் பார்த்துவரப்பட்டடால் {பராமரிக்கப்பட்டு வந்தால்}, அஃது அனைத்து உயிரினங்களுக்கும் தந்தையாகவும், தாயாகவும், பிள்ளைகளாகவும், ஆகாயமாகவும், சொர்க்கமாகவும் ஆகின்றது" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்