தாய்: குந்தி-Kunti {பிருதை-Pritha}
தந்தை: பாண்டு / {தேவர்களின் தலைவன் இந்திரனின் உயிர்வித்து}
அர்ஜுனனின் பத்து பெயர்கள்:
அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான்.
- Seemore at:
http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section44.html
அர்ஜுனன் {உத்தரனிடம்},
“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.
எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.
அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.
போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.
காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.
பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.
- See more at: http://mahabharatham.arasan.info/search?updated-max=2014-12-08T08:42:00%2B05:30&max-results=8&start=8&by-date=false#sthash.7Y4dcYE9.dpuf***********************************************************
10) சியவனன் = கருப்பையில் இருந்து நழுவி விழுந்தவன்
see more at : http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section6.html
***********************************************************
9) குந்தி {Kunti} = குந்திபோஜனின் (வளர்ப்பு) மகள்
இயற்பெயர் : பிருதை {Pritha}
பெற்ற தந்தை : சூரன் {சூரசேனன்}
வளர்ப்புத் தந்தை : குந்திபோஜன்
கணவர் : பாண்டு
பிள்ளைகள் : கர்ணன், யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்
குறிப்பு:
யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாக சூரன் {சூரசேனன்} இருந்தார். சூரசேனருக்கு பிருதை {Pritha} என்ற மகளும், *வசுதேவர் என்ற மகனும் பிறந்தனர்.
சூரசேனன், தான் முன்பே வாக்கு கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும் மைத்துனனுமான {தந்தையின் சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளை {பிருதையை} சுவீகாரமாகக் கொடுத்தான். {பிருதை {Pritha} குந்திபோஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்றே அழைக்கப்பட்டாள்}
*வசுதேவர் : வசுதேவரின் பிள்ளைகளே கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகியோர். குந்தியின் மகன் அர்ஜுனனே சுபத்திரையின் கணவன் என்பதனையும் அறிக.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
**********************************************************************
8) திலோத்தமை {Tilottama} = ரத்தினங்களால் ஆனவள்
ராஜா ரவிவர்மாவின் திலோத்தமை ஓவியம் |
............... அந்த தெய்வீக மங்கை, பெரும் ரத்தினக் குவியல்களால் படைக்கப்பட்டாள். விஸ்வகர்மனால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த மங்கை, மூவுலகில் உள்ள பெண்களிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதிருந்தாள். பார்வையாளர்கள் பார்த்து ஸ்தம்பிக்காத ஒரு சிறு பகுதியேனும் அவளது உடலில் இல்லாதிருந்தது. அனைத்து உயிர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டாள். அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால், பிரம்மன் அவளுக்கு திலோத்தமை {Tilottama} என்ற பெயரைக் கொடுத்தார்.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
திலோத்தமையால் சிவனுக்கு வந்த மூன்று முகங்கள் - ஆதிபர்வம் பகுதி 213
*******************************************************************************
7) திரௌபதி = துருபதன் மகள்
துருபதா
|
D
|
R
|
U
|
P
|
A
|
D
|
A
|
திரௌபதி
|
D
|
RA
|
U
|
P
|
A
|
D
|
I
|
வேறு சில பெயர்கள்:
1. கிருஷ்ணை {கருப்பி / கருப்பானவள்}
2. பாஞ்சாலி {பாஞ்சால நாட்டின் இளவரசி}
3. யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகள்}
குறிப்பு:
துரோணரின் மீது கொண்ட பகையால் பாஞ்சால மன்னன் துருபதன் என்று அழைக்கப்பட்ட யக்ஞசேனன் ஒரு யாகம் வளர்த்தான். வேள்வி மேடையின் மத்தியில், பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மகள், மிகுந்த அழகுடன் தோன்றினாள். அவளது நிறம் கறுமையாக இருந்தது, கூந்தல் நீல நிறத்துடன் சுருள் முடியாக இருந்தது. அந்தப் பெண் பிறந்த போது, ஒரு அரூப ஒலி, "இந்த கறுநிற மங்கை பெண்களில் முதன்மையானவளாக இருப்பாள். பல க்ஷத்திரியர்கள் அழிவுக்கு இவள் காரணமாக இருப்பாள். கௌரவர்களுக்கு ஆபத்தையும் விளைவிப்பாள்." என்றது."இந்தப் பெண் கறுநிறத்தில் இருப்பதால், கிருஷ்ணை {கருப்பி} என்று அழைக்கப்படட்டும்", என்றனர்.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169
********************************************************************
6) பரதன் {Bharata} = ஏற்றுக் கொள்ளப்பட்டவன்
தந்தை : துஷ்யந்தன் {Dushmanta}
தாயார் : சகுந்தலை {Sakuntala}
இயற்பெயர் = சர்வதமனா {Sarvadamana}(அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்)
சர்வதமனாவிற்கான குறிப்பு: கன்வரின் {Kanwa} ஆசிரமத்தில் வளர்ந்த 6 வயதே நிரம்பிய சகுந்தலையின் குழந்தையானவன் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் சர்வதமனா (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று சொன்னார்கள்.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
துஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ
பரதனுக்கான குறிப்பு: துஷ்யந்தனால் சகுந்தலையும், அவள் குழந்தை சர்வதமனாவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனவுடன், வானத்திலிருந்து ஒரு அசரீரி, "ஓ புரு குலத்தில் வந்தவனே {துஷ்யந்தனே}, சகுந்தலைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள். எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்", என்றது.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பரதனை ஏற்றான் துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 74இ********************************************************************
5) கடோத்கஜன் {Ghatotkacha}= பானைத்தலையன் (the pot-headed)
தந்தை : பீமா / பீமன் / பீமசேனன் / Bhima / Bhimasena
தாயார் : ராட்சசி ஹிடிம்பை / ஹிடும்பி/ இடும்பி / Hidimva
ஹிடிம்ப வத பர்வம் (Hidimva-vadha Parva)- ஆதிபர்வம் 157- முழு மகாபாரதம்
ஹிடிம்பை அழகான பெண்ணுரு கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள். சில காலத்தில், ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அவன் மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.
கடோத்கஜன் பிறந்தான் |
அவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஒரு இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான். அந்த வழுக்கைத் தலையுடைய பிள்ளை, அந்த பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் மற்றும் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனை கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர்.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
கடோத்கசன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 157
4) பாண்டு = மங்கலானவன் / வெளிறிப் போனவன்
தந்தை : விசித்திரவீரியன் / வியாசரின் உயிர் வித்து
தாயார் : அம்பாலிகை
வியாசரும், பயத்தால் வெளிறிய அம்பாலிகையும் |
{**வியாசர்-சத்தியவதி சந்தனுவை திருமணம் செய்து சித்திராங்கதனும், விசித்திரவீரியனும் பிறப்பதற்கு முன்பே, சத்தியவதிக்கும் பராசரருக்கும் பிறந்தவர் தான் இந்த வியாசர் என்பதனை அறிக}
விசித்திரவீரியனின் இரண்டாவது மனைவி அம்பாலிகை. விசித்திரவீரியனின் மறைவிற்குப் பிறகு பீஷ்மர் மற்றும் சத்தியவதியின் ஏற்பாட்டால் அம்பாலிகை வியாசருடன் பிள்ளைப் பெற கேட்டுக்கொள்ளப்பட்டாள்...............
வியாசர், அம்பாலிகை பயத்தால் வெளிறிப்போவதைக் கண்டு அவளிடம் {அம்பாலிகையிடம்}, "எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால், ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்." என்றார் {வியாசர்}.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:சத்தியவதி சொன்ன இரகசியம் | ஆதிபர்வம் - பகுதி 105
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - பகுதி 106
*********************************************************************
3) பீஷ்மன் = பயங்கரமானவன்
{எட்டு வசுக்களின் உயிர் பகுதிகளால் உருவானவன்}
இயற்பெயர் : தேவவிரதன்
தந்தை : சந்தனு மன்னன்
தாயார் : கங்கை நதி
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100
*********************************************************************
2) சகுந்தலை = பறவைகளால் காக்கப்பட்டவள்
சகுந்தலை |
தந்தை : விசுவாமித்திரர்
தாயார் : மேனகை {தேவலோக அப்சரஸ்}
கன்வர், “கானகத்தில் தனிமையில் பறவைகளால் (சங்குந்தா) சூழப்பட்டு இருந்ததால், என்னால் அவளுக்கு சகுந்தலை (பறவைகளால் காக்கப்பட்டவள்) என்ற பெயர் சூட்டப்பட்டது”.
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
1)கிருஷ்ண துவைபாயணர் = வியாசர்
கிருஷ்ணன் = கருப்பானவன்
துவைபாயணர் = தீவில் பிறந்தவர்
வியாசர் = தொகுப்பாளர் (அ) அடுக்குபவர்
தந்தை : பராசரர் (பராசர முனிவர்)
தாய் : சத்தியவதி
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
பராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி | ஆதிபர்வம் - பகுதி 63இ