Garuda's glory, who took away Amrita! | Adi Parva - Section 33 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 21)
பதிவின் சுருக்கம் : தடைகளை மீறி அமுதத்தைக் கவர்ந்த கருடன்; கருடனைத் தன் வாகனமாக்கிக் கொண்ட விஷ்ணு; தன் தேரின் கொடிமரத்தில் அவனுக்கு இடமளித்தது; வஜ்ராயுதத்திற்கு ஓர் இறகை அளித்த கருடன்; கருடனின் பலத்தை அறிய விரும்பிய இந்திரன்...
சௌதி சொன்னார், "அந்தப் பறவையானாவன் {கருடன்}, கதிரவனின் கதிர்களைப் போலப் பொன்னொளி கொண்ட உருவம் தரித்துக் கடலில் வேகமாகச் செல்லும் நீரோட்டம் போலப் பெரும் சக்தியுடன், (அமுதுள்ள இடத்திற்குள்) நுழைந்தான்.(1) கத்தியைப் போன்ற கூர்மையான முனைகள் கொண்டு இடைவிடாமல் சுழலும் எஃகுச் சக்கரம் ஒன்று அமுதத்தின் அருகே நிறுவப்பட்டிருந்ததைக் கண்டான்.(2)
அமுதத்தைத் திருட வருபவர்களைக் கண்டந்துண்டமாக வெட்டத் தேவர்களால் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பொறியானது, சூரியனைப் போன்ற பளபளப்புடனும், பயங்கரமான வடிவத்துடனும் இருந்தது.(3) கருடன் அதனுள்ளே {நுழைவதற்கு} ஒரு வழியைக் கண்டு ஒரு கணநேரம் நின்றான். உடனே, தனது உருவத்தை இன்னும் குறுக்கிக் கொண்டு அந்த சக்கரத்தின் {வாள் போன்ற} ஆரங்களுக்கிடையே விரைவாக நுழைந்து சென்றான் கருடன்.(4)
அமுதத்தைக் காப்பதற்காக, நெருப்பைப் போன்ற ஒளி கொண்டவையும், மின்னலின் வீச்சு போன்ற பிரகாசமான நாக்குகளைக் கொண்டவையும், பெரும் ஆற்றல் கொண்டவையும், வாயிலிருந்து நெருப்பைக் கக்குபவையும், ஒளிரும் கண்களைக் கொண்டவையும், விஷத்தையுடையவையும், மிகப் பயங்கரமானவையும், எப்போதும் கோபங்கொண்டே திரிபவையுமான இரண்டு பெரும் பாம்புகள், அந்தச் சக்கரத்திற்குக் கீழே இருப்பதை அவன் {கருடன்} கண்டான்.(5,6) அவற்றின் கண்கள் இமைக்காமலும், எப்போதும் கோபத்தால் பெரிதாகவும் இருந்தன. எவனொருவன் அந்தம் பாம்புகளில் இரண்டில் ஒன்றாலேனும் பார்க்கப்படுகிறானோ அவன் உடனடியாகச் சாம்பலாகிவிடுவான்.(7)
அழகான சிறகுகளையுடைய அந்தப் பறவையானவன் {கருடன்}, திடீரெனப் பாம்புகளின் கண்களில் புழுதியை இறைத்து, அவற்றால் பார்க்க முடியாதபடி செய்து, அனைத்துப்புறங்களிலிருந்தும் அவற்றைத் தாக்கினான்.(8) வினதையின் மைந்தனான அந்த விண்ணோடி {கருடன்}, அவற்றின் உடல்களைத் தாக்கி, அவற்றைத் துண்டுதுண்டாகச் சிதைத்தான். அதன்பிறகு காலந்தாழ்த்தாமல் அமுதம் இருந்த இடத்திற்குச் சென்றான்.(9) அங்கு இருந்த அமுதத்தை எடுத்துக் கொண்டு, தனது சிறகுகளை அடித்து வேகமாகப் பறந்து, அதை {அமுதத்தை} சூழ்ந்திருந்த பொறியை அடித்துத் தூள்தூளாக்கினான்.(10) அவன் {கருடன்}, அந்த அமுதத்தைக் குடிக்காமலேயே, வெளியே எடுத்து வந்தான். சிறிதும் சோர்வோ தளர்ச்சியோ கொள்ளாமல், கதிரவனின் ஒளியை மங்கச் செய்து வந்த வழியே அவன் திரும்பினான்.(11)
வினதையின் மைந்தன் {கருடன்}, வான்வழியே வரும்போது, விஷ்ணுவைக் கண்டான். கருடனின் தன்னலமற்ற செயலால் நாராயணன் பெரிதும் மகிழ்ந்தான்.(12) அழிவற்ற அந்தத் தெய்வம் {மகாவிஷ்ணு}, அந்த விண்ணோடியிடம் {கருடனிடம்}, "ஓ, நான் உனக்கு வரம் தர விரும்புகிறேன்" என்றான். அதற்கு அந்த விண்ணோடி {கருடன்}, "நான் உமக்கு மேலே இருக்க வேண்டும்" என்று கூறி,(13) மேலும், "நான் அமுதத்தைக் குடிக்காமலேயே நோயற்றவனாக, மரணமற்றவனாக இருக்க வேண்டும்" என்று கேட்டான்.(14)
விஷ்ணு வினதையின் மகனிடம் {கருடனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். கருடன் அந்த இரு வரங்களையும் பெற்றுக்கொண்டு விஷ்ணுவிடம்,(15) "நானும் உமக்கு வரம் தருகிறேன். அதனால் அறுகுணம் கொண்ட நீர் என்னிடம் கேட்கலாம்" என்றான். விஷ்ணு, பெரும் வல்லமை படைத்த கருடனைத் தன்னைச் சுமப்பவனாக {தனது வாகனமாகக்} கேட்டான்.(16) தனது தேரின் கொடிமரத்தில் அந்தப் பறவைக்கு இடம் கொடுத்து, "இப்படியும், நீ எனக்கு மேலிருக்கலாம்" என்றான்.[1] பெரும் வேகம் கொண்ட அந்த விண்ணோடி நாராயணனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி,(17) காற்றைக் கேலி செய்யும் வகையில் வேகமாகச் சென்றான். அப்படி அந்த விண்ணோடிகளில் முதன்மையான, சிறகுள்ள உயிரினங்களில் முதன்மையான அவன் {கருடன்} அமுதத்தை அபகரித்துக் கொண்டு காற்றில் பறந்து செல்லும்போது, இந்திரன் அவன் மீது வஜ்ராயுதத்தை {இடியை} ஏவினான்.(18)
அந்தப் பறவை மன்னன் கருடன், போரில் ஈடுபட்ட இந்திரனிடம் சிரித்துக் கொண்டே இனிமையான வார்த்தைகளால்,(19) "யாருடைய எலும்பினால் வஜ்ராயுதமானது செய்யப்பட்டதோ அந்த முனிவரை (ததீசி) நான் மதிக்கிறேன்.(20) வஜ்ராயுதத்தையும், ஆயிரம் வேள்விகள் செய்தவனான உன்னையும் மதிக்கிறேன். {அதனால்} எனது இந்த இறகு ஒன்றை இதோ போடுகிறேன். அதன் இன்னொரு நுனியை உன்னால் அடைய முடியாது.(21) உனது இடியால் தாக்கப்பட்டாலும், எனக்குச் சிறு வலி கூட ஏற்படவில்லை" என்று சொன்ன பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது இறகு ஒன்றைப் போட்டான்.(22)
கருடனால் அப்படிப் போடப்பட்ட அந்தச் சிறந்த இறகைக் கண்ட அனைத்து உயிர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தன. அந்த இறகு அழகாக இருப்பதைக் கண்டு "இந்தப் பறவையானவன் {கருடன்}, சுபர்ணன் (அழகிய இறகுகள் கொண்டவன்) என்று அழைக்கப்படட்டும்" என்றனர். ஆயிரங்கண் கொண்ட புரந்தரன் {இந்திரன்}, அந்த அற்புத நிகழ்வைக் கண்டு, அந்தப் பறவையை ஒரு பேருயிர் என்றெண்ணினான். {அப்படி எண்ணிய} இந்திரன்,(23,24) "ஓ பறவைகளில் சிறந்தவனே! {கருடனே}, நான் உனது பலத்தின் எல்லையை அறிய விரும்புகிறேன். நான் உன்னுடன் நிலைத்த நட்பு கொள்ள விரும்புகிறேன்" என்றான்" {என்றார் சௌதி}.(25)

[1] கருடன் விஷ்ணுவுக்கு மேலிருக்க வரம் கேட்டான், அது தரப்பட்டதும், அவன் விஷ்ணுவுக்கும் மேலானவன் என்பதால் விஷ்ணுவுக்கு வரம் தர விழைகிறான். விஷ்ணு சமயோசிதமாக கருடன் தன் வாகனமாக வேண்டும் எனக் கேட்கிறான். ஆக புத்திசாலித்தனத்தினால் விஷ்ணு கருடனை வென்று விடுகிறான். தன் வரம் பொய்க்காமல் இருக்க கருடனைத் தன் கொடியிலும் ஏற்றுக் கொண்டு தனக்கு மேலே கருடனை வைக்கிறான். இதுதான் ஞானத்திற்கும், அறிவிற்கும் இடையேயான பேதமாகும். ஞானம் வெல்லும்பொழுது யாருக்கும் தோல்வி உண்டாவதில்லை.
அந்தப் பறவை மன்னன் கருடன், போரில் ஈடுபட்ட இந்திரனிடம் சிரித்துக் கொண்டே இனிமையான வார்த்தைகளால்,(19) "யாருடைய எலும்பினால் வஜ்ராயுதமானது செய்யப்பட்டதோ அந்த முனிவரை (ததீசி) நான் மதிக்கிறேன்.(20) வஜ்ராயுதத்தையும், ஆயிரம் வேள்விகள் செய்தவனான உன்னையும் மதிக்கிறேன். {அதனால்} எனது இந்த இறகு ஒன்றை இதோ போடுகிறேன். அதன் இன்னொரு நுனியை உன்னால் அடைய முடியாது.(21) உனது இடியால் தாக்கப்பட்டாலும், எனக்குச் சிறு வலி கூட ஏற்படவில்லை" என்று சொன்ன பறவைகளின் மன்னன் {கருடன்}, தனது இறகு ஒன்றைப் போட்டான்.(22)
கருடனால் அப்படிப் போடப்பட்ட அந்தச் சிறந்த இறகைக் கண்ட அனைத்து உயிர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தன. அந்த இறகு அழகாக இருப்பதைக் கண்டு "இந்தப் பறவையானவன் {கருடன்}, சுபர்ணன் (அழகிய இறகுகள் கொண்டவன்) என்று அழைக்கப்படட்டும்" என்றனர். ஆயிரங்கண் கொண்ட புரந்தரன் {இந்திரன்}, அந்த அற்புத நிகழ்வைக் கண்டு, அந்தப் பறவையை ஒரு பேருயிர் என்றெண்ணினான். {அப்படி எண்ணிய} இந்திரன்,(23,24) "ஓ பறவைகளில் சிறந்தவனே! {கருடனே}, நான் உனது பலத்தின் எல்லையை அறிய விரும்புகிறேன். நான் உன்னுடன் நிலைத்த நட்பு கொள்ள விரும்புகிறேன்" என்றான்" {என்றார் சௌதி}.(25)
ஆங்கிலத்தில் | In English |