Snakes tongue divided into twain! | Adi Parva - Section 34 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : கருடனிடம் நட்பு கொண்ட இந்திரன்; தன் பலத்தைச் சொன்ன கருடன்; பாம்புகளைத் தன் உணவாகக் கேட்ட கருடன்; பாம்புகளிடம் அமுதத்தைக் காட்டிய கருடன்; அமுதத்தைக் கவர்ந்தான் இந்திரன்; பாம்புகளின் நாவுகள் பிளந்தன...
சௌதி தொடர்ந்தார், "அதன் பின்பு கருடன், "ஓ புரந்தரா! {இந்திரா}, நீ விரும்புவது போலவே உனக்கும் எனக்குமான இடையில் நட்பு உண்டாகட்டும். எனது பலம் தாங்க முடியாதது என்பதை அறிந்து கொள்வாயாக.(1) ஓ ஆயிரம் வேள்வி செய்தவனே! தன் பலத்தைத் தானே உயர்வாகப் பேசுவதை நல்லவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், தங்கள் பெருமையையும் பேச மாட்டார்கள்.(2) ஓ நண்பனே! காரணமில்லாத தற்பெருமை சரியானதல்ல என்றாலும், நீ நண்பனாகிவிட்டுக் கேட்டபடியால், உனக்குப் பதிலளிக்கிறேன்.(3) ஓ சக்ரா! {இந்திரா}, மலைகளுடனும், கானகங்களுடனும் பெருங்கடல்களின் நீருடனும் இருக்கும் இந்த முழுப் பூமியை, அதன் மேல் நீ இருப்பினும் எனது இறகு ஒன்றைக் கொண்டே என்னால் சுமக்க முடியும்.(4) அனைத்து உலகங்களையும், அதனுள் இருக்கும் அசைவன, அசையாதன ஆகியவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும் அனைத்தையும் சோர்வில்லாமல், எனது பலத்தால் நான் சுமக்க முடியும் என்பதை நீ அறிந்து கொள்வாயாக" என்றான்."(5)
சௌதி தொடர்ந்தார், "ஓ சௌனகரே! இப்படிப் பெரும் துணிவுமிக்கக் கருடன் பேசியதும், (தேவலோக) மகுடத்தை அணிந்தவனும், தேவர்களுக்குத் தலைவனும், எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதி நிற்பவனுமான இந்திரன்,(6) "நீ சொல்வது போல் தான் இருக்கிறது. அனைத்தும் உனக்குச் சாத்தியப்படும். உள்ளம் நிறைந்த எனது உண்மையான நட்பை இப்போது ஏற்றுக் கொள்வாயாக.(7) சோமத்தை வைத்து உனக்கெந்தப் பயனும் இல்லையென்றால், அதை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடு. நீ யாரிடம் இதைக் கொண்டு போகிறாயோ, அவர்கள் எப்போதுமே எங்களை எதிர்ப்பவர்களாவர்" என்று மறுமொழி கூறினான் {இந்திரன்}.(8)
அதற்குக் கருடன், "இந்தச் சோமத்தை நான் எடுத்துச் செல்ல ஒரு காரணம் இருக்கிறது. இந்தச் சோமத்தை யாரும் அருந்துவதற்குத் தரமாட்டேன்.(9) ஓ ஆயிரங்கண் கொண்டவனே! {இந்திரனே}, நான் இதைக் கீழே வைத்தவுடன், ஓ தேவலோகத் தலைவனே! அதை உடனே எடுத்துக் கொண்டு வந்து விடு" என்றான்.(10) அதற்கு இந்திரன், "ஓ முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவனே! உன்னால் இப்போது சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு நான் பெரிதும் மகிழ்கிறேன். ஓ விண்ணோடிகளில் சிறந்தவனே! {கருடனே}, என்னிடம் இருந்து நீ விரும்பும் ஏதாவது வரத்தைப் பெற்றுக் கொள்வாயாக" என்றான் {இந்திரன்}.(11)
சௌதி தொடர்ந்தார், "அதன்பிறகு கருடன், கத்ருவின் மைந்தர்களை நினைவில் கொண்டு, ஏமாற்று வேலையால் ஏற்பட்ட தனது தாயின் அடிமைக் கட்டையும், நன்றாகத் தெரிந்த அதன் காரணத்தையும்[1] நினைவுகூர்ந்து,(12) "என்னதான் எல்லா உயிரினங்களையும் ஆளுமை செய்யும் பலம் எனக்கு இருந்தாலும், நீ சொன்னபடியே செய்வேன் {வரம் கேட்பேன்}. ஓ சக்ரா {இந்திரா}, வலிமைமிக்கப் பாம்புகள் எனது உணவாகட்டும்" என்று கேட்டான்.(13)
இதைக்கேட்ட தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, தேவாதி தேவனும், பேருயிரும் (பரமாத்மாவும்), யோகிகளின் தலைவனுமான ஹரியிடம் சென்றான்.(14) பின்னவன் {ஹரி}, கருடன் கூறிய அனைத்தையும் அங்கீகரித்தான். தேவலோகத்தின் புகழ்பெற்ற தலைவன் {இந்திரன்}, கருடனிடம்,(15) "சோமத்தை நீ கீழே வைத்தவுடன், அதை நான் எடுத்து வந்துவிடுகிறேன்" என்று சொல்லிக் கருடனுக்கு விடைகொடுத்தான். அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறகு தனது தாயின் {வினதையின்} இருப்பிடத்திற்கு வேகமாகச் சென்றான்.(16)
பெருமகிழ்ச்சியில் இருந்த கருடன், அனைத்துப் பாம்புகளிடமும், "நான் இப்போது அமுதத்தைக் கொண்டு வந்துவிட்டேன். இதை {அமுதகலசத்தை} குசப்புல்லின் {தர்ப்பைப் புல்லின்} மீது வைக்கிறேன்.(17) நீங்கள் சென்று உங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, வழிபாடுகளையும், சடங்குகளையும் முடித்து, இங்கமர்ந்து அமுதத்தைக் குடியுங்கள்.(18) நான் உங்கள் உத்தரவை நிறைவேற்றிவிட்டதால், நீங்கள் சொன்னவாறே, இன்றே {இப்போதே} என் தாய் {வினதை} அடிமைக்கட்டிலிருந்து விடுபடட்டும்" என்று சொன்னான். பாம்புகளும் கருடனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளச் சென்று விட்டன.(19-20)
அதே வேளையில், சக்ரன் {இந்திரன்}, அமுதத்தை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்றுவிட்டான். பாம்புகளும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் முடித்துக் கொண்டு, அமுதத்தைக் குடிக்க மிகுந்த ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் வந்தன.(21) அமுதம் வைக்கப்பட்டிருந்த, அந்தக் குசப்புற்களால் ஆன படுக்கை {தர்ப்பைப்புற்கள் பரப்பியிருந்த இடம்} வெறுமையாக இருப்பதையும், {ஏமாற்றியதற்குப்} பதில் செய்கையாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதையும் அறிந்தனர்.(22) அமுதம் வைக்கப்பட்டிருந்ததால் அந்தக் குசப்புற்களைத் தங்கள் நாவால் நக்கத் தொடங்கின. இந்தச் செயலால், அந்தப் பாம்புகளின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன[2].(23) அமுதத்துடன் இருந்த தொடர்பால், அந்தக் குசப் புற்களும் தெய்வீகத் தன்மை கொண்டதாகின. இப்படியே புகழ்மிக்கக் கருடன், பாம்புகளுக்காக (தேவலோகத்திலிருந்து) அமுதத்தைக் கொண்டு வந்தான். இப்படியே கருடன் செய்த செயலால் பாம்புகளின் நாவுகளும் பிளந்தன.(24)
அதன்பிறகு அந்த அழகான இறகுகளைக் கொண்ட பறவையானவன் {கருடன்}, பெரும் மகிழ்வுற்று, அந்த அழகான கானகத்தில், தனது தாயுடன் {வினதையுடன்} மகிழ்ச்சியாக வாழ்ந்தான். மகத்தான செயல்களைப் புரிந்தும், அனைத்து விண்ணோடிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டும் பாம்புகளைத் தின்றும் தன் தாய்க்கு {வினதைக்கு} மகிழ்ச்சியை ஏற்படுத்தினான்.(25) எந்த மனிதன் இந்தக் கதையை நல்ல பிராமணர்கள் உள்ள சபையில் கேட்கிறானோ அல்லது உரக்க உரைக்கிறானோ, அவன் நிச்சயம் சொர்க்கம் அடைவான். கருடனின் சாதனைகளை ஒப்பிப்பதால் பெரும் நற்பேற்றையும் அவன் பெறுவான்" {என்றார் சௌதி}.(26)

[1] இங்கு ‘நன்றாகத் தெரிந்த காரணம்’ என்பது அருணனின் சாபம் என்று கங்குலி விளக்குகிறார். குழந்தை வரத்தை கத்ரு முதலில் கேட்டாள். அவளுக்கு ஆயிரம் பாம்புகள் பிறந்தன. அவளை அடுத்து குழந்தை வரம் கேட்ட வினதை, தன் சகோதரிகளின் புத்திரர்களை விட உயர்வான புத்திரவரம் கேட்டாள். அதே போல் பாம்புகள் பிறந்தும், தன் குழந்தைகள் பிறக்காமல் இருந்த போது வினதை பொறாமையால் அவசரப்பட்டு முட்டையை உடைக்கு அரைகுறை வளர்ச்சி கொண்ட அருணன் பிறந்து சபித்தான். அருணனின் பலம் கண்டு பொறாமை கொண்ட கத்ரு வினதையை அடிமையாக்கினாள். வினதை அடிமையானபோது கருடன் பிறக்காததால் கருடனும் வினதையுடன் அடிமை ஆனான். அருணன் முன்பே பிறந்துவிட்டதால் அவன் அடிமை ஆகவில்லை). ஆக இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் மூல காரணம் சகோதரிகளுக்கு இடையேயான பொறாமையே ஆகும்.
இதைக்கேட்ட தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, தேவாதி தேவனும், பேருயிரும் (பரமாத்மாவும்), யோகிகளின் தலைவனுமான ஹரியிடம் சென்றான்.(14) பின்னவன் {ஹரி}, கருடன் கூறிய அனைத்தையும் அங்கீகரித்தான். தேவலோகத்தின் புகழ்பெற்ற தலைவன் {இந்திரன்}, கருடனிடம்,(15) "சோமத்தை நீ கீழே வைத்தவுடன், அதை நான் எடுத்து வந்துவிடுகிறேன்" என்று சொல்லிக் கருடனுக்கு விடைகொடுத்தான். அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறகு தனது தாயின் {வினதையின்} இருப்பிடத்திற்கு வேகமாகச் சென்றான்.(16)
பெருமகிழ்ச்சியில் இருந்த கருடன், அனைத்துப் பாம்புகளிடமும், "நான் இப்போது அமுதத்தைக் கொண்டு வந்துவிட்டேன். இதை {அமுதகலசத்தை} குசப்புல்லின் {தர்ப்பைப் புல்லின்} மீது வைக்கிறேன்.(17) நீங்கள் சென்று உங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, வழிபாடுகளையும், சடங்குகளையும் முடித்து, இங்கமர்ந்து அமுதத்தைக் குடியுங்கள்.(18) நான் உங்கள் உத்தரவை நிறைவேற்றிவிட்டதால், நீங்கள் சொன்னவாறே, இன்றே {இப்போதே} என் தாய் {வினதை} அடிமைக்கட்டிலிருந்து விடுபடட்டும்" என்று சொன்னான். பாம்புகளும் கருடனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளச் சென்று விட்டன.(19-20)
அதே வேளையில், சக்ரன் {இந்திரன்}, அமுதத்தை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்றுவிட்டான். பாம்புகளும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் முடித்துக் கொண்டு, அமுதத்தைக் குடிக்க மிகுந்த ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் வந்தன.(21) அமுதம் வைக்கப்பட்டிருந்த, அந்தக் குசப்புற்களால் ஆன படுக்கை {தர்ப்பைப்புற்கள் பரப்பியிருந்த இடம்} வெறுமையாக இருப்பதையும், {ஏமாற்றியதற்குப்} பதில் செய்கையாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதையும் அறிந்தனர்.(22) அமுதம் வைக்கப்பட்டிருந்ததால் அந்தக் குசப்புற்களைத் தங்கள் நாவால் நக்கத் தொடங்கின. இந்தச் செயலால், அந்தப் பாம்புகளின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன[2].(23) அமுதத்துடன் இருந்த தொடர்பால், அந்தக் குசப் புற்களும் தெய்வீகத் தன்மை கொண்டதாகின. இப்படியே புகழ்மிக்கக் கருடன், பாம்புகளுக்காக (தேவலோகத்திலிருந்து) அமுதத்தைக் கொண்டு வந்தான். இப்படியே கருடன் செய்த செயலால் பாம்புகளின் நாவுகளும் பிளந்தன.(24)
[2] ஒரு வேளை அமுதம் கீழே சிந்தியிருக்குமோ என்ற நப்பாசையினால், பாம்புகள் குசப்புற்களை நக்கின. குசப்புற்கள் கூர்மையாக இருக்குமாதலால் அவற்றின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன. சில புராணங்களில் அமுதம் ஒரு துளி சிந்தியதாகவே உள்ளது. அமிர்தம் பட்டதாலேயே தர்ப்பைப் புற்கள் புனிதமானதாகின.
அதன்பிறகு அந்த அழகான இறகுகளைக் கொண்ட பறவையானவன் {கருடன்}, பெரும் மகிழ்வுற்று, அந்த அழகான கானகத்தில், தனது தாயுடன் {வினதையுடன்} மகிழ்ச்சியாக வாழ்ந்தான். மகத்தான செயல்களைப் புரிந்தும், அனைத்து விண்ணோடிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டும் பாம்புகளைத் தின்றும் தன் தாய்க்கு {வினதைக்கு} மகிழ்ச்சியை ஏற்படுத்தினான்.(25) எந்த மனிதன் இந்தக் கதையை நல்ல பிராமணர்கள் உள்ள சபையில் கேட்கிறானோ அல்லது உரக்க உரைக்கிறானோ, அவன் நிச்சயம் சொர்க்கம் அடைவான். கருடனின் சாதனைகளை ஒப்பிப்பதால் பெரும் நற்பேற்றையும் அவன் பெறுவான்" {என்றார் சௌதி}.(26)
ஆங்கிலத்தில் | In English |