Namelist of the Snakes! | Adi Parva - Section 35 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : பாம்புகளின் பெயர்ப்பட்டியலைக் கேட்ட சௌனகர்; அவற்றில் முக்கியமானவற்றைச் சொன்ன சௌதி...
சௌனகர், "ஓ சூதப் புதல்வா! {சௌதியே}, நீ இதுவரை, பாம்புகள் ஏன் அவற்றின் தாயாலே {கத்ருவினாலே} சபிக்கப்பட்டன என்றும், வினதை ஏன் தனது மகனால் {அருணனால்} சபிக்கப்பட்டாள் என்றும்,(1) கத்ரு மற்றும் வினதைக்கு அவர்களது கணவர் {கசியபர்} கொடுத்த வரங்களைப் பற்றியும், வினதையின் மகன்களின் பெயர்களையும் {அருணன், கருடன்} சொல்லிவிட்டாய்.(2) ஆனால், நீ இன்னும் பாம்புகளின் பெயர்களைக் கூறவில்லையே? அவற்றில் முக்கியமான பாம்புகளின் பெயர்களைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்" என்று கேட்டார்.(3)
சௌதி சொன்னார், "ஓ தவத்தை செல்வமாய்க் கொண்டவரே! {சௌனகரே}, அவை மிகவும் நீண்ட பட்டியலாக இருக்கும் என்று அஞ்சினேன். அனைத்துப் பாம்புகளின் பெயர்களையும் என்னால் குறிப்பிட இயலாது. முக்கியமானவர்களின் பெயர்களை மட்டும் நான் விவரிக்கிறேன். கேட்பீராக.(4)
சேஷன் முதலில் பிறந்தான், அதன்பிறகு வாசுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காலகேயன் {காளியன்}, மணி {மணிநாகன்} என்ற பாம்பு, பூரணன் {ஆபூரணன்}, பிஞ்சரகன், ஏலாபத்ரன், வாமனன், நீலன், அநீலன், கல்மாஷன், சபலன், ஆர்யகன், உக்கிரன் {உக்கிரகன்} {சதிகன்}, கலசபோதகன்{சலபோதகன்}, சூரமுகன் {சுமனோமுகன்}, ததிமுகன், விமலபிண்டகன், ஆப்தன், கரோடகன் {கோடரகன்}, சங்கன், வாலிசிகன், நிஷ்டானகன், ஹேமகுஹன், நஹுஷன், பிங்களன், பாஹ்யகர்ணன், ஹஸ்திபதன், முத்கரபிண்டகன், கம்பலன், அசுவதரன், காளீயகன், விருத்தன், சம்வர்த்தகன், பத்மன், மஹாபத்மன், சங்கமுகன், கூச்மாண்டகன், க்ஷேமகன், பிண்டாரகன், கரவீரன், புஷ்பதம்ஷ்டிரகன், பில்வகன், பில்வபாண்டுரன், மூஷிகாதன், சங்கசிரசன், பூர்ணபத்திரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜியோதிகன், ஸ்ரீவஹன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், விரஜசன், சுபாகு, சாலிபிண்டன், பிரபாகரன், ஹஸ்திபிண்டன், பிடரகன், சுமுக்ஷன் {சுமுகன்}, கௌணபாசனன், குடரன், குஞ்சரன், குமுதன், குமதாக்ஷன், தித்திரி, ஹலிகன், கர்த்தமன், பகுமூலகன், கர்க்கரன், அகர்க்கரன், குண்டோதரன் மற்றும் மகோதரன் ஆகியோர் பிறந்தனர்.(5-16)
ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே! {சௌனகரே}, இவ்வாறு நான் முக்கியமான பாம்புகளின் பெயர்களைச் சொல்லியிருக்கிறேன். சலிப்பூட்டும் என்று அஞ்சி மீதமிருக்கும் பெயர்களை நான் சொல்லவில்லை.(17) ஓ தவத்தை செல்வமாய்க் கொண்ட முனிவர்களே, இந்தப் பாம்புகளின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பலர் கணக்கிலடங்காமல் உள்ளனர். இதைச் சிந்தித்தே அவர்கள் பெயரையெல்லாம் நான் உம்மிடம் சொல்லப் போவதில்லை.(18) ஓ சிறந்த துறவிகளே! இந்த உலகில் உள்ள பாம்புகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கானவை, அவற்றை எண்ணமுடியாது” {என்றார் சௌதி}.(19)

ஆங்கிலத்தில் | In English |