Bear the earth Adisesha! | Adi Parva - Section 36 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 24)
பதிவின் சுருக்கம் : தாயை விட்டுப் பிரிந்து கடுமையான தவமியற்றிய சேஷன்; சேஷன், பிரம்மன் உரையாடல்; உலகைச் சுமக்கப் பணிக்கப்பட்ட சேஷன்...
உலகைத் தாங்கும் ஆதிசேஷன் |
சௌனகர், "ஓ குழந்தாய்! {சௌதியே}, பெரும் சக்தியுடனும், எளிதில் வெல்லப்பட முடியாதவர்களுமாக வரம் அருளப்பட்ட, பல பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டாய். {கத்ரு தந்த} அந்தச் சாபத்தைக் கேட்ட பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று கேட்டார்.(1)
"சௌதி சொன்னார், "அவர்களில் {பாம்புகளில்} புகழ்வாய்ந்தவனும், சிறப்பு மிக்கவனுமான சேஷன், தனது தாயை விட்டுச் சென்று, கடுமையான விரதங்களை நோற்றுக் காற்றை மட்டும் உண்டு, கடுந்தவம் செய்தான்.(2) அவனது தவங்களை கந்தமாதன மலையிலும், பதரி, கோகர்ண மலைகளிலும், புஷ்கர வனத்திலும், இமய மலையின் அடிவாரத்திலேயும் மேற்கொண்டான்.(3)
அவன் {சேஷன்} தனது காலத்தை அந்தப் புனிதமான இடங்களிலேயே உறுதியாக விரதங்களை நோற்றுக் கழித்தான். சில இடங்கள் தங்கள் நீருக்காகவும் {தீர்த்தப் பெருமை கொண்டவையாக}, சில இடங்கள் தங்கள் மண்ணுக்காகவும் {தலப்பெருமை கொண்டவையாக} புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தன. அந்த இடங்களில் ஒரே குறிக்கோளுடன், தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு கடும் தவம் இருந்தான்.(4) தலையில் சடை தரித்தவனும், கந்தல்துணியை உடுத்தியவனும், கடுந்தவம் பயின்றதால் தனது சதைகளும், தோலும், சதை நார்களும் வற்றிப் போய் இருந்தவனுமான அந்தத் துறவியை {சேஷனை}, எல்லோருக்கும் பெருந்தகப்பனான பிரம்மன் கண்டான்.(5) பெருந்தகப்பன் {பிரம்மன்}, தவம் பயிலும் பெரும் உறுதி கொண்ட அவனிடம் {சேஷனிடம்}, "ஓ சேஷா! நீ என்ன இன்னலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாய்[1]? உலகங்களில் வாழும் மற்ற உயிர்களின் நன்மையும் உனது எண்ணத்தில் இருக்கட்டும்.(6) ஓ பாவங்களற்றவனே! உனது கடுந்தவத்தால் நீ மற்ற உயிரினங்களை வருத்திக் கொண்டிருக்கிறாய். ஓ சேஷா! உனது இதயத்தில் குடிகொண்டிருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்வாயாக" என்றான் {பிரம்மன்}.(7)
அதற்குச் சேஷன், "என்னுடன் ஒரே கருவறையில் பிறந்தவர்கள் {மற்ற பாம்புகள்} அனைவரும் இதயத்தால் தீயவர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களுடன் வாழ விரும்பவில்லை. இஃது உம்மால் அங்கீகரிக்கப்படட்டும்.(8) {அவர்கள்} பகைவர்களைப் போல், ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டுள்ளனர். அதனால், நான் தவத்துறவுகளில் ஈடுபட வந்துவிட்டேன். நான் அவர்களைப் பார்க்கக்கூட மாட்டேன்.(9) வினதையிடமும், அவளது மகனிடமும் {கருடனிடமும்} அவர்கள் அன்புடன் இருப்பதில்லை. விண்ணை அதிகாரம் செய்யும் வல்லமை பெற்றிருக்கும் வினதையின் மைந்தன் {கருடன்} எங்களுக்கு மற்றுமொரு சகோதரனே. அவனை {அவர்கள்} எப்போதும் பகைக்கிறார்கள். எங்கள் தந்தை உயரான்ம கசியபரின் வரத்தால், அவன் {கருடன்} பெரும் பலத்துடன் இருக்கிறான்.(10,11) அடுத்தப் பிறவியிலும் எனக்கு அவர்கள் உறவு இல்லாதபடி தவம் செய்து நான் என் உடலை விடப்போகிறேன்" என்றான் {சேஷன்}.(12)
அப்படிச் சொன்ன சேஷனிடம் பெருந்தகப்பன், "ஓ சேஷா! உன் சகோதரர்களின் நடத்தையையும், தங்கள் தாயை {கத்ருவை} மறுத்துப் பேசியதால் அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தையும் நான் அறிவேன். ஆனால் அதற்கு முன்பே, ஓ பாம்பே! {சேஷனே}, (அதற்கான) பரிகாரத்தை நான் கொடுத்திருக்கிறேன்.(13,14) அதனால் நீ உனது சகோதரர்களைக் குறித்து வருந்தாதே. ஓ சேஷா, நீ விரும்பும் வரத்தைக் கேள்.(15) நான் உன்னால் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகையால் இன்று உனக்கு ஒரு வரம் தருகிறேன். ஓ பாம்புகளில் சிறந்தவனே! {சேஷனே}, உனது மனம் அறத்தில் நிலைத்திருப்பது நல்லதே. உனது மனம் மேலும், மேலும் அறம் சார்ந்தே இருக்கட்டும்" என்றான். {பிரம்மன்}.(16)
சேஷன், "ஓ தெய்வீகமானவரே! பெருந்தகப்பனே, ஓ அனைவருக்கும் தேவனே. எனது இதயம் எப்போதும் அறத்திலும், அருள் நிறைந்த ஆன்ம தவத்திலும் இன்பம் அடையட்டும். இவ்வரத்தையே நான் விரும்புகிறேன்" என்று கேட்டான். (17)
பிரம்மன், "ஓ சேஷா! உனது தன்னலமற்ற தன்மையையும், அமைதிக்கான விருப்பத்தையும் அறிந்து நான் பெருமகிழ்வு கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆணைக்கிணங்க, என் படைப்புகளின் நன்மைக்காக நீ இந்தச் செயலை செய்யவேண்டும்.(18) இதுமுதல், ஓ சேஷா, மலைகளுடனும், கானகங்களுடனும், கடல்களுடனும், நகரங்களுடனும், தோட்டங்களுடனும் இருக்கும் இந்த உறுதியற்ற பூமியை, சரியாகவும் சிறப்பாகவும் தாங்கிக் கொள்வாயாக. அதனால் அவள் {பூமாதேவி} உறுதியுடன் இருப்பாள்" என்றான்.(19)
சேஷன், "ஓ அனைத்து உயிர்களுக்கும், பூமிக்கும், படைக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும், அண்டத்திற்கும் தேவனே, அனைத்து வரங்களையும் அளிப்பவரே, நீர் சொல்வது போலவே, நான் இந்தப் பூமியை உறுதியாகத் தாங்கிக் கொள்வேன். அதனால் ஓ அனைத்து உயிர்களுக்கும் தலைவரே, அவளை {பூமியை} என் தலையில் வையும்" என்றான்.(20)
"பிரம்மன், "ஓ பாம்புகளில் சிறந்தவனே! {சேஷா}, பூமிக்கடியில் செல்வாயாக, நீ உள்ளே கடந்து செல்வதற்காக அவளே தன்னுள் பிளவு ஏற்படுத்தி வழி தருவாள். ஓ சேஷா, நீ பூமியைத் தாங்கி, என்னால் பெரிதும் மதிக்கப்படும் செயலைச் செய்வாயாக" என்றான்."(21)
சௌதி தொடர்ந்தார், "பாம்புகள் மன்னனின் {வாசுகியின்} அண்ணன் {சேஷன்}, ஒரு பொந்துக்குள் புகுந்து, பூமியின் மறுபுறம் சென்று, அவளை, எங்கும் பரவியிருந்த கடல் என்னும் கச்சையுடன் சேர்த்து, தனது தலையால் முட்டுக் கொடுத்துத் தாங்கினான்.(22)
பிரம்மன், "ஓ சேஷா! ஓ பாம்புகளில் சிறந்தவனே, நீயே தர்ம தேவன், ஏனெனில், என்னை அல்லது வலவித்தைப் (இந்திரன்)[2] போலத் தனியாளாக, உன் பெரும் உடலுடன், இந்தப் பூமியை அதன் எல்லாப் பொருளுடனும் சேர்த்துத் தாங்குகிறாய்" என்றான்."(23)
சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்பு, சேஷன், தேவன் ஆனந்தன், அந்தப் பெரும் ஆற்றல் மிக்கவன், பிரம்மனின் கட்டளையால், அன்று முதல் பூமிக்கடியில் தனியாக உலகத்தைத் தாங்கிக் கொண்டு நிற்கிறான்.(24) அந்தப் புகழ்மிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, இறவாதவர்களில் சிறந்தவன், அனந்தனின் {சேஷனின்} உதவிக்காக அழகான இறகுகள் கொண்ட வினதையின் மைந்தனை {கருடனை} நியமித்தான்" {என்றார் சௌதி}.(25)

[1] மனத்தில் குறிக்கோளுடன் யாராவது தொடர்ந்து தவம் செய்தால் அதனால் மூவுலகத்தினரும் இன்னலை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் வேண்டும் வரத்தைத் தந்து தெய்வங்கள் அவர்களை மன நிறைவு கொள்ளச் செய்ய வேண்டும். தவத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு.

[2] மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பிலும் நேரடியாக இந்திரன் என்ற பெயரே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் பலன் Bala என்றிருக்கிறது. மூல ஸ்லோகத்தில் balabhid பலபித் என்ற வார்த்தைத் தென்படுகிறது. பலமிகுந்த சேனைகளை அழிப்பவன் என்பது இதன் பொருள்.
சௌதி தொடர்ந்தார், "அந்தப் பாம்பு, சேஷன், தேவன் ஆனந்தன், அந்தப் பெரும் ஆற்றல் மிக்கவன், பிரம்மனின் கட்டளையால், அன்று முதல் பூமிக்கடியில் தனியாக உலகத்தைத் தாங்கிக் கொண்டு நிற்கிறான்.(24) அந்தப் புகழ்மிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, இறவாதவர்களில் சிறந்தவன், அனந்தனின் {சேஷனின்} உதவிக்காக அழகான இறகுகள் கொண்ட வினதையின் மைந்தனை {கருடனை} நியமித்தான்" {என்றார் சௌதி}.(25)
ஆங்கிலத்தில் | In English |