Consultation of the Snakes! | Adi Parva - Section 37 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : தங்கள் தாயுடைய சாபத்திலிருந்து தப்பிக்க ஆலோசனையில் ஈடுபட்ட பாம்புகள்; பாம்புகள் சொன்ன திறனற்ற ஆலோசனைகளைக் கேட்டு கவலை கொண்ட வாசுகி...
சௌதி சொன்னார், "அந்தப் பாம்புகளில் சிறந்தவனான வாசுகி, தனது தாயின் சாபத்தைக் கேட்டு, அதை {அந்தச் சாபத்தை} எப்படிச் செயலிழக்க வைப்பது என்பது குறித்து சிந்தித்தான்.(1) தனது சகோதரர்கள் ஐராவதன் மற்றும் ஏனைய பாம்புகளுடன் சேர்ந்து எந்தக் காரியத்தைச் செய்தால் அது சிறந்ததாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினான்.(2)
வாசுகி, "`ஓ பாவமற்றவர்களே! சாபத்தின் காரணம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தச் சாபத்தைச் செயலிழக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும்.(3) சாபங்கள் அனைத்திற்கும் பரிகாரம் உண்டு. ஆனால் தங்கள் தாயினால் சபிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் கிடையாது.(4) மாற்றமில்லாதவனும், முடிவில்லாதவனுமான உண்மையானவன் {பிரம்மன்} முன்னிலையில் இந்தச் சாபம் இடப்பட்டதைக் கேட்டு என் இதயம் நடுங்குகிறது.(5) அந்த மாற்றமில்லாத தலைவன் {பிரம்மன்} நமது தாயைச் சபிக்க விடாமல் தடுக்காததால், நமக்கு அழிவுகாலம் வந்துவிட்டது என்பது நிச்சயம்.(6)
எனவே, பாம்புகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இன்று ஆலோசிப்போம். நேரத்தை நாம் வீணடிக்கவேண்டாம்.(7) நீங்கள் அனைவருமே புத்திசாலிகள்; முடிவெடுப்பதில் சிறந்தவர்கள். முற்காலத்தில் குகைக்குள் ஒளிந்து கொண்ட அக்னியைத் தேவர்கள் மீண்டும் அடைந்ததைப் போல, நாம் ஒன்றாக ஆலோசித்து, பாம்புகளின் அழிவுக்கான ஜனமேஜயனின் வேள்வி நடைபெறாதவாறும், நாம் அழிவைச் சந்திக்காதவாறும் விடுதலைக்கான வழிகளைக் கண்டுபிடிப்போம்" என்றான் {வாசுகி}."(8,9)
சௌதி தொடர்ந்தார், "{வாசுகியால்} இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்ட கத்ருவின் விவேகமுள்ள வாரிசுகள் {பாம்புகள்} ஒன்றாகக் கூடி, தங்கள் கருத்துக்களை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொண்டனர்.(10) பாம்புகளில் ஒரு தரப்பு, "உயர்ந்த பிராமணர்களின் தோற்றத்தை ஏற்று {வேடம் புனைந்து}, ஜனமேஜயனிடம் "(நீ செய்ய கருதியிருக்கும்) இந்த உனது வேள்வி நடக்கக்கூடாது" என்று வேண்டிக் கேட்போம்" என்றன.(11)
தங்களை விவேகிகளாக நினைத்துக் கொண்ட சில பாம்புகள், "நாம் அவனுக்கு விருப்பமான ஆலோசகர்களாக ஆக வேண்டும்.(12) பிறகு எந்தக் காரியமாக இருந்தாலும், அவன் நிச்சயமாக நம் ஆலோசனைகளைக் கேட்பான். நாம் வேள்வி தடைபடும்படியாக அவனுக்கு ஆலோசனை அளிப்போம்.(13) விவேகிகளில் முதன்மையான அந்த மன்னன் {ஜனமேஜயன்} நம்மை மேன்மையானவர்களாக மதித்துத் தன் வேள்வியைக் குறித்து நம்மிடம் நிச்சயம் கேட்பான். நாம் "அது {நடக்கக்} கூடாது" என்று சொல்லி,(14) அதனால் இவ்வுலகத்திலும் அடுத்த உலகத்திலும் ஏற்படும் {ஏற்படும் எனப் பொய்யாகத்} தீமைகளைச் சுட்டிக்காட்டி, அந்த வேள்வி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.(15) அல்லது எவன் பாம்பு வேள்வியின் சடங்குகளை நன்கறிந்தவனோ, எவன் அந்த ஏகாதிபதியின் {ஜனமேஜயனின்} நன்மையை எண்ணி வேள்விப்புரோகிதனாக நியமிக்கப்படுவானோ, அந்த மனிதன் மரணமடையும் வகையில், பாம்புகளில் ஒருவன் அவனைக் கடிக்கட்டும். வேள்வியின் புரோகிதன் இறந்தால் அந்த வேள்வி நிறைவு பெறாது.(16,17) பாம்பு வேள்வியின் சடங்குகளை அறிந்தவர்கள் எவரோ, வேள்வியின் ரித்விக்குகளாக நியமிக்கப்படக்கூடியவர்கள் எவரோ, அவர்கள் அனைவரையும் கடித்து, அதன் மூலம் நம் நோக்கத்தை நாம் நிறைவேற்றிக் கொள்வோம்” என்று சொல்லின.(18)
ஒழுக்கமும், கருணையும் கொண்ட சில பாம்புகள், "உங்களது இவ்வாலோசனை தீமையானது. பிராமணர்களைக் கொல்வது தகாது.(19) ஆபத்துக் காலங்களில் நீதிமிக்கோரின் {நல்லோரின்} நடைமுறைகளால் அருளப்பட்ட பரிகாரங்களே சரியானது ஆகும். அநீதியானது {அதர்மம்} இறுதியில் உலகத்தை அழித்துவிடும்” என்றன.(20)
வேறு சில பாம்புகள், "நாம் ஒளியுடைய மின்னலுடன் கூடிய மேகங்களாக மாறிச் சென்று, மழையைப் பொழிந்து எரியும் வேள்வித்தீயை அணைத்துவிடுவோம்" என்றன.(21) வேறு சில சிறந்த பாம்புகள், "இரவில் சென்று சோமச்சாறு {சோமரசம்} உள்ள பாத்திரத்தைத் திருடிச் சென்றுவிடுவோம். அஃது அந்தச் சடங்குக்குத் தடங்கலைச் செய்யும்.(22) அல்லது, அந்த வேள்வியில் நூற்றக்கணக்கான ஆயிரக்கணக்கான பாம்புகள் மக்களைக் கடித்து, எங்கும் பீதியைப் பரப்பட்டும்.(23) அல்லது, பாம்புகள், தங்கள் சிறுநீரையும் மலத்தையும் கலந்து தூய உணவைக் களங்கப்படுத்தட்டும்" என்றன.(24)
வேறு சில பாம்புகள், "நாம் மன்னனின் {ஜனமேஜயனின்} ரித்விக்குகளாக மாறி, ஆரம்பத்திலேயே ‘எங்களுக்கு வேள்விக்கான தக்ஷிணையைக் கொடு’ என்று கேட்டு அவனது வேள்வியைத் தடுப்போம்.(25) அவன் (மன்னன் {ஜனமேஜயன்}) நம் சக்திக்கு உட்பட்டு நாம் விரும்புவதைச் செய்வான்” என்றன. அங்கே இருந்த வேறு சில {பாம்புகள்}, "மன்னன் {ஜனமேஜயன்} நீரில் நீந்தி விளையாடும்போது,(26) அவனைத் நமது இருப்பிடத்திற்குத் தூக்கிச் சென்று, அந்த வேள்வி நடைபெறாதவாறு அவனைக் கட்டிப் போடுவோம்" என்றன. இன்னும் சில தங்களைப் புத்திசாலிகளாகக் கருதிக் கொண்டு,(27) "மன்னனை {ஜனமேஜயனை} அணுகி, நம் நோக்கம் நிறைவடையும் வகையில் அவனைக் கடிப்போம். அவனுடைய மரணத்தால் தீமைகள் அனைத்தின் வேர்களும் அறுந்துவிடும்.(28) ஓ கண்களால் கேட்பனே[1], இதுவே எங்கள் அனைவரின் முடிவான தீர்மானமாகும். நீ சரியென்று கருதுவதை விரைவாகச் செய்வாயாக" என்றன.(29)
இவ்வாறு சொல்லிவிட்டுக் குறிப்பாக பாம்புகளில் சிறந்த வாசுகியை {பதிலை எதிர்பார்த்து} நோக்கின. சிறிது நேரம் சிந்தித்த வாசுகி,(30) "பாம்புகளே, நீங்கள் சொன்ன முடிவான தீர்மானம் பின்பற்றுவதற்குத் தகுந்ததாக இல்லை. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் எனக்குப் பிடித்த வகையில் இல்லை.(31) உங்கள் நன்மைக்காக நான் என்ன சொல்ல முடியும்? புகழ்மிக்க (நம் தந்தைக்) கசியபரின் கருணை மட்டுமே நமக்கு நன்மை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.(32) பாம்புகளே, உங்கள் பரிந்துரைகள் அனைத்திலும் எதை எனது நன்மைக்காகவும், நமது குல நன்மைக்காகவும் பின்பற்றுவது என்பதை என் இதயம் அறியவில்லை.(33) உங்கள் நன்மைக்காக நான் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்தாக வேண்டும். அந்தச் செயலின் நன்மையோ, தீமையோ என்னைச் சேர்ந்தது என்பதே என்னை இவ்வளவு கவலையடையச் செய்கிறது” என்று பதிலளித்தான் {வாசுகி}."(34)

[1] பாம்புகளுக்கு புறக்காது கிடையாது. கட்செவி – கண்களில் செவிகொண்டவை பாம்புகள் என தமிழ் இலக்கியங்கள் கூறும். பாம்பின் தலையில் செவியின் அமைப்பு கண்களுக்கு மத்தியில் உள்ளது. அது தரையில் மற்றும் காற்றும் ஏற்படும் அதிர்வுகளை ஒலியாக உணரச் செய்யும் என அறிவியலும் சொல்கிறது. அசுணமா என்ற பாம்பு பலத்த முரசொலி எழுப்பினால் இறந்து விடும் எனத் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன.
இவ்வாறு சொல்லிவிட்டுக் குறிப்பாக பாம்புகளில் சிறந்த வாசுகியை {பதிலை எதிர்பார்த்து} நோக்கின. சிறிது நேரம் சிந்தித்த வாசுகி,(30) "பாம்புகளே, நீங்கள் சொன்ன முடிவான தீர்மானம் பின்பற்றுவதற்குத் தகுந்ததாக இல்லை. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் எனக்குப் பிடித்த வகையில் இல்லை.(31) உங்கள் நன்மைக்காக நான் என்ன சொல்ல முடியும்? புகழ்மிக்க (நம் தந்தைக்) கசியபரின் கருணை மட்டுமே நமக்கு நன்மை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.(32) பாம்புகளே, உங்கள் பரிந்துரைகள் அனைத்திலும் எதை எனது நன்மைக்காகவும், நமது குல நன்மைக்காகவும் பின்பற்றுவது என்பதை என் இதயம் அறியவில்லை.(33) உங்கள் நன்மைக்காக நான் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்தாக வேண்டும். அந்தச் செயலின் நன்மையோ, தீமையோ என்னைச் சேர்ந்தது என்பதே என்னை இவ்வளவு கவலையடையச் செய்கிறது” என்று பதிலளித்தான் {வாசுகி}."(34)
ஆங்கிலத்தில் | In English |