Elapatra's Knowledge! | Adi Parva - Section 38 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 26)
பதிவின் சுருக்கம் : சாபத்தின் விளைவைத் தடுக்க முடியாது என்று எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; தேவர்களிடம் பேசிய பிரம்மனின் பேச்சைப் பாம்புகளிடம் எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; ஜரத்காருவை எதிர்நோக்கும்படி வாசுகியைத் தூண்டியது...
பிரம்மனிடம் தேவர்கள் |
சௌதி சொன்னார், "அனைத்துப் பாம்புகளின் பேச்சையும், வாசுகியின் வார்த்தைகளையும் கேட்ட ஏலாபத்திரன், அவர்களிடம் {பாம்புகளிடம்},(1) "அந்த வேள்வி தடுக்கப்படக் கூடியதல்ல. எவனிடமிருந்து இந்த அச்சம் தோன்றியிருக்கிறதோ அந்தப் பாண்டவ குலத்து மன்னன் ஜனமேஜயனும் தடுக்கப்பட முடியாதவனே.(2) ஓ மன்னா {வாசுகி}, எவன் விதியினால் பாதிக்கப்பட்டானோ, அவன் விதியிடம் மட்டுமே தஞ்சம் அடைய வேண்டும். வேறு எதுவும் அவனுக்குப் புகலிடமாக அமைய முடியாது.(3) பாம்புகளில் சிறந்தவர்களே, நமது அச்சத்தின் காரணம் விதியில் வேர் விட்டிருக்கிறது. எனவே, விதி மட்டுமே நமது புகலிடமாக இருக்க முடியும். நான் சொல்வதைக் கேட்பீராக.(4) பாம்புகளில் சிறந்தவர்களே, அந்தச் சாபம் உச்சரிக்கப்படும்போது, அச்சத்தினால் நான் நமது தாயின் {கத்ருவின்} மடியிலேயே பதுங்கியிருந்தேன். பாம்புகளில் சிறந்தவர்களே, ஓ பெரும் காந்தி மிக்கத் தலைவனே (வாசுகி), {நான் பதுங்கியிருந்த} அந்த இடத்தில், (இந்தச் சாபத்தால்) கவலை கொண்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} பேசும் வார்த்தைகள் எனக்குக் கேட்டன.(5,6)
தேவர்கள், "ஓ பெருந்தகப்பனே!, ஓ தேவர்களுக்குத் தேவா {பிரம்மா}, உமது இருப்பை உணர்ந்தும், இவ்வளவு அன்பானப் புதல்வர்கள் கிடைத்தும், இந்தப் பாவி கத்ருவைத் தவிர வேறு எவரால் உம் முன்னிலையிலேயே இப்படிச் சபிக்க முடியும்?(7) ஓ பெருந்தகப்பனே, நீரும், "அப்படியே ஆகட்டும்" என்று அவளை {கத்ருவை} அங்கீகரித்துள்ளீரே. அவள் {கத்ரு} அப்படிச் செய்வதை நீர் ஏன் தடுக்கவில்லை என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்றனர் {தேவர்கள்}.(8)
அதற்குப் பிரம்மன், "பாம்புகள் பல்கிப் பெருகிவிட்டன. அவை கொடூரமானவையாகவும், உருவத்தால் பயங்கரமானவையாகவும், மிகுந்த விஷத்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன. எனது படைப்புகளின் நன்மையை விரும்பி, நான் கத்ருவைத் தடுக்கவில்லை.(9) எந்த விஷத்தன்மையுள்ள பாம்புகளும், மற்ற பாவிகளும் ஒரு தவறும் செய்யாதவர்களைக் கடிக்கின்றனவோ, அவை உண்மையில் அழியும். ஆனால் எவை தீங்கில்லாதவையோ, அறமுள்ளவையோ அவை அழியாது.(10) பயங்கரமான பேரிடர் சம்பவிக்கும் அந்தக் காலத்தில், பாம்புகள் எப்படி அதில் {அந்த இடரில்} இருந்து தப்பிப்பார்கள் என்பதையும் கேட்பீராக.(11)
யாயாவரர் குலத்திலே[1] புத்திக்கூர்மை உள்ளவனாகவும், ஆசைகளை முழுதும் அடக்கியவனாகவும், ஜரத்காரு என்னும் பெருமுனிவன் பிறப்பான்.(12) அந்த ஜரத்காருவுக்கு, ஆஸ்தீகன் என்ற பெயர் கொண்ட பிள்ளை இருப்பான். அவன் அந்த வேள்வியைத் {நாக வேள்வியைத்} தடுத்து நிறுத்துவான். எந்தப் பாம்புகள் அறம்சார்ந்தனவோ, அவை தப்பிக்கும்" என்றான் {பிரம்மன்}.(13) தேவர்கள் {பிரம்மனிடம்}, "ஓ உண்மைகளை அறிந்தவரே, பெரும் சக்தியும் தவமும் கொண்ட அந்த ஜரத்காரு என்ற முனிவர்களில் முதன்மையானவன், யார் மூலமாகத் தனது சிறப்புமிக்கப் புத்திரனை ஈன்றெடுப்பான்?" என்று கேட்டனர்.(14)
அதற்குப் பதிலளித்த பிரம்மன், "பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அந்த பிராமணர்களில் சிறந்தவன் {ஜரத்காரு}, தனது {ஜரத்காரு என்ற} பெயரைக் கொண்ட தன் மனைவி மூலமே, பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட தன் மகனை {ஆஸ்தீகனை} ஈன்றெடுப்பான்.(15) பாம்புகளின் மன்னன் வாசுகிக்கு ஜரத்காரு என்ற பெயரில் ஒரு தங்கை இருக்கிறாள். யாரைக் குறித்து நான் பேசுகிறேனோ, அந்த மகன் {ஆஸ்தீகன்} அவள் மூலமே பிறப்பான். அவன் விடுவிப்பான்" என்றான்."(16)
ஏலாபத்திரன் தொடர்ந்தான், "தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றனர். தெய்வமான பிரம்மனும் தேவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தேவலோகம் {பிரம்மலோகம்} சென்றான்.(17) ஓ வாசுகி, ஜரத்காரு எனும் பெயரில் இருக்கும் உன் தங்கையை என் முன்னே நான் காண்கிறேன். கடும் தவம் செய்த (முனிவர்) ஜரத்காரு, ஒரு மணமகளுக்காக அலைந்து {அவர்} பிச்சைக் கேட்கும்போது அவளை {வாசுகியின் தங்கையை}, கொடுத்து எங்களை அச்சத்திலிருந்து விடுவிப்பாயாக. விடுதலைக்கான இந்த வழியை நான் {பிரம்மனிடம் இருந்து} கேட்டேன்" என்றான் {ஏலாபத்திரன்}."(18,19)

[1] ஓரிடத்திலும் தங்காமல் திரிந்து கொண்டே இருக்கும் முனிவர்கள்

ஆங்கிலத்தில் | In English |