The sorrow of Vasuki! | Adi Parva - Section 39 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 27)
பதிவின் சுருக்கம் : தன் தங்கையை ஜரத்காருவுக்காக வளர்த்த வாசுகி; பெருங்கடல் கடைவதில் வாசுகி செய்த உதவியினால் பாம்பினத்திற்காகப் பிரம்மனிடம் வேண்டிக்கொண்ட தேவர்கள்; ஏலாபத்திரன் கூறியதை உறுதிப்படுத்திய பிரம்மன்; ஜரத்காருவைக் கவனிக்கப் பாம்புகளுக்கு உத்தரவிட்ட வாசுகி ...
சௌதி சொன்னார், "ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சௌனகரே}, ஏலாபத்திரனின் வார்த்தைகளைக் கேட்ட எல்லாப் பாம்புகளும் பெரும் மகிழ்ச்சி கொண்டு, "நன்றாகச் சொன்னாய், நன்றாகச் சொன்னாய்" என்று மகிழ்ச்சி குரல் கொடுத்தனர்.(1) அன்றிலிருந்து வாசுகி, தனது தங்கையான ஜரத்காரு என்ற அந்தப் பெண்ணை {பெண் பாம்பை} கவனமாக வளர்த்து வந்தான். அவளை {ஜரத்காருவை} வளர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டான்.(2)
சிறிது காலத்திற்குள் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து வருணனின் இருப்பிடத்தைக் {பெருங்கடலை} கடைந்தனர்.(3) வலிமை அருளப்பட்டவர்களில் முதன்மையானவனான வாசுகி {கடலைக்} கடைவதற்கான கயிறானான். அந்த வேலை முடிந்ததும், அந்தப் பாம்புகளின் மன்னன் {வாசுகி}, பெருந்தகப்பனின் {பிரம்மனின்} முன்னிலைக்குச் சென்றான்.(4) வாசுகி உடனிருக்க, தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்}, "ஓ தலைவா {பிரம்மனே}, வாசுகி (தனது தாயின் சாபத்தினால்) அச்சம் கொண்டு மிகுந்த துயருற்றிருக்கிறான்.(5) தன் இனத்தின் {பாம்பினத்தின்} நன்மையை விரும்பும் வாசுகியின் நெஞ்சைத் துளைப்பதும், தாயின் சாபத்திலிருந்து விளைந்ததுமான, அந்தத் துயரை நீக்குவதே உமக்குத் தகும்.(6) பாம்புகளின் மன்னன் {வாசுகி}, நமது நன்மையை விரும்பி எப்போதும் நம்முடன் {தேவர்களுடன்} நட்புடன் இருப்பவன். ஓ தேவர்கள் தலைவனே {பிரம்மனே}, அவனிடம் {வாசுகியிடம்} கருணை கொண்டு, அவனது மன நோயைப் போக்கும்" என்று தெரிவித்தனர்.(7)
அதற்குப் பிரம்மன், "ஓ இறவாதவர்களே {தேவர்களே}, நீங்கள் சொன்னதையே நானும் என் மனத்தில் எண்ணியிருக்கிறேன். பாம்புகளின் மன்னன் {வாசுகி}, முன்பு ஏலாபத்திரன் சொன்னவாறு செய்யட்டும்[1]. அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. தீயவர்கள் மட்டுமே அதில் அழிவர், அறம் சார்ந்தோர் அழிய மாட்டார்கள்.(8,9) ஜரத்காரு பிறந்துவிட்டான், அந்த பிராமணன் {ஜரத்காரு} கடுந்தவங்களைச் செய்து கொண்டிருக்கிறான். வாசுகி, சரியான தருணத்தில் தனது சகோதரியை {ஜரத்காருவை} அவனுக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கட்டும்.(10) தேவர்களே, பாம்புகளின் நன்மையில் விருப்பம் கொண்ட பாம்பு ஏலாபத்திரன் சொன்னது அனைத்தும் உண்மை. அதைத் {உண்மையைத்} தவிர வேறெதுவும் இல்லை" என்றான் {பிரம்மன்}.(11)
சௌதி தொடர்ந்தார், "அதன்பிறகு, தாயின் சாபத்தால் துயருற்றிருந்த பாம்புகளின் மன்னன் வாசுகி, பெருந்தகப்பனின் {பிரம்மனின்} வார்த்தைகளைக் கேட்டு, தனது சகோதரியை {ஜரத்காருவை} முனிவர் ஜரத்காருவுக்கு அளிப்பதற்கு எண்ணங்கொண்டு, தங்கள் கடமைகளில் எப்போதும் கவனத்துடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளை முனிவர் ஜரத்காருவைக் கவனித்து வருமாறு உத்தரவிட்டு,(12,13) "எப்போது தலைவன் ஜரத்காரு தனக்கு ஒரு மனைவியை வேண்டுகிறாரோ, அப்போது உடனே என்னிடம் வந்து தெரிவியுங்கள். நமது இனத்தின் நன்மை அதில்தான் அடங்கியிருக்கிறது" என்றான் {வாசுகி}."(14)

[1] கும்பகோணம் பதிப்பில் ‘ஏலாபத்திரன் முன்னால் இவனுக்கு என்ன சொன்னானோ, அது நானே மனப்பூர்வமாகச் சொன்ன வாக்கியம். நான் சொன்னதை இந்த நாகராஜனான வாசுகி காலம் வரும்போது தானே செய்வான்’ என்றுள்ளது. வேறு பதிப்புகளில் இந்தத் தகவல் இல்லை.
சௌதி தொடர்ந்தார், "அதன்பிறகு, தாயின் சாபத்தால் துயருற்றிருந்த பாம்புகளின் மன்னன் வாசுகி, பெருந்தகப்பனின் {பிரம்மனின்} வார்த்தைகளைக் கேட்டு, தனது சகோதரியை {ஜரத்காருவை} முனிவர் ஜரத்காருவுக்கு அளிப்பதற்கு எண்ணங்கொண்டு, தங்கள் கடமைகளில் எப்போதும் கவனத்துடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளை முனிவர் ஜரத்காருவைக் கவனித்து வருமாறு உத்தரவிட்டு,(12,13) "எப்போது தலைவன் ஜரத்காரு தனக்கு ஒரு மனைவியை வேண்டுகிறாரோ, அப்போது உடனே என்னிடம் வந்து தெரிவியுங்கள். நமது இனத்தின் நன்மை அதில்தான் அடங்கியிருக்கிறது" என்றான் {வாசுகி}."(14)
ஆங்கிலத்தில் | In English |