Yayavaras regarding merit of begetting a son! | Adi Parva - Section 45 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 33)
பதிவின் சுருக்கம் : யாயாவரர்களின் துயர் களைய வழி கேட்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்...
{சௌதி தொடர்ந்தார்}, “அதேவேளையில், பெரும் துறவி ஜரத்காரு, எந்த இடத்தில் பொழுது மறைகிறதோ, அந்த இடத்தை {அந்த} இரவுக்கான தனது இல்லமாக்கி, உலகம் முழுதும் சுற்றினார்.(1) ஆன்ம பலத்தைக் கொடையாகக் கொண்டு, சுற்றித் திரிந்து, முதிர்வுறாதவர்களால் செய்ய முடியாத கடினமான பல நோன்புகளை நோற்று, பல புனித நீர் நிலைகளில் நீராடினார்.(2) அவர் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டும், உலக இன்பங்களின் மீது ஆசை இல்லாமலும் சுதந்திரமாக இருந்தார். தினமும் மெலிந்துகொண்டு வந்து, சதைப்பற்றில்லாமல் இருந்தார். அவர் ஒருநாள் தனது முன்னோர்களின் ஆவிகள் ஒரு பொந்துக்குள், ஒரே ஒரு விலாமிச்சை {விரானா} மர வேரைக் கயிறாகக் கொண்டு, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த ஒரு வேரையும், அப்பொந்துக்குள் வாழும் பெரிய எலி ஒன்று தின்று கொண்டிருப்பதைக் கண்டார்.(3,4)
அப்படி இருந்த அந்தப் பித்ருக்கள், முக்தியில் பெருவிருப்பம் கொண்டவர்களாக, உணவில்லாமல், உடல் மெலிந்து, பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தனர். ஜரத்காரு அந்தப் பரிதாபமானவர்களை {பித்ருக்களை} அடக்கத்துடன் அணுகி,(5) "இந்த விலாமிச்சை {விரானா} வேர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார்? விலாமிச்சை வேர்கள் எலியின் கூரிய பற்களால் {கடித்து} தின்னப்பட்ட நிலையில் மீதமிருக்கும் மெல்லியதான ஒற்றை வேரும் அதே எலியாலே கடிக்கப்படுகிறதே!(6,7) மீதமிருக்கும் அந்த ஒற்றை இழையும் விரைவிலேலேயே அறுந்து விடும். நீங்கள் இந்தப் பொந்துக்குள் தலைகுப்புற விழப்போவது தெளிவாகத் தெரிகிறது.(8) தலைகீழாகத் தொங்கும் உங்களையும், உங்களது பெருந்துயரையும் பார்க்கும் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. நான் உங்களுக்கு என்ன நல்லது செய்யட்டும்?(9) இந்த உங்கள் துயரை, எனது தவத்தில் நாலில் ஒரு பங்கு {1/4}, அல்லது மூன்றிலொரு பங்கு {1/3}, அல்லது இரண்டில் ஒரு பங்கைக் {1/2} கொண்டு விலக்க முடியுமா என்று விரைவாக எனக்குச் சொல்லுங்கள்.(10) ஓ! {அல்லது} எனது முழுப் புண்ணியங்களையும் எடுத்துக் கொண்டு உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அனைத்திற்கும் நான் ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் விருப்பப்படும்படி செய்யுங்கள்" என்றார் {ஜரத்காரு}.(11)
அதற்கு அந்தப் பித்ருக்கள் {மூதாதையர்கள்}, "பெருமதிப்புக்குரிய பிரம்மச்சாரியே, நீ எங்களை விடுவிக்க விரும்புகிறாய். ஆனால், ஓ பிராமணர்களில் முதன்மையானவனே! உனது புண்ணியத்தால் {தவப்பயனால்} எங்கள் துன்பத்தை நீக்க முடியாது.(12) ஓ பேச்சாளர்களில் முதன்மையானவனே! குழந்தாய், எங்கள் சொந்தப் புண்ணியங்களின் பலன்கள் எங்களுக்கும் உள்ளன. ஆனால், ஓ பிராமணா! வாரிசற்ற நிலையிலேயே நாங்கள் இந்தப் புனிதமற்ற பொந்துக்குள் விழுகிறோம்.(13) ஒரு {ஒருவனின்} மகனே, ஒருவனுக்குச் சிறந்த தகுதி என்று பெருந்தகப்பனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். இந்தக் குழிக்குள் நாங்கள் விழப்போகும் இந்தத் தருணத்தில், எங்களுக்கு எந்தச் சிந்தனையும் தெளிவாக இல்லை.(14) எனவே, ஓ குழந்தாய்! உன்னை நாங்கள் அறியவில்லையென்றாலும், உனது மனிதத்தன்மையை உலகம் அறியும். எங்கள் துயரையும் அவலநிலையையும் கண்டு, கருணையினால் எங்களுக்காகப் பரிதாபப்படும் நீ வணக்கத்துக்கும், நற்பேற்றுக்கும் உரியவன்.(15)
ஓ பிராமணா! நாங்கள் யார் என்பதைக் கேள், நாங்கள் கடுந்தவங்களைச் செய்யும் யாயாவரப் பிரிவைச் சேர்ந்த முனிவர்கள்.(16) ஓ முனிவனே! பிள்ளைப் பேறில்லாமல், புனிதமான இடத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறோம். எங்கள் தவப் பலன்கள் {புண்ணியங்கள்} முழுவதும் அழிந்துவிடவில்லையாதலால் ஓர் இழை இன்னும் இருக்கிறது.(17) ஆனால் இப்போது அந்த ஒரே ஓர் இழையை மட்டுமே நாங்கள் கொண்டிருக்கிறோம். எனினும், {அந்த ஒரே வாரிசு இழையான} அவன் இருப்பதனாலும், இல்லாமல் போவதாலும் காரியம் ஒன்றுமில்லை. எங்களைப் போலவே பேறற்றவனும், ஜரத்காரு என்று அறியப்படுபவனுமான ஓரிழையை நாங்கள் கொண்டிருக்கிறோம். அந்தப் பேறற்றவன் {ஜரத்காரு}, வேதங்களையும் அதன் அனைத்துக் கிளைகளையும் பயின்று, துறவை மேற்கொண்டு தனியாக இருக்கிறான். ஆன்மாவை முழுமையாகத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவனும், உயர் ஆன்மாக் கொண்டவனும், நோன்புகளைக் கடைப்பிடிப்பவனும், தவத்துறவுகளில் ஆழமாக ஈடுபட்டு, தவத் தகுதிகளைக் {புண்ணியங்களைக்} குறித்த பேராசைகளைத் துறந்தவனுமான அவனே {ஜரத்காருவே} எங்களை இந்த நிலைக்குக் கீழிறக்கியிருக்கிறான். அவனுக்கு {ஜரத்காருவுக்கு} மனைவி கிடையாது, மகன் கிடையாது, எந்த உறவினர்களும் கிடையாது.(18-20) அதனால், நாங்கள் எங்கள் சுயநினைவை இழந்து கவனிக்க ஆள் இல்லாதவர்களைப் போல {அனாதைகளைப் போல} இந்தப் பொந்துக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.
நீ அவனைச் சந்தித்தால், எங்கள் மீது கருணை கொண்டு அவனிடம் {ஜரத்காருவிடம்},(21) ‘துயர் கொண்டிருக்கும் உமது பித்ருக்கள் தலைகுப்புறப் பொந்துக்குள் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். புனிதமானவரே {ஜரத்காருவே}, ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வீராக.(22) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே, ஓ மனதுக்கினியவரே, நீரே ஒரே ஒரு இழையாக உமது பித்ருக்களின் பரம்பரையில் இருக்கிறீர்’ என்று சொல்வாயாக. ஓ பிராமணா! நாங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த ஒரே இழையான விலாமிச்சை {விரானா} வேரானது,(23) எங்கள் குலத்தின் பெருக்கத்தைக் குறிக்கிறது. நீ காண்பதான {எலியால்} உண்ணபட்ட விரானா வேர்களின் இழைகளே, காலத்தால் உண்ணப்பட்ட நாங்கள் ஆவோம். பாதி உண்ணப்பட்ட நிலையில் நீ காண்பதும், நாங்கள் தொங்கி கொண்டிருப்பதுமான இந்த வேரே, அந்தத் தவத்தை மட்டுமே தேர்ந்தடுத்தவன் {ஜரத்காரு} ஆவான். நீ காணும் அந்த எலியே பெரும்பலம்பொருந்திய காலமாகும்.(24-26) அந்தக்காலமானது, தவ பயன்களால் படிப்படியாக தூண்டப்பட்டுத் தவங்களில் ஈடுபட்டு இருக்கும், அறிவும், {நல்} இதயமும் அற்ற அந்தப் பாதகன் ஜரத்காருவைக் கொல்கிறது {பலவீனப்படுத்துகிறது}.(27)
ஓ சிறந்தவனே! அவனது தவத்தால் எங்களைக் காக்க முடியாது. வேர்கள் அறுந்து காலத்தால் சுயநினைவை இழந்து மேலுலகில் இருந்து பாவங்கள் செய்த பாதகர்களைப் போலக் கீழே விழும் எங்களைப் பார். நாங்கள் எங்கள் உறவினர்களுடன் இந்தக் குழிக்குள் விழுந்தால், அவனும் இந்த நரகத்திற்குள்ளேயே விழுவான். ஓ குழந்தாய், ஆன்மிகமாக இருந்தாலும், வேள்வியாக இருந்தாலும், புனிதமான எந்தச் செயலாக இருந்தாலும், அவையெல்லாம் ஒரு மகனுக்கு ஈடாகாது. ஓ குழந்தாய்! அனைத்தையும் கண்ட நீ, ஆன்மீகத்தைச் செல்வமாகக் கொண்ட ஜரத்காருவிடம் பேசுவாயாக.(28-31) நீ கண்டதையெல்லாம் விபரமாக அவனிடம் எடுத்துக்கூறுவாயாக. ஓ பிராமணா, நீ எங்கள் மீது கொண்ட கருணையால், அவன் தன் நண்பர்களுக்கிடையிலோ, எங்கள் குலத்திலேயோ திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற தூண்டும் வகையில் பேசுவாயாக.(32) ஓ சிறந்தவனே! எங்கள் நண்பனைப் போல எங்கள் துயரைக் கண்டு வருந்தும் நீ யார்? இங்கே நிற்கும் நீ யார் என்பதைக் கேட்க விரும்புகிறோம்" என்றார்கள் {யாயாவரர்கள்}."(33)

ஆங்கிலத்தில் | In English |