Jaratkaru begged for! | Adi Parva - Section 46 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் : திருமணத்திற்காக ஜரத்காரு செய்த முயற்சி; காட்டிலே மணமகளை இரந்து கேட்ட ஜரத்காரு; வாசுகிக்குத் தகவல் தெரிவித்த பாம்புகள்; ஜரத்காரு விதித்த நிபந்தனைகள்...
மானஸா தேவி - ஜரத்காரு |
சௌதி சொன்னார், "இதையெல்லாம் கேட்ட ஜரத்காரு மிகுந்த துயருற்றார். அந்தத் துயரத்தால் உந்தப்பட்டுக் கண்ணீரால் தடைப்பட்டுத் தனது பித்ருக்களிடம் பேசலானார்.(1) ஜரத்காரு, “நீங்களே முன்சென்ற எனது தந்தையும், பாட்டன்களும் ஆவீர்கள். எனவே, நான் உங்கள் நன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக.(2) நானே உங்கள் மகனான, அந்தப் பாவி ஜரத்காரு. பாதகனான என்னை, எனது பாவங்களுக்காகத் தண்டியுங்கள்" என்றார் {ஜரத்காரு}.(3)
பித்ருக்கள், ”ஓ மகனே! {ஜரத்காருவே}, உனது நற்பேறாலேயே உன் பயணத்தில் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாய். ஓ பிராமணா, நீ ஏன் ஒரு மனைவியை உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை?" என்றனர்.(4)
ஜரத்காரு, "பித்ருக்களே, எனது உயிர் வித்தை மேல்நோக்கி எழும்பச் செய்து, எனது உடலுடன் மற்ற உலகங்களுக்குச் செல்ல ஆவல் கொண்டேன்.(5) மனைவியைக் கொள்ளவேண்டாம் என்ற எண்ணத்தை என் மனம் கொண்டது. ஆனால் பாட்டன்மார்களே, நீங்கள் பறவைகளைப் போலத் தொங்குவதைக் கண்ட பிறகு,(6) எனது மனத்தைப் பிரம்மச்சரியத்திலிருந்து விலக்கிக் கொண்டேன். நீங்கள் விரும்புவதை உண்மையாகச் செய்வேன்.(7) எனது பெயர் {ஜரத்காரு என்ற பெயரே} கொண்ட ஒரு மங்கையை நான் கண்டால், அவளும் அவளுடைய விருப்பத்தின் பேரில் என்னிடம் பிச்சையாக ஒப்படைப்பட்டால், அவளை நான் காப்பாற்ற வேண்டியது இல்லையென்றால், நான் கண்டிப்பாக மணமுடிப்பேன். அப்படி ஒருத்தி கிடைத்தால், நான் மணமுடிப்பேன்.(8,9) அப்படி இல்லையென்றால் நான் மணமுடிக்க மாட்டேன். இஃது உண்மை பாட்டன்மார்களே, அவளால் பெறப்படும் பிள்ளை உங்கள் முக்திக்கு வழி வகுப்பான். என் பித்ருக்களே, நீங்கள் எப்போதும் அச்சமின்றி அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்" என்றார் {ஜரத்காரு பித்ருக்களிடம்}."(10)
சௌதி தொடர்ந்தார், "இப்படித் தமது பித்ருக்களிடம் சொல்லிவிட்டு, அந்த முனிவர் {ஜரத்காரு}, மறுபடியும் உலகைச் சுற்றினார். ஓ சௌனகரே! வயதான பிறகும் அவரால் ஒரு மனைவியைக் கொள்ளமுடியவில்லை.(11) தமது தோல்வியை உணர்ந்த அவர் துயர்கொண்டார். ஆனால் தமது முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி அவரது தேடலைத் தொடர்ந்தார். அடர்ந்த கானகத்திற்குள் சென்று {தமது முன்னோர்களை நினைத்து} துயரத்தால் கதறி அழுதார்.(12)
அந்தக் கானகத்திற்குள் சென்ற அந்த விவேகி, தமது முன்னோர்களுக்கு நன்மை செய்வதற்கு எண்ணி, "நான் மனைவியை யாசிக்கிறேன்" என்று உறுதியுடன் மூன்று முறை கூறினார்.(13) அதன்பிறகு, "அசைவன, அசையாதன, கண்ணுக்குப் புலப்படாதவை என்று எந்த உயிரினங்கள் இங்கே இருக்கின்றனவோ, யாராக இருந்தாலும், எனது வார்த்தைகளைக் கேட்பீராக!(14) எனது முன்னோர்கள் துயரத்தால் உந்தப்பட்டு, கடும் தவங்களில் ஈடுபட்டிருந்த என்னை ‘ஒரு மகனுக்காகத் திருமணம் செய்து கொள்’ என்று பணித்தார்கள்.(15) நான் எனது முன்னோர்களின் {பித்ருக்களின்} வழிகாட்டுதல்படி, வறுமையுடனும், துயரத்துடனும் ஒரு மணமகளைப் பிச்சையாகக் கேட்டு உலகம் முழுவதும் சுற்றித் திரிகிறேன்.(16) இந்த எனது வார்த்தைகளைக் கேட்ட எந்த உயிரினமும் தனது மகளை எல்லா இடங்களிலும் அலையும் எனக்கு மணமுடிக்கட்டும்.(17) எனது பெயர் கொண்ட அந்த மணமகளை எனக்குப் பிச்சையாக இட்டாலும், நான் அவளைப் பராமரிக்க மாட்டேன். எனக்கு மணமகளை அளியுங்கள்" எனக் கூறினார்.(18)
இதைக் கவனித்தவையும், ஜரத்காருவின் வழியில் {வாசுகியால் கண்காணிக்கப் பணிக்கப்பட்டு} இருந்தவையுமான பாம்புகள், அவர் {ஜரத்காருவின்} விருப்பத்தை உணர்ந்து, வாசுகிக்குத் தகவலைத் தெரிவித்தன.(19) பாம்புகளின் மன்னன் {வாசுகி}, அந்த {பாம்புகளுடைய} வார்த்தைகளைக் கேட்டு, ஆபரணங்கள் பூண்ட மங்கையை {பெண் பாம்பு ஜரத்காருவை} அழைத்துக் கொண்டு முனிவர் {ஜரத்காரு} இருந்த வனத்திற்குச் சென்றான்.(20) ஓ பிராமணரே! {சௌனகரே}, பாம்புகளின் மன்னன் வாசுகி, அங்கே சென்று, அந்த மங்கையை அந்த உயரான்ம முனிவருக்கு {ஜரத்காருவுக்கு} பிச்சையாக இட்டான். அந்த முனிவர் {ஜரத்காரு} உடனே அவளை ஏற்கவில்லை.(21) தமது பெயர் கொண்டவளாக அவள் இருக்கமாட்டாள் என்றெண்ணியும், அவளுடைய பராமரிப்புக் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும் சிறிது நேரம் சிந்தித்த அந்த முனிவர் {ஜரத்காரு}, அவளை ஏற்பதில் தயக்கம் காட்டினார்.(22) அதன் பிறகு, ஓ பிருகுவின் மைந்தரே! {சௌனகரே}, வாசுகியிடம் அந்த மங்கையின் பெயரைக் கேட்டு, ‘இவளை நான் பராமரிக்க மாட்டேன்’ என்று அவனிடம் {வாசுகியிடம்} சொன்னார் {ஜரத்காரு}."(23)

ஆங்கிலத்தில் | In English |