Jaratkaru parting his wife! | Adi Parva - Section 47 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 35)
பதிவின் சுருக்கம் : ஜரத்காருவின் நிபந்தனைகளை ஏற்ற வாசுகி; வாசுகியின் தங்கையைத் திருமணம் செய்த ஜரத்காரு; வாரிசு உண்டானபின் மனைவியைப் பிரிந்தார் ஜரத்காரு...
சௌதி சொன்னார், "{பாம்புகளின் மன்னன்} வாசுகி முனிவர் ஜரத்காருவிடம், "ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே! {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே! {ஜரத்காருவே}, உமக்காகவே நான் இவளை வளர்த்தேன்” என்றான் {வாசுகி}.(2) அதற்கு முனிவர் {ஜரத்காரு}, "நான் அவளைப் பாதுகாக்க மாட்டேன் என்பது இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யக்கூடாது. அவள் அப்படிச் செய்தால், நான் அவளை விட்டு விலகி விடுவேன்" என்றார் {ஜரத்காரு}."(3)
சௌதி தொடர்ந்தார், "அதற்கு "நான் எனது தங்கையைப் பராமரிப்பேன்" என்று அந்தப் பாம்பு {வாசுகி} உறுதி கூறிய பிறகு, ஜரத்காரு அந்தப் பாம்பின் இல்லத்திற்குச் சென்றார்.(4) மந்திரங்களை அறிந்த பிராமணர்களில் முதன்மையானவரும், கடுந்தவங்கள் நோற்றவரும், அறம்சார்ந்தவரும், தவத்திலே பெரியவருமான அவர் {ஜரத்காரு} சாத்திர விதிகளின்படி தம்மிடம் கொடுக்கப்பட்ட அவளது {அந்தப் பாம்பான ஜரத்காருவின்} கரத்தைப் பற்றினார்.(5) பின், பெரும் முனிவர்களால் கொண்டாடப்பட்டவரான அவர் {முனிவர் ஜரத்காரு}, தமது மணவாட்டியை அழைத்துக்கொண்டு தமக்காகப் பாம்புகளின் மன்னனால் {வாசுகியால்} ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்.(6)
அந்த அறைக்குள்ளிருந்த பஞ்சணையில் விலையுயர்ந்த மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே ஜரத்காரு தமது மனைவியுடன் {பாம்பு ஜரத்காருவுடன்} வாழ்ந்து வந்தார்.(7) அந்தச் சிறந்த முனிவர் {ஜரத்காரு}, தன் மனைவியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த முனிவர் {ஜரத்காரு}, "எனது விருப்பத்திற்கு மாறாக எதையும் நீ சொல்லவோ, செய்யவோ கூடாது. அப்படி ஏதாகிலும் நீ செய்தால், உடனே நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன், உனது இல்லத்தில் தங்கமாட்டேன். என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை உன் மனத்திற்குள் பதியவைத்துக் கொள்" என்று கூறியிருந்தார்.(8,9)
அந்தப் பாம்பு மன்னனின் {வாசுகியின்} தங்கை {பெண் பாம்பு ஜரத்காரு} கவலையுடனும், அதிகமான வருத்தத்துடனும் "அப்படியே ஆகட்டும்" என்றாள்.(10) தனது உறவினர்களுக்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, குற்றமில்லாதவளான அந்த மங்கை, நாய் போன்ற விழிப்புடனும், மான் போன்ற மருட்சியுடனும், காக்கையைப் போன்ற குறிப்புணர்தலுடனும் தனது கணவனை {ஜரத்காருவை} கவனித்துக் கொண்டாள்[1].(11) ஒரு நாள், தனது தீட்டுக் காலத்திற்குப் பிறகு, அந்த வாசுகியின் தங்கை {பெண் பாம்பான ஜரத்காரு}, முறைப்படி குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது தலைவரான அந்த முனிவரை அணுகினாள்.(12) அதன் பிறகு அவள் கருத்தரித்தாள். நெருப்பின் தழல் போன்றும், பெரும் சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அந்தக் கரு இருந்தது.(13) வளர்பிறைச் சந்திரன் போல அது வளர்ந்து வந்தது.
[1] இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலச் சொல் சுவேதகாகீயம் என்பதாகும். சுவ என்றால் நாய் என்றும், ஏத என்றால் மான் என்றும் காக என்றால் காக்கை என்றும் சிலர் பிரித்துக் கொள்வார்கள்; மற்றும் சிலரோ சுவேதகாகம் என்பது கொக்கு என்றும், மழைக்காலத்தில் கூட்டுக்குள்ளிருக்கும் ஆண் கொக்கைப் பெண்கொக்குக் காப்பாற்றுவது போல உபசரித்தாள் என்று சொல்கிறார்கள்.
ஒருநாள் பெரும் புகழ் வாய்ந்த ஜரத்காரு, தனது மனைவியின் மடியில் படுத்து சிறிது நேரத்திற்குள் களைப்புற்றவர் போலத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சூரியன் மேற்கு மலைகளில் உள்ள தன் இல்லத்திற்குள் புகுந்து மறையத் தொடங்கினான்.(14,15) ஓ பிராமணரே! {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) "நான் இப்போது என்ன செய்வது? எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா? தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது?(17) ஒன்று அவரது கோபத்திற்கு ஆளாக வேண்டும். அல்லது இந்த அறம் சார்ந்த மனிதனின் அறம் கெட்டுப்போக வேண்டும். அறத்தை இழப்பதுவே இந்த இரு தீமைகளில் தீங்கானது என்று நான் எண்ணுகிறேன்.(18) நான் எழுப்பினால் இவரின் கோபத்துக்கு ஆளாவேன். {ஆனால்} இவரது வேண்டுதல்கள் இல்லாமல் மாலை {சந்தியாகாலம்} கரையுமானால், இவர் நிச்சயமாக அறத்தை இழந்துவிடுவார்" என்று நினைத்தாள்.[2] (19)
[2] மனைவி ஜரத்காரு தன் கணவனை எழுப்பினாலும் அவர் கோபித்துக் கொள்வார். எழுப்பாவிட்டாலும் அறம் பிறழ வைத்ததற்காக கோபித்துக் கொள்ளுவார். எனவே எழுப்புவதே மேல். அவரது அறமாவது பிறழாமல் இருக்கட்டுமென நினைத்தாள்.
இனிய சொல்கொண்ட வாசுகியின் தங்கையான அந்த ஜரத்காரு, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, தனது தவத் துறவுகளால் ஒளிர்ந்தவரும், நெருப்பின் தழலைப் போலப் படுத்துக் கிடந்தவருமான முனிவர் ஜரத்காருவிடம் மென்மையாகப் பேசினாள். அவள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}, "ஓ பெரும் நற்பேறுடையவரே! {முனிவர் ஜரத்காருவே}, கதிரவன் மறைகிறான் எழுந்திருப்பீராக.(20,21) ஓ கடுந்தவங்கள் செய்வரே, ஓ சிறப்புமிக்கவரே, நீரால் உங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, விஷ்ணுவின் பெயரை உச்சரித்துச் செய்யப்படும் மாலை வேண்டுதல்களைச் செய்வீராக. மாலை வேள்விக்கான நேரமாகிவிட்டது.(22) சந்தி வெளிச்சம் (பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இருக்கும் வெளிச்சம்) இப்போது கூட மேற்கு புறத்தில் மென்மையாகச் சூழ்ந்திருக்கிறது {சிறிது இருக்கிறது}" என்றாள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}.
இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டவரும், சிறந்த தவத்தகுதிகள் கொண்டவருமான புகழ்பெற்ற ஜரத்காரு,(23) கோபத்தால் மேல் உதடுகள் துடிக்கத் தன் மனைவியிடம், "நாகர்குலத்தில் {உதித்த} இனிமையானவளே, நீ என்னை அவமதித்தாய்.(24) இனி ஒருக்காலும் உன்னுடன் இருக்க மாட்டேன். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்கிறேன். ஓ அழகிய தொடைகளைக் கொண்டவளே. நான் உறங்கி கொண்டிருந்தேனேயானால், சூரியனுக்கு வழக்கமான நேரத்தில் மறையும் சக்தி கிடையாது என்பதை இதயப்பூர்வமாக நம்புகிறேன், அவமதிக்கப்பட்ட மனிதன், தான் அவமதிக்கப்பட்ட இடத்தில் வாழக்கூடாது.(25,26) அதுவும் என்னைப் போன்ற அறம் சார்ந்தவர்கள் {அப்படி வாழ} கூடவே கூடாது" என்றார். தனது கணவனால் {முனிவர் ஜரத்காருவால்} இப்படிச் சொல்லப்பட்ட வாசுகியின் தங்கை ஜரத்காரு, அச்சத்தால் நடுங்கியவாறு,(27) "ஓ பிராமணரே! {முனிவர் ஜரத்காருவே}, அவமதிக்க விரும்பி நான் உம்மை எழுப்பவில்லை. உமது அறம் கெட்டுவிடக்கூடாது என்றே எழுப்பினேன்" என்றாள் {பெண் பாம்பான ஜரத்காரு}.(28)
கோபவசப்பட்டவரும், பெரும் ஆன்மிகத் தகுதி கொண்டவருமான முனிவர் ஜரத்காரு, தன் மனைவியைக் கைவிட விரும்பி, தன் மனைவியிடம் இப்படிப் பேசினார், “ஓ அழகானவளே! ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே! நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே! நான் சென்ற பிறகு, நான் உன்னை விட்டுச் சென்றேன் என்பதை உன் தமையனிடம் நீ சொல்வாயாக. நான் செல்வதால், எனக்காக நீ வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {ஜரத்காரு}.(31,32)
இப்படிக் குற்றமில்லாத அங்கங்களை உடையவளான வாசுகியின் அழகான தங்கை {ஜரத்காரு}, பதற்றத்தாலும், துயரத்தாலும் நிறைந்து, அவள் நெஞ்சம் நடுங்கி கொண்டிருந்தாலும், போதுமான அளவு தைரியத்தையும், பொறுமையையும் வரவழைத்துக்கொண்டு முனிவர் ஜரத்காருவிடம் பேசினாள். அவளது வார்த்தைகள் கண்ணீரால் தடைபட்டு வெளிவந்தது. அவளது முகம் பயத்தால் மங்கியது. அவள் தனது கரங்களைக் குவித்து, கண்ணீரில் குளித்த கண்களுடன், "என்னிடம் குற்றம் இல்லாத போது என்னைவிட்டு நீர் பிரிவது தகாது.(33-35) நீர் அறத்தின் பாதையில் செல்பவர். எனது உறவினர்களின் நன்மையைக் கருதிக் கொண்டு நானும் அதே பாதையில்தான் போகிறேன். ஓ பிராமணர்களில் சிறந்தவரே! {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான்? ஓ அருமையானவரே! தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்ட எனது உறவினர்கள் {எனது} மகனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் காரியம் இன்னும் நிறைவேறவில்லையே! என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே! குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர்? இஃது எனக்குப் புரியவில்லை?" என்றாள்.(39,40)
இப்படிக் கேட்கப்பட்ட பெரும் தவ தகுதிகள் வாய்ந்த முனிவர் ஜரத்காரு, தனது மனைவியிடம் {வாசுகியின் தங்கை ஜரத்காருவிடம்} அந்தச் சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைப் பேசினார்.(41) அவர், "ஓ நற்பேறுபெற்றவளே! நீ கருவுற்றிருக்கிறாய் என்பதை அறிந்து கொள். அறத்தில் சிறந்து, வேதங்களிலும் அதன் கிளைகளிலும் புலமை கொண்டு, அக்னிக்கு நிகரான ஒரு முனிவனின் ஆன்மா உன்னுள் இருக்கிறது" என்றார் {முனிவர் ஜரத்காரு}.(42) "இப்படிச் சொல்லிவிட்டு, அந்த அற ஆன்மா கொண்ட பெருமுனி ஜரத்காரு, மீண்டும் கடுந்தவங்களைப் பயிலத் தமது இதயத்தில் உறுதியான எண்ணங்கொண்டு {தமது வழியே} சென்றார்" {என்றார் சௌதி}.(43)

ஆங்கிலத்தில் | In English |