The Birth of Astika! | Adi Parva - Section 48 | Mahabharata In Tamil
(ஆஸ்தீக பர்வம் - 36)
பதிவின் சுருக்கம் : வாசுகியும் அவன் தங்கை ஜரத்காருவும் பேசியது; வாசுகி மகிழ்ச்சி; ஆஸ்தீகர் பிறந்தார்...
சௌதி சொன்னார், "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, தனது தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்தவுடன், ஜரத்காரு தனது தமையனிடம் {வாசுகியிடம்} சென்றாள். அவனிடம் {வாசுகியிடம்} நடந்த அனைத்தையும் சொன்னாள்.(1) அந்தப் பாம்புகளின் இளவரசன் {வாசுகி}, பேரழிவு {போன்ற} செய்தியைக் கேட்டு, பரிதாபகரமாக இருந்த தனது சகோதரியிடம் {ஜரத்காருவிடம்}, அதைவிடப் பரிதாபமான நிலையில் இருந்து பேசினான்.(2)
அவன் {வாசுகி}, "ஓ இனிமையானவளே!, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே! {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா? அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)
உண்மையில், இதை நான் உன்னிடம் கேட்பது சரியாகாது. இருப்பினும், விஷயத்தின் அழுத்தத்தைக் {முக்கியத்தை} கருதியே நான் உன்னைக் கேட்கிறேன்.(6) எப்போதும் கடுமையான தவங்களில் ஈடுபடுபவரான உன் தலைவனின் {முனிவர் ஜரத்காருவின்} பிடிவாதத்தை அறிந்த நான், அவர் சபித்து விடக்கூடும் என்பதால் {அவர் திரும்பி வர வேண்டி} அவர் பின் செல்லமாட்டேன்.(7) ஓ இனிமையானவளே! உனது தலைவன் {ஜரத்காரு} என்னவெல்லாம் செய்தான் என்று விவரமாகக்கூறு. எனது இதயத்தில் நெடுங்காலமாகச் செருகப்பட்டிருப்பதும், பயங்கரமாகக் கலங்கடிப்பதுமான கணையை அகற்றி விடு" என்றான் {வாசுகி தனது தங்கை ஜரத்காருவிடம்}.(8)
பாம்புகளின் மன்னனான வாசுகியால் இப்படிக் கூறப்பட்ட ஜரத்காரு, விரிவாகப் பேசி அவனைச் சமாதானப்படுத்தினாள்.(9) அவள், "தவவலிமை கொண்டவரான அந்த உயரான்ம முனிவரிடம் {முனிவர் ஜரத்காருவிடம்} பிள்ளையைப் பற்றி நான் கேட்டதற்கு, "இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.(10) அவர் {முனிவர் ஜரத்காரு}, கேலிக்காகக் கூட மெய்யற்றதைப் பேசிக் கேட்ட நினைவு எனக்கில்லை. ஓ மன்னா {வாசுகி}, இதைப் போன்ற முக்கிய நேரத்தில் அவர் ஏன் பொய்மை பேச வேண்டும்? அவர் {முனிவர் ஜரத்காரு},(11) "பாம்பினத்தின் மகளே {வாசுகியின் தங்கை ஜரத்காருவே}, நமது தாம்பத்தியத்தின் நோக்கமான பலனை எண்ணி நீ வருந்தாதே. ஒளிரும் கதிரவனைப் போன்ற பிரகாசத்துடன் உனக்கொரு மகன் பிறப்பான்" என்றார்.(12) ஓ சகோதரா! {வாசுகி}, இதைச் சொல்லிவிட்டு, தவத்தை செல்வமாகக் கொண்ட எனது கணவர் {முனிவர் ஜரத்காரு} சென்றுவிட்டார். ஆகையால், உனது மனத்தில் உள்ள ஆழ்ந்த வருத்தமானது மறையட்டும்" {என்றாள் பெண்பாம்பான ஜரத்காரு}.’(13)
சௌதி தொடர்ந்தார், "இதைக் கேட்ட பாம்புகளின் மன்னன் வாசுகி தனது சகோதரியின் {பாம்பு ஜரத்காருவின்} வார்த்தைகளை ஏற்று, பெருமகிழ்வுடன், "அப்படியே ஆகட்டும்" என்றான்.(14) அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, தன் தங்கையை வாழ்த்தியும், பொருத்தமாகப் புகழ்ந்தும், செல்வத்தை அளித்தும் நன்கு கவனித்துக் கொண்டான்.(15) பிறகு, ஓ பிராமணர்களில் சிறந்தவரே {சௌனகரே}, பெரும் காந்தியைக் கொண்ட அந்தக் கரு, வானத்தில் இருக்கும் வளர்பிறை மதியைப் போல வளர ஆரம்பித்தது.(16)
அந்தப் பாம்புகளின் சகோதரி {ஜரத்காரு}, குறித்த நேரத்தில், தேவலோகக் குழந்தைக்கு ஒப்பான காந்தியுடன் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். அவன் {பின்னாளில்} தன் முன்னோர்களையும் தாய்வழி உறவினர்களையும் அச்சத்திலிருந்து விடுவிப்பவன் ஆனான்.(17) அந்தக் குழந்தை, பாம்பு மன்னனுடைய {வாசுகியுடைய} வீட்டிலேயே வளர்ந்தான். வேதங்களையும், அதன் கிளைகளையும், பிருகுவின் மைந்தரான முனிவர் சியவனரிடம் படித்தான்.(18) சிறுவனாக இருந்தபோதிலும் அவனது நோன்புகள் கடுமையானதாக இருந்தன. அறிவுக்கூர்மையைக் கொடையாகக் கொண்டும், அறம்சார்ந்த எல்லாக் குணங்களுடனும், ஞானத்துடனும், உலக விருப்பங்கள் அற்று, ஞானியைப் போல இருந்தான். அவன் கருவில் இருந்தபோது ‘இருக்கிறது’ என்று சொல்லி அவன் தந்தை காட்டிற்குச் சென்றதால் அவன் ஆஸ்தீகன்[1] என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(19,20)
அவன் சிறுவனாக இருந்தபோதிலும் புத்திக்கூர்மையோடு தீவிரமானவனாக இருந்தான். பாம்புகளின் அரண்மனையில் பெரும் அக்கறையுடன் அவன் {ஆஸ்தீகன்} வளர்க்கப்பட்டான்.(21) திரிசூலம் தரித்தவனும், தேவர்களின் தலைவனும், சிறப்பு வாய்ந்தவனுமான மகாதேவனைப் போலப் அவன் {ஆஸ்தீகன்} பொன்வண்ணத்தில் இருந்தான். நாளுக்கு நாள் அவன் வளர்ந்து, பாம்புகளை மகிழ்வூட்டினான்" {என்றார் சௌதி}.(22)

[1] ‘ஆஸ்தி’ என்றால் இருக்கிறது என்று பொருள். அவன் தந்தை “ஆஸ்தி” என்று கூறிசென்றதால் ஆஸ்தீகன் என்றழைக்கப்பட்டான்.
அவன் சிறுவனாக இருந்தபோதிலும் புத்திக்கூர்மையோடு தீவிரமானவனாக இருந்தான். பாம்புகளின் அரண்மனையில் பெரும் அக்கறையுடன் அவன் {ஆஸ்தீகன்} வளர்க்கப்பட்டான்.(21) திரிசூலம் தரித்தவனும், தேவர்களின் தலைவனும், சிறப்பு வாய்ந்தவனுமான மகாதேவனைப் போலப் அவன் {ஆஸ்தீகன்} பொன்வண்ணத்தில் இருந்தான். நாளுக்கு நாள் அவன் வளர்ந்து, பாம்புகளை மகிழ்வூட்டினான்" {என்றார் சௌதி}.(22)
ஆங்கிலத்தில் | In English |