The History of Parikshit! | Adi Parva - Section 49 | Mahabharata In Tamil
(ஆஸ்தீகப் பர்வம் - 37)
பதிவின் சுருக்கம் : தன் தந்தையின் வரலாற்றை அமைச்சர்களிடம் கேட்ட ஜனமேஜயன்; பரீக்ஷித்தின் சிறப்பு; அவன் வேட்டையாடச் சென்றது; பரீக்ஷித் சமீகரை அவமதித்தது...
சௌனகர், "மன்னன் ஜனமேஜயன், அவனது அமைச்சர்களிடம், தனது தந்தை {பரீக்ஷித்} தேவலோகத்திற்கு உயர்ந்ததைப் பற்றி கேட்டதனைத்தையும் மறுபடியும் விரிவாக எனக்குச் சொல்" என்றார். (1)
சௌதி சொன்னார், "ஓ பிராமணரே! {சௌனகரே}, பரீக்ஷித்தின் இறப்பைப் பற்றித் தனது அமைச்சர்களிடம் மன்னன் ஜனமேஜயன் கேட்டதனைத்தையும், அவர்கள் சொன்னதனைத்தையும் கேட்பீராக.(2)
ஜனமேஜயன், "உங்கள் எல்லோருக்கும் எனது தந்தைக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அந்தப் புகழ்வாய்ந்த மன்னன் {பரீக்ஷித்}, அந்த நேரத்தில் எப்படித் தனது மரணத்தைச் சந்தித்தார்?(3) எனது தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரமாக உங்களிடம் நான் கேட்டறிந்தால், உலக நன்மைக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் நான் அதற்கு உத்தரவிடுவேன். இல்லையென்றால் நான் எதுவும் செய்யமாட்டேன்" எனக் கேட்டான் {ஜனமேஜயன்}.(4) {உயர் ஆன்ம மன்னன் ஜனமேஜயனால் இவ்வாறு கேட்கப்பட்டவர்களும், அறவோர்களும், விவேகிகளுமான அமைச்சர் இவ்வாறு பதிலுரைத்தனர்}[1].(5)
அதற்கு அமைச்சர்கள், "ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, உனது சிறப்புமிக்கத் தந்தையின் {பரீக்ஷித்தின்} வாழ்க்கை பற்றிய விவரத்தையும், எப்படி அந்த மன்னாதிமன்னன் {பரீக்ஷித்} இந்த உலகத்தை விட்டு அகன்றான் என்பதையும் நீ கேட்டதற்கிணங்க சொல்கிறோம் கேட்பாயாக.(6) உனது தந்தை {பரீக்ஷித்} அறம் சார்ந்த உயர் ஆன்மாவாக, தனது மக்களை எப்போதும் காத்து வந்தான். இந்த உலகத்தில் அந்த உயர் ஆன்மா எப்படி நடந்து கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(7) அந்த ஏகாதிபதி {பரீக்ஷித்}, அறமும் நீதியும் உருவெடுத்தாற் போல் இருந்து, அறம் உணர்ந்து, நான்கு வர்ணங்களையும், அவரவர் கடமைகளுக்கேற்ப அறத்தின்படிக் காத்து வந்தான்.(8) ஒப்பற்ற வீரத்துடன், நற்பேறும் அருளப்பட்ட அவன், பூமாதேவியைக் {உலகைக்} காத்து வந்தான். அவனை {பரீக்ஷித்தை} வெறுத்தவர் யாருமில்லை, அவனும் {பரீக்ஷித்தும்} யாரையும் வெறுத்ததில்லை.(9) பிரஜாபதியைப் (பிரம்மாவைப்) போல அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, தங்கள் கடமையை மனநிறைவுடன் செய்து வந்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என,(10) எல்லோரையும் பாரபட்சமின்றிக் காத்துவந்தான், அந்த மன்னன் {பரீக்ஷித்}, விதவைகளையும், அனாதைகளையும், ஊனமுள்ளவரையும், ஏழைகளையும் தாங்கிக் காத்து வந்தான்.(11)
அனைத்துயிர்களுக்கும், தனது அழகால் இரண்டாவது சோமனைப் {சந்திரனைப்} போலத் தோன்றினான். நற்பேறு அருளப்பட்டு, தனது குடிகளை மனத்தில் வைத்து, அவர்களை மனநிறைவுப்படுத்தி, உண்மை பேசி, அளவிலா வீரம்பொருந்தி, சரத்வானின்[2] சீடனாக இருந்து, ஆயுத அறிவியல் பயின்றான். ஓ ஜனமேஜயா, உனது தந்தை {பரீக்ஷித்} கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} அன்பானவனாக இருந்தான்.(12,13) பெரும் புகழை அடைந்து, அனைத்து மனிதர்களாலும் அன்பு பாராட்டப்பட்டான். குரு பரம்பரையே கிட்டதட்ட அழிந்திருந்த காலத்தில் உத்தரையின் கருவறையில் அவன் {பரீக்ஷித்} பிறந்தான்.(14) எனவே, அந்தப் பலம்பொருந்திய அபிமன்யுவின் மகன் பரீக்ஷித் என்று அழைக்கப்பட்டான். மன்னர்களுக்கான கடமைகளைப் {ராஜதர்மங்களைப்} பற்றிய சாத்திரங்களை விளக்குவதில் அவன் நிபுணனாக இருந்தான். எல்லா அறங்களையும் அவன் கொடையாகப் பெற்றிருந்தான். தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்து, புத்தி கூர்மையுடன், பெருத்த ஞாபகச் சக்தியுடன், எல்லா அறங்களையும் கடைப்பிடித்தான். தனது மனத்தின் சக்தியால் ஆறு உணர்ச்சிகளையும் வென்றான். அவன் அனைவரிலும் மேம்பட்டு இருந்தான். (15,16) அரசியலும் ஒழுக்கமும் அறிந்த உனது தந்தை {பரீக்ஷித்}, தனது குடிகளை அறுபது {60} வருடங்கள் ஆண்டான். அப்படிப்பட்ட அவன் {பரீக்ஷித்} பிறகு தனது குடிகளைப் புலம்பி அழச் செய்யும் வகையில் இறந்து போனான். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, அவனுக்குப் பிறகு, குரு பரம்பரையின் ஆயிரம் வருடப் பரம்பரை {வம்சாவளி} அரசை நீ அடைந்தாய். குழந்தைப் பருவத்திலேயே முடிசூட்டப்பட்டு, {அதுமுதல்} உயிரினங்களனைத்தையும் நீ காப்பாற்றி வருகிறாய்" என்றார் {அமைச்சர்}.(17,18)
ஜனமேஜயன், "குடிகளின் நன்மையைக் கருதாத அல்லது அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகாத எந்த ஒரு மன்னனும் எங்கள் பரம்பரையில் {குரு குலத்தில்} தோன்றியதில்லை. குறிப்பாக என் முப்பாட்டன்களின் நடத்தை, பெரும் சாதனைகளைச் செய்வதாகவே இருந்ததைக் கண்டிருப்பீர்கள்.(19) பல அறங்கள் அருளப்பட்ட எனது தந்தை {பரீக்ஷித்} எப்படி மரணமடைந்தார்? நடந்தது அனைத்தையும் எனக்கு நடந்தபடியே விவரியுங்கள். உம்மிடமிருந்து அதைக் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}."(20)
சௌதி தொடர்ந்தார், "இப்படி அந்த ஏகாதிபதியால் {ஜனமேஜயனால்} கேட்டுக்கொள்ளப்பட்டதும், எப்போதும் மன்னனின் {ஜனமேஜயனின்} நலனில் அக்கறையுள்ள சபை உறுப்பினர்கள் {அமைச்சர்கள்}, அவனிடம் எது எது எப்படி நடந்ததோ அப்படியே மொத்தமாகத் தெரிவித்தனர்"(21)
சபை உறுப்பினர்கள், "ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தை {பரீக்ஷித்}, முழு உலகத்தையும் பாதுகாத்தவன். சாத்திரங்கள் வழி ஒழுகும் மனிதர்களில் முதன்மையானவன். போர்க்களத்தில் வில்தாங்கியவர்களில் முதன்மையான பாண்டுவைப் போல, வேட்டையாடும் விளையாட்டிற்கு அடிமையாக இருந்தான். அவன் சிறு விஷயங்களிருந்து மிக முக்கியமான விஷயங்கள் வரை நாட்டு நடப்பில் எல்லா விஷயங்களையும் எங்களைக் கலந்தாலோசித்தான்.(22,23) அவன் {பரீக்ஷித்}, ஒரு நாள், கானகத்திற்குள் சென்று, ஒரு மானைத் தனது கணையால் துளைத்தான். தனது அம்புறாத்தூணியையும், வாளையும், {வில்லையும்} சுமந்து கொண்டு,(24) அந்த மானைத் துரத்திக் கொண்டு ஓடினான். தொலைந்த மானை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு அறுபது {60} வயது ஆகியிருந்ததால், முதுமையினால் தளர்வுற்று, விரைவிலேயே மிகவும் சோர்ந்து போய்ப் பசியெடுத்து களைத்து இருந்தான். அங்கே அந்த ஆழ்ந்த கானகத்திற்குள் ஓர் உயர் ஆன்ம முனிவரைக் கண்டான்.(25,26) அந்த முனிவர் {சமீகர்} மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். மன்னன் {பரீக்ஷித்} அவரிடம் {சமீகரிடம்} மானைப் பற்றிக் கேட்டான். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை.(27) ஏற்கனவே களைப்பாலும், சோர்வாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த அந்த மன்னன் {பரீக்ஷித்}, முடிவில், அசைவற்று மரக்கட்டை போல் மௌன விரதம் இருந்த முனிவரைக் {சமீகரைக்} கண்டு கோபம் கொண்டான். அவர் {முனிவர் சமீகர்} மௌன விரதம் இருப்பது மன்னனுக்குத் தெரியாது. எனவே, கோபத்தால் உந்தப்பட்ட உனது தந்தை {பரீக்ஷித்} அவரை {முனிவர் சமீகரை} அவமதித்தான்.(28,29) பாரதக் குலத்தில் அருமையானவனே {ஜனமேஜயனே}, அந்த மன்னனான உனது தந்தை {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் ஓர் உயிரற்ற பாம்பை எடுத்து களங்கமற்ற ஆன்மாவான அந்த முனிவரின் {முனிவர் சமீகரின்} தோளில் போட்டான்.(30) ஆனாலும் அந்த முனிவர் {சமீகர்} நன்மை தரும் சொல்லோ, தீமை தரும் சொல்லோ ஒன்றும் கூறாமல், கோபமற்று இருந்தார். அவர் {முனிவர் சமீகர்} அந்த உயிரற்றப் பாம்பைத் தாங்கிக் கொண்டு அதே நிலையிலேயே இருந்தார்" என்றனர் {அமைச்சர்கள்}."(31)

[1] இந்த சுலோகம் கங்குலியில் விடுபட்டிருக்கிறது. ஆதிபர்வம் முதல் உத்யோக பர்வம் வரை மன்மதநாததத்தரின் பதிப்பை ஒட்டியே சுலோக எண்களைக் குறிக்க இருப்பதால், மேற்கண்ட சுலோகத்தையும் அப்பதிப்பில் இருந்தே எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.

[2] சரத்வானின் மகன் கிருபர் ஆவார். அவர் குரு வம்சத்து குலகுரு. அப்படி இருக்க சரத்வான் பரீக்ஷித்தின் குரு என்பது நெருடலாய் இருக்கிறது. மூல ஸ்லோகத்தை ஆராய்ந்ததில், சரத்வன் எனப்படும் கௌதமர் வழிவந்தவர் என்பதைக் குறிக்கும் சரத்வத் (சரத்வன் என்னும் கௌதம பரம்பரையைச் சேர்ந்தவன்) என்ற சொல்லே உபயோகப் படுத்தப்பட்டிருப்பதால் கிருபரே பரீக்ஷித்துக்கும் குருவாக இருந்தார் எனத் தெரிகிறது.
ஜனமேஜயன், "குடிகளின் நன்மையைக் கருதாத அல்லது அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகாத எந்த ஒரு மன்னனும் எங்கள் பரம்பரையில் {குரு குலத்தில்} தோன்றியதில்லை. குறிப்பாக என் முப்பாட்டன்களின் நடத்தை, பெரும் சாதனைகளைச் செய்வதாகவே இருந்ததைக் கண்டிருப்பீர்கள்.(19) பல அறங்கள் அருளப்பட்ட எனது தந்தை {பரீக்ஷித்} எப்படி மரணமடைந்தார்? நடந்தது அனைத்தையும் எனக்கு நடந்தபடியே விவரியுங்கள். உம்மிடமிருந்து அதைக் கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}."(20)
சௌதி தொடர்ந்தார், "இப்படி அந்த ஏகாதிபதியால் {ஜனமேஜயனால்} கேட்டுக்கொள்ளப்பட்டதும், எப்போதும் மன்னனின் {ஜனமேஜயனின்} நலனில் அக்கறையுள்ள சபை உறுப்பினர்கள் {அமைச்சர்கள்}, அவனிடம் எது எது எப்படி நடந்ததோ அப்படியே மொத்தமாகத் தெரிவித்தனர்"(21)
சபை உறுப்பினர்கள், "ஓ மன்னா {ஜனமேஜயா}, உனது தந்தை {பரீக்ஷித்}, முழு உலகத்தையும் பாதுகாத்தவன். சாத்திரங்கள் வழி ஒழுகும் மனிதர்களில் முதன்மையானவன். போர்க்களத்தில் வில்தாங்கியவர்களில் முதன்மையான பாண்டுவைப் போல, வேட்டையாடும் விளையாட்டிற்கு அடிமையாக இருந்தான். அவன் சிறு விஷயங்களிருந்து மிக முக்கியமான விஷயங்கள் வரை நாட்டு நடப்பில் எல்லா விஷயங்களையும் எங்களைக் கலந்தாலோசித்தான்.(22,23) அவன் {பரீக்ஷித்}, ஒரு நாள், கானகத்திற்குள் சென்று, ஒரு மானைத் தனது கணையால் துளைத்தான். தனது அம்புறாத்தூணியையும், வாளையும், {வில்லையும்} சுமந்து கொண்டு,(24) அந்த மானைத் துரத்திக் கொண்டு ஓடினான். தொலைந்த மானை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுக்கு அறுபது {60} வயது ஆகியிருந்ததால், முதுமையினால் தளர்வுற்று, விரைவிலேயே மிகவும் சோர்ந்து போய்ப் பசியெடுத்து களைத்து இருந்தான். அங்கே அந்த ஆழ்ந்த கானகத்திற்குள் ஓர் உயர் ஆன்ம முனிவரைக் கண்டான்.(25,26) அந்த முனிவர் {சமீகர்} மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். மன்னன் {பரீக்ஷித்} அவரிடம் {சமீகரிடம்} மானைப் பற்றிக் கேட்டான். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை.(27) ஏற்கனவே களைப்பாலும், சோர்வாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த அந்த மன்னன் {பரீக்ஷித்}, முடிவில், அசைவற்று மரக்கட்டை போல் மௌன விரதம் இருந்த முனிவரைக் {சமீகரைக்} கண்டு கோபம் கொண்டான். அவர் {முனிவர் சமீகர்} மௌன விரதம் இருப்பது மன்னனுக்குத் தெரியாது. எனவே, கோபத்தால் உந்தப்பட்ட உனது தந்தை {பரீக்ஷித்} அவரை {முனிவர் சமீகரை} அவமதித்தான்.(28,29) பாரதக் குலத்தில் அருமையானவனே {ஜனமேஜயனே}, அந்த மன்னனான உனது தந்தை {பரீக்ஷித்}, தனது வில்லின் நுனியால் ஓர் உயிரற்ற பாம்பை எடுத்து களங்கமற்ற ஆன்மாவான அந்த முனிவரின் {முனிவர் சமீகரின்} தோளில் போட்டான்.(30) ஆனாலும் அந்த முனிவர் {சமீகர்} நன்மை தரும் சொல்லோ, தீமை தரும் சொல்லோ ஒன்றும் கூறாமல், கோபமற்று இருந்தார். அவர் {முனிவர் சமீகர்} அந்த உயிரற்றப் பாம்பைத் தாங்கிக் கொண்டு அதே நிலையிலேயே இருந்தார்" என்றனர் {அமைச்சர்கள்}."(31)
ஆங்கிலத்தில் | In English |