The Births of Men of the great war! | Adi Parva - Section 63d | Mahabharata In Tamil
(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : மஹாபாரதப் பாத்திரங்களின் பிறப்பு...
அதன்பிறகு, பெரும் சக்தியும், புகழும் கொண்ட பீஷ்மர் அளவிடமுடியாத காந்தியைத் தன்னகத்தே கொண்டு, {பிரபாசன் என்ற வசுவின்} வசுக்களின் அம்சங்களைக் கொண்டு, கங்கையின் கருப்பையில் சந்தனுவால் பிறந்தார்.(90,91) பெரும் புகழ் கொண்ட முனிவர் ஒருவர் ஆணிமாண்டவ்யர் என்ற பெயரில் இருந்தார். அவர் வேதங்களின் விளக்கங்களில் ஆழ்ந்த புலமை கொண்டு, சிறப்புற்றுப் பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு, பெரும் நற்பெயர் பெற்றிருந்தார். அப்பாவியாக இருந்தும், திருட்டுப் பழி சுமத்தப்பட்டு, அந்த வயதான முனிவர் {ஆணிமாண்டவ்யர்}, கழுவிலேற்றபட்டார்.(92)
அதனால் அவர் {ஆணிமாண்டவ்யர்} தர்மதேவனை வரவழைத்து, "எனது குழந்தைப் பருவத்தில் பறக்கும் ஒரு சிறு பூச்சியைக் கூரான புல் கொண்டு நான் துளைத்திருக்கிறேன்.(93) ஓ தர்மா! அந்த ஒரு பாவத்தை நான் நினைவு வைத்திருக்கிறேன். அதைத்தவிர வேறு எந்தப் பாவமும் எனது நினைவில் இல்லை. அப்படியிருந்தாலும், அது முதல் ஆயிரம் மடங்கு தவம் செய்திருக்கிறேன். இத்தனை தவங்களால் அந்த ஒரு பாவத்தை வெல்ல முடியவில்லையா?(94) கொலைகளிலேயே பிராமணனைக் கொல்வது மிகவும் கொடியது. ஆகையால், ஓ தர்மா, நீ பாவம் நிறைந்தவன். நீ பூமியில் சூத்திரனாகப் பிறக்கக் கடவாய்!" என்று சபித்தார்.(95) அந்தச் சாபத்தின் காரணமாகத் தர்மன் சூத்திரனாகவும், பாவங்களற்றவனாகவும், புனிதமான உடல் கொண்டவனும், அறிவுடையவனாகவும் விதுரன் பிறந்தான்.(96)
{முனிவனைப் போன்றவனான சூதன் சஞ்சயன் கவல்கணனனால் பெறப்பட்டான்}[5], பெரும் பலமிக்கவனான சூதன் {கர்ணன்}, குந்தியிடம் அவளது கன்னிமைக்காலத்தில் சூரியன் மூலம் பிறந்தான்.(97) இயற்கையான மார்புக்கவசத்தோடும், முகத்தை மின்னச்செய்யும் காது குண்டலங்களோடும், தனது தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்தான்.(98) உலகம் முழுதும் புகழ்வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்டவனுமான விஷ்ணு, மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் வசுதேவர் மூலம் தேவகிக்கு பிறந்தான். அவன் பிறப்பும் இறப்பும் அற்றவனும், சுடர்விடும் பிரகாசம் கொண்டவனும், இந்த அண்டத்தின் அதிபதியும், அனைவரின் தலைவனும் {தெய்வமும்} ஆவான்.(99)
அவனே எல்லாக் காரியங்களுக்கும் மறைமுகக் காரணமாவான். அவன் அழிவற்றவன். அவன் எல்லா உயிருக்குள்ளும் இருப்பவன். நகரும் அனைத்துக்கும் மையம் அவனே. சத்வ, ரஜஸ், தமஸ் {ஆகிய மூன்று} குணங்களின் இருப்பிடம் அவனே. அவனே பிரபஞ்சத்தின் ஆன்மா, அவன் ஒருவனே மாற்றமில்லாதவன். அண்டத்தின் கட்டுமானப் பொருள் அவனே. அவனே படைப்பாளன், அவனே கட்டுப்படுத்துபவன், அவனே எல்லாப் பொருளிலும் மறைமுகமாக இருப்பவன். இந்த அண்டத்தின் ஐந்து பூதங்களுக்கும் ஆதி அவனே. அவன் உயர்ந்த ஆறு குணங்களைக் கொண்டவன். அவனே பிரணவம், அவனே வேதங்களின் ஓம், அளவில்லாதவன், தன் விருப்பத்தைத் தவிர வேறு எந்தச் சக்தியாலும் அசைக்கப்பட முடியாதவன். சிறப்பு மிகுந்தவன். சிறப்பு மிகுந்த சந்நியாசம் எனும் வாழ்க்கை முறையின் உடலே அவன். படைப்பிற்கு முன் அவன் நீரில் மிதந்து கொண்டிருந்தான். இந்தப் பெரும் கட்டமைப்புக்கு அவனே மூலம். அவனே சிறந்த ஒருங்கிணைப்பாளன், அவனே அனைத்தையும் அழிப்பவன். அனைத்திலும் மறைவான சாரம் அவன், அவனே மாற்றம் இல்லாத பெரியவன். புலன் நுகர்வால் அறியப்படும் குணங்கள் இல்லாதவன் அவனே. அவனே அண்டம், ஆதி அந்தம் அற்று, பிறப்பு இறப்பும் அற்று, அளவிடமுடியாத செல்வங்களைக் கொண்டு, அனைத்து உயிர்களுக்கும் பெரும் தகப்பனாக இருப்பவன். அப்படிப்பட்டவன் அந்தக விருஷ்ணி குலத்தில் {யாதவக் குலத்தில்} அனைத்து அறங்களையும் வளர்க்கப் பிறந்தான்.(100-103)
அனைத்து ஆயுதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களும், பெரும் சக்தி கொண்டு விளங்கியவர்களும், அனைத்து ஞானக்கிளைகளிலும் புலமை கொண்டவர்களும், எல்லாவற்றிலும் நாராயணனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களும், அனைத்து ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்றவர்களுமான சாத்யகியும், கிருதவர்மனும்,(104) {முறையே} சத்யகன் மற்றும் ஹிருதிகனின் மூலம் பிறந்தனர். கடும் தவங்கள் செய்த முனிவர் பரத்வாஜரின் வித்து ஒரு குடத்துக்குள்[6] வைக்கப்பட்டு, அது வளரத்துவங்கியது. அந்த வித்தில் இருந்து தோன்றியவர்தான் துரோணர் (பானையில் பிறந்தவர்). கௌதமரின் வித்து நாணல் கட்டில் விழுந்து, பிறந்த இரட்டையர்தான், அசுவத்தாமனின் தாயும் (கிருபியும்), பெரும் சக்தி வாய்ந்த கிருபரும் ஆவர்.(105-107) அதன் பிறகு, அக்னியின் காந்தியுடன் திருஷ்டத்யுமனன் வேள்வித்தீயில் பிறந்தான்.(108) அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன், பிறக்கும்போதே, துரோணரின் அழிவுக்காக வில்லைக் கையில் கொண்டு பிறந்தான். வேள்விப் பீடத்திலிருந்து கண்ணைக் கவரும் இளமையுடனும், பிரகாசமான அங்கங்களுடனும், பேரழகுடனும் கிருஷ்ணை {திரௌபதி} பிறந்தாள்.[7] அதன்பிறகு பிரகலாதனனின் சீடர்களான நக்னஜித்தும், சுபலனும் பிறந்தார்கள்(109,110) சுபலனுக்குத் தேவர்களின் சாபத்தால் அறத்திற்கு எதிரியாகவும், உயிரினங்களின் அழிவுக்காகவும் சகுனி என்ற மகன் பிறந்தான்[8]. அவனுக்கு {சுபலனுக்கு} ஒரு மகளும் (காந்தாரி) பிறந்தாள்.(111) அவள் துரியோதனின் தாயானாள் (காந்தாரி). அவர்கள் இருவரும் {சகுனியும், காந்தாரியும்} உலக லாபங்களைப் பெறும் கலையில் திறம்பெற்றிருந்தார்கள். கிருஷ்ணரின் {கிருஷ்ண துவைபாயனரின் - வியாசரின்} மூலம், விசித்திரவீரியனின் மண்ணில் {மனைவிகளிடத்தில்}, மனிதர்களுக்குத் தலைவன் திருதராஷ்டிரனும்,(112) பெரும் பலம் கொண்ட பாண்டுவும் பிறந்தனர். அதே துவைபாயனர் {கிருஷ்ண துவைபாயனர் - வியாசர்} மூலம், சூத்திர வர்ணத்தில், விவேகியும், புத்திசாலியும் அறத்திலும் பொருளீட்டுவதிலும் திறம்பெற்றவனும், பாவமற்றவனுமான விதுரன் பிறந்தான்.(113,114)
பாண்டு தனது இரு மனைவிகள் {குந்தி, மாத்ரி} மூலம் தேவர்களைப் போன்ற ஐந்து புதல்வர்களைப் பெற்றான். அவர்களின் மூத்தவன் பெயர் யுதிஷ்டிரன், அவன் தர்மதேவனின் மூலம் (யமன், நீதிதேவனின் வித்திலிருந்து} பிறந்தவனாவான். ஓநாயின் வயிறு கொண்ட பீமன் மாருதனாலும் (வாயு),(115) ஆயுதம் தாங்கியவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், நற்பேறு பெற்றவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இந்திரனாலும், அழகான குணங்கள் கொண்டு, எப்போதும் தங்கள் மூத்தவர்களுக்குப் பணி செய்யக் காத்திருக்கும் நகுல, சகாதேவர்கள் அசுவினி இரட்டையர்கள் மூலமும் பிறந்தார்கள். விவேகியான திருதராஷ்டிரனுக்கு, துரியோதனன் முதற்கொண்டு நூறு புதல்வர்கள் பிறந்தார்கள். கூடவே வைசியப் பெண்ணுக்கு யுயுத்சு பிறந்தான்.(116-118) அந்த நூற்றொருவரில், பதினொரு பேர் - துச்சாசனன், துச்சகன், துர்மர்ஷணன், விகர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, ஜயன், சத்தியவிரதன், புருமித்ரன், வைசிய மனைவி மூலம் பிறந்த யுயுத்சு ஆகியோர் மஹாரதர்கள் (பெரும் தேர் வீரர்கள்) ஆவார்கள்.
அபிமன்யு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை சுபத்திரைக்கு அர்ஜுனன் மூலமாகப் பிறந்தான். அதனால் அவன் {அபிமன்யு} சிறப்பு மிகுந்த பாண்டுவுக்குப் பேரனாவான். அந்த ஐந்து பாண்டவர்களுக்கும் (பொதுவான மனைவியான) பாஞ்சாலியின் மூலம் ஐந்து புதல்வர்கள் பிறந்தார்கள்.(119-121) அந்த இளவரசர்கள் அனைவரும் அழகானவர்களாகவும், அனைத்து ஞானக்கிளைகளிலும் {ஞானப் பிரிவுகளிலும்} தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். யுதிஷ்டிரனுக்கு, பிரதிவிந்தியனும், விருகோதரனுக்குச் {பீமனுக்கு} சுதசோமனும்,(122) அர்ஜுனனுக்குச் சுருதகீர்த்தியும், நகுலனுக்குச் சதாநீகனும், சகாதேவனுக்குப் பெரும் சக்தி கொண்ட சுருதசேனனும் பிறந்தார்கள்.(123) பீமன், கானகத்தில் ஹிடும்பையுடன் {இடும்பியுடன்} கூடி கடோத்கசன் {கடோத்கஜன்} என்ற மைந்தனைப் பெற்றான். துருபதனுக்குச் சிகண்டினி என்ற பெண் குழந்தையும் பிறந்தாள். அவள் பிற்காலத்தில் ஆணாக {சிகண்டியாக} மாறினாள்.(124) சிகண்டினி, அவளுக்கு நல்லது செய்ய விரும்பிய ஸ்தூணன் என்ற யக்ஷன் மூலமாக ஆணாக மாறினாள். குருக்களின் அந்தப் பெரும் போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏகாதிபதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள வந்தனர். அதில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கையைப் பத்தாயிரம் வருடங்கள் உட்கார்ந்து எண்ணினாலும் என்னால் எண்ண முடியாது. நான், இந்த வரலாற்றில் முக்கியமானவர்கள் பெயர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்" {என்றார் வைசம்பாயனர்}.(125-127)

[5] {} அடைப்புக்குறிக்குள் இருக்கும் இவ்வரி கங்குலியில் இல்லை. சுலோகங்களின் எண்ணிக்கை சரியாக வருவதற்காக மன்மதநாததத்தரின் பதிப்பில் இருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறேன். இந்தச் செய்தி கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் கூட இருக்கிறது.

[6] துரோணி என்ற பாத்திரத்தில்
[7] கிருஷ்ணை என்றால் கரிய நிறமுடையவள் என்று பொருள்.
[8] நக்னஜித்தின் மகன்தான் சுபலன் என்று வேறொரு பதிப்பில் இருக்கிறது. மன்மதநாத தத்தர் பதிப்பில் கங்குலியைப் போலவே நக்னஜத்தும், சுபலனும் பிரகலாத சிஷ்யர்கள் என்றே உள்ளது. பாகவதத்தில், நக்னஜித் யாதவ குல மன்னன் ஆவான். யசோதைக்கு இவன் அண்ணன் முறை. இவன் மகளான சத்யாவை ஏழு காளைகளை அடக்கி கிருஷ்ணன் மணந்து கொண்டான். கிருஷ்ணனுடைய எட்டு மனைவியரில் சத்யா, நக்னஜிதா மற்றும் நப்பின்னை என அறியப்படும் இவளும் ஒருத்தி.
பாண்டு தனது இரு மனைவிகள் {குந்தி, மாத்ரி} மூலம் தேவர்களைப் போன்ற ஐந்து புதல்வர்களைப் பெற்றான். அவர்களின் மூத்தவன் பெயர் யுதிஷ்டிரன், அவன் தர்மதேவனின் மூலம் (யமன், நீதிதேவனின் வித்திலிருந்து} பிறந்தவனாவான். ஓநாயின் வயிறு கொண்ட பீமன் மாருதனாலும் (வாயு),(115) ஆயுதம் தாங்கியவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், நற்பேறு பெற்றவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இந்திரனாலும், அழகான குணங்கள் கொண்டு, எப்போதும் தங்கள் மூத்தவர்களுக்குப் பணி செய்யக் காத்திருக்கும் நகுல, சகாதேவர்கள் அசுவினி இரட்டையர்கள் மூலமும் பிறந்தார்கள். விவேகியான திருதராஷ்டிரனுக்கு, துரியோதனன் முதற்கொண்டு நூறு புதல்வர்கள் பிறந்தார்கள். கூடவே வைசியப் பெண்ணுக்கு யுயுத்சு பிறந்தான்.(116-118) அந்த நூற்றொருவரில், பதினொரு பேர் - துச்சாசனன், துச்சகன், துர்மர்ஷணன், விகர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, ஜயன், சத்தியவிரதன், புருமித்ரன், வைசிய மனைவி மூலம் பிறந்த யுயுத்சு ஆகியோர் மஹாரதர்கள் (பெரும் தேர் வீரர்கள்) ஆவார்கள்.
அபிமன்யு, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை சுபத்திரைக்கு அர்ஜுனன் மூலமாகப் பிறந்தான். அதனால் அவன் {அபிமன்யு} சிறப்பு மிகுந்த பாண்டுவுக்குப் பேரனாவான். அந்த ஐந்து பாண்டவர்களுக்கும் (பொதுவான மனைவியான) பாஞ்சாலியின் மூலம் ஐந்து புதல்வர்கள் பிறந்தார்கள்.(119-121) அந்த இளவரசர்கள் அனைவரும் அழகானவர்களாகவும், அனைத்து ஞானக்கிளைகளிலும் {ஞானப் பிரிவுகளிலும்} தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தார்கள். யுதிஷ்டிரனுக்கு, பிரதிவிந்தியனும், விருகோதரனுக்குச் {பீமனுக்கு} சுதசோமனும்,(122) அர்ஜுனனுக்குச் சுருதகீர்த்தியும், நகுலனுக்குச் சதாநீகனும், சகாதேவனுக்குப் பெரும் சக்தி கொண்ட சுருதசேனனும் பிறந்தார்கள்.(123) பீமன், கானகத்தில் ஹிடும்பையுடன் {இடும்பியுடன்} கூடி கடோத்கசன் {கடோத்கஜன்} என்ற மைந்தனைப் பெற்றான். துருபதனுக்குச் சிகண்டினி என்ற பெண் குழந்தையும் பிறந்தாள். அவள் பிற்காலத்தில் ஆணாக {சிகண்டியாக} மாறினாள்.(124) சிகண்டினி, அவளுக்கு நல்லது செய்ய விரும்பிய ஸ்தூணன் என்ற யக்ஷன் மூலமாக ஆணாக மாறினாள். குருக்களின் அந்தப் பெரும் போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏகாதிபதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள வந்தனர். அதில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கையைப் பத்தாயிரம் வருடங்கள் உட்கார்ந்து எண்ணினாலும் என்னால் எண்ண முடியாது. நான், இந்த வரலாற்றில் முக்கியமானவர்கள் பெயர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்" {என்றார் வைசம்பாயனர்}.(125-127)
ஆங்கிலத்தில் | In English |