Satyavati accepted the embrace of Parasara! | Adi Parva - Section 63c | Mahabharata In Tamil
(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : ; மீனுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை சத்யவதியாகவும் வளர்ந்தது; சத்தியவதிக்குப் பிறந்த வியாசர்...
அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, "இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்" என்றான்.(66,67) அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}(68) தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.(69) பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்[3].(70)
திரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், "அஞ்சாதே" என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் "யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்" என்று சொன்னார்கள்.
அத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்" என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.
முனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, "ஓ அருளப்பட்டவளே! எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக" என்றார்.(71) அதற்குச் சத்தியவதி, "ஓ புனிதமானவரே! {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது?" என்றாள் {சத்தியவதி}.(72) அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.(73) முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி},(74) "ஓ புனிதமானவரே! {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே! {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.(75) ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும்? அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக" என்றாள்.(76)
அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, "எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.(77) ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை" என்றார்.(78) இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.(79) கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.(80) அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.(81) இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.(82)
வரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.(83,84) அவன், "சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்" என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.(85) அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர்[4] (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும்,(86) வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக(87) வேதங்களைத் தொகுத்தார். அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.(88,89) பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும், என் மூலமாகவும் வெளிப்பட்டது.
[3] இந்த இடத்தில் கும்பகோணம் பதிப்பில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. அது கங்குலியில் இல்லை. அது பின்வருமாறு : சக்தியின் மகனாகிய பராசரர் சத்தியவதியைக் கண்டு அவளது பிறப்பைக் குறித்துச் சிந்தித்து, அவளை, "வசுவின் மகளே" என்றழைத்தார். அப்படி அழைத்த காரணத்தைச் சத்தியவதி கேட்க, அவர், "அமிர்தத்தை உண்ட பர்ஹிஷத்துகள் என்ற பிதிர்த்தேவதைகளுக்கு நீ மனத்தினால் உண்டான மகளாவாய். அச்சோதம் {தெளிந்த நீர்} என்ற தேவலோக தடாகத்திலிருந்து நீ உண்டானதால் உனக்கு அச்சோதையென்று பெயர் உண்டாயிற்று. மனத்தினால் நீ உண்டானவள் ஆதலால், உன் பிதிர்க்களை நீ அறியாய். நீ அத்ரிகையென்னும் அப்சரசுடன் ஆகாசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வசு என்ற பெயர் கொண்ட மனுவின் மகனை உனக்குத் தந்தையாக விரும்பினாய். வேறு ஒரு தந்தையை நீ வேண்டியதால், யோக சக்தியை இழந்து நீ கீழே விழுந்தாய்.
திரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், "அஞ்சாதே" என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் "யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்" என்று சொன்னார்கள்.
அத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்" என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.
முனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, "ஓ அருளப்பட்டவளே! எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக" என்றார்.(71) அதற்குச் சத்தியவதி, "ஓ புனிதமானவரே! {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது?" என்றாள் {சத்தியவதி}.(72) அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.(73) முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி},(74) "ஓ புனிதமானவரே! {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே! {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.(75) ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும்? அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக" என்றாள்.(76)
அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, "எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.(77) ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை" என்றார்.(78) இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.(79) கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.(80) அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.(81) இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.(82)
வரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.(83,84) அவன், "சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்" என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.(85) அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர்[4] (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும்,(86) வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக(87) வேதங்களைத் தொகுத்தார். அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.(88,89) பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும், என் மூலமாகவும் வெளிப்பட்டது.
[4] பராசரர் த்வீபத்தில் இருந்ததனால் அவர் த்வீபர்; அவருடைய மகன் என்பதால் த்வைபாயனர் என்பது பொருளாகும். த்வீபமாகிற அயனம் - இடம்; அதில் உண்டானதால் த்வைபாயனர் என்று பொருள் கூறுவது பழைய உரையாகும் எனக் கும்பகோணம் பதிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மூல ஸ்லோகத்திலேயே திவீபத்தில் பிறந்ததால் த்வைபாயனர் என அழைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |