Ganga killed her children! | Adi Parva - Section 98 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் :
கங்கைக்கும் சந்தனுவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம்; கங்கை சந்தனுவுக்கு மனைவியானது; குழந்தைகளைக் கொன்றாள் கங்கை; சந்தனுவிடம் உண்மைகளைச் சொன்ன கங்கை...
வைசம்பாயனர் சொன்னார், "அந்த மங்கை, இனிமையான மெல்லிய வார்த்தைகளைப் பேசிப் புன்னகைத்து நிற்கும் ஏகாதிபதியைக் கண்டு, வசுக்களிடம் தான் செய்த உறுதியை நினைத்துப் பார்த்து,(1) மன்னனிடம் மறுமொழி கூறினாள். குற்றமற்ற குணம் கொண்ட அந்த மங்கை, தனது ஒவ்வொரு வார்த்தையாலும், இதயத்தை ஊடுருவும் இன்பத்தை மன்னனுக்குக் கொடுத்தாள். அவனிடம், "ஓ மன்னா! நான் உமது மனைவியாகி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.(2) ஆனால், ஓ ஏகாதிபதியே, நான் செய்யும் எந்தச் செயலும், அவை உமக்கு ஏற்பாக இருந்தாலும், ஏற்பில்லை என்றாலும், நீர் தலையிடக்கூடாது. என்னிடம் நீர் அன்பற்ற முறையில் பேசக்கூடாது.(3) என்னிடம் நீர் அன்பாக இருக்கும் வரையில், நான் உம்முடன் வாழ்ந்து வருவேன். ஆனால் அப்படி நீர் என் காரியத்தில் தலையிடும்போதோ, அன்பற்ற வார்த்தையைப் பேசும்போதோ, அக்கணமே நான் உம்மைவிட்டு விலகிவிடுவேன்" என்றாள்.(4)
அதற்கு மன்னன், "அப்படியே ஆகட்டும்" என்றான். அதன்பிறகு அந்த மங்கை, பாரதக் குலத்தின் முன்னவனான அந்த அருமையான ஏகாதிபதியைக் கணவனாகக் கொண்டு பெரும் மனநிறைவு கொண்டாள்.(5) மன்னன் சந்தனுவும் அவளைத் தன் மனைவியாகக் கொண்டு, அவளுடன் முழு மகிழ்ச்சியுடன் இன்பம் அனுபவித்து வாழ்ந்தான். அவளிடம் அவன் செய்து கொடுத்த உறுதிக்கிணங்க, அவளிடம் ஏதும் கேட்பதைத் தவிர்த்தான்.(6) அவளது நடத்தை, அழகு, பெருந்தன்மை மற்றும் தன் செல்வங்களை அவள் கவனித்துக் கொள்ளும் பாங்கு என அனைத்திலும், இந்தப் பூமியின் தலைவனான சந்தனு தன் மனைவி மீது, பெரும் மனநிறைவு கொண்டான்.(7) மூன்று வழியில் செல்பவளான (ஆகாயம், பூமி, பாதாளம்) தெய்வீகக் கங்கை மனித உருக் கொண்டு, உயர்ந்த நிறத்தோடும், தெய்வீக அழகோடும், அவளது அறச்செயல்களின் கனிகளால், அந்த மன்னர்களில் புலியானவனை, இந்திரனைப் போன்ற பிரகாசத்தை உடைய சந்தனுவைக் கணவனாக அடைந்து, அவனது மனைவியாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள்.(8,9) தனது கவர்ச்சியாலும், பாசத்தாலும் அவனைத் தூண்டி, அன்போடு இருந்து, பாடி, ஆடித் தானும் மகிழ்ந்து, மன்னனையும் மகிழ்ச்சியடையச் செய்தாள்.(10)
மாதங்களும், காலங்களும், வருடங்களும் உருண்டோடுவது தெரியாமல் அந்த ஏகாதிபதி நினைவு மயங்கித் தனது மனைவியுடன் காமத்தில் மூழ்கியிருந்தான்.(11) அந்த மன்னன் அப்படித் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த போது, அவனுக்குத் தெய்வீக அழகுடன் தேவர்களைப் போன்று எட்டுப் பிள்ளைகள் பிறந்தனர்.(12) ஆனால் அவளோ, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பிள்ளைககள் பிறந்ததும், ஒருவர் பின் ஒருவராக அவர்களை நதியில் தூக்கி வீசி, "இதை உமது நன்மைக்காகவே செய்கிறேன்" என்று சொன்னாள்.(13) அந்தப் பிள்ளைகள் திரும்பி வர முடியாதபடி மூழ்கிப் போயினர். அவளது இந்த நடத்தை மன்னனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், தன்னைவிட்டுப் பிரிந்து விடுவாளே என்று எண்ணித் தனது மனைவியிடம் ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான்.(14) ஆனால் எட்டாவது பிள்ளை பிறந்ததும், தனது மனைவி முன்பு போலவே சிரித்துக் கொண்டு நதியில் அதைத் தூக்கி வீச முற்பட்ட போது, மன்னன் மிகுந்த துக்கத்துடனும், குழந்தையை அழிவிலிருந்து மீட்கும் விருப்பத்துடனும், அவளிடம்,(15) "அதைக் கொல்லாதே! யார் நீ, நீ எங்கிருந்து வந்தாய்? ஏன் உனது சொந்தக் குழந்தைகளைக் கொல்கிறாய்? உனது குழந்தைகளைக் கொன்ற கொலைகாரியே, உனது பாவ மூட்டை மிகப் பெரியது!" என்று சொன்னான்.(16)
இப்படிச் சொல்லப்பட்ட அவன் மனைவி {கங்கை}, "ஓ வாரிசின் மீது விருப்பமுள்ளவரே {சந்தனுவே}, நீர் ஏற்கனவே, பிள்ளை பெற்றவர்களில் முதன்மையானவராகிவிட்டீர். நான் உமது இந்தக் குழந்தையை அழிக்க மாட்டேன். ஆனால் நமது ஒப்பந்தப்படி, நான் உம்முடன் தங்கி இருக்கும் காலம் முடிவுக்கு வந்தது.(17) நான் ஜானுவின் மகளான கங்கையாவேன். நான் பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவளாவேன். தேவர்களின் காரியங்களை நிறைவேற்றும் பொருட்டே நான் உம்முடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தேன்.(18) சிறப்பு மிகுந்த எட்டு வசுக்கள், வசிஷ்டரின் சாபத்தால் மனித உருக் கொண்டு இங்கே வந்தனர்(19). இந்த உலகத்தில் உம்மைத்தவிர, வேறு யாருக்கும் அவர்களைப் பெற்றெடுக்கும் மகிமை இல்லை. அதே போல மனித வடிவில் வந்த தேவியான என்னைத் தவிர இவ்வுலகில் என்னைத் தவிர வேறு யாரும் அவர்களுடைய தாயாக முடியாது. அவர்களைப் பெறவே நான் மனித வடிவம் கொண்டேன்.(20) அந்த எட்டு வசுக்களுக்குத் தகப்பனானதால், நிரந்தர அருள் இருக்கும் பல உலகங்களுக்குச் செல்லும் தகுதியை நீரும் அடைந்துவிட்டீர்.(21) வசுக்கள் பிறந்ததும், மனித உருவில் இருந்து அவர்களை விடுவிக்கிறேன் என்று நான் அவர்களுக்கு உறுதி அளித்திருந்தேன்.(22) ஆபவ முனிவரின் {வசிஷ்டரின்} சாபத்திலிருந்து நான் அவர்களை விடுவித்திருக்கிறேன். ஓ மன்னா! நீர் அருள் நிறைந்து இருப்பீர். நான் உம்மைவிட்டுச் செல்கிறேன். ஆனால் கடும் தவங்கள் செய்த இந்தக் குழந்தையை நீர் வளர்ப்பீராக.(23) நான் வசுக்களிடம் கொடுத்திருந்த உறுதியின்படியே, உம்முடன் இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்தேன். இந்தக் குழந்தை கங்காதத்தன் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கட்டும்" என்றாள் {கங்கை}.(24)

ஆங்கிலத்தில் | In English |