The sons of Santanu! | Adi Parva - Section 101 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 37)
பதிவின் சுருக்கம் :
சந்தனுவுக்கும் சத்தியவதிக்கும் பிறந்த இரண்டு மகன்கள்; சித்திராங்கதனுக்கு பட்டம்சூட்டிய பீஷ்மர்; கந்தர்வனால் கொல்லப்பட்ட சித்திராங்கதன்;
விசித்திரவீரியனுக்கும் பட்டம் சூட்டப்பட்டது...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதியே, திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் சந்தனு, அந்த அழகான மணமகளைத் தனது இல்லத்தில் அமர்த்தினான்.(1) விரைவில் சத்தியவதிக்குப் புத்திக்கூர்மையுள்ளவனாக ஒரு வீரமைந்தன் பிறந்தான். அவனுக்குச் சந்தனு, சித்திராங்கதன் என்று பெயரிட்டான். அவன் பெரும் சக்தியும் திறமையும் வாய்ந்தவனாக இருந்தான்.(2) பெரும் ஆற்றலைக்கொண்ட தலைவன் சந்தனு, சத்தியவதியிடம் மற்றொரு மகனையும் பெற்று அவனுக்கு விசித்திரவீரியன் என்று பெயரிட்டான். அவன் பெரும் வில்லாளியாக இருந்து, தனது தந்தைக்குப் பிறகு மன்னனான்.(3) விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு முன்னரே, ஞானியான மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான்.(4)
சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னைச் சத்தியவதியின் ஆணையின் கீழ் நிறுத்திக் கொண்டு, எதிரிகளை ஒடுக்குபவனும், தன் ஆற்றலால் அனைத்து ஏகாதிபதிகளையும் விரைவில் வீழ்த்தித் தனக்கு நிகராக எவனும் இல்லை என்று கருதியவனுமான சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான்.(5,6) அவனால் மனிதர்களையும், அசுரர்களையும், தேவர்களையும் கூட வீழ்த்த முடியும் என்பதைக் கண்ட கந்தர்வர்களின் பலமிக்க மன்னன் {சித்திராங்கதன்}, தன் பெயரின் நிமித்தமாகவே ஒரு மோதலுக்காக அவனை அணுகினான்[1].(7)
[1] கும்பகோணம் பதிப்பில், "தேவர்களையும், மனிதர்களையும், அஸுரர்களையும் தோற்கச் செய்கிற அவனை, அதே பெயருள்ள மிகுந்த பலசாலியான கந்தர்வராஜான் எதிர்த்துச் சென்று, "ராஜகுமாரனே! நீ என் பெயருள்ளவனாயிருக்கிறாய்; எனக்கு யுத்தத்தைக் கொடு. யுத்தம் கொடுக்கமாட்டாயாயின் வேறு பெயரையாவது வைத்துக் கொள்; உன்னோடு யுத்தத்தை நான் விரும்புகிறேன்; என் பெயர் உனக்கிருப்பதனால் உன்னிடத்திற்கு வந்திருக்கிறேன்; என் பெயரைச் சொல்லி உன்னையழைப்பதனால் என் பெயர் வீணாகத்தகாது" என்று சொல்லி போருக்கழைத்தான் என்றிருக்கிறது.
பெரும் பலசாலிகளாக இருந்த அந்த கந்தர்வனுக்கும், குருக்களில் முதன்மையானவனுக்கும் இடையில் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்த கடும் மோதல் நடந்தது.(8) அடர்த்தியான ஆயுதமழையின் சிறப்பியல்புகளைக் கொண்டதும், போராளிகள் ஒருவரையொருவர் சீற்றத்துடன் வீழ்த்திக் கொண்டதுமான அந்தப் பயங்கரப் போரில் பெரும் ஆற்றல் மேன்மையையோ, வஞ்சக உத்தியையோ கொண்ட கந்தர்வன், அந்தக் குரு இளவரசனை {சித்திராங்கதனைக்} கொன்றான்.(9) மனிதர்களில் முதன்மையானவனும், எதிரிகளை ஒடுக்குபவனுமான சித்திராங்கதனைக் கொன்ற அந்த கந்தர்வன் {மீண்டும்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(10)
ஓ மன்னா! பெரும் ஆற்றலைக் கொண்ட அந்த மனிதர்களில் புலி {சித்திராங்கதன்} கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களைச் செய்தான்.(11) பிறகு அவன், பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனைக் குருக்களின் {குருஜாங்கலத்தின்} அரியணையில் அமர்த்தினான்.(12) விசித்திரவீரியன், பீஷ்மனின் அதிகாரத்தின் கீழ் தன்னை நிறுத்திக் கொண்டு, பிதுர்வழி வந்த தனது நாட்டை ஆண்டான்.(13 அறத்தின் விதிகளிலிலும் அனைத்துச் சட்டங்களிலும் ஞானம் கொண்ட பீஷ்மனை அவன் வழிபட்டு நின்றான்; பீஷ்மனும் தனது கடமைகளுக்குக் கட்டுப்பட்டு அவனைக் காத்து வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(14)

ஆங்கிலத்தில் | In English |