The speech between Indra and Yayati! | Adi Parva - Section 87 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : தேவலோகத்தில் வெகுகாலம் வசித்த யயாதி; பூருவுக்குத் தான் சொன்ன நீதியை இந்திரனிடம் சொன்ன யயாதி...
வைசம்பாயனர் சொன்னார், "அந்த மன்னர்மன்னன் தேவலோகத்தில் தேவர்களின் இல்லத்தில் வசிக்கும்போது, தேவர்களாலும், சாத்யர்களாலும், மருத்துகளாலும், வசுக்களாலும் மதித்து நடத்தப்பட்டான்.(1) புனிதமானக் கடமைகளைச் செய்து, தனது மனத்தைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அந்த ஏகாதிபதி {யயாதி} தேவலோகத்திலிருந்து, பிரம்மலோகத்திற்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தான். அவன் தேவலோகத்தில் வெகு காலத்திற்கு வசித்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.(2) ஒருநாள் அந்த மன்னர்களில் சிறந்தவன் யயாதி, இந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அந்த பூலோக அதிபதி {யயாதி}, இந்திரனால் பின்வருமாறு கேட்கப்பட்டான்.(3)
"ஓ மன்னா! பூமியில் பூரு உன்னிடம் பலவீனத்தை வாங்கிக் கொள்ளும் போதும், அவனிடம் அரசாங்கத்தை நீ ஒப்படைக்கும்போதும் என்ன சொன்னாய்?" என்று இந்திரன் கேட்டான்.(4)
யயாதி, "கங்கைக்கும் யமுனைக்கும் உட்பட்ட முழு நாடும் அவனுடையது என்று சொன்னேன். நிச்சயமாக அதுதான் பூலோகத்தின் மத்தியில் இருக்கும் இடமாகும். அதைச்சுற்றியிருக்கும் இடங்கள் உனது தமையன்களின் அரசாக இருக்கட்டும்.(5)
கோபமடைபவனை விடக் கோபமடையாதவனே உயர்வானவன், மன்னிக்காதவர்களை விட மன்னிப்பவன் உயர்வானவன். கீழ்மையான விலங்குளை விட மனிதன் உயர்வானவன் ஆவான். மனிதர்களில் கல்லாதவர்களை விடக் கற்றவர்கள் உயர்வானவர்கள்.(6)
உனக்குத் தீங்கிழைக்கப்பட்டாலும் பதிலுக்கு நீ யாருக்கும் தீங்கிழைக்காதே. ஒருவனது கோபத்திற்கு மதிப்பில்லை என்றால், அந்தக் கோபமே அவனை எரித்துவிடும். ஒருவனது கோபத்தை மதிக்காதவன், கோபப்படுபவனின் அறம்சார்ந்த புண்ணியங்களைத் தன் வசம் எடுத்துக் கொள்கிறான்.(7)
கடும் வார்த்தைகளால் நீ மற்றவர்களுக்கு வலியை உண்டாக்காதே. இழிவான முறைகளில் உனது எதிரிகளை ஒடுக்காதே. மற்றவர்களை வேதனைப்படுத்தும் வகையில் பாவம் நிறைந்த வாட்டும் சொற்களை உச்சரிக்காதே.(8)
கடுமையும், கொடுமையும் நிறைந்த வார்த்தைகளால் மனிதர்களை முள் போல குத்திக் கொண்டிருப்பவர்கள், தங்கள் நாவில் ராட்சசர்களைச் சுமந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வாயாக. வளமையும், அதிர்ஷ்டமும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பறந்து போகும்.(9)
நீ எப்போதும் அறம் சார்ந்தவர்களையே உனக்கு உதாரணமாக எடுத்துக் கொள்வாயாக. எப்போதும் உனது செயல்களைக் கடந்த காலப் பார்வையோடு, அறம் சார்ந்தவர்களின் செயல்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வாயாக. தீயவர்களின் தீச்சொற்களை நீ எப்போதும் மதிக்காதே. நீ அறம் சார்ந்த ஞானிகளின் நடத்தைகளை நினைத்துப் பார்த்து, அதன்படி நடந்து கொள்வாயாக. (10)
ஒருவனது உதடுகள் மூலம் உதிர்க்கப்பட்ட தீச்சொற்கள் எனும் கணைகளால் தாக்குண்ட மனிதன் இரவும், பகலும் அழுகிறான். அஃது அவனது உடலின் மைய பாகத்தையே தாக்கும். எனவே, ஞானமுள்ளோர் எப்போதும் அந்தக் கணையை அடுத்தவர் மீது பயன்படுத்தமாட்டார்கள்.(11)
அன்பு, நட்பு, கொடை, இனிமையான பேச்சு ஆகியவற்றால் கிடைப்பதைவிட, தேவர்களை வழிபட்டும், புகழ்ந்தும் மனநிறைவுப்படுத்துவதனால் கூட மூவுலகங்களிலும் எதுவும் அதிகமாகக் கிடைத்துவிடாது.(12)
எனவே, நீ எப்போதும் தணிக்கும் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டுமே தவிர்த்து, வாட்டும் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. உன்னால் மதிக்கப்பட வேண்டிய தகுதி வாய்ந்தவர்களை நீ மதிக்க வேண்டும். நீ எப்போதும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், எதையும் இரந்து கேட்கக் கூடாது" எனச் சொன்னேன்" என்றான் {யயாதி}.(13)

ஆங்கிலத்தில் | In English |