Yayati reached Ashtaka! | Adi Parva - Section 88 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 24)
பதிவின் சுருக்கம் : இந்திரனிடம் கர்வத்துடன் பேசிய யயாதி; யயாதியைச் சபித்த இந்திரன்; சொர்க்கத்திலிருந்து கீழே விழுந்த யயாதி; யயாதியிடம் பேசிய அஷ்டகன் ...
வைசம்பாயனர் சொன்னார், "அதன்பிறகு இந்திரன் யயாதியிடம், "ஓ மன்னா! உனது கடமைகளையெல்லாம் முடித்த பிறகு, நீ கானகமேகினாய், ஓ நகுஷ மைந்தனான யயாதியே, ஆன்மீகக் கடமைகளிலும், எளிமையிலும் நீ யாருக்குச் சமமாக இருக்கிறாய் என்று நான் உன்னிடம் கேட்கிறேன்" என்றான்.(1)
யயாதி, "ஓ வாசவா! தவத்துறவில் மனிதர்களிலோ, தேவர்களிலோ, கந்தர்வர்களிலோ, பெரும் முனிவர்களிலோ எனக்கு இணையான ஒருவரையும் நான் காணவில்லை" என்றான்.(2)
அதற்கு இந்திரன், "ஓ ஏகாதிபதியே! உன்னைவிடப் பெரியவர்களையும், உனக்கு இணையானவர்களையும், சிறியவர்களையும், அவர்களது உண்மையான தகுதிகளை அறியாமல் நீ மதிக்கவில்லையாகையால், நீ உனது தவத் தகுதிகளை இழந்தாய். நீ தேவலோகத்திலிருந்து விழவேண்டியது தான்" என்றான்.(3)
யயாதி, "ஓ சக்ரா! {இந்திரா} நிச்சயமாக எனது தவத் தகுதிகளை நான் இழந்துவிட்டேன். அதன் காரணமாக நான் தேவலோகத்திலிருந்து விழ வேண்டியதுதான். ஓ தேவர்கள் தலைவா! அறவோர் மற்றும் நேர்மையானவர்கள் மத்தியில் நான் விழ விரும்புகிறேன்" என்றான்.(4)
இந்திரன், "ஓ மன்னா! அறவோர் மற்றும் ஞானமுள்ளோர் மத்தியிலேயே விழுந்து பெரும் புகழை அடைவாய். ஓ யயாதி! இந்த அனுபவத்தைக் கொண்டு உன்னைவிட உயர்வானவர்களையோ, உனக்கு இணையானவர்களையோ இனி நீ அலட்சியம் செய்யாதே" என்று பதிலுரைத்தான்."(5)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதன் காரணமாக யயாதி தேவலோகத்தில் இருந்து விழுந்தான். அப்படி விழுந்து கொண்டிருக்கையில் அவன் அரசமுனியான அஷ்டகனால் பார்க்கப்பட்டான். அஷ்டகன் அவனைக் கண்டு,(6) "இந்திரனின் அழகுக்கு இணையானவரும், நெருப்பின் காந்திக்கு நிகரானவரும், உயரத்தில் இருந்து விழுபவருமான நீர் யார்? கருமேகங்களுக்குப் பின்னிருந்து வெளிவந்து விண்ணை அதிகாரம் செய்பவர்களில் முதன்மையான சூரியனா?(7) சூரியனைப் போன்று காந்தியுடன், அதிகச் சக்தியுடன் சூரியப்பாதையில் இருந்து விழும் உம்மைக் கண்டு, என்ன விழுந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் ஆச்சர்யத்தில் மதியிழந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.(8) சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற, அல்லது சூரியனைப் போன்ற, அல்லது விஷ்ணுவைப் போன்ற சக்தியுடன், தேவர்களின் பாதையில் இருந்து விழும் உம்மைக் கண்டு உண்மையை அறிந்து கொள்ள அணுகினோம்.(9) நாங்கள் யார் என்று நீர் கேட்பதற்கு முன்னர், நீர் யார் என்பதைச் சொல்வீராக. நீர் யார்? நீர் ஏன் இங்கு விழுகிறீர்?(10) உமது அச்சங்கள் அகலட்டும், உமது துன்ப துயரங்கள் மறையட்டும். நீர் இப்போது அறம்சார்ந்த ஞானியர் மத்தியில் இருக்கிறீர். {அசுரன்} பலனைக் கொன்ற சக்ரனே {இந்திரனே} கூட உம்மை இங்கு காயப்படுத்த முடியாது.(11) தேவர்களின் தலைவனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவரே! ஞானமுள்ளோரும், அறம்சார்ந்தவர்களும் துயரத்தில் இருக்கும் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தாங்குவார்கள். இங்கே கூடியிருக்கும் எங்களில், உம்மைப் போன்ற ஞானமுள்ளோர் மற்றும் அறம்சார்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. எனவே, இங்கேயே அமைதியாகத் தங்கியிருப்பீராக.(12) நெருப்புக்கு {அக்னிக்கு} மட்டுமே வெப்பத்தைக் கொடுக்கும் சக்தி உண்டு. பூமிக்கு மட்டுமே விதைக்கு உயிர் கொடுக்கும் சக்தி உண்டு. சூரியனுக்கு மட்டுமே அனைத்தையும் ஒளிரச்செய்யும் சக்தியுண்டு. அதைப் போலவே, அறவோரையும், ஞானியரையும் கட்டளையிடும் சக்தி விருந்தினர்களுக்கு மட்டுமே உண்டு" என்றான்.(13)

ஆங்கிலத்தில் | In English |