Regions beheld by Yayati! | Adi Parva - Section 89 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 25)
பதிவின் சுருக்கம் : அஷ்டகனுக்கும், யயாதிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அஷ்டகனின் தாய்வழிப் பாட்டனான யயாதி...
யயாதி, "நான் நகுஷ மைந்தனும், பூருவின் தந்தையுமான யயாதி ஆவேன். அனைத்து உயிரையும் மதிக்காததால், தேவர்கள், சித்தர்கள், மற்றும் முனிவர்களின் உலகத்திலிருந்து, எனது அறத் தகுதிகள் குன்றி நான் விழுந்து கொண்டிருக்கிறேன்.(1) வயதால் நான் உன்னை விட மூத்தவன் என்பதாலேயே நான் உன்னை முதலில் வணங்கவில்லை. நிச்சயம், வயதில் மூத்தவர்களையும், கல்வியில் உயர்வானவர்களையும், தவத் தகுதிகளில் உயர்வானவர்களையும் எப்போதும் பிராமணர்கள் மதிப்பார்கள்" என்றான்.(2)
அஷ்டகன் "ஓ ஏகாதிபதி! வயதால் மூத்தவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நீர் சொல்கிறீர். ஆனால் கல்வியாலும், தவத் தகுதிகளாலும் உயர்ந்தவர்களே வழிபடுவதற்கு உண்மையான தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது" என்றான்.(3)
யயாதி, "பாவம் என்பது, நான்கு அறச்செயல்களின் தகுதிகளையும் அழிக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. தற்பெருமையானது ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பண்புகளில் ஒன்றாகும். அறவோர், தீயவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றமாட்டார்கள்.(4)
தங்கள் தவத் தகுதிகள் அதிகரிப்பதற்கான செயல்களையே அவர்கள் செய்வார்கள். நானும் பெரும் அறத்தகுதிகளைக் கொண்டிருந்தேன். ஆனால் அவையெல்லாம் குன்றிவிட்டன. எனது சிறந்த முயற்சிகளினால் கூட என்னால் அவற்றை மீட்டெடுக்க முடியாது. தனது நன்மையில் அக்கறையுள்ளவன், எனது விதியைக் கண்டு செருக்கற்றவனாக இருப்பானாக.(5)
அப்படிப்பட்டவன் பெரும் செல்வங்களை அடைந்து, அவனது தகுதிகளை வளர்க்கும் வேள்விகளைச் செய்வான். அவன் அனைத்தையும் கற்று, பணிவுள்ளவனாக இருப்பான். அவன் முழு வேதங்களையும் அறிந்து, இவ்வுலகம் சார்ந்த இன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தேவலோகம் செல்வான்.(6)
பெரும் செல்வத்தை அடைந்தவன் எவனும் பேருவகைக் கொள்ளக்கூடாது. முழு வேதங்களையும் அறிந்தவன் எவனும் தகுதிகளற்று இருக்கக் கூடாது. மனிதர்களின் உலகத்தில் பல்வேறு இயற்கைப் பண்புகள் இருக்கின்றன. அங்கே விதியே தலைமையானது. சக்தியும், முயற்சியும் கனியற்றதாக {பயனற்றவையாக} இருக்கின்றன. விதியின் வலிமையை அறிந்த ஞானமுள்ளோர், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், பேருவகையோ {செருக்கோ}, துன்பமோ அடையக்கூடாது.(7)
செழுமையும், துக்கமும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன, தனது முயற்சியாலோ, சக்தியாலோ அல்ல என்பதை அறிந்தவன், விதி வலியது என்பதை உணர்ந்து துயரமோ, பேருவகையோ கொள்ள மாட்டான்.(8)
அறிவுள்ளவன் எப்போதும், துயரங்களில் துன்பப்படாமலும், செழுமையில் பேருவகை கொள்ளாமலும் மனநிறைவுடன் இருப்பான். விதியே தலைமையானது என்று உணரும்போது, துயரமும், பேருவகையும் {செருக்கும்} ஏற்படாது.(9)
ஓ அஷ்டகா, இந்த உலகத்தில் பெரும் சக்தியின் கட்டளைகளை அறிந்த நான், எப்போதும் அச்சமடைவதில்லை; துயரத்தை ஊக்குவிப்பதும் இல்லை.(10)
பூச்சிகளும், புழுக்களும், முட்டையிடும் இனங்களும், தாவர வகைகளும், ஊர்ந்து செல்லும் இனமும், மனித உடலில் வசிக்கும் புழுப் பூச்சிகளும், நீர்களில் இருக்கும் மீன்களும், கற்களும், புற்களும், கட்டைகளும் என அனைத்தும் படைக்கப்பட்டனவே. அவை தனது செயல்களுக்கான விளைவுகளிலிருந்து விலக்கப்படும்போது தலைமை ஆன்மாவோடு (பரமாத்மாவோடு) கலக்கின்றன.(11)
இன்பமும், துன்பமும் நிலையில்லாதன. எனவே, ஓ அஷ்டகா! நான் ஏன் துயரடைய வேண்டும்? துன்பத்தை விலக்க என்ன செயல் செய்ய வேண்டும் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே, யாரும் துன்பத்தைக் கண்டு துயருறக்கூடாது" என்றான்.(12)
அஷ்டகனின் தாய்வழிப் பாட்டனான மன்னன் யயாதி, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டு பேசிக்கொண்டிருந்த போது, அந்தப் பேச்சின் முடிவில் அஷ்டகன் அவனைக் கேள்வி கேட்டான்.(13)
அஷ்டகன் "ஓ மன்னர் மன்னா! நீர் எந்த உலகங்களையெல்லாம் கண்டு இன்பமாக இருந்தீர்? ஒவ்வொரு உலகிலும் எவ்வளவு காலம் அப்படி இன்பமாக இருந்தீர்? பேரான்மாக்களின் செயல்களையும், கட்டளைகளையும் அறிந்த சாமர்த்தியமுள்ள குருக்களைப் போல, அறத்தின் கட்டளைகளை உரைக்கின்றீரே!" என்று கேட்டான்.(14)
யயாதி, "நான் இந்தப் பூவுலகில் பெரும் மன்னனாக இருந்தேன். முழு உலகமும் எனது ஆளுகைக்குள் இருந்தது. அதைத் துறந்து, எனது தவத் தகுதிகளை வளர்த்துக் கொண்டு மேலுலகம் அடைந்தேன். நான் அங்கே ஆயிரம் வருடங்கள் இருந்து, மிகவும் உயர்ந்த இடத்திலிருப்பதும், ஆயிரம் கதவுகளை உடையதும், நூறு யோஜனைகள் கொண்டதுமான ஓர் இடத்தில் இருக்கும் இயல்புக்குமிக்க அழகுடைய இந்திரனின் வசிப்பிடத்தை அடைந்தேன். அங்கேயும் நான் ஆயிரம் வருடங்கள் இருந்து, இன்னும் உயரமான இடத்திற்குச் சென்றேன்.(15,16)
அந்த இடத்தில் நிலைத்த மகிழ்ச்சி இருந்தது, அழிவு என்பதே இல்லாத இடமாகவும் அஃது இருந்தது. அந்த இடம் படைப்பாளனும், பூமியின் தலைவனுமானவன் இருக்கும் இடமாகும். அந்த இடத்தை அடைவது மிகவும் கடினம். அங்கேயும் நான் ஆயிரம் வருடங்கள் வசித்தேன்,(17) அதன்பிறகு அதைவிடவும் உயர்ந்த இடமான தேவர்களுக்குத் தேவன் (விஷ்ணு) வசிக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கேயும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். தேவர்களாலேயே கொண்டாடப்படும் பல்வேறு இடங்களில் நான் வசித்தேன்(18). நினைத்த உருவத்தை அடையும் சக்தி பெற்று, நந்தனம் என்ற இடத்தில் இருக்கும் நந்தவனத்தில் அப்சரஸ்களுடன் விளையாடிக்கொண்டு, கோடி வருடங்கள் வாழ்ந்தேன். அங்கே கணக்கிலடங்கா வண்ண வண்ண மலர்களையும், நறுமணத்தை உடைய அழகான மரங்களையும் கண்டேன்.(19)
இப்படியே பல வருடங்கள் கடந்து, நித்தியமான மகிழ்ச்சியை நான் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, ஓ மன்னா, ஓ மன்னர்களில் சிம்மத்தைப் போன்றவனே, ஒரு நாள், தேவதூதன் ஒருவன் கடுமையான முகபாவத்துடனும், சத்தத்துடனும், ஆழ்ந்த பெருங்குரலுடனும், "கேடு வந்தது! கேடு வந்தது! கேடு வந்தது!" என்று மூன்று முறை சத்தமிட்டது மட்டுமே என் நினைவிலிருக்கிறது.(20) நான் எனது அறத்தகுதிகளை இழந்து நந்தனத்திலிருந்து விழுந்தேன். அப்போது வானத்திலிருந்து தேவர்கள்,(21) "அந்தோ! என்னவொரு தீயூழ் {துரதிர்ஷ்டம்}. அறம் சார்ந்தவனாக இருந்தும், புனிதமான கடமைகளைச் செய்திருந்தும், யயாதி தனது தவத் தகுதிகளை இழந்து விழுந்து கொண்டிருக்கிறானே" என்று துயருற்றுச் சொல்லினர். அப்போது நான் விழுந்து கொண்டிருந்தேன். நான் அவர்களிடம் சத்தமாக, "தேவர்களே, நான் விழப்போகும் ஞானமுள்ளோர் இருக்கும் இடம் எங்கே இருக்கிறது? என்று கேட்டேன்.(22) அவர்கள் உங்களுக்குச் சொந்தமான இந்தப் புனிதமான வேள்விகள் நடக்கும் இடத்தைக் காண்பித்தனர். வேள்விநெருப்பில் ஊற்றப்படும் நெய்யால் உருவாகும் சுற்றுப்புறத்தைக் கருமையாக்கிக் கொண்டு வரும் சுருண்ட புகையைக் கண்டேன். அதன் வழிகாட்டுதல்படி, நான் உங்கள் பகுதியை அணுகிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இடத்திற்கு வந்ததில் இதயத்தால் மகிழ்கிறேன்" என்றான்.(23)

ஆங்கிலத்தில் | In English |