Yayati attained heaven again! | Adi Parva - Section 93 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 29)
பதிவின் சுருக்கம் : வசுமனசும், சிபியும் கொடுத்த புண்ணியத்தை யயாதி அங்கீகரிக்காதது; விமானத்தைக் கண்ட சகோதரர்கள்; யயாதியைக் கண்ட மாதவி; பெண்வம்சத்துப் புண்ணியத்தை ஏற்கலாம் என்று சொல்வது; யயாதியுடன் சென்ற சிபி முதலானோர்; சிபியின் மகிமையை எடுத்துரைத்த யயாதி...
வசுமனஸ் {வஸுமான்}, "ஓ மன்னா! நான் ஓஷதஸ்வனின் {உஷதஸ்வனின்} மகன் வசுமனஸ், எனது அறத்தகுதிகளின் கனிகளை நான் அனுபவிக்க எனக்கு ஏதாவது உலகங்கள் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ இருக்கின்றனவா என்று நான் உம்மைக் கேட்கிறேன். ஓ உயர் ஆன்மாவே! நீர் அனைத்து நல்லுலகங்களையும் அறிந்தவராயிற்றே" என்றான்.(1)
யயாதி, "அந்தரத்தில் எத்தனைப் பகுதிகள் இருக்கின்றனவோ அத்தனைப் பகுதிகளுடன் சேர்த்து, பூமி மற்றும் சூரியனால் ஒளியூட்டப்படும் அண்டத்தின் பத்துப் புள்ளிகள் அளவு உலகங்கள் உனக்குச் சொர்க்கத்தில் உள்ளன" என்றான்.(2)
வசுமனஸ், "அவற்றை நான் உமக்குத் தருகிறேன். எனக்கான அந்தப் பகுதிகள் அனைத்தும் உமதாகட்டும். எனவே, நீர் விழுந்து கொண்டிருந்தாலும், மொத்தமாக விழ மாட்டீர். ஓ ஏகாதிபதி! அவற்றைப் பரிசாகப் பெறுவது உமக்குச் சரியாகப் படவில்லையெனில், ஒரு புல்லைக் கொடுத்து (புல்லை விலையாகக் கொடுத்து) வாங்கிக் கொள்ளலாமே?" என்றான்.(3)
யயாதி, "நான் எதையும் அநியாயமாக வாங்கியதாகவோ, விற்றதாகவோ எனக்கு நினைவில்லை. இப்படி எந்த மன்னர்களாலும் செய்யப்பட்டதில்லை. எனவே, நான் எப்படி அதைச் செய்ய முடியும்?" என்றான்.(4)
வசுமனஸ், "ஓ மன்னா, நீர் அப்படி விலை கொடுத்து வாங்குவது சரியல்ல என்று கருதினால், என்னுடைய பரிசாக அஃதை ஏற்றுக் கொள்ளலாமே. நான் எக்காரணம் கொண்டும் அந்த உலகங்களுக்குச் செல்ல மாட்டேன். எனவே, அவை உமதாகட்டும்" என்றான்.(5)
அதன்பிறகு, சிபி என்பவன் மன்னனிடம் {யயாதியிடம்} பேசினான், "ஓ மன்னா! நான் உசீநரனின் மைந்தன். எனது பெயர் சிபி. ஓ ஐயா! நான் மகிழச் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ உலகங்கள் இருக்கின்றனவா? ஒருவன், தனது அறத்தகுதிகளின் கனியால் மகிழக்கூடிய அனைத்து உலகங்களையும் அறிந்தவர் நீர்" என்றான்.(6)
யயாதி, "நீ உனது பேச்சாலோ, எண்ணத்தாலோ; நேர்மையானவர்களையும், அறம்சார்ந்தவர்களையும் அவமதித்ததில்லை. நீ மகிழ்வதற்காக எண்ணற்ற மின்னல் போல ஒளிரும் உலகங்கள் சொர்க்கத்தில் காத்திருக்கின்றன" என்றான்.(7)
சிபி, "அவற்றை விலை கொடுத்து வாங்குவது தவறு என்று நீர் கருதினால், அவற்றை நானே கொடுக்கிறேன். அவற்றையெல்லாம் நீரே எடுத்துக் கொள்ளும். ஓ மன்னா! நான் அவற்றை எப்போதும் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஞானமுள்ளோர் அமைதியாக இருக்க முடியாத அந்த உலகங்களை நான் விரும்ப மாட்டேன்" என்றான்.(8)
யயாதி, "ஓ சிபியே! இந்திரனின் ஆற்றலைப் போன்ற ஆற்றலுடன், அந்தக் கணக்கற்ற உலகங்களை நிச்சயமாக நீயே அடைந்தாய். ஆனால், நான் மற்றவர்களால் கொடுக்கப்படும் உலகங்களை விரும்பவில்லை. எனவே, நான் பரிசுகளை ஏற்பதில்லை" என்றான்.(9)
அஷ்டகன், "ஓ மன்னா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் அறங்களால் அடைந்த நல்லுலகங்களை விருப்பப்பட்டு உமக்குக் கொடுக்க முன்வந்தோம். நீர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் அவற்றை உமக்கே அளித்துவிட்டு, பூமி நரகிற்குள் இறங்கப் போகிறோம்" என்றான்.(10)
யயாதி, "உண்மையை விரும்பும் ஞானிகளே, எனக்குத் தகுதியானதை எனக்குக் கொடுங்கள். நான் இதுவரை செய்யாததை என்னால் செய்ய இயலாது" என்றான்.(11)
அஷ்டகன், "நாங்கள் காணும் அந்த ஐந்து தங்கத் தேர்களும் யாருடையவை? அந்த உலகங்களுக்குச் சென்று வரும் மனிதர்கள் அதில் பயணப்படுவார்களா?" என்று கேட்டான்.(12)
யயாதி, "நெருப்பைப் போல, பளபளக்கும் புகழ்வாய்ந்த அந்த ஐந்து தங்கத் தேர்களும் உங்களை நிரந்தர அருள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றன" என்றான்.(13)
அஷ்டகன், "ஓ மன்னா! அந்தத் தங்கத் தேர்களில் நீரே ஏறி சொர்க்கத்தை அடைந்து கொள்வீராக. எங்களால் காத்திருக்க முடியாது. நாங்களும் உம்மைப் பின்தொடர்கிறோம்" என்றான்.(14)
யயாதி, "நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செல்லலாம். நிச்சயமாக நாம் அனைவரும் சொர்க்கத்தை வென்றுவிட்டோம். சொர்க்கத்திற்கான புகழ்வாய்ந்த வழி கண்ணுக்குப் புலப்படுவதைப் பாருங்கள்" என்றான்."(15)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அந்த ஏகாதிபதிகள் அனைவரும் அந்த தேர்களில் ஏறி சொர்க்கத்திற்குச் சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டு, முழு சொர்க்கத்தையும் தங்கள் அறத்தின் புகழால் ஒளிரச் செய்தனர்.(16)
அஷ்டகன், அமைதியைக் கலைத்து, "நான் எப்போதும் இந்திரனை எனது சிறந்த நண்பனாகக் கருதினேன். எனவே, நான் மற்றவர்களுக்கு முன் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், எப்படி உசீநரனின் மைந்தன் சிபி, நம்மைப் பின்தங்க வைத்துச் சென்றுவிட்டான்?" என்று கேட்டான்.(17)
யயாதி, "உசீநரனின் மைந்தன் அவனுக்கான அனைத்தையும் துறந்து பிரம்மனின் உலகை அடைந்துவிட்டான். எனவே, அவனே நம்மில் முதன்மையானவன். அதுபோக, சிபியின் ஔதாரியம், துறவு, உண்மை, அறம், அடக்கம், மன்னிக்கும் தன்மை, இனிமை, நல்லெண்ணத்துடன் செயல்படுவதில் விருப்பம் ஆகியவை எவராலும் அளக்கமுடியாத மிகப் பெரும் செயல்களாகும்" என்றான்."(18,19)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு, அஷ்டகன், தனது ஆர்வ மேலீட்டால், மற்றுமொரு இந்திரனைப் போன்ற தனது தாய்வழிப் பாட்டனான அவனிடம் {யயாதியிடம்}, "ஓ மன்னா! நான் கேட்கிறேன். உண்மையைச் சொல்லும். எங்கிருந்து நீர் வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? வேறு யாரேனும் பிராமணரோ, க்ஷத்திரியரோ, பூமியில் நீர் செய்ததைப் போலச் செய்திருக்கிறார்களா?" என்று கேட்டான்.(20)
யயாதி, "நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் நகுஷனின் மைந்தன் யயாதி. நான் பூருவின் தந்தையாவேன். முழு பூமியின் தலைவனாக {சர்வபௌமனாக} இருந்தேன். நீங்கள் என் உறவினர்களே; நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன், நான் தாய்வழியில் உங்கள் அனைவரின் பாட்டனாவேன்.(21) முழு உலகத்தையும் கைப்பற்றிய நான், உடைகளையும், வேள்விக்கான நூறு அழகான குதிரைகளையும் பிராமணர்களுக்குக் கொடுத்தேன். அவற்றைப் போன்ற அறச்செயல்களுக்காகத் தேவர்கள் மகிழ்ந்து நன்மை செய்தனர்.(22) மேலும், இந்த முழுப் பூமியையும், அதன் குதிரைகள், யானைகள், பசுக்கள், தங்கம், அனைத்து விதமான செல்வங்கள் நூறு அற்புதங்களையுடைய பசுக்கள் ஆகியவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்தேன்.(23) பூமியும், ஆகாயமும் எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே நிலைத்திருக்கின்றன. எனது வாய்மை மற்றும் அறத்தாலேயே மனிதர்களின் உலகில் இன்னும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு போதும் பொய் பேசியதில்லை. இதன் காரணமாகவே ஞானிகள் வாய்மையைப் புகழ்கின்றனர்.(24)
ஓ அஷ்டகா! நான் உனக்கும், பிரதர்த்தனனுக்கும், வசுமனஸுக்கும் சொன்னதெல்லாம் உண்மையே. தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் இந்த வாய்மையின் காரணமாகவே புகழப்படுகிறார்கள் என்பதை நிச்சயமாக அறிவேன்.(25) எவனொருவன், நல்ல பிராமணர்களிடம் நாம் சொர்க்கத்திற்கு உயர்ந்ததைப் பற்றிக் களங்கமில்லாமல் உரைக்கின்றானோ அவன் நாம் செல்லும் உலகங்களையே நம்முடன் அடைவான்" என்றான்."(26)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படியே தனது சாதனைகளுக்காகச் சிறப்புவாய்ந்த அந்த மன்னன் யயாதி, தனது இணை வழித்தோன்றல்களால் மீட்கப்பட்டு பூமியை விட்டு, தான் செய்த செயல்களின் புகழால் மூன்று உலகங்களையும் மறைத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்."(27)

ஆங்கிலத்தில் | In English |