History of Puru's lineage! | Adi Parva - Section 94 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 30)
பதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு; தன் வம்சத்திற்குத் தனது பெயரையே வைத்த பரதன்...
ஜனமேஜயன், "ஓ வழிபடத்தகுந்தவரே {வைசம்பாயனரே}!, பூருவின் வழித்தோன்றல்களான மன்னர்களின் வரலாறுகளைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். பெரும் வீரத்தைக் கொண்டு பெரும் சாதனைகளைச் செய்த அம்மன்னர்களை ஒவ்வொருவராக எனக்குச் சொல்வீராக.(1) பூருவின் பரம்பரையில் வந்த எந்த மன்னனும் நன்னடத்தையில்லாமலோ, வீரமற்றோ, புத்திரப்பேறு இல்லாமலோ இருந்ததாக நிச்சயமாக நான் கேள்விப்படவில்லை.(2) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! சிறந்த கல்வியும், சிறந்த சாதனைகளையும் கொண்ட அந்தப் புகழ்வாய்ந்த ஏகாதிபதிகளின் வரலாறுகளை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(3)
வைசம்பாயனர் சொன்னார், "உன்னால் கேட்கப்படுவதால், பூருவின் வம்சத்தில் வந்து, வீரத்தில் இந்திரனுக்கு நிகராகவும், தங்களது சாதனைகளால் மதிக்கப்பட்டும் இருந்த வீரர்கள் குறித்த அனைத்தையும் சொல்கிறேன்.(4) பூரு தனது மனைவி பௌஷ்டி மூலம் பிரவீரன், ஈஸ்வரன், ரௌத்ரஸ்வன் என்ற மூன்று மகன்களைப் பெற்றான். அவர்கள் அனைவரும் பெரும் தேர் வீரர்களாக இருந்தனர். அவர்களில் பிரவீரனே வம்சத்தை விளங்க வைப்பவனாக இருந்தான்.(5) பிரவீரன் தனது மனைவி சூரசேனி மூலம் மனஸ்யு என்ற மகனைப் பெற்றான். தாமரை இதழ்களைப் போன்றக் கண்களைக் கொண்ட மனஸ்யு நான்கு கடல்கள் சூழ்ந்த பூமியை முழுவதுமாக ஆண்டான்.(6) மனஸ்யு சௌவீரி என்பவளை மனைவியாகக் கொண்டான். அவள் மூலம் சக்தன், சஹனன் {ஸம்ஹனனன்}, வாக்மி என்ற மூன்று மகன்களைப் பெற்றான். அவர்கள் போர்க்களத்தில் வீரர்களாகவும் பெரும் தேர் வீரர்களாகவும் இருந்தனர்.(7)
இப்படியே தொடர்ந்த பரம்பரையில் புத்திசாலியாகவும், அறம்சார்ந்தவனாகவும் இருந்த ரௌத்ரஸ்வன், அப்சரஸ் மிஸ்ரகேசியிடம் பெரும் வில்லாளிகளான பத்து மகன்களைப் பெற்றான்.(8) அவர்கள் அனைவரும் பெரும் வீரர்களாக வளர்ந்து, தேவர்களை வழிபட்டு அவர்களை மகிழ்விக்க எண்ணற்ற வேள்விகளைச் செய்தனர். அவர்கள் அனைவரும் ஞானத்தின் எல்லாக் கிளைகளிலும் தேர்ச்சி பெற்று, எப்போதும் தங்களை அறத்திற்கே அர்ப்பணித்து இருந்தனர்.(9) ரிசேயு, கக்ஷ்ரேயு {கக்ஷேயு}, பெரும் சக்தி வாய்ந்த விருகேயு {க்ருகணேயு}, ஸ்தண்டிலேயு, வனேயு, பெரும் புகழ்வாய்ந்த ஜலேயு, பெரும் சக்தியும் புத்திக்கூர்மையும் கொண்ட தேஜேயு, இந்திரனைப் போன்ற வீரம் கொண்ட சதேயு, தர்மேயு, பத்தாவதாகத் தேவர்கள் அளவு வீரம் கொண்ட சன்னதேயு ஆகியன அவர்களது பெயர்களாகும்.(10,11)
அவர்கள் அனைவரிலும், ரிசேயுவே இந்த முழு உலகத்திற்கும் ஏகாதிபதியாகி அனாதிருஷ்டி என்ற பெயரில் அறியப்பட்டான். வீரத்தால் அவன் தேவர்களின் வாசவனை {இந்திரனைப்} போல இருந்தான்.(12) அனாதிருஷ்டியின் மகன் மதினாரன், பெரும் புகழ்வாய்ந்த அறம் சார்ந்த மன்னனாக இருந்து, ராஜசூய மற்றும் அசுவமேத வேள்விகளைச் செய்தான்.(13) மதினாரனுக்கு அளவிலா ஆற்றலைக் கொண்ட நான்கு மைந்தர்கள் இருந்தனர். அவர்கள் தன்சு {தம்சு}, மஹான், அதிரதன் மற்றும் பெரும் புகழ்வாய்ந்த துருஹ்யு ஆவர்.(14)
அவர்களில் தன்சுவே பூருவின் வம்சத்தை விளங்கச் செய்தவன் ஆவான். அவன் இந்த முழு உலகத்தையும் அடக்கி ஆண்டு, பெரும் புகழும், பெயரும் பெற்றான்.(15) தன்சு பெரும் வீரம் கொண்ட இலினன் {இலிலன்} என்ற மகனைப் பெற்றான். அவன் வெற்றி கொள்பவர்களில் முதன்மையானவனாக இருந்து, முழு உலகத்தையும் தன் கொடையின் கீழ்க் கொண்டு வந்தான்.(16) இலினன் தனது மனைவி ரத்னதாரையின் {மதந்தரி} மூலம் துஷ்யந்தனைத் தலைமையானவனாகக் கொண்டு, ஐம்பூதங்களைப் போன்ற ஐந்து புதல்வர்களைப் பெற்றான்.(17) அவர்கள் துஷ்யந்தன், சூரன், பீமன், பிரவசு மற்றும் வசு ஆவர். ஓ ஜனமேஜயா! அவர்களில் மூத்தவனான துஷ்யந்தன் மன்னனானான்.(18) துஷ்யந்தன் தனது மனைவி சகுந்தலை மூலம் பரதன் எனும் புத்திசாலி மகனைப் பெற்றான். அவனே பின்பு மன்னன் ஆனான். பரதன் தான் நிறுவிய குலத்தின் தன் பெயரையே கொடுத்தான். அவனாலேயே அந்தக் குலத்திற்குப் பெரும் புகழ் கிடைத்தது.(19)
பரதன் தனது மூன்று மனைவியரிடம் ஒன்பது மகன்களைப் பெற்றான். ஆனால் அவர்களில் ஒருவரும் தனது தந்தையைப் போல் இல்லை. எனவே பரதன் அவர்களிடம் மனநிறைவு கொள்ளவில்லை.(20) இதனால் மிகுந்த கோபம் கொண்ட அவர்களின் தாய்மார் அவர்களைக் கொன்று போட்டனர். எனவே பரதனுக்குப் பிறந்தவர்கள் யாரும் மன்னனாக முடியவில்லை.(21) பிறகு, அந்த ஏகாதிபதி {பரதன்}, பரத்வாஜரின் அருளால் ஒரு பெரும் வேள்வியை நடத்தி ஒரு மகனைப் பெற்றான். அவனுக்குப் பூமன்யு என்று பெயரைச் சூட்டினான்.(22) பூருவின் வழி வந்த பரதன், அவனிடம் மனநிறைவு கொண்டு அவனையே தனது வாரிசாக்கினான்.(23)
பூமன்யு தனது மனைவி புஷ்கரணியிடம் சுஹோத்ரன், சுஹோத்ரி {சுஹோதா}, சுஹாவிஹ், சுஜேயன், திவிரதன், கீசிகன் என்ற ஆறு மகன்களைப் பெற்றான்[1]. அவர்களில் மூத்தவனான சுஹோத்ரன் அரியணையை அடைந்து,(24,25) பல ராஜசூய மற்றும் குதிரை வேள்விகளை நடத்தினான். கடல்களைத் தன் மேல் கச்சையாக அணிந்திருப்பவளும், யானைகளும், பசுக்களும், குதிரைகளும் நிறைந்தவளுமான பூமியை, அவளது ரத்தினங்கள் மற்றும் தங்கம் ஆகிய செல்வங்களுடன் முழுமையாகத் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தான்.(26-28) சுஹோத்ரனின் அறம்சார்ந்த ஆட்சியில் பூமி, எண்ணற்ற மனிதர்கள், யானைகள், குதிரைகள், பூனைகளுடன் மூழ்கிவிடுவது போலப் பெரும் கனம் கனத்தது. அவன் காலத்தில் நடந்த வேள்வி மேடைகளால் பூமியில் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் புள்ளிகள் தோன்றியது போல இருந்தது.(29)
பூமியின் தலைவனான சுஹோத்ரன் தனது மனைவி {இக்ஷ்வாகுவின் மகள்} அய்க்ஷாகியிடம் அஜமீடன், சுமீடன் மற்றும் புருமீடன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றான்.(30) அவர்களில் மூத்தவனான அஜமீடன் அந்த அரச பரம்பரையின் தொடர்ச்சியை ஏற்றான். அவன் {அஜமீடன்} தனது மனைவி தூமினியிடம் ரிக்ஷனைப் பெற்றான். தனது மற்ற மனைவிகளான நீலியிடம் துஷ்யந்தனையும், பரமேஷ்டியையும், கேசினியிடம் ஜானு {ஜன்ஹு}, ஜலன் {ஜனன்}[2] மற்றும் ரூபினாவையும் {ரூஷ்ணனையும்} பெற்றான்.(31,32) ரிக்ஷன் தனது குலம் தழைக்க சம்வர்ணனைப் பெற்றான். ரிக்ஷனின் மகன் சம்வர்ணன் பூமியை ஆண்டுக் கொண்டிருந்த போது தான் பஞ்சத்தாலும், தொற்று வியாதிகளாலும், மழையின்மையாலும், நோய்களாலும் பல மக்கள் மாண்டனர் என்று கேள்விப்படுகிறோம். அந்த பாரதக் குல மன்னன் பல எதிரிகளால் தாக்கப்பட்டான்.(33-36) பின்பு பாஞ்சாலர்கள் தங்கள் நால்வகைப் படைகளைத் திரட்டிப் போர் தொடுத்து, இந்த முழு உலகையும் தம் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்கள் பத்து அக்ஷௌஹிணி படைகளுடன் வந்த பாஞ்சாலர்கள் பாரதவம்ச இளவரசனைத் தோற்கடித்தனர்[3].(37,38)
பிறகு சம்வர்ணன், தனது மனைவி, மகன்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கானகத்திற்குள் பதுங்கி அங்கே சிந்து நதிக்கரையில் இருந்து மலையடிவாரம் வரை கோட்டை அமைத்துக் கொண்டு வாழ்ந்தான்.(39,40) முழுமையாக ஆயிரம் வருடங்களுக்கு அந்தக் கோட்டையினுள்ளேயே பாரதர்கள் வாழ்ந்தனர்.(41) ஒரு நாள் சிறப்புவாய்ந்த முனிவர் வசிஷ்டர் நாட்டைவிட்டு வெளியேறிய பாரதர்களை அணுகினார்.(42) அவர்கள் அவருக்கு ஆர்கியம் கொடுத்தனர். அவரைத் தகுந்த மரியாதைகளுடன் வரவேற்று அமர ஆசனமும் கொடுத்தனர்.(43) மன்னனே {சம்வர்ணன்} முனிவரை அணுகி, "நீர் எங்கள் புரோகிதராக இருக்க வேண்டும். ஓ சிறப்பு வாய்ந்தவரே, நாங்கள் எங்கள் அரசைப் பெற முயற்சிக்கப் போகிறோம்" என்றான்.(44)
வசிஷ்டர், "ஓம்" என்ற வார்த்தையைச் சொல்லி, அதற்கு ஆமோதித்து, பாரத இளவரசனை க்ஷத்திரியர்களுக்குத் தலைமையேற்க நியமித்து, அந்தப் பூரு வழி வந்தவர்களை காளையின் கொம்புகளைப் போலவும், யானையின் தந்தத்தைப் போலவும் உறுதியாக்கினார். அந்த மன்னன் {சம்வர்ணன்} தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தலைநகரை மீண்டும் அடைந்து, மற்ற ஏகாதிபதிகளை அவனுக்குக் கப்பம் கட்ட வைத்தான்.(45,46) முழு உலகத்தின் அரசாட்சியை மீண்டும் பெற்ற சம்வர்ணன், பல வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில் பிராமணர்களுக்குப் பெரும் பரிசுகள் கொடுக்கப்பட்டன. சம்வர்ணன், சூரியனின் மகளான தபதியை மனைவியாகப் பெற்று, குரு என்ற மகனைப் பெற்றான்.(47,48)
குரு மிகுந்த நற்குணமிக்கவனாக இருந்தான். எனவே மக்களே அவனை அரியணையில் அமர்த்தினர். இவன் பெயரையுடைய குருஜாங்கலம் என்ற போர்க்களம் உலகத்தில் பெரும் புகழைப் பெற்றதாகும்.(49) துறவுக்குத் தன்னை அர்ப்பணித்து, அங்கேயே ஆன்மிகத்தைப் பயின்று அந்தக்களத்தை (குருக்ஷேத்திரம்) புனிதமாக்கினான். பெரும் புத்திசாலியான குருவின் மனைவி வாஹினி ஐந்து மகன்களைப் பெற்றாள் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் அவிக்ஷித் {அஸ்வவான்}, பவிஷ்யந்தா {அபிஷ்யந்தன்}, சைத்ரரதன், முனி மற்றும் கொண்டாடப்பட்ட ஜனமேஜயன் ஆவர்.(50,51)
அவிக்ஷித் பெரும் பலம் வாய்ந்த பரீக்ஷித்தையும், மற்றும் சவலாஸ்வன், அதிராஜன், விராஜன் மற்றும் பெரும்பலம் வாய்ந்த சால்மலி, உச்சைஸ்ரவஸ், பங்ககாரன் மற்றும் எட்டாவதாக ஜிதாரி ஆகியோரைப் பெற்றான்.(52) இந்தக் குலத்தில் பிறந்தவர்கள்தான் பெரும் தேர்வீரர்களும், நன்மக்களுமான ஜனமேஜயனைத் தலைமையாகக் கொண்ட {குருவின்} ஏழு மகன்களாவர்.(53) பரீக்ஷித்துக்குப் பிறந்தவர்கள் அனைவரும் அறம், பொருள் ஆகியவற்றை (ஆகியவற்றின் ரகசியங்களை) அறிந்தவர்களாக இருந்தனர்.(54) அவர்கள் கக்ஷசேனன், உக்ரசேனன், பெரும் சக்தி வாய்ந்த சித்ரசேனன், இந்திரசேனன், சுஷேனன் மற்றும் பீமசேனன் ஆவர்.(55)
ஜனமேஜயனுக்குப் பிறந்தவர்கள் திருதராஷ்டிரன், பாண்டு, பாஹ்லீகன், பெரும் சக்தி கொண்ட நிஷதன், பெரும் பலம் வாய்ந்த ஜம்பூநதன், குண்டோதரன், பதாதி, எட்டாவதாகப் பிறந்த வசாதி ஆகியோராவர்.(56) அவர்கள் அனைவரும் அறம் பொருள் மற்றும் உயிரனங்கள் அனைத்தையும் குறித்து அறிந்தவர்களாக இருந்தனர்.(57) அவர்களில் திருதராஷ்டிரன் மன்னனானான். திருதராஷ்டிரனுக்கு, குண்டிகன், ஹஸ்தி, விதர்க்கன், கிராதன், ஐந்தாவதாகக் குண்டினன், ஹவிஸ்ரவஸ், இந்திராபன், பூமன்யு எட்டு மகன்கள் இருந்தனர். திருதராஷ்டிரனுக்கு நிறையப் பேரன்களும் இருந்தனர். அவர்களில் மூவர் மட்டுமே புகழ்வாய்ந்தவர்களாக இருந்தனர்.(58,59)
ஓ மன்னா! அவர்கள் பிரதீபன், தர்மனேத்ரன், சுனேத்ரன் ஆவர். இவர்களில் பிரதீபன் பூமியின் ஒப்பற்றவனாக இருந்தான்.(60) ஓ பாரதக் குலத்தின் காளேயே! பிரதீபன் மூன்று மகன்களைப் பெற்றான். அவர்கள் தேவாபி, சந்தனு மற்றும் பெரும் தேர்வீரனான பாஹ்லீகன் ஆவர்.(61) மூத்தவன் தேவாபி, தன் தம்பிகளுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தான். நாட்டைச் சந்தனுவும் பாஹ்லீகனும் அடைந்தனர்.(62) ஓ ஏகாதிபதி! இவர்களைத் தவிர்த்து சிறந்த பாரதக் குல மன்னர்கள் பலர், பெரும் சக்தி மிக்கவர்களாகவும், முனிவர்களைப் போன்ற தவ வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.(63) இப்படியே மனுவின் குலத்திலும் தேவர்களைப் போன்றே பல ரத வீரர்கள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கையால் ஐலனின் குலம் அசுர பலத்துடன் வளர்ந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(64)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில், "சுஹத்ரன், சுஹோதன், சுஹவி, சயாயு, ரிசீகன் மற்றும் திவிரதன்" ஆகிய ஆறு மகன்கள் குறிப்பிடப்படுகின்றனர். கும்பகோணம் பதிப்பில், "புமன்யுவுக்குப் புஷ்கரணியென்பவளிடம் ஸுஹோத்ரன், ஸுஹுதா, ஸுஹவிஸ், ஸுயஜுஸ், ரிசீகன் என்னும் புத்திரர்கள் பிறந்தார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ள பெயர்களே இருக்கின்றன. மூலத்தை ஒப்பு நோக்க வேண்டும்.
பூமியின் தலைவனான சுஹோத்ரன் தனது மனைவி {இக்ஷ்வாகுவின் மகள்} அய்க்ஷாகியிடம் அஜமீடன், சுமீடன் மற்றும் புருமீடன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றான்.(30) அவர்களில் மூத்தவனான அஜமீடன் அந்த அரச பரம்பரையின் தொடர்ச்சியை ஏற்றான். அவன் {அஜமீடன்} தனது மனைவி தூமினியிடம் ரிக்ஷனைப் பெற்றான். தனது மற்ற மனைவிகளான நீலியிடம் துஷ்யந்தனையும், பரமேஷ்டியையும், கேசினியிடம் ஜானு {ஜன்ஹு}, ஜலன் {ஜனன்}[2] மற்றும் ரூபினாவையும் {ரூஷ்ணனையும்} பெற்றான்.(31,32) ரிக்ஷன் தனது குலம் தழைக்க சம்வர்ணனைப் பெற்றான். ரிக்ஷனின் மகன் சம்வர்ணன் பூமியை ஆண்டுக் கொண்டிருந்த போது தான் பஞ்சத்தாலும், தொற்று வியாதிகளாலும், மழையின்மையாலும், நோய்களாலும் பல மக்கள் மாண்டனர் என்று கேள்விப்படுகிறோம். அந்த பாரதக் குல மன்னன் பல எதிரிகளால் தாக்கப்பட்டான்.(33-36) பின்பு பாஞ்சாலர்கள் தங்கள் நால்வகைப் படைகளைத் திரட்டிப் போர் தொடுத்து, இந்த முழு உலகையும் தம் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்கள் பத்து அக்ஷௌஹிணி படைகளுடன் வந்த பாஞ்சாலர்கள் பாரதவம்ச இளவரசனைத் தோற்கடித்தனர்[3].(37,38)
[2] கேசினியிடம் பெற்ற மகன்கள் விரஜன் மற்றும் ரூபி என்பது வேறு பாடம். பாஞ்சால குலத்தில் வந்தவர்கள் அனைவரும் துஷ்யந்தன் மற்றும் பரமேஷ்டின் வழியில் வந்தவர்களாவர். குசிகர்கள் அளவற்ற வீரம் கொண்ட ஜானுவின் வழியில் வந்தவர்களாவர். ஜலன் மற்றும் ரூபினாவை விட வயதில் மூத்தவனான ரிக்ஷன் மன்னனானான்.
[3] இது மிக முக்கியமான குறிப்பு, பாரதத்தின் முக்கிய கதையான பாண்டவர்கள் கதையில் இந்தப் பாஞ்சாலம் அவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்கிற நாடாகிறது
பிறகு சம்வர்ணன், தனது மனைவி, மகன்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கானகத்திற்குள் பதுங்கி அங்கே சிந்து நதிக்கரையில் இருந்து மலையடிவாரம் வரை கோட்டை அமைத்துக் கொண்டு வாழ்ந்தான்.(39,40) முழுமையாக ஆயிரம் வருடங்களுக்கு அந்தக் கோட்டையினுள்ளேயே பாரதர்கள் வாழ்ந்தனர்.(41) ஒரு நாள் சிறப்புவாய்ந்த முனிவர் வசிஷ்டர் நாட்டைவிட்டு வெளியேறிய பாரதர்களை அணுகினார்.(42) அவர்கள் அவருக்கு ஆர்கியம் கொடுத்தனர். அவரைத் தகுந்த மரியாதைகளுடன் வரவேற்று அமர ஆசனமும் கொடுத்தனர்.(43) மன்னனே {சம்வர்ணன்} முனிவரை அணுகி, "நீர் எங்கள் புரோகிதராக இருக்க வேண்டும். ஓ சிறப்பு வாய்ந்தவரே, நாங்கள் எங்கள் அரசைப் பெற முயற்சிக்கப் போகிறோம்" என்றான்.(44)
வசிஷ்டர், "ஓம்" என்ற வார்த்தையைச் சொல்லி, அதற்கு ஆமோதித்து, பாரத இளவரசனை க்ஷத்திரியர்களுக்குத் தலைமையேற்க நியமித்து, அந்தப் பூரு வழி வந்தவர்களை காளையின் கொம்புகளைப் போலவும், யானையின் தந்தத்தைப் போலவும் உறுதியாக்கினார். அந்த மன்னன் {சம்வர்ணன்} தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தலைநகரை மீண்டும் அடைந்து, மற்ற ஏகாதிபதிகளை அவனுக்குக் கப்பம் கட்ட வைத்தான்.(45,46) முழு உலகத்தின் அரசாட்சியை மீண்டும் பெற்ற சம்வர்ணன், பல வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில் பிராமணர்களுக்குப் பெரும் பரிசுகள் கொடுக்கப்பட்டன. சம்வர்ணன், சூரியனின் மகளான தபதியை மனைவியாகப் பெற்று, குரு என்ற மகனைப் பெற்றான்.(47,48)
குரு மிகுந்த நற்குணமிக்கவனாக இருந்தான். எனவே மக்களே அவனை அரியணையில் அமர்த்தினர். இவன் பெயரையுடைய குருஜாங்கலம் என்ற போர்க்களம் உலகத்தில் பெரும் புகழைப் பெற்றதாகும்.(49) துறவுக்குத் தன்னை அர்ப்பணித்து, அங்கேயே ஆன்மிகத்தைப் பயின்று அந்தக்களத்தை (குருக்ஷேத்திரம்) புனிதமாக்கினான். பெரும் புத்திசாலியான குருவின் மனைவி வாஹினி ஐந்து மகன்களைப் பெற்றாள் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் அவிக்ஷித் {அஸ்வவான்}, பவிஷ்யந்தா {அபிஷ்யந்தன்}, சைத்ரரதன், முனி மற்றும் கொண்டாடப்பட்ட ஜனமேஜயன் ஆவர்.(50,51)
அவிக்ஷித் பெரும் பலம் வாய்ந்த பரீக்ஷித்தையும், மற்றும் சவலாஸ்வன், அதிராஜன், விராஜன் மற்றும் பெரும்பலம் வாய்ந்த சால்மலி, உச்சைஸ்ரவஸ், பங்ககாரன் மற்றும் எட்டாவதாக ஜிதாரி ஆகியோரைப் பெற்றான்.(52) இந்தக் குலத்தில் பிறந்தவர்கள்தான் பெரும் தேர்வீரர்களும், நன்மக்களுமான ஜனமேஜயனைத் தலைமையாகக் கொண்ட {குருவின்} ஏழு மகன்களாவர்.(53) பரீக்ஷித்துக்குப் பிறந்தவர்கள் அனைவரும் அறம், பொருள் ஆகியவற்றை (ஆகியவற்றின் ரகசியங்களை) அறிந்தவர்களாக இருந்தனர்.(54) அவர்கள் கக்ஷசேனன், உக்ரசேனன், பெரும் சக்தி வாய்ந்த சித்ரசேனன், இந்திரசேனன், சுஷேனன் மற்றும் பீமசேனன் ஆவர்.(55)
ஜனமேஜயனுக்குப் பிறந்தவர்கள் திருதராஷ்டிரன், பாண்டு, பாஹ்லீகன், பெரும் சக்தி கொண்ட நிஷதன், பெரும் பலம் வாய்ந்த ஜம்பூநதன், குண்டோதரன், பதாதி, எட்டாவதாகப் பிறந்த வசாதி ஆகியோராவர்.(56) அவர்கள் அனைவரும் அறம் பொருள் மற்றும் உயிரனங்கள் அனைத்தையும் குறித்து அறிந்தவர்களாக இருந்தனர்.(57) அவர்களில் திருதராஷ்டிரன் மன்னனானான். திருதராஷ்டிரனுக்கு, குண்டிகன், ஹஸ்தி, விதர்க்கன், கிராதன், ஐந்தாவதாகக் குண்டினன், ஹவிஸ்ரவஸ், இந்திராபன், பூமன்யு எட்டு மகன்கள் இருந்தனர். திருதராஷ்டிரனுக்கு நிறையப் பேரன்களும் இருந்தனர். அவர்களில் மூவர் மட்டுமே புகழ்வாய்ந்தவர்களாக இருந்தனர்.(58,59)
ஓ மன்னா! அவர்கள் பிரதீபன், தர்மனேத்ரன், சுனேத்ரன் ஆவர். இவர்களில் பிரதீபன் பூமியின் ஒப்பற்றவனாக இருந்தான்.(60) ஓ பாரதக் குலத்தின் காளேயே! பிரதீபன் மூன்று மகன்களைப் பெற்றான். அவர்கள் தேவாபி, சந்தனு மற்றும் பெரும் தேர்வீரனான பாஹ்லீகன் ஆவர்.(61) மூத்தவன் தேவாபி, தன் தம்பிகளுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தான். நாட்டைச் சந்தனுவும் பாஹ்லீகனும் அடைந்தனர்.(62) ஓ ஏகாதிபதி! இவர்களைத் தவிர்த்து சிறந்த பாரதக் குல மன்னர்கள் பலர், பெரும் சக்தி மிக்கவர்களாகவும், முனிவர்களைப் போன்ற தவ வலிமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.(63) இப்படியே மனுவின் குலத்திலும் தேவர்களைப் போன்றே பல ரத வீரர்கள் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கையால் ஐலனின் குலம் அசுர பலத்துடன் வளர்ந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(64)
ஆங்கிலத்தில் | In English |