Kunti placed nupital garland on Pandu! | Adi Parva - Section 112 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 48)
பதிவின் சுருக்கம் : குந்தியின் சுயம்வரத்தை அறிவித்த குந்திபோஜன்; பாண்டுவுக்கு மாலையிட்ட குந்தி; மணமகளை அழைத்துக் கொண்டு தன் தலைநகரை அடைந்த பாண்டு...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அகன்ற விழிகளையுடைய குந்திபோஜனின் மகள் பிருதை, மிகுந்த அழகுடன் நல்லவைகள் அனைத்தும் கொண்டவளாக இருந்தாள். கடும் நோன்புகள் நோற்றுத் தன்னை அறத்திற்கு அர்ப்பணித்து எல்லா நல்ல குணங்களையும் கொண்டிருந்தாள்.(1) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே, அப்படி அவள் அழகுடனும், இளமையுடனும், பெண்மைக்கான அனைத்துக் குணநலன்களையும் பெற்றிருந்தாலும், எந்த மன்னனும் அவளது கரத்தைக் கேட்டு {அவளைப் பெண் கேட்டு} வரவில்லை.(2) அவளது தந்தை குந்திபோஜன், இந்நிலையைக் கண்டு, தனது மகள் இளவரசர்கள் அல்லது மன்னர்களில் ஒருவரைத் தனது துணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றெண்ணி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மன்னர்களுக்கும் தூதனுப்பி அவர்களை {சுயம்வத்திற்கு} அழைத்தான்.(3)
புத்திசாலியான குந்தி, அந்த அரங்கிற்குள் நுழைந்ததும், சிரத்தில் முடி தரித்தவர்களின் வரிசையில் நின்ற பாரதர்களில் முதன்மையானவனும், மன்னர்களில் புலியுமான பாண்டுவைக் கண்டாள்.(4) அந்த அரச அணிவகுப்பில், சிங்கத்தைப் போன்ற பெருமையுடனும், அகலமான மார்புடனும், காளையைப் போன்ற விழிகளுடனும் மற்றும் பெரும் பலத்துடனும் கூடிய அவன் {பாண்டு} அங்கிருந்த மன்னர்களிலேயே பிரகாசமானவனாக, மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான். குந்திபோஜனின் களங்கமற்ற இனிமையான மகள், மனிதர்களில் சிறந்த பாண்டுவை அந்தக் கூட்டத்தில் கண்டு, இனிய அதிர்வுக்குள்ளானாள்.(5,6)
உணர்ச்சிகளின் தாக்கத்தால் ஏற்பட்ட நடுக்கத்துடனும், நாணத்துடனும் முன்னேறி, மணமாலையைப் பாண்டுவின் கழுத்திலிட்டாள்.(7) குந்தி, பாண்டுவைத் தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததைக் கண்ட மற்ற ஏகாதிபதிகள் தங்கள் யானைகளிலும், குதிரைகளிலும், ரதங்களிலும் வந்தது போலவே அவரவர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றானர்.(8)
ஓ மன்னா! பிறகு, நடக்க வேண்டிய திருமணச் சடங்குகளை மணமகளின் தந்தை சரியாகச் செய்தான். பெரும் நற்பேறு பெற்ற அந்தக் குருக்களின் இளவரசனும் {பாண்டுவும்}, குந்திபோஜனின் மகளும் {குந்தியும்} சேர்ந்து மகவத்தையும் பௌலமியையும் (தேவர்களின் அரசனையும் அரசியையும் போன்று) போன்று காட்சியளித்தனர்.(9,10) ஓ குரு பரம்பரை ஏகாதிபதிகளில் சிறந்தவனே, திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் குந்திபோஜன் தனது மருமகனுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்து, அவனது (பாண்டுவின்) தலைநகருக்கு அனுப்பிவைத்தான்.(11) குருக்களின் இளவரசன் பாண்டு, பதாகைகளும், கொடிகளும் கொண்ட பெரும் சேனையுடனும், பிராமணர்கள் மற்றும் முனிவர்களின் வாழ்த்துகளுடனும் தனது தலைநகரை அடைந்தான்.(12) குருவின் வழித்தோன்றலான மன்னன் பாண்டு, தனது அரண்மனையை அடைந்ததும், தனது ராணியை அங்கே அமர்த்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(13)

ஆங்கிலத்தில் | In English |