The birth of Karna! | Adi Parva - Section 111 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 47)
பதிவின் சுருக்கம் : குந்திபோஜனின் இல்லத்தில் வசித்து வந்த குந்தி; துர்வாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்ட குந்தி; குந்திக்கு வரமளித்த துர்வாசர்; மந்திரத்தைச் சோதித்தப் பார்த்த குந்தி; சூரியன் வந்தான்; கர்ணன் பிறந்தான்; கர்ணனை ஆற்றில் மிதக்கவிட்ட குந்தி; ராதையிடம் வளர்ந்த கர்ணன்; இந்திரனின் சக்தி ஆயுதத்தைப் பெற்ற கர்ணன்...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாகச் சூரன் {சூரசேனன்} என்று ஒருவன் இருந்தான். அவன் வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தையான வசுதேவரின்} தந்தையாவான். அவனுக்குப் {சூரசேனனுக்கு} பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் {பிருதை} இந்தப் பூமியில் உள்ளவர்களுடன் ஒப்பிடமுடியாத அளவு அழகுடையவளாக இருந்தாள்.(1) ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, சூரன் எப்போதும் உண்மை பேசுபவனாக இருந்தான். அவன், தான் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும், தன் அத்தையின் மகனுமான {மைத்துனனுமான = தந்தையுடைய சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளைத் தத்துக் {சுவீகாரமாகக்} கொடுத்தான்.(2,3) பிருதை {குந்தி}[1] தனது வளர்ப்புத் தந்தையின் {குந்திபோஜனின்} இல்லத்தில் தங்கியிருந்து விருந்தினர்களையும், பிராமணர்களையும் நன்கு கவனித்துக் கொண்டாள். அறத்தின் மறைந்த உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கடும் தவமிருந்த பயங்கரமான பிராமணரான துர்வாசர் ஒருமுறை அங்கு வந்திருந்தார். அப்போது அவள் {குந்தி} அவரை {துர்வாசரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டள்.(4,5)
அவளது மரியாதைமிக்கக் கவனிப்பால் மனம்நிறைந்த அம்முனிவர் {துர்வாசர்}, (தன் இணையுடன் கலந்திருக்கும் ஒரு மானைக் கொன்ற அறமற்ற செயலுக்காகப் பாண்டு சாபம் பெற்றதன் விளைவால் வரப்போகும்) எதிர்காலத் துயரங்களைத் தனது ஆன்ம பலத்தால் கண்டு, அவளுக்கு {குந்திக்கு}, அவள் விரும்பிய தேவர்களை அவளுக்குப் பிள்ளை வரம் கொடுக்க வேண்டக்கூடிய, ஓர் அழைப்புச் சூத்திரத்தை {மந்திரத்தை} உபதேசித்தார்.(6) அம்முனிவர் {துர்வாசர்}"இந்த மந்திரத்தால் நீ அழைக்கும் தேவர்கள், நிச்சயம் உன்னை அணுகி, உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பார்கள்" என்றார்.(7) இப்படி அந்தப் பிராமணரால் {துர்வாசரால்} சொல்லப்பட்ட அந்த இனிமையான குந்தி (பிருதை), ஆர்வத்தால் உந்தப்பட்டு, ஆர்க்க தேவனை (சூரியனை) அழைத்தாள்.(8) அந்த மந்திரங்களை உச்சரித்தவுடனேயே, அந்தப் பிரகாசமான தேவன் தன்னை அணுகுவதை அவள் {குந்தி} கண்டாள். அந்த இயல்புக்குமீறிய காட்சியைக் கண்ட குற்றங்குறையற்ற அந்த மங்கை {குந்தி} ஆச்சரியங்கூடிய அதிர்ச்சியடைந்தாள்.(9) ஆனால் விவஸ்வான் (சூரியன்) அவளை {குந்தியை} அணுகி, "இதோ நான் இங்கிருக்கிறேன். ஓ கருங்கண் பெண்ணே, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்வாயாக" என்றான்.(10)
இதைக் கேட்ட குந்தி, "ஓ எதிரிகளை அழிப்பவனே {சூரியனே}, ஒரு பிராமணர் எனக்கு இந்த மந்திரத்தை அருளினார். ஓ தலைவா, அதன் வலிமையைச் சோதிக்கவே நான் உன்னை அழைத்தேன்.(11) உன்னிடம் இந்தக் குற்றத்திற்காக நான் தலை வணங்குகிறேன். ஒரு பெண் எக்குற்றம் செய்தாலும், அவள் மன்னிப்பைப் பெறத் தகுதியானவளே" என்றாள்.(12)
அதற்குச் சூரியன், "துர்வாசர் உனக்கு இந்த வரத்தை அளித்தார் என்பதை நான் அறிவேன். ஓ மருட்சியுடைய மங்கையே {குந்தியே}, உனது அச்சத்தை விடு, உனது அணைப்பை எனக்குக் கொடு.(13) இனிமையானவளே என் வருகை பலனற்றதாக முடியாது. அது கனி கொடுக்க வேண்டும். நீயே என்னை அழைத்தாய். அஃது ஒன்றுக்குமில்லையென்றால், உனது வரம்புமீறிய செயலாகவே அது கருதப்படும்" என்றான்.(14)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிப் பேசிய விவஸ்வான் {சூரியன்}, அவளது {குந்தியின்} அச்சத்தை அகற்ற மேலும் பலவற்றைச் சொன்னான். ஆனால், ஓ பாரதா, அந்த இனிமையான மங்கை, பண்புடைமை மற்றும் தனது உறவினர்களிடம் உள்ள பயத்தால், அவனது கோரிக்கையை ஏற்கத் துணியவில்லை. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயனே}, ஆர்க்கன் {சூரியன்} அவளிடம் {குந்தியிடம்} மறுபடியும்,(15,16) "ஓ இளவரசி, இந்தக் காரியம் உனக்குப் பாவத்தைக் கொடுக்காது, எனக்காக, இந்த எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக" என்றான். குந்திபோஜனின் மகளிடம் இப்படிச் சொல்லி உலகத்தை ஒளியூட்டும் அந்தச் சிறப்புமிக்கத் தபனன், அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். இந்தத் தொடர்பால், உடனடியாக ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தை இயற்கையான கவசத்துடனும், முகத்தைப் பிரகாசிக்க வைக்கும் காது குண்டலங்களுடனும் இருந்தது. அந்த மகனே பின்னாட்களில் கர்ணன் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டான். அந்த வீரன் கர்ணன் ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையானவனாக இருந்து, நற்பேறு அருளப்பட்டு, தேவலோகக் குழந்தை போல அழகுடன் இருந்தான்.(17-19)
குழந்தை பிறந்த பிறகு, அந்தச் சிறப்பு மிகுந்த தபனன் பிருதைக்கு {குந்திக்கு} அவளது கன்னித்தன்மையைத் திரும்பக் கொடுத்து விண்ணேகினான்.(20) விருஷ்ணி குலத்தின் அந்த இளவரசி தனக்குப் பிறந்த மகனைக் கண்டு துயரடைந்து, எது சிறந்ததோ அதைச் செய்ய நினைத்தாள்.(21) தனது உறவினர்களிடம் கொண்ட பயத்தால், தனது குற்றத்திற்கான சாட்சியை மறைக்க முடிவெடுத்தாள். பெரும் பலம் கொண்ட தனது வாரிசை நீரில் விட்டாள்.(22) நீரில் விடப்பட்ட அந்தக் குழந்தையைச் சூத சாதியில் பிறந்தவனும், அனைவராலும் அறியப்பட்டவனுமான ராதையின் கணவன் {அதிரதன்}, அந்த நீரிலிருந்து எடுத்து, அவனும் அவனது மனைவியும் சேர்ந்து அக்குழந்தையைத் தங்கள் மகனாகவே வளர்த்தனர்.(23) இயற்கையான கவசமும், காது குண்டலங்களும் கொண்டிருந்ததால், ராதையும் அவளது கணவனும் {அதிரதனும்} அக்குழந்தைக்கு வசுசேனன்[2] என்று பெயர் வைத்தனர்.(24) அவன் பெரும் பலத்துடன் வளர்ந்து, எல்லா ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றான். அவன் பெரும் சக்தியைத் தன்னிடம் கொண்டு, முதுகில் வெப்பக்கதிர்கள் சுடும் வரை (அதிகாலை துவங்கி மதியம் வரை) சூரியனை வழிபட்டான்.(25)அப்படி அவன் {கர்ணன்} சூரியனை வழிபடும் நேரத்தில் யாசித்து வரும் பிராமணர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்குப் பூமியில் யாதொரு பொருளும் இருக்கவில்லை.(26)
இந்திரன் தனது மகன் அர்ஜுனனுக்கு நன்மை செய்ய விரும்பி, பிராமண உருக் கொண்டு, வசுசேனனை {கர்ணனை} அணுகி அவனது இயற்கைக் கவசத்தை யாசகமாகக் கேட்டான்.(27) இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், உடனே தனது இயற்கை கவசத்தை அறுத்து, பிராமண உருவில் இருந்த இந்திரனிடம் மரியாதையுடன் கைக்கூப்பிக் கொடுத்தான்.(28) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அந்தப் பரிசை ஏற்றுக் கர்ணனின் ஈகையால் மனநிறைவு கொண்டான். எனவே, அவன் வசுசேனனுக்கு அருமையான கணையொன்றைக் கொடுத்து,(29) "எந்த ஒருவனை (ஒருவனை மட்டுமே), அவன் தேவனாக இருக்கட்டும், அசுரனாக இருக்கட்டும், மனிதனாக இருக்கட்டும், கந்தர்வனாக இருக்கட்டும், நாகனாக இருக்கட்டும், ராட்சதனாக இருக்கட்டும், வேறு யாராகவும் இருக்கட்டும், அவனை நீ வெற்றிக் கொள்ள நினைத்தால், அவன் இக்கணையால் நிச்சயம் அழிவான்" என்று அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(30) இந்தக் காரியம் நடப்பதற்கு முன்னர் அந்தச் சூரியனின் மகன் வசுசேனன் என்ற பெயராலேயே அறியப்பட்டான். ஆனால், தனது இயற்கைக் கவசத்தை அறுத்துக் கொடுத்ததனால் அது முதல், அவன் கர்ணன்[3] என்ற பெயரால் அழைக்கப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
[1] இந்தப் பிருதை. குந்திபோஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்றே அழைக்கப்பட்டாள்.

[2] சம்ஸ்க்ருதத்தில் "செல்வத்துடன் பிறந்தவன்" என்று பொருள் தரும் பெயர்.
இந்திரன் தனது மகன் அர்ஜுனனுக்கு நன்மை செய்ய விரும்பி, பிராமண உருக் கொண்டு, வசுசேனனை {கர்ணனை} அணுகி அவனது இயற்கைக் கவசத்தை யாசகமாகக் கேட்டான்.(27) இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், உடனே தனது இயற்கை கவசத்தை அறுத்து, பிராமண உருவில் இருந்த இந்திரனிடம் மரியாதையுடன் கைக்கூப்பிக் கொடுத்தான்.(28) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அந்தப் பரிசை ஏற்றுக் கர்ணனின் ஈகையால் மனநிறைவு கொண்டான். எனவே, அவன் வசுசேனனுக்கு அருமையான கணையொன்றைக் கொடுத்து,(29) "எந்த ஒருவனை (ஒருவனை மட்டுமே), அவன் தேவனாக இருக்கட்டும், அசுரனாக இருக்கட்டும், மனிதனாக இருக்கட்டும், கந்தர்வனாக இருக்கட்டும், நாகனாக இருக்கட்டும், ராட்சதனாக இருக்கட்டும், வேறு யாராகவும் இருக்கட்டும், அவனை நீ வெற்றிக் கொள்ள நினைத்தால், அவன் இக்கணையால் நிச்சயம் அழிவான்" என்று அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(30) இந்தக் காரியம் நடப்பதற்கு முன்னர் அந்தச் சூரியனின் மகன் வசுசேனன் என்ற பெயராலேயே அறியப்பட்டான். ஆனால், தனது இயற்கைக் கவசத்தை அறுத்துக் கொடுத்ததனால் அது முதல், அவன் கர்ணன்[3] என்ற பெயரால் அழைக்கப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
[3] சம்ஸ்க்ருதத்தில் "அறுப்பவன்" என்று பொருள் தரும் பெயர்.
ஆங்கிலத்தில் | In English |