Marriage of Vidura! | Adi Parva - Section 114 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 50)
பதிவின் சுருக்கம் : செல்வத்தைப் பிரித்தளித்த பாண்டு, ஓய்வுக்காகத் தன் மனைவிகளோடு காட்டுக்குச் சென்றது; காட்டில் திரிந்து கொண்டிருந்த பாண்டுவுக்கு உதவிய நாட்டு மக்கள்; மன்னன் தேவகனின் மகளை விதுரனுக்குத் திருமணம் செய்துவைத்த பீஷ்மர்...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டு, திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் தன்னுடைய வீரத்தால் கைப்பற்றப்பட்ட செல்வங்களைப் பீஷ்மரிடமும், தனது பாட்டியான சத்தியவதியிடமும், தனது தாய்மார்களிடமும் கொடுத்தான்.(1) தனது செல்வத்தின் ஒரு பகுதியை விதுரனுக்கும் கொடுத்தான். அந்த அறம் சார்ந்த பாண்டு, தனது உறவினர்களுக்கும் இதற்கொப்பப் பரிசுகளைக் கொடுத்து மனநிறைவு கொள்ளச் செய்தான்.(2) பிறகு, பாண்டு தனது வீரத்தால் அடைந்த பரிசுகளைப் பெற்ற சத்தியவதி, பீஷ்மர் மற்றும் கோசல இளவரசிகள் {அம்பிகை, அம்பாலிகை} பெரும் நிறைவடைந்தனர்.(3) குறிப்பாக அம்பாலிகை, ஜெயந்தனை {இந்திரனின் மகன்} வாரியணைத்துக் கொள்ளும் தேவலோக அரசி {இந்திராணி} போல, ஒப்புவமையில்லாத தனது மகனை {பாண்டுவை} ஆரத்தழுவி, மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.(4) அந்த வீரன் {பாண்டு} கொண்டு வந்த செல்வங்களை வைத்து திருதராஷ்டிரன், ஆயிரம் குதிரை வேள்விகளுக்குச் (அஸ்வமேத யாகங்களுக்குச்) சமமான ஐந்து பெரும் வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில் பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் காணிக்கைகள் செலுத்தப்பட்டன.(5)
ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, பெரும் வெற்றி பெற்றுத் திரும்பிய பாண்டு சிறிது காலம் கழித்துக் களைப்பாலும் சோர்வாலும், தனது மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியை அழைத்துக் கொண்டு ஓய்வுக்காகக் கானகத்திற்குள் புகுந்தான்.(6) தனது அரண்மனையில் இருக்கும் ஆடம்பரப் படுக்கையை விட்டு, கானகத்தின் நிரந்தர வசிப்பாளனாக மாறி, மான்களை விரட்டுவதிலேயே தனது காலத்தைக் கடத்தினான்.(7) பெரும் சால மரங்கள் அடர்த்தியாகப் பசேலென வளர்ந்திருக்கும் மலை சார்ந்த இமயப் பகுதியில் அவனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். அங்கே அவன் {பாண்டு} சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தான்.(8) அந்த அழகான பாண்டு, இரு பெண் யானைகளுடன் சுற்றித்திரியும் ஐராவதம் போலத் தனது இரு மனைவியருடன் {குந்தி, மாத்ரியுடன்} அந்தக் கானகம் முழுவதும் சுற்றினான்.(9)
மனைவியருடனும், வாள், கணை மற்றும் வில்லுடனும், அழகான கவசத்துடனும் சுற்றித்திரிந்த ஆயுதப் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற பாரதக் குல இளவரசனை {பாண்டுவை}, அந்தக் கானகத்தில் வசிப்பவர்கள் கண்டு, தேவர்களில் ஒருவன் தங்களுக்கிடையே தங்கள் கானகத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகக் கருதினர். திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில், நாட்டு மக்கள் பாண்டுவுக்கு, அவனது ஓய்வுக்காலத்தில், அவனது மகிழ்ச்சிக்குரிய எல்லாப் பொருட்களையும் அளித்தனர்.(10,11)
அதே சமயத்தில், ஒரு சூத்திரப் பெண்ணுக்கும் மன்னன் தேவகனுக்கும் பிறந்து, அழகும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தி இருப்பதாகக் கடலுக்குச் செல்பவளான கங்கையின் மைந்தன் (பீஷ்மர்) கேள்விப்பட்டார்.(12) அவளது தந்தையின் {தேவகனின்} இருப்பிடத்தில் இருந்து அவளைக் கொண்டு வந்த பீஷ்மர், அவளை, ஞானியான விதுரனுக்கு மணமுடித்தார்.(13) விதுரன் அவளிடம் தன்னைப் போலவே திறமை கொண்ட பல பிள்ளைகளைப் பெற்றெடுத்தான்" என்றார் வைசம்பாயனர்}.(14)

ஆங்கிலத்தில் | In English |