O King! Cast off Duryodhana!! | Adi Parva - Section 115 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 51)
பதிவின் சுருக்கம் : காந்தாரிக்கு வரமருளிய வியாசர்; குந்தியின் மீது கொண்ட பொறாமையால் வயிற்றில் ஓங்கி அடித்துக் கொண்ட காந்தாரி; காந்தாரிக்குப் பிறந்த சதைப்பிண்டம்; அப்பிண்டத்தை நூறு பங்காகப் பிரித்து குடத்திலிட்ட வியாசர்; துரியோதனன் பிறந்ததும் தோன்றிய துர்நிமித்தங்கள்; துரியோதனனைக் கைவிடுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன விதுரன்; யுயுத்சுவின் பிறப்பு...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா! அதே சமயத்தில் திருதராஷ்டிரன் காந்தாரியிடம் நூறு மகன்களையும், வைசிய மனைவியிடம் {சௌபலையிடம்} ஒரு மகனையும் பெற்றான்.(1) பாண்டு, தனது இரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரி மூலம் ஐந்து மகன்களைப் பெற்றான். பின்னாட்களில் பெரும் தேர்வீரர்களாக இருந்த அந்த ஐவரும், தேவர்களால் குரு பரம்பரைத் தொடர்ச்சிக்காகப் பெறப்பட்டவர்கள்" {என்றார்}.(2)
ஜனமேஜயன், "ஓ பிராமணர்களில் சிறந்தவரே, காந்தாரி அந்த நூறு மகன்களையும் எவ்வாறு பெற்றாள்? எத்தனை வருடங்களில் பெற்றாள்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயுள் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது?(3) திருதராஷ்டிரன், வைசிய மனைவி மூலம் ஒரு மகனை எவ்வாறு பெற்றார்? அவர் தன்னிடம் கீழ்ப்படிந்து நடக்கும் தனது அறம்சார்ந்த மனைவி காந்தாரியிடம் எவ்வாறு நடந்து கொண்டார்?(4) பாண்டு ஒரு முனிவரைக் கொன்ற பாவத்தால் சபிக்கப்பட்டிருக்கும்போது, பெரும் தேர் வீரர்களான ஐந்து மகன்களும் அவருக்கு எவ்வாறு பிறந்தனர்?(5) இவை அனைத்தையும் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வீராக. எனது மூதாதையரைப் பற்றி அனைத்தும் அறிந்து கொள்ளும் தாகம் எனக்குத் தணியவில்லை" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(6)
வைசம்பாயனர் சொன்னார், "ஒரு நாள் தனது வசிப்பிடத்திற்குப் பசியுடனும், தாகத்துடனும் களைப்பாக வந்த பெரும் துவைபாயனரை {வியாசரை}, மிகுந்த மரியாதையுடனும் கவனத்துடனும் காந்தாரி கவனித்துக் கொண்டாள். காந்தாரியின் விருந்தோம்பலால் மகிழ்ந்த முனிவர், அவள் கேட்டவாறே அவளது தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} இணையான பலமும், சாதனைகளும் கொண்ட நூறு பிள்ளைகளைப் பெறும் ஒரு வரத்தைக் கொடுத்தார்.(7, 8) சில காலம் கழித்துக் கருவுற்ற காந்தாரி, அந்தக் கருவை இரு முழு வருடங்களுக்குத் தனது கருவறையில் தாங்கினாள். ஆனால் பிள்ளை பிறக்கவில்லை. அவள் {காந்தாரி} அதனால் பெரும் துயரத்திற்கு ஆளானாள்.(9) அப்போது, குந்தி காலைக் கதிரவனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் என்பதைக் கேள்வியுற்றாள். இவ்வளவு வருடங்கள் காத்திருந்ததால் பொறுமையிழந்தும், துயரத்தின் மிகுதியாலும், தனது கணவன் அறியாதவாறு தனது வயிற்றில் ஓங்கிப் பலமாக அடித்தாள்.(10,11) அதனால் இரு வருடங்கள் வளர்ச்சி கண்டிருந்ததும், இரும்புப் பந்து போன்றதுமான ஒரு சதைப்பிண்டம் வெளியே வந்து விழுந்தது.(12) அவள் அதை வெளியே தூக்கியெறிய முற்படும்போது, தமது ஆன்ம பலத்தால் நடப்பதை அறிந்த துவைபாயனர் {வியாசர்}, அங்கே வந்து, அந்தச் சதைப்பிண்டத்தைக் கண்டார்.(13) சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்) "நீ என்ன செய்துவிட்டாய்?" என்று கேட்டார்.
காந்தாரி, தனது உணர்ச்சிகளை மறைக்க முயலாமல், அம்முனிவரிடம்,(14) "குந்தி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் மகனைப் பெற்றெடுத்தாள் என்பதைக் கேள்விப்பட்டுத் துயரத்தால் எனது வயிற்றில் ஓங்கி அடித்தேன்.(15) ஓ முனிவரே {வியாசரே}, நீர் எனக்கு நூறு மகன்கள் பிறப்பார்கள் என்று வரமளித்திருக்கிறீர். ஆனால் நூறு மகன்களுக்குப் பதில் பெரும் சதைப் பிண்டமே வந்திருக்கிறது!" என்றாள்.(16)
வியாசர், "சுபலனின் மகளே, நிலை அப்படித்தான் இருக்கிறது. ஆனால் எனது வார்த்தைகள் பொய்த்துப் போகாது. நான் கேலிக்காகக் கூடப் பொய் பேசியதில்லை. மற்ற நேரங்களிலும் அப்படிப் பேச எனக்கு அவசியமில்லை.(17) தூய்மையாக்கப்பட்ட நெய்யானது நூறு குடங்களில் ஊற்றப்பட்டு இங்கே உடனே கொண்டு வரப்படட்டும். அவை ஒரு மறைவான இடத்தில் வைக்கப்படட்டும். அதே நேரத்தில், இந்தச் சதைப் பிண்டத்தில் குளிர்ந்த நீர் தெளிக்கப்படட்டும்" என்றார்".(18)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தச் சதைப் பிண்டத்தில் நீர் தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டும் ஒரு கட்டைவிரலளவு இருக்கும்படி நூற்றொரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டன.(19,20) பிறகு அவை தூய்மையாக்கப்பட்ட நெய் இருந்த பானைகளில் இடப்பட்டு மறைவான இடத்தில் வைக்கப்பட்டுக் காத்துவரப்பட்டன.(21) அந்தச் சிறப்புமிகுந்த வியாசர், சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்) இரு முழு வருடங்கள் கழிந்த பின்னர் அப்பானைகளைத் திறந்து பார்க்கச் சொன்னார்.(22) ஞானியான துவைபாயனர் (வியாசர்) இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஆன்மிகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க இமயத்திலிருக்கும் மலைகளுக்குச் சென்றுவிட்டார்.(23)
துண்டுகளாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பானையிலிருந்து குறித்த நேரத்தில், மன்னன் துரியோதனன் பிறந்தான். பிறப்பின் அடிப்படையில் மன்னன் யுதிஷ்டிரனே மூத்தவனாக இருந்தான்.(24) துரியோதனன் பிறந்த செய்தி பீஷ்மருக்கும், ஞானியான விதுரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. துரியோதனன் பிறந்த அதே நாள், பெரும் கரம் கொண்ட பெரும் வீரன் பீமனுக்கும் பிறந்த நாளாக இருந்தது.(25)
துரியோதனன் பிறந்ததும், கழுதை போல கத்த்திக் கொண்டே அழத் தொடங்கினான்.(26) அவ்வொலியைக் கேட்ட கழுதைகளும், கழுகுகளும், ஓநாய்களும், காகங்களும் தங்கள் தங்கள் அலறல்களைத் தொடர்ச்சியாக எழுப்பின. கடும் காற்று வீசத் தொடங்கியது. பல இடங்களில் தீப்பற்றி எரிந்தன.(27)
இதனால் பேரச்சம் அடைந்த மன்னன் திருதராஷ்டிரன், பீஷ்மர், விதுரன், குருக்களின் நலனை விரும்புபவர்கள் மற்றும் கணக்கிலடங்கா பிராமணர்கள் ஆகியோரையும் அழைத்து, "இந்த இளவரசர்களில் யுதிஷ்டிரனே மூத்தவனும், நமது குலத்தைத் தொடரச் செய்பவனும் ஆவான். தனது பிறப்புத் தகுதியின் அறத்தைக் கொண்டே அவன் இந்நாட்டை அடைந்துவிட்டான். அதில் நாம் கருத்து கூற எதுவுமில்லை.(28,29) ஆனால், அவனுக்குப் பிறகு, எனது இந்த மகன் மன்னனாக முடியுமா? சட்டப்படி சரியானதும், சூழ்நிலைக்குகந்ததும் எதுவோ, அஃதை எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.(30)
இந்த வார்த்தைகள் வெளிப்பட்டதும், ஓ பாரதா {ஜனமேஜயா}, நரிகளும் ஊனுண்ணிகளும் {மாமிசம் உண்ணும் விலங்குகளும்} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தொடர்ந்து ஊளையிடத் தொடங்கின.(31) அந்தத் தீய சகுனங்களைக் கண்ட பிராமணர்களும், ஞானியான விதுரனும்,(32) "ஓ மன்னா! ஓ மனிதர்களில் காளையே, உமது மூத்த மகனின் பிறப்பையொட்டி, அச்சத்தையேற்படுத்தும் பல தீய சகுணங்களைக் காண முடிகிறது.(33) இவன் நமது குலத்தை அழிக்கப் பிறந்தவன் என்பது இதனால் உறுதியாகிறது. இவனைக் கைவிடுவதில்தான் அனைவரின் {நமது குலத்தின்} செழிப்பு அடங்கியுள்ளது. இவனை வைத்துக் கொண்டால் பேராபத்து விளையும்.(34) ஓ மன்னா! நீர் இவனை மட்டும் கைவிட்டால் கூட, மீதம் தொண்ணூற்று ஒன்பது மகன்கள் இருக்கின்றனர். நீர் உமது குலத்திற்கு நன்மை செய்ய விரும்பினால் இவனைக் கைவிடுவீராக. ஓ பாரதா, ஓ மன்னா! இந்த உமது ஒரு குழந்தையைக் கைவிட்டு உலகத்திற்கும், உமது குலத்திற்கும் நன்மையைச் செய்வீராக.(35) ஒரு குடும்பத்திற்காக, தனி மனிதன் ஒருவன் கைவிடப்படலாம். ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பம் கைவிடப்படலாம். மொத்த நாட்டிற்காகவும் ஒரு கிராமம் கைவிடப்படலாம். தனது ஆன்ம நலத்திற்காக ஒருவன் மொத்த உலகத்தையும் கைவிடலாம் எனச் சொல்லப்படுகிறது" என்று சொன்னார்கள்.(36)
விதுரரும், பிராமணர்களும் இப்படிச் சொல்லியும், மன்னன் திருதராஷ்டிரனின் இதயம் மகனுக்கான பாசத்தினால் அந்த அறிவுரையை ஏற்கவில்லை.(37) ஓ மன்னா! அதன் பிறகு, ஒரு மாத காலத்திற்குள், மொத்தம் நூறு மகன்களும், மற்றும் ஒரு மகளும் திருதராஷ்டிரனுக்குப் பிறந்தார்கள்.(38) காந்தாரி கருவுற்று அதிக காலம் பீடிக்கப்பட்டிருந்தபோது, ஒரு வைசியப் பணிப்பெண் திருதராஷ்டிரனைக் கவனித்து வந்தாள்.(39) ஓ மன்னா! அந்த வருடத்தில், அவளிடம் (பணிப்பெண்ணிடம்) சிறப்பு மிகுந்த திருதராஷ்டிரன், பெரும் புத்திக்கூர்மையுடைய மகன் ஒருவனைப் பெற்றான். அவன் பின்னாட்களில் யுயுத்சு என்று பெயரிடப்பட்டான். ஒரு க்ஷத்திரியனால், ஒரு வைசியப் பெண்மணிக்குப் பிறந்ததனால் அவன் கர்ணன் {கரணன்} {குந்தியின் மகன் அல்லன்} என்றும் அழைக்கப்பட்டான்.(40) இவ்வாறே அந்த ஞானி திருதராஷ்டிரனுக்கு, வீரர்களாகப் பெரும் தேர்வீரர்களாக நூறு மகன்களும், ஒரு மகளும், வைசியப் பெண்மணியிடம் பெற்ற மற்றுமொரு மகனான பெரும் சக்தியும் வீரமும் கொண்ட யுயுத்சுவும் பிறந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(41)

ஆங்கிலத்தில் | In English |