Last rites of Pandu! | Adi Parva - Section 127 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 63)
பதிவின் சுருக்கம் : பாண்டு மற்றும் மாத்ரியின் எலும்புகளைப் பல்லக்கில் கங்கைக் கரைக்குக் கொண்டுவந்து, சடங்குகள் செய்து மீண்டும் அவற்றுக்கு எரியூட்டியது...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அப்போது திருதராஷ்டிரன் விதுரனிடம், "ஓ விதுரா, மன்னர்களில் சிங்கத்தைப் போன்றவனுக்கும் (பாண்டு), மாத்ரிக்கும் ஈமக்கடன்கள் முறையான அரசமுறையில் நடைபெறட்டும்.(1) அவர்களின் ஆன்ம நன்மைக்காகப் பசுக்களையும், ஆடைகளையும், ரத்தினங்களையும், பலவகையான செல்வங்களையும் கேட்பவர்களுக்கு வேண்டிய அளவு கொடுப்பாயாக.(2) மாத்ரியின் இறுதிச் சடங்குகளைக் குந்தி விருப்பத்திற்கேற்றவாறு செய்ய வைப்பாயாக. மாத்ரியின் உடலைச் சூரியனோ, வாயுவோ காணமுடியாதபடி கவனமாக மூட ஏற்பாடு செய்வாயாக.(3) பாவமற்றவனான பாண்டுவுக்காக வருந்தாதே. அவன் மதிப்புமிக்க மன்னனாக இருந்து, தேவர்களுக்குச் இணையான வீரமகன்கள் ஐவரை விட்டுச் சென்றிருக்கிறான்" என்றான்".(4)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்ன விதுரன், பீஷ்மருடன் ஆலோசனை செய்து, பாண்டுவின் ஈமச்சடங்கைச் செய்யப் புனிதமான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான்.(5) அந்தக் குடும்பத்தின் புரோகிதர்கள், தாமதம் செய்யாமல், தெளிந்த நெய்யின் மூலம் நறுமணத்துடன் சுடர்விட்டெரியும் புனிதமான நெருப்பை எடுத்துக் கொண்டு நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(6) நண்பர்களும், உறவினர்களும், ஆதரவாளர்களும் சேர்ந்து, அந்த ஏகாதிபதியின் உடலைத் துணியால் நன்றாக மூடி, அந்தப் பருவகாலத்திற்குரிய மலர்களாலும், பல்வேறு சிறந்த நறுமணத் திரவியங்களாலும் அஃதை அலங்கரித்தனர். பிறகு அதை எடுத்துச் செல்லும் பல்லக்கில் பூமாலைகளையும், ஆடம்பரத் துணிகளாலும் அலங்கரித்தனர். அந்த மன்னனின் மூடிய உடலை அரசியுடன் சேர்த்துப் பல்லக்கில் வைத்துத் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.(7-9) அந்தப் பல்லக்குக்கு மேலே வெண்குடையைப் பிடித்துக் கொண்டு சாமரம் வீசிப் பல்வேறு இசைக்கருவிகளால் இன்னிசையை எழுப்பினர். அந்தக் காட்சி தகைமையுடனும், சிறப்புடனும் பிரகாசமாக இருந்தது.(10)
நூற்றுக்கணக்கானோர், அந்த மன்னனின் ஈமச்சடங்கில் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மத்தியில் ரத்தினங்களை விநியோகித்தனர்.(11) அந்தப் பெரும் விழாவுக்கு நீண்ட அழகான ஆடைகளையும், வெண்குடைகளையும், சாமரங்களையும் கொண்டு வந்தனர்.(12) புரோகிதர்கள் வெள்ளுடை தரித்து அந்தப் பல்லக்கை வலம் வந்து, பாத்திரத்தில் சுடர்விட்டெரிந்த புனிதமான நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டனர்.(13) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் ஆயிரக்கணக்கில் வந்து தங்கள் மன்னனுக்காக ஓலமிட்டு அழுதனர்.(14) "ஓ இளவரசரே {பாண்டுவே}, எங்கள் மீது நம்பிக்கையில்லாமல் பாவிகளான எங்களை விட்டுவிட்டு நிரந்தரமாக நீர் எங்குச் சென்றுவிட்டீர்?" என்று அவர்கள் கதறி அழுதனர்.(15)
பீஷ்மர், விதுரன் மற்றும் பாண்டவர்களும் கதறி அழுதனர். அப்போது, கங்கைக்கரையில் இருக்கும் ஓர் அழகான வனப்பகுதிக்கு வந்தனர்.(16) சிங்க இதயம் கொண்டவனும், உண்மையுடன் இருந்தவனுமான அந்த இளவரசன் {பாண்டு} மற்றும் அவனது துணையை {மாத்ரியை}ச் சுமந்து வந்த அந்தப் பல்லக்கை அங்கே வைத்தனர்.(17) பல தங்கப் பாத்திரங்களில் நீர் கொண்டு வந்து, பல வகை மணம் உள்ள குழம்புகளை அந்த இளவரசன் உடலில் பூசி, சந்தனக்குழம்பையும் மறுபடியும் பூசினர்.(18,19) அவர்கள் அதற்கு வெள்ளுடை உடுத்திவிட்டனர். அந்தப் புது உடையுடன் காணப்பட்ட மன்னன், உயிருடன் இருந்து விலையுயர்ந்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது[1].(20,21)
புரோகிதர்களின் வழிகாட்டுதலுக்கிணங்கி ஈமச் சடங்குகள் நிறைவடைந்ததும், கௌரவர்கள், அரசன் மற்றும் அரசியின் இறந்த உடல்களில் தாமரைகளையும், சந்தனக்குழம்பையும், மற்றும் நறுமணத்தைலங்களையும் வைத்துத் தீயிட்டனர்.(22,23) உடல்கள் தீப்பற்றிக் கொண்டதும், கௌசல்யை {அம்பாலிகை}, "ஓ என் மகனே, எனது மகனே!" என்று வெடித்துக் கதறி உணர்வற்றுத் தரையில் விழுந்தாள்.(24) அவள் அப்படி விழுவதைக் கண்டு அந்நாட்டுக் குடிமக்களும், குடியேறிகளும் மன்னன் மீதிருந்த அன்பால் துயரையடைந்து கதறி அழுதனர்.(25) காற்றில் இருந்த பறவைகளும், தரையில் இருந்த விலங்குகளும் கூடக் குந்தியின் ஒப்பாரியால் துக்கமடைந்தன.(26)
அப்போது சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், ஞானமுள்ள விதுரனும், மற்றவர்களும் தேற்ற முடியாதபடி துக்கத்திலிருந்தனர்.(27) அழுது கொண்டிருந்த பீஷ்மர், விதுரன், திருதராஷ்டிரன், பாண்டவர்கள் மற்றும் குரு பரம்பரையில் வந்த மகளிர் ஆகியோர் பாண்டுவுக்கு நீர்த் தர்ப்பணம் செய்தனர்.(28) இவையெல்லாம் முடிந்த பிறகு, அவர்களே துக்கத்திலிருந்தாலும், வருந்திக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களை மக்கள் தேற்றவிழைந்தனர்.(29) அந்தப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெறுந்தரையில் படுத்து உறங்கினர். இதைக்கண்ட பிராமணர்களும் மற்றும் குடிமக்களும் அவர்களது படுக்கைகளையும் துறந்தனர்.(30) குடிமக்களில் இளமையானவர்கள், முதிர்ந்தவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் மன்னன் பாண்டுவின் மகன்களுக்காக வருந்தி பனிரெண்டு நாட்களுக்குப் பாண்டவர்களோடு சேர்ந்து அழுது துக்கம் அனுஷ்டித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(31)

[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸிம்மமும், உயர்ந்த காரியங்களைச் செய்பவனுமாகிய பாண்டுவின் சரீரத்திலும், அவன் பாரியையான மாத்ரியின் சரீரத்திலும் எல்லா வாஸனைகளையும் சேர்த்து நல்ல அகிற்சேறும், உயர்ந்த சந்தனக்குழம்பும் பூசிப் பொற்குடங்களினால் சுற்றிலும் ஜலம் கொட்டி, வெண்சந்தனத்தையும், காரகிலோடு கூடிய புன்னைரஸத்தையும் எங்கும் பூசினர். பிறகு, பல தேங்களிலுண்டான வெளுப்பு வஸ்திரங்களை அவனுக்குப் போர்த்தினர். உயர்ந்த சயனத்தில் படுப்பதற்குத் தகுதியுள்ள புருஷஸ்ரேஷ்டனான பாண்டு மஹாராஜன் வஸ்திரங்களினாற் போர்க்கப்பட்ட பின் ஜீவித்திருப்பவன் போல விளங்கினான்" என்றிருக்கிறது. முன்பே எரிக்கப்பட்ட உடல்களின் மிச்சம் எவ்வாறு உயிருள்ளத்தாக தெரிய முடியும். பாண்டு மற்றும் மாத்ரியின் உடல்கள் முன்பே {காட்டிலேயே} எரிக்கப்படவில்லை என்பதையே இஃது உறுதிப்படுத்துகிறது. எனவே மாத்ரி ஈமச்சிதையேறியிருக்கக் கூடிய வாய்ப்பும் குறைகிறது.
புரோகிதர்களின் வழிகாட்டுதலுக்கிணங்கி ஈமச் சடங்குகள் நிறைவடைந்ததும், கௌரவர்கள், அரசன் மற்றும் அரசியின் இறந்த உடல்களில் தாமரைகளையும், சந்தனக்குழம்பையும், மற்றும் நறுமணத்தைலங்களையும் வைத்துத் தீயிட்டனர்.(22,23) உடல்கள் தீப்பற்றிக் கொண்டதும், கௌசல்யை {அம்பாலிகை}, "ஓ என் மகனே, எனது மகனே!" என்று வெடித்துக் கதறி உணர்வற்றுத் தரையில் விழுந்தாள்.(24) அவள் அப்படி விழுவதைக் கண்டு அந்நாட்டுக் குடிமக்களும், குடியேறிகளும் மன்னன் மீதிருந்த அன்பால் துயரையடைந்து கதறி அழுதனர்.(25) காற்றில் இருந்த பறவைகளும், தரையில் இருந்த விலங்குகளும் கூடக் குந்தியின் ஒப்பாரியால் துக்கமடைந்தன.(26)
அப்போது சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், ஞானமுள்ள விதுரனும், மற்றவர்களும் தேற்ற முடியாதபடி துக்கத்திலிருந்தனர்.(27) அழுது கொண்டிருந்த பீஷ்மர், விதுரன், திருதராஷ்டிரன், பாண்டவர்கள் மற்றும் குரு பரம்பரையில் வந்த மகளிர் ஆகியோர் பாண்டுவுக்கு நீர்த் தர்ப்பணம் செய்தனர்.(28) இவையெல்லாம் முடிந்த பிறகு, அவர்களே துக்கத்திலிருந்தாலும், வருந்திக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களை மக்கள் தேற்றவிழைந்தனர்.(29) அந்தப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெறுந்தரையில் படுத்து உறங்கினர். இதைக்கண்ட பிராமணர்களும் மற்றும் குடிமக்களும் அவர்களது படுக்கைகளையும் துறந்தனர்.(30) குடிமக்களில் இளமையானவர்கள், முதிர்ந்தவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் மன்னன் பாண்டுவின் மகன்களுக்காக வருந்தி பனிரெண்டு நாட்களுக்குப் பாண்டவர்களோடு சேர்ந்து அழுது துக்கம் அனுஷ்டித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
ஆங்கிலத்தில் | In English |