Accept them with reverence! | Adi Parva - Section 126 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 62)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்ற முனிவர்கள்; பாண்டுவின் மரணச் செய்தியைச் சொல்லிவிட்டு, பாண்டவர்களைக் கௌரவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்ற முனிவர்கள்...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் இறப்பைக் கண்டவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான ஞானமுள்ள முனிவர்கள், ஒருவரோடு ஒருவர் ஆலோசனை செய்து,(1) "நன்கறியப்பட்ட அறம்சார்ந்த மன்னன் பாண்டு, ஆட்சி உரிமையையும், அரசாங்கத்தையும் துறந்து வந்து, இங்கே தவ துறவுகளைச் செய்து, இந்த மலைவாழ் துறவிகளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(2) அவன் இப்போது தனது மனைவியையும், மகன்களையும் நம்பிக்கையுடன் நம் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான்.(3) இப்போதே அவனது நாட்டிற்குச் சென்று, அவனது பிள்ளைகளையும், மனைவியையும் {பாண்டு மற்றும் மாத்ரியின் எரிபடாத உடற்பகுதிகளையும்} ஒப்படைப்பது நமது கடமையாகும்" என்றனர்".(4)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பின்பு ஆன்ம வெற்றியடைந்தவர்களும், பரந்த இதயம் கொண்டவர்களுமான அந்தத் தெய்வீக முனிவர்கள், ஒருவரை ஒருவர் அழைத்து ஆலோசித்து, ஹஸ்தினாபுரம் செல்வதற்கு முடிவெடுத்தனர்.(5) பாண்டுவின் பிள்ளைகளை முன்னணியில் கொண்டு, பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரன் கைகளில் அவர்களை ஒப்படைக்க விரும்பினர்.(6) உடனே அந்த நொடியிலேயே அந்தத் துறவிகள் தங்களுடன் பிள்ளைகளையும் குந்தியையும் அழைத்துக் கொண்டு, இரண்டு சடலங்களையும்[1] எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினர்.(7) இதுவரை வாழ்வின் கடினங்களே எதையும் அனுபவித்திராதவள் என்றாலும், மிகுந்த அன்பு கொண்டவளான குந்தி, தான் மேற்கொண்டிருந்த அந்த நெடும் பயணத் தொலைவை மிகக் குறைவானதாகவே கருதினாள்.(8) குறைந்த காலத்திற்குள் குருஜாங்கலத்தை {குருஜாங்கல நாட்டிற்கு ஹஸ்தினாபுரம் தலைநகரம்} அடைந்த, அந்தச் சிறப்பு மிகுந்த குந்தி, முக்கிய வாயிலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.(9) துறவிகள் அங்கே இருந்த பணியாளர்களிடம், தங்கள் வருகையை மன்னருக்குத் தெரியப்படுத்தச் சொன்னார்கள். அந்த மனிதர்கள் அந்தச் செய்தியைச் சபைக்கு மிக விரைவாக எடுத்துச் சென்றனர்.(10)
சாரணர்களும், முனிவர்களும் ஆயிரக்கணக்கில் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஹஸ்தினாபுரவாசிகள் ஆச்சரியமடைந்தனர்.(11) சூரியன் உதித்த சிறிது நேரத்திற்குள் அவர்கள் தங்கள் மனைவியருடனும், பிள்ளைகளுடனும் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் துறவிகளைக் காண வந்தனர்.(12) எண்ணிக்கையில் அதிகமான க்ஷத்திரியர்களும், பிராமணர்களும், அனைத்துவகையான தேர்களிலும், வாகனங்களிலும் அமர்ந்து கொண்டு, தங்கள் மனைவியருடன் அங்கே வந்தனர்.(13) இந்நிகழ்ச்சியின் போது, வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் வருகையும் மிக அதிக அளவில் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு இதயமும் பக்தியில் முன்னேறியிருந்ததால் அந்தப் பெரும் கூட்டம் அமைதியாக இருந்தது.(14)
சந்தனுவின் மைந்தனான பீஷ்மர், சோமதத்தன் அல்லது பாஹ்லீகன், ஞானப் பார்வை கொண்ட அரசமுனி {திருதராஷ்டிரன்}, விதுரன்,(15) மதிப்பிற்குரிய சத்தியவதி, சிறப்பு மிகுந்த கோசல இளவரசி, காந்தாரி மற்றும் அந்த அரசகுடும்பங்களைச் சார்ந்த பல பெண்கள் அக்கூட்டத்தில் இருந்தனர் {அரசவாயிலை விட்டு வெளியே வந்தனர்}.(16) பல்வேறு ஆபரணங்களைப் பூண்டவர்களான திருதராஷ்டிரனின் நூறு மைந்தர்களும் {துரியோதனன் தலைமையில்} வெளியே வந்தனர்.(17) தங்கள் புரோகிதர்களுடன் வந்த கௌரவர்கள், தங்கள் சிரம்தாழ்த்தி அம்முனிவர்களை வணங்கி, அவர்கள் முன்னிலையில் அமர்ந்தனர்.(18) குடிமக்களும் {தங்கள் தலையால்} பூமியைத் தொட்டபடியே அந்தத் துறவிகளைச் சிரம்தாழ்த்தி வணங்கி {பூமியில்} அமர்ந்தனர்.(19)
ஓ மன்னா! பீஷ்மர் அந்தப் பெரும் கூட்டத்தை அசையாமல் இருப்பதைக் கண்டு, சம்பிரதாயச் சடங்காக ஆர்க்கியம் கொடுத்து அத்துறவிகளுக்குக் கால்களைக் கழுவ தண்ணீர் கொடுத்தார். பிறகு, அவர்களிடம் ஆட்சி குறித்தும், அரசு குறித்தும் பேசினார். தலையில் முடியை கட்டிமுடித்து, உடலை விலங்கின் தோலால் மூடியிருந்த அத்துறவிகளில் மூத்தவர் ஒருவர் மற்ற முனிவர்களின் முன்னிலையில் எழுந்து நின்று,(20,21) பிற முனிவர்களின் இசைவுடன் இவ்வாறு பேசினார், "குருக்களின் அரசுரிமைபெற்றிருந்தும், உலக இன்பங்களைத் துறந்து, நூறு சிகரங்கள் கொண்ட {சதஸ்ருங்க} மலையில் வாழ முடிவு செய்தான் மன்னன் பாண்டு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.(22) அங்கே அவன் பிரம்மச்சரிய வாழ்வு முறையை ஏற்றான். ஆனால் கடவுளின் அறிவுக்கெட்டாத சில நோக்கங்களினால், அவனது மூத்த மகனான இந்த யுதிஷ்டிரன் தர்மதேவன் மூலம் அங்கே பிறந்தான்.(23) பிறகு அந்தச் சிறப்புமிகுந்த மன்னன், வாயுவிடம் இருந்து இந்த அடுத்த மகனைப் பெற்றான். பலம் பொருந்திய மனிதர்களின் முதன்மையான இவன் பீமன் என்று அழைக்கப்படுகிறான்.(24) இந்திரனால் குந்தியிடம் பெறப்பட்ட அடுத்த மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சாதனைகளால் உலகின் வில்லாளிகளையெல்லாம் அடக்கிவிடக் கூடியவனாவான்.(25) மறுபடியும் இவர்களை இங்கே பாருங்கள், வில்லைப் பயன்படுத்துவதில் பெரும் பலம் வாய்ந்த இந்த இரட்டையர்கள் மாத்ரியிடம் அசுவினி இரட்டையர்களால் பெறப்பட்டவர்கள்.(26)
வானப் பிரஸ்த வாழ்க்கை முறையைக் கானகத்தில் நேர்மையாக வாழ்ந்த சிறப்பு மிகுந்த பாண்டு, தனது பாட்டனின் அருகிப் போன பரம்பரையை இவ்வாறு மீட்டெடுத்தான்.(27) பாண்டு மைந்தர்களின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் வேத கல்வி ஆகியவை ஐயமில்லாமல் உங்களுக்குப் பெரும் மகிழ்வையே தரும்.(28) அறம் மற்றும் ஞானமுள்ளோரின் பாதையை உறுதியாகப் பற்றிக் கொண்டு, பிள்ளைகளை விட்டுவிட்டு, பதினேழு நாட்களுக்கு முன்பு பாண்டு இறந்துவிட்டான்.(29) எரியப்போகும் ஈமச்சிதையில் அவனை கண்ட அவனது மனைவி மாத்ரி, அச்சிதையில் தானே ஏறி உயிரைத் துறந்து, தனது தலைவனுடன், கற்புள்ள மனைவியர் வாழும் வானுலகப் பகுதிக்குச் சென்றுவிட்டாள். அவர்களின் நன்மைக்காகச் செய்ய வேண்டிய அனைத்துச் சடங்குகளையும் நிறைவேற்றுவீராக.(30,31) இவையே அவர்களது உடல்கள்[2] (அவர்களது உடலின் எரிக்கப்படாத பகுதிகள்). இதோ எதிரிகளை ஒடுக்குபவர்களான அவர்களது பிள்ளைகள் தங்கள் தாயுடன் இருக்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் தக்க மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்படட்டும்.(32) நீத்தார் கடனின் முதல் சடங்கு முடிந்ததும், குருக்களின் மதிப்பை என்றும் பேணிக்காத்த அறம்சார்ந்த பாண்டுவைப் பித்ருக்களின் வரிசையில் நிறுவ முதலாண்டுச் சிராத்தம் (சபிந்தகரணா) நடைபெறட்டும்" என்றார் {அந்த முதியவர்}".(33)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "குஹ்யர்களுடன் இருந்த அந்தத் துறவிகள், குருக்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, மக்கள் பார்த்துக் கொண்டிருந்த அந்நொடியே, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து போனார்கள்.(34) முனிவர்களும், சித்தர்களும் இப்படித் தங்கள் பார்வையிலேயே திடீரென ஆவியாகி வானத்தில் மறைந்து போனதைக் கண்ட குடிமக்கள் அதிசயம் அடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(35)

[1] சடலங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல.

[2] உடல்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அஸ்தி என்றோ, சாம்பல் என்றோ அல்ல.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "குஹ்யர்களுடன் இருந்த அந்தத் துறவிகள், குருக்களிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, மக்கள் பார்த்துக் கொண்டிருந்த அந்நொடியே, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து போனார்கள்.(34) முனிவர்களும், சித்தர்களும் இப்படித் தங்கள் பார்வையிலேயே திடீரென ஆவியாகி வானத்தில் மறைந்து போனதைக் கண்ட குடிமக்கள் அதிசயம் அடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(35)
ஆங்கிலத்தில் | In English |