The fight between Hidimva and Bhima! | Adi Parva - Section 155 | Mahabharata In Tamil
(ஹிடிம்ப வத பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : ஹிடிம்பை செய்த தாமதத்தினால் அங்கேயே வந்து நின்ற ஹிடிம்பன்; ஹிடிம்பனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த சொற்போரும், கோரமான மற்போரும்...
வைசம்பாயனர் சொன்னார், "ராட்சசத் தலைவன் ஹிடிம்பன், தனது தங்கை வெகு நேரமாகியும் திரும்பாதது கண்டு, மரத்திலிருந்து கீழிறங்கி, பாண்டவர்களிருக்கும் இடத்திற்கு விரைவாக முன்னேறி வந்தான்.(1) சிவந்த கண்களுடன், பலம்வாய்ந்த கரங்களுடன், கரங்களும் தலைமயிரும் நட்டுக் கொண்டு நிற்க, திறந்த பெரிய வாயுடனும், கருமேகக் கூட்டங்கள் போன்ற உடலுடனும், கூரிய மற்றும் நீண்ட பற்களுடனும் காண்பதற்கு மிகப் பயங்கரமாக இருந்தான்.(2) கடும் முகம் கொண்ட தனது தமையன் மரத்திலிருந்து இறங்கியதைக் கண்ட ஹிடிம்பை மிகுந்த அச்சம் கொண்டு, பீமனிடம்,(3) "அந்த நரமாமிசம் உண்ணும் தீயவன், இங்கே கோபத்தோடு வருகிறான். நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீரும் உமது சகோதரர்களும் நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.(4) ஓ பெரும் வீரம் கொண்டவரே! ராட்சச சக்திகளைக் கொண்ட நான், விரும்பிய இடங்களுக்குச் செல்லக்கூடிய சக்தி படைத்தவள். நீர் எனது இடுப்பில் ஏறிக்கொள்வீராக. நான் உம்மை வானத்தினூடே தூக்கிச் செல்கிறேன்.(5) ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, சுகமாகத் தூங்கும் இவர்களையும் {உமது சகோதரர்களையும்} உமது தாயையும் விழிப்படையச் செய்வீராக. நான் இவர்கள் அனைவரையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்து செல்வேன்" என்றாள்.(6)
பீமன், "ஓ அழகான இடையுடையவளே, எதற்கும் அஞ்சாதே. நான் இங்கிருக்கும் வரை, எந்த ராட்சசனாலும் இவர்களைக் காயப்படுத்திவிடமுடியாது என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். ஓ கொடியிடையாளே, நான் இவனை உன் கண்ணெதிரிலேயே கொல்வேன்.(7) ஓ மருட்சியுடையவளே, ராட்சசர்களில் இழிந்த இவன், எனக்கு எதிரியாக இருக்கத் தகுதியற்றவன். ஏன் அனைத்து ராட்சசர்களும் ஒன்று சேர்ந்து வந்தாலும், அவர்களாலும் எனது கரங்களின் பலத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாது.(8) எனது பலம் நிறைந்த கரங்களைப் பார், ஒவ்வொன்றும் யானையின் துதிக்கையைப் போன்று இருக்கின்றன. இரும்பு கதாயுதத்தைப் போன்ற இந்த எனது தொடைகளையும், அகலமான வைரம் பாய்ந்த மார்பையும் பார்.(9) ஓ அழகானவளே, நீ இன்று இந்திரனுக்கு ஒப்பான எனது ஆற்றலைக் காண்பாய். ஓ அழகான இடை கொண்டவளே, என்னை மனிதன் என்று நினைத்து வெறுக்காதே[1]" என்றான்.(10)
ஹிடிம்பை, "ஓ மனிதர்களில் புலியே, ஓ தெய்வீக அழகு வாய்ந்தவரே, நிச்சயமாக நான் உம்மை அவமதிக்கவில்லை. ஆனால் மனிதர்களிடம் அந்த ராட்சசன் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் கண்டிருக்கிறேன்" என்று பதிலுரைத்தாள்".(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அப்போது, ஓ பாரதா {ஜனமேஜயா}, மனித மாமிசம் உண்பவனான அந்தக் கோபம் மிகுந்த ராட்சசன், தான் வரும் வழியிலேயே பீமனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே வந்தான்.(12) முகம் முழு மதியைப் போன்றும், தலையில் பூச்சூடியும், புருவங்களும், நாசியும், கண்களும், மயிர்சுருளும் உள்ள அழகான பெண் போலத் தனது தங்கை மானுட வடிவில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவளது நகங்களும், மேனியும் நுண்மையான நிறத்துடன் இருந்தது. அனைத்து வகை ஆபரணங்களும் பூண்டு நன்றாக ஒளி ஊடுருவும் ஆடை அணிந்திருந்தாள்.(14) அவள் அழகான பெண்ணுருக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த மனித ஊனுண்ணி, அவள் உடலுறவு கொள்ள விரும்புகிறாள் என ஐயுற்று மிகுந்த கோபத்துக்குள்ளானான்.(15)
ஓ குரு குலத்தவரில் சிறந்தவனே {ஜனமேஜயா}, தனது தங்கையிடம் கோபம் கொண்டு, கண்களை அகல விரித்து அவளிடம்,(16) "நான் பசியோடிருக்கும்போது, எனது பாதையில் தடையை ஏற்படுத்திய உணர்வற்ற ஜென்மம் எது? ச்சீ... ச்சீ... ஓ ஹிடிம்பையே என் கோபத்தில் உனக்கு அச்சமில்லையா?(17) கற்பற்ற பெண்ணே! நீ இப்போது உடலுறவில் விருப்பம் கொண்டு எனக்குத் தீங்கிழைக்க நினைக்கிறாய். நமது முன்னோர்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களின் நற்பெயரையும் மரியாதையையும் நீ துறக்கத் தயாராயிருக்கிறாய்.(18) யாருடன் சேர்ந்து எனக்கு நீ தீங்கிழைக்க நினைக்கிறாயோ, அவனுடன் சேர்த்து உன்னையும் இப்போதே கொல்கிறேன் பார்"(19) என்று தனது தங்கையிடம் இப்படிச் சொன்ன ஹிடிம்பன், கோபத்தால் கண்கள் சிவக்கப் பற்களுடன் பற்கள் அழுத்தி, அவளை அங்கேயே கொல்ல அவளிடம் ஓடினான்.(20) இப்படி அவனது தங்கையிடம் விரைபவனைக் கண்டவனும், தாக்குபவர்களின் முதன்மையானவனும், பெரும் சக்தி படைத்தவனுமான அந்தப் பீமன், "நில். நிற்பாயாக" என்று சொல்லிக் கண்டித்தான்".(21)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தனது தங்கையிடம் கோபமாக உள்ள ராட்சசனைக் கண்ட பீமன், (ஏளனமாகச்) சிரித்துக் கொண்டே, அவனிடம்,(22) "ஓ ஹிடிம்பா, சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை எழுப்ப உனக்கு என்ன தேவையிருக்கிறது? ஓ மனித மாமிசம் உண்ணும் தீயவனே, நேரந்தாழ்த்தாமல் முதலில் நீ என்னை அணுகுவாயாக.(23) என்னை முதலில் தாக்கு, பெண்ணைக் கொல்வது உனக்குத் தகாது. குறிப்பாக அவள் பாவம் செய்யாமல், பாவத்திற்கு ஆளாகியிருக்கும்போது அது தகவே தகாது.(24) என்னுடன் உறவு கொள்ள விரும்பிய அவளது செயலுக்கு அவள் பொறுப்பில்லை. எல்லா உயிரினுள்ளும் உறைந்திருக்கும் காமதேவனால் அவள் உந்தப்பட்டாள்.(25) நீ தீய பாவி, ராட்சசர்களில் மிகவும் மோசமானவன். உன் தங்கை உனது உத்தரவின் பேரிலேயே இங்கு வந்தாள். அப்படி வந்த அவள் என்னைக் கண்டு, என்னை விரும்பினாள். அதனால் இந்த மருட்சியுடையவள் உனக்கு என்ன தீங்கு செய்தாள். இங்குக் காமதேவனே குற்றம் புரிந்திருக்கிறான். இக்குற்றத்திற்கு நீ அவளைத் தாக்குவது உனக்குத் தகாது.(26,27)
ஓ தீய பாவியே, நான் இங்கிருக்கும் போது, ஒரு பெண்ணை உன்னால் கொல்ல முடியாது. ஓ நரமாமிசம் உண்பவனே, என்னிடம் வந்து நேருக்கு நேர் ஒற்றைக்கு ஒற்றையாக மோதுவாயாக.(28) தனி ஆளாக நான் உன்னை யமனுலகு அனுப்புகிறேன். ஓ ராட்சசா, இன்று உனது தலை, யானையினால் மிதிக்கப்பட்டு நசுங்குவது போல எனது பலத்தால் நசுங்கிச் சுக்குநூறாகப் போகிறது.(29) இப்போரில் இன்று என்னால் நீ கொல்லப்பட்ட பிறகு, தரையில் கிடக்கும் உனது உறுப்புகளை மீனுண்ணும் நாரைகளும், பருந்துகளும், நரிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிய்த்துண்ணட்டும். ஒரு நொடியில் இன்று நான் இந்தக் கானகத்தை ராட்சசர்கள் அற்ற கானகமாக மாற்றுகிறேன் பார். மனிதர்களை உண்டு நீ வெகுகாலமாக இக்கானகத்தை ஆண்டுவருகிறாய்! (30,31) நீ பெரும் மலையைப் போல இருந்தாலும், பெரும் யானையைத் தொடர்ந்து இழுக்கும் சிம்மம் அதைக் கொல்வதைப் போல, ஓ ராட்சசர்களில் இழிந்தவனே, உன்னை நான் கொல்வதை இன்று உனது தங்கை காணப் போகிறாள்.(32) உன்னைக் கொன்று, மனிதர்கள் அச்சமற்று உலவ ஏற்றதாக இக்கானகத்தை மாற்றப்போகிறேன்" என்றான்.(33)
இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹிடிம்பன், "ஓ மனிதா, இந்த உனது வீண் இரைச்சலுக்கும், தற்பெருமைக்கும் என்ன அவசியம் இருக்கிறது? முதலில் நீ சொன்னதைச் செய், அதன்பிறகு தற்பெருமை பேசுவாயாக. எனவே, தாமதிக்காதே.(34) நீ ஆற்றல் நிரம்பிய பலவான் என்று உன்னை நினைக்கிறாய். எனவே, என்னுடன் மோதிய பிறகு, உனது {உண்மையான} பலத்தைப் பற்றி நீ அறிந்து கொள்வாயாக.(35) அதுவரை, நான் இவர்களைக் (உனது சகோதரர்களைக்) கொல்ல மாட்டேன். அவர்கள் சுகமாக உறங்கட்டும். ஆனால் முதலில், தீய பேச்சு பேசும் முட்டாளான உன்னை நான் கொல்வேன்.(37) உனது ரத்தத்தைக் குடித்த பிறகு, இவர்கள் அனைவரையும் கொல்வேன். இறுதியாக எனக்குத் தீங்கிழைத்த இவளையும் (எனது தங்கையைக்) கொல்வேன்" என்றான்".(38)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொன்ன அந்த மனித ஊனுண்ணி, எதிரிகளைத் தண்டிக்கும் பீமனை நோக்கித் தனது கரங்களைக் கோபமாக நீட்டினான்.(38) பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், தன்னை நோக்கி ஓடி வந்த ராட்சசனின் கரங்களைப் பெரும்பலத்துடன் விளையாட்டாகப் பற்றினான்.(39) பிறகு, பெரும் வன்முறையுடன் அந்த ராட்சசனையும் பற்றி, ஒரு சிங்கமானது, சிறிய மிருகத்தை இழுத்துச் செல்வதைப் போல அவனை முப்பத்திரண்டு முழம் தொலைவிற்கு இழுத்துச் சென்றான்.(40)
பீமனுடைய பலத்தின் நிறையை உணர்ந்த அந்த ராட்சசன், பெரும் கோபம் கொண்டு, அந்தப் பாண்டவனை அணைத்துக் கட்டிக் கொண்டு, பெரும் கூச்சல் போட்டான்.(41) இக்கூச்சலால், சுகமாக உறங்கும் தனது சகோதரர்கள் எழுந்துவிடாமல் இருக்க, பீமன் அந்த ராட்சசனை இன்னும் அதிகத் தூரத்திற்கு இழுத்துச் சென்றான்.(42) கட்டியணைத்துக் கொண்டும், ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டும் பெரும் பலத்துடன் ஹிடிம்பனும், பீமசேனனும் தங்கள் பேராற்றலை வெளிப்படுத்தினர்.(43) முழுவதும் வளர்ந்த இரு மதம்பிடித்த பெரும் யானைகள் கோபத்துடன் மோதிக் கொள்வதைப் போல, அவர்கள் மரங்களை ஒடித்தும், தரையில் முளைத்திருந்த செடிகொடிகளைப் பிடுங்கியும் சண்டையிட்டனர்.(44) இவ்வொலியால் அந்த மனிதர்களில் புலியானவர்கள் (உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்கள்) தங்கள் தாயுடன் எழுந்திருந்து, ஹிடும்பை தங்களெதிரில் அமர்ந்திருப்பதைக் கண்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(45)

[1] கும்பகோணம் பதிப்பில், "என்னை மனிதனாக நினைத்து இப்போது குறைவாகப் பேசாதே" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "என்னை மனிதனாக நினைத்துப் பலவீனனாகக் கருதாதே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீ என்னைப் பலவீனமாக நினைக்காதே" என்றிருக்கிறது. கங்குலியில் உள்ளதைப் போல "வெறுக்காதே" என்று எந்தப் பதிப்பிலும் இல்லை.

ஆங்கிலத்தில் | In English |