Birth of Ghatotkacha! | Adi Parva - Section 157 | Mahabharata In Tamil
(ஹிடிம்ப வத பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : ஹிடிம்பையைக் கொல்லத் துணிந்த பீமன்; பீமனைத் தடுத்த யுதிஷ்டிரன்; ஹிடிம்பையை ஏற்கும்படி பீமனுக்குச் சொன்ன குந்தி...
வைசம்பாயனர் சொன்னார், "ஹிடிம்பை அவர்களைத் {பாண்டவர்களைத்} தொடர்ந்து வருவதைக் கண்ட பீமன், அவளிடம் {ஹிடிம்பையிடம்}, "ராட்சசர்கள் தங்கள் பகைமையை மனத்திலேயே வைத்துக் கொண்டு, எதிரிகளை ஏமாற்றிப் பழி தீர்ப்பார்கள். எனவே, ஓ ஹிடிம்பையே, நீ உன் அண்ணன் {ஹிடிம்பன்} சென்ற வழியிலேயே செல்வாயாக" என்றான். {ஹிடிம்பையைக் கொல்லத் துணிந்தான் பீமன்}.
கோபப்பட்ட பீமனைக் கண்ட யுதிஷ்டிரன், "ஓ பீமா, ஓ மனிதர்களில் புலியே, கோபவசப்பட்டு ஒரு பெண்ணைக் கொல்லாதே. ஓ பாண்டவா {பீமா}, அறத்தைக் கடைப்பிடிப்பது உடலைக் காப்பதைவிட உயர்ந்த கடமையாகும்.(2) நம்மைக் கொல்லும் நோக்கத்தில் வந்த ஹிடிம்பனை ஏற்கனவே நீ கொன்றுவிட்டாய். இந்தப் பெண் {ஹிடிம்பை} அந்த ராட்சசனின் {ஹிடிம்பனின்} தங்கையாவாள். இவள் கோபப்பட்டால் கூட, இவளால் நம்மை என்ன செய்துவிட முடியும்?" என்றான்".(3)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு ஹிடிம்பை, குந்தியையும், அவளது மகன் யுதிஷ்டிரனையும் மரியாதையாகக் கரங்கூப்பி வணங்கி,(4) "ஓ மரியாதைக்குரியவளே {குந்தியே}, காம தேவன் கைகளில் அகப்பட்ட பெண்ணின் வேதனை என்ன என்பது உனக்குத் தெரியும். ஓ அருளப்பட்ட மங்கையே {குந்தியே}, பீமசேனரால் உண்டான அந்த வேதனை என்னைச் சித்தரவதை செய்கிறது.(5) நான் இதுவரைத் தக்க நேரத்திற்காகக் காத்திருந்து, தாங்கமுடியாத வேதனையைத் தாங்கி வந்தேன். நான் மகிழ்ச்சியடையத்தக்க அந்த நேரம் இப்போது வந்திருக்கிறது.(6) என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் எனது குல வழக்கங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு, ஓ அருளப்பட்ட மங்கையே {குந்தியே}, நான் இந்த மனிதர்களில் புலியான, உனது மகனை {பீமனை}, எனது கணவராகத் தேர்ந்தெடுத்தேன்.(7) ஓ சிறப்பு வாய்ந்த மங்கையே! நான் உண்மையைச் சொல்கிறேன். இந்த வீரராலோ, உன்னாலோ கைவிடப்பட்டால், நான் இந்த உயிரை இனியும் தாங்கிக் கொள்ள மாட்டேன்.(8) எனவே, ஓ அழகான நிறம் கொண்டவளே {குந்தியே}, அறிவற்றவளாக, அல்லது உனக்குக் கீழ்ப்படிந்த ஓர் அடிமையாக என்னை நினைத்துக் கொண்டு, எனக்குக் கருணை காட்டுவாயாக.(9) ஓ சிறப்புமிக்க மங்கையே {குந்தியே}, என்னை உனது மகனோடு {பீமனோடு} சேர்த்து, அவரை எனது கணவராக்குவாயாக. இந்தத் தெய்வீக அழகுடையவரை, நான் விருப்பப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கொடுப்பாயாக. ஓ அருளப்பட்டவளே என்னை நம்புவாயாக. நான் அவரை மீண்டும் உங்களிடமே கொண்டு வந்துவிடுவேன்.(10)
நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போதே நான் உன்னிடம் வந்து, நீ சொல்வதையெல்லாம் செய்வேன். உங்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பேன். நுழையமுடியாத சமமற்ற பகுதிகளுக்கெல்லாம் உங்களைச் சுமந்து செல்வேன்.(11) நீங்கள் வேகமாகச் செல்ல நினைக்கும்போதெல்லாம் உங்களை என் முதுகில் வைத்துச் சுமந்து செல்வேன். ஓ, என்னிடம் கருணை கொண்டு, பீமரை என்னை ஏற்கச் செய்வாயாக.(12) ஒருவன் துன்பத்திலிருக்கும் போது, எவ்வழியை மேற்கொண்டாவது அவனைக் காக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(13) துன்ப காலத்திலும் அறவழியில் நடப்பவன், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனாவான். துன்பமே அறத்திற்கும், அறம் சார்ந்த மனிதர்களுக்கும் பெரும் அபாயமாகும். அறமே வாழ்வைக் காக்கிறது.(14) எனவே அதுவே {அறமே} வாழ்வைக் கொடுக்கிறது. ஆகவே, அறத்தின் அல்லது கடமையின் பாதுகாப்பை நாம் நாடினால், அது அழிவைக் கொடுக்காது" என்றாள்.(15)
ஹிடிம்பையின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ ஹிடிம்பையே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. அதில் ஐயம் இல்லை. ஆனால், ஓ கொடியிடையாளே {ஹிடிம்பையே}, நீயும் நீ சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும்.(16) பீமன், தன் நீராடலை முடித்துத் தனது தினசரி துதிகளையும் சடங்குளையும் {பூஜைகளை} முடித்துச் சூரியன் மறையும் வரை உன்னைக் கவனிப்பான்.(17) நீ விரும்பியவாறு அவனுடன் பகலெல்லாம் விளையாடு, ஓ மனோவேகம் கொண்டவளே! ஆனால் நீ தினமும் பீமசேனனை இரவுக்கு முன்னர் இங்குத் திரும்பக் கொண்டு வந்துவிட வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}"[1].(18)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமன், தனது சம்மதத்தை யுதிஷ்டிரனுக்கு உணர்ந்தி ஹிடிம்பையிடம், "ஓ ராட்சசி, நான் சொல்வதைக் கேள்! உண்மையில் உன்னிடம் ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்.(19) ஓ கொடியிடையாளே, உனக்கு ஒரு மகன் பிறக்கும் வரை நான் உன்னுடன் இருப்பேன்" என்றான்.(20)
அதற்கு ஹிடிம்பை, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீமனைத் தனது உடலில் தாங்கி வானத்தில் வேகமாகச் சென்றாள். அழகாகக் காட்சியளிக்கும் மலை முகடுகளிலும், தேவர்களுக்கும் புனிதமான பகுதிகளிலும், மான்கள் நிறைந்த இனிய கானம், பாடும் பறவைகள் நிறைந்த இடங்களிலும், தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, சில சமயங்களில் வழவழப்பானவற்றை வந்து கொட்டிய அந்த ஹிடிம்பை அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(22,23) அக்கானகத்தில் யாரும் நுழைய முடியாத பகுதிகளிலும், பெரிய அளவுக்கு வளர்ந்து பூத்து குலுங்கிய மரங்களும், தாமரைகளும், அல்லி மலர்களும் நிறைந்த மலையின் சாரலிலும்,(24) நதிகள் அமைத்த தீவுகளிலும், அதன் கரைகளிலும், ஓடைகளிலும், அதன் கரைகளிலும், மலை அருவிகளிலும்,(25) அடர்ந்த மரங்கள் நிறைந்த கானகத்திலும், கொடிகள் நிறைந்த இமயத்திலும், பலவிதமான குகைகளிலும்,(26) தாமரைகள் பூத்துக் குலங்கும் தெளிந்த நீருடைய தடாகங்களிலும், தங்கமும், முத்துக்களும் ஒளிரும் கடற்கரலைகளிலும்,(27) அழகிய நகரங்கள், அழகிய நந்தவனங்கள், தேவர்களுக்குப் புனிதமான காடுகள், மலைச்சாரல்கள் ஆகியவற்றிலும்,(28) குஹ்யர்கள் மற்றும் துறவிகள் வாழும் பகுதிகளிலும், எல்லாக் காலத்திற்கும் ஏற்ற வகையில் பழங்களும் மலர்களும் நிறைந்த மானசரோவரின் (ஏரி) கரைகளிலும் ஹிடிம்பை அழகான பெண்ணுருக் கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(29) மனோவேகம் கொண்ட அவள் {ஹிடிம்பை} இந்தப் பகுதிகளிலெல்லாம் அந்தப் பாண்டவன் {பீமன்} மூலம் ஒரு பிள்ளை பெறும் வரை விளையாடினாள்.(30)
சிறிது காலங்கழித்து, பயங்கரமான கண்களுடனும், பெரிய வாயுடனும், அம்பு போன்ற நீண்ட காதுகளுடனும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள்.(31) உதடுகள் தாமிரத்தைப் போன்று சிவப்பாகவும், பற்கள் கூர்மையாகவும், சத்தம் உறுமலாகவும், பெரும் கரங்களுடனும், பெரும் பலத்துடனும், கட்டுக்கடங்காத வீரத்துடனும் வளர்ந்த அந்தப் பிள்ளை, பெரும் வலிமைமிக்க வில்லாளி ஆனான்.(32) நீண்ட நாசியும், அகலமான மார்பும், பயமுறுத்தும் வகையில் வீங்கிய கால் ஆடு (Calf) தசைகளும், வேகமான இயக்கமும் கொண்ட அவன், மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.(33,34) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஓர் இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான். அந்தப் பலம் வாய்ந்த வீரன் உடனே அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவமும் அடைந்தான்.(35)
ராட்சசப் பெண்கள், தாங்கள் கருத்தரித்த உடனேயே விரும்பிய வடிவை அடையும் சக்திவாய்ந்த பிள்ளையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வார்கள்.(36) வழுக்கைத் தலையுடைய பிள்ளையான அந்தப் பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் {ஹிடிம்பை} மற்றும் தந்தையின் {பீமனின்} பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனது பெற்றோர்கள் {பீமனும் ஹிடிம்பையும்} அவனுக்கு ஒரு பெயர் வைத்தனர்.(37) அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனைக் கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர்.(38) அந்தக் கடோத்கசன் பாண்டவர்களுக்குப் பெரும் அர்ப்பணிப்புடன் இருந்து, அவர்களுக்கு விருப்பமானவனாகி, அவர்களில் ஒருவனானான்.(39)
பிறகு ஹிடிம்பை, தனது (கணவனுடன் பீமனுடன்) தங்கும் காலம் முடிவுக்கு வந்ததை உணர்ந்து, பாண்டவர்களை வணங்கி அவள் விரும்பிய இடத்திற்குச் சென்றாள்.(40) ராட்சசர்களில் முதன்மையான கடோத்கசன் விரும்பிய நேரம் திரும்பி வருவதாகத் தனது தந்தையிடம் உறுதியளித்து, அவர்களனைவரையும் வணங்கிவிட்டு, வடதிசை நோக்கிச் சென்றான்.(41) சிறப்பு வாய்ந்த இந்திரன், கர்ணனுக்குக் கணையொன்றைக் (அது யார் மீது தொடுக்கப்படுகிறதோ, அவனது மரணம் நிச்சயம்) கொடுத்ததன் நிமித்தமாக, உண்மையில், பெரும் தேர்வீரனான கடோத்கசன் (தனது ஒரு பகுதியைக் கொடுத்து), நிகரற்ற சக்தி கொண்ட அந்தக் கர்ணனுக்குத் தகுதிவாய்ந்த பகைவன் ஆனான்" {என்றார் வைசம்பாயனர்}.(42)

[1] கும்பகோணம் பதிப்பில், இவ்விடத்தில், பாண்டவர்கள் ஹிடிம்பையோடு சாலிஹோத்ரசரஸுக்குச் சென்று சாலிஹோத்ர முனிவரைக் காண்கின்றனர். அவர் மூலமாக ராஜநீதிகளையும், தர்க்க சாத்திரங்கள் பலவற்றையும் கற்கின்றனர். ஹிடிம்பை அவர்களுக்கு ஒரு வசிப்பிடத்தை அமைத்துத் தருகிறாள். பிறகு சமாதானமடைந்த பீமன் ஹிடிம்பையை ஏற்கிறான். இது கும்பகோணம் பதிப்பில் இரண்டு அத்தியாயங்களில் விவரிக்கப்படுகிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இக்குறிப்புகள் இல்லை.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமன், தனது சம்மதத்தை யுதிஷ்டிரனுக்கு உணர்ந்தி ஹிடிம்பையிடம், "ஓ ராட்சசி, நான் சொல்வதைக் கேள்! உண்மையில் உன்னிடம் ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்.(19) ஓ கொடியிடையாளே, உனக்கு ஒரு மகன் பிறக்கும் வரை நான் உன்னுடன் இருப்பேன்" என்றான்.(20)
அதற்கு ஹிடிம்பை, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீமனைத் தனது உடலில் தாங்கி வானத்தில் வேகமாகச் சென்றாள். அழகாகக் காட்சியளிக்கும் மலை முகடுகளிலும், தேவர்களுக்கும் புனிதமான பகுதிகளிலும், மான்கள் நிறைந்த இனிய கானம், பாடும் பறவைகள் நிறைந்த இடங்களிலும், தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, சில சமயங்களில் வழவழப்பானவற்றை வந்து கொட்டிய அந்த ஹிடிம்பை அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(22,23) அக்கானகத்தில் யாரும் நுழைய முடியாத பகுதிகளிலும், பெரிய அளவுக்கு வளர்ந்து பூத்து குலுங்கிய மரங்களும், தாமரைகளும், அல்லி மலர்களும் நிறைந்த மலையின் சாரலிலும்,(24) நதிகள் அமைத்த தீவுகளிலும், அதன் கரைகளிலும், ஓடைகளிலும், அதன் கரைகளிலும், மலை அருவிகளிலும்,(25) அடர்ந்த மரங்கள் நிறைந்த கானகத்திலும், கொடிகள் நிறைந்த இமயத்திலும், பலவிதமான குகைகளிலும்,(26) தாமரைகள் பூத்துக் குலங்கும் தெளிந்த நீருடைய தடாகங்களிலும், தங்கமும், முத்துக்களும் ஒளிரும் கடற்கரலைகளிலும்,(27) அழகிய நகரங்கள், அழகிய நந்தவனங்கள், தேவர்களுக்குப் புனிதமான காடுகள், மலைச்சாரல்கள் ஆகியவற்றிலும்,(28) குஹ்யர்கள் மற்றும் துறவிகள் வாழும் பகுதிகளிலும், எல்லாக் காலத்திற்கும் ஏற்ற வகையில் பழங்களும் மலர்களும் நிறைந்த மானசரோவரின் (ஏரி) கரைகளிலும் ஹிடிம்பை அழகான பெண்ணுருக் கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(29) மனோவேகம் கொண்ட அவள் {ஹிடிம்பை} இந்தப் பகுதிகளிலெல்லாம் அந்தப் பாண்டவன் {பீமன்} மூலம் ஒரு பிள்ளை பெறும் வரை விளையாடினாள்.(30)
சிறிது காலங்கழித்து, பயங்கரமான கண்களுடனும், பெரிய வாயுடனும், அம்பு போன்ற நீண்ட காதுகளுடனும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள்.(31) உதடுகள் தாமிரத்தைப் போன்று சிவப்பாகவும், பற்கள் கூர்மையாகவும், சத்தம் உறுமலாகவும், பெரும் கரங்களுடனும், பெரும் பலத்துடனும், கட்டுக்கடங்காத வீரத்துடனும் வளர்ந்த அந்தப் பிள்ளை, பெரும் வலிமைமிக்க வில்லாளி ஆனான்.(32) நீண்ட நாசியும், அகலமான மார்பும், பயமுறுத்தும் வகையில் வீங்கிய கால் ஆடு (Calf) தசைகளும், வேகமான இயக்கமும் கொண்ட அவன், மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.(33,34) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஓர் இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான். அந்தப் பலம் வாய்ந்த வீரன் உடனே அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவமும் அடைந்தான்.(35)
ராட்சசப் பெண்கள், தாங்கள் கருத்தரித்த உடனேயே விரும்பிய வடிவை அடையும் சக்திவாய்ந்த பிள்ளையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வார்கள்.(36) வழுக்கைத் தலையுடைய பிள்ளையான அந்தப் பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் {ஹிடிம்பை} மற்றும் தந்தையின் {பீமனின்} பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனது பெற்றோர்கள் {பீமனும் ஹிடிம்பையும்} அவனுக்கு ஒரு பெயர் வைத்தனர்.(37) அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனைக் கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர்.(38) அந்தக் கடோத்கசன் பாண்டவர்களுக்குப் பெரும் அர்ப்பணிப்புடன் இருந்து, அவர்களுக்கு விருப்பமானவனாகி, அவர்களில் ஒருவனானான்.(39)
பிறகு ஹிடிம்பை, தனது (கணவனுடன் பீமனுடன்) தங்கும் காலம் முடிவுக்கு வந்ததை உணர்ந்து, பாண்டவர்களை வணங்கி அவள் விரும்பிய இடத்திற்குச் சென்றாள்.(40) ராட்சசர்களில் முதன்மையான கடோத்கசன் விரும்பிய நேரம் திரும்பி வருவதாகத் தனது தந்தையிடம் உறுதியளித்து, அவர்களனைவரையும் வணங்கிவிட்டு, வடதிசை நோக்கிச் சென்றான்.(41) சிறப்பு வாய்ந்த இந்திரன், கர்ணனுக்குக் கணையொன்றைக் (அது யார் மீது தொடுக்கப்படுகிறதோ, அவனது மரணம் நிச்சயம்) கொடுத்ததன் நிமித்தமாக, உண்மையில், பெரும் தேர்வீரனான கடோத்கசன் (தனது ஒரு பகுதியைக் கொடுத்து), நிகரற்ற சக்தி கொண்ட அந்தக் கர்ணனுக்குத் தகுதிவாய்ந்த பகைவன் ஆனான்" {என்றார் வைசம்பாயனர்}.(42)
ஆங்கிலத்தில் | In English |