Pandavas came across Vyasa! | Adi Parva - Section 158 | Mahabharata In Tamil
(ஹிடிம்ப வத பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : காட்டில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; ஏகச்சக்கர நகரத்தில் ஒரு பிராமணன் வீட்டில் பாண்டவர்களைத் தங்கச் செய்த வியாசர்...
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, பலம் வாய்ந்த தேர்வீரர்களான பாண்டவர்கள், (தங்கள் உணவுக்காக) மான்களையும் மற்றும் பல விலங்குகளையும் கொன்று, கானகம் விட்டுக் கானகம் சென்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் அப்படிச் சுற்றித் திரிகையில் மத்ஸ்யம், திரிகர்த்தம், பாஞ்சாலம், கீசகம் ஆகிய நாடுகளையும் மற்றும் அவற்றிலிருந்த அழகிய கானகங்களையும், ஏரிகளையும் கண்டனர்.(2) அவர்கள் அனைவரும் தலையில் சடாமுடி தரித்து, மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஆடையாயுடுத்தியிருந்தனர். அவர்களுடன் இருந்த குந்தியும், துறவு ஆடைகளுடனேயே இருந்தாள்.(3)
அந்தப் பெரும் தேர் வீரர்கள் தங்கள் தாயை முதுகில் சுமந்தபடி வேகமாகவும், சில நேரங்களில் மறைந்து மெதுவாகவும் சென்றனர். சில நேரங்களில் பெரும் வேகத்துடனும் சென்றனர்.(4) அவர்கள் ரிக் மற்றும் பிற வேதங்களையும், அனைத்து வேதாங்கங்களையும், ஒழுக்கம் மற்றும் அரசியல் சார்ந்த அறிவியல்களையும் {சாலிஹோத்ர மஹரிஷியிடம்} கற்றனர். அறநெறிகளை நன்குணர்ந்த பாண்டவர்கள் அப்படிச் சுற்றித் திரிகையில் தங்கள் பாட்டனைச் (வியாசரைச்) சந்தித்தனர்.(5)
அந்தச் சிறப்புமிகுந்த கிருஷ்ண துவைபாயனரை வணங்கிய, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தாயுடன் சேர்ந்து அவர் முன்னிலையில் கைகூப்பி நின்றனர்.(6) வியாசர் அவர்களிடம், "பாரதக் குலத்தின் காளைகளே, திருதராஷ்டிரன் மகன் மூலம் நீங்கள் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு நாடுகடத்தப்படும் நிலையை அடைவீர்கள் என்று நான் முன்பே அறிந்திருந்தேன்.(7) அதை அறிந்ததாலேயே உங்களுக்கு நன்மை செய்ய வேண்டி இங்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு நடந்ததை எண்ணித் துயரடையாதீர்கள். இவை எல்லாம் உங்கள் மகிழ்ச்சிக்காகவே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(8) திருதராஷ்டிரன் மகன்களும் நீங்களும் எனது பார்வையில் ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், துயரத்திலிருப்பவர்களிடத்திலும், இளம் வயதில் இருப்பவர்களிடத்திலும் அவர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்குச் சாதகமாக மனிதர்கள் ஒருதலைப்பட்சமாகவே இருப்பார்கள்.(9) எனவே, இப்போது எனது பாசம் உங்களிடமே அதிகமாக இருக்கிறது. அந்தப் பாசத்தால் நான் உங்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் சொல்வதைக் கேளுங்கள்.(10) இங்கிருந்து வெகு அருகில் ஒரு மகிழ்ச்சிகரமான நகரம் இருக்கிறது. அங்கு எந்த ஆபத்தும் உங்களை அணுகாது. அங்கே நீங்கள் மாற்றுருவில் வாழ்ந்து, எனது வரவுக்காகக் காத்திருங்கள்" என்றார்".(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சத்தியவதி மைந்தனான அந்த வியாசர், பாண்டவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, அவர்களை ஏகச்சக்கர நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் குரு {வியாசர்} குந்தியிடம்,(12) "ஓ மகளே, மனிதர்களில் சிறந்தவனும், காளையுமான இந்த உனது மகன் யுதிஷ்டிரன், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முழு உலகத்தையும் வென்று, அனைத்து ஏகாதிபதிகளையும் இந்தப் பூமி முழுவதையும் ஆள்வான்.(13) அவன், பீமன் மற்றும் அர்ஜுனனின் ஆற்றலால் கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த முழு உலகத்தையும் அடைந்து, அதன் ஆட்சி உரிமையை ஏற்று மகிழ்வான்.(14) உன் மகன்களும், பெரும் தேர் வீரர்களான மாத்ரியின் மைந்தர்களும் தங்கள் ஆட்சிக்குரிய பகுதிகளில் விரும்பியவாறு இருப்பார்கள்.(15) அந்த மனிதர்களில் புலிகள், ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகள் போன்ற வேள்விகள் பலவற்றைச் செய்து பிராமணர்களுக்குப் பல பரிசுகளை அளிப்பார்கள்.(16) உனது மகன்கனான இவர்கள் தங்கள் மூதாதையர் அரசை அடைந்து, தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் ஆடம்பரமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்கள்" என்றார்".(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன வியாசர் அவர்களை ஒரு பிராமணரின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.(18) தீவில் பிறந்தவரான அந்த முனிவர் {துவைபாயனர்}, பாண்டவர்களில் மூத்தவனிடம், "எனக்காக இங்கே காத்திருங்கள்! நான் இங்கே மீண்டும் வருவேன். இந்த நாட்டிற்கும், இந்தச் சூழ்நிலைகளுக்கும் உங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நீங்கள் இங்கே பெருமகழிச்சியடையலாம்" என்றார்.(19) ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் கரங்களைக் கூப்பியபடி அந்த முனிவரிடம் "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள். பிறகு, சிறப்புமிக்க குருவும், முனிவருமான அந்த வியாசர், எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்றார்" {என்றார் வைசம்பாயனர்}.(20)

ஆங்கிலத்தில் | In English |