Brahmana's Distress! | Adi Parva - Section 159 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : ஏகச்சக்கர நகரத்தில் வசித்த பாண்டவர்கள்; மனைவியிடம் துயரத்துடன் பேசிய பிராமணன்; அதைக் கண்டு அந்தப் பிராமணனை அணுகிய குந்தி; அந்தப் பிராமணன் புலம்பியதைக் கேட்ட குந்தி...
ஜனமேஜயன், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அந்தப் பெரும் தேர் வீரர்களும், குந்தி மைந்தர்களுமான பாண்டவர்கள், ஏகச்சக்கரத்திற்கு வந்த பிறகு என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் சொன்னார், "அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் மைந்தர்கள், ஏகச்சக்கரம் வந்ததும், ஒரு பிராமணனின் இல்லத்தில் சிறிது காலம் தங்கினர்.(2) இரந்துண்டு {பிச்சையெடுத்து} வாழும் வாழ்வை மேற்கொண்டு, மகிழ்ச்சிகரமான கானகங்களையும், நிலப்பகுதிகளையும், பல நதிகள் மற்றும் ஏரிகளையும் கண்டு, தங்கள் செயல்களால் அந்த நகரவாசிகளுக்குப் பிடித்தமானவர்களாகினர்.(3,4) இரவு வந்ததும், குந்தியின் முன் தாங்கள் இரந்து பெற்று வந்ததை ஒன்றாகச் சேர்த்து வைத்தனர்.குந்தி அவற்றை முழுமையாகச் சேர்த்து ஒவ்வொருவருக்கான பகுதியாகப் பிரித்துக் கொடுப்பாள். அதையே அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொண்டனர்[1].(5)
அந்த எதிரிகளைத் தண்டிக்கும் வீரர்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அந்த உணவின் முழுப் பகுதியில் சரி பாதியை உண்டபோது, பீமன் மட்டுமே தனித்து மறுபாதியை உண்டான்.(6) ஓ பாரதக் குலத்தில் காளையே, இப்படியே பாண்டவர்கள் அங்கே சிலகாலம் வாழ்ந்தனர்.(7) ஒரு நாள், பாரதர்களில் காளைகளான அவர்கள் அனைவரும் பிச்சையெடுக்கச் சென்றுவிட்டார்கள். பீமன் மட்டும் (தனது தாயுடன்) பிருதையுடன் (வீட்டில்) இருந்தான்.(8) ஓ பாரதா, அந்நாளில் அந்தப் பிராமணரின் உள் அறையில் இருந்து இதயத்தைப் பிளக்கும் அழுகைச் சத்தம் வருவதைக் குந்தி கேட்டாள்.(9) இரக்க குணமும் நன்மையை விரும்பும் இதயமும் கொண்ட குந்தியால், இப்படி அந்த பிராமணரின் இல்லத்தில் அந்தப் பரிதாபகரமான அழுகையைக் கேட்டுத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(10)
துயரத்தால் தாக்குண்ட அந்த இனிமையான பிருதை {குந்தி}, பீமனிடம் கருணை நிறைந்த வார்த்தைகளைச் சொன்னாள். அவள்,(11) "ஓ மகனே, நமது துயர் தணிந்து, இந்த பிராமணரின் இல்லத்தில், அவரால் மதிக்கப்பட்டு, திருதராஷ்டிரனின் மகனுக்குத் தெரியாமல், நாம் இங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.(12) ஓ மகனே, நாம் இங்கு மகிழ்ச்சியாக வசித்ததற்கு ஈடாக, இந்த பிராமணருக்கு நாம் செய்ய வேண்டிய நன்மையைக் குறித்து எப்போதும் நான் சிந்தித்தே வருகிறேன்.(13) ஓ குழந்தாய், எவன் செய்ந்நன்றி மறவாமல் இருக்கிறானோ அவனே உண்மையான மனிதன். தான் மற்றவர்களிடம் பெறுவதைவிட அவன் அதிகமாகத் திரும்பக் கொடுப்பான்.(14) இந்த பிராமணருக்கு ஏதோ துயரேற்பட்டிருக்கிறது. அதில் ஐயம் இல்லை. நம்மால் அவருக்கு ஏதாவது உதவி இருக்குமானால், நாம் நிச்சயம் அதைச் செய்ய வேண்டும்" என்றாள்.(15)
தாயின் வார்த்தைகளைக் கேட்ட பீமன், "ஓ தாயே, அந்த பிராமணனின் துயரம் எப்படிப்பட்டது, அஃது எங்கிருந்து உருவானது என்பதை உறுதி செய்து கொள்வாயாக. அவற்றை அறிந்தால், அஃது எவ்வளவு கடினமாக இருப்பினும் நான் அதை அவர்களுக்குச் சாதித்துக் கொடுப்பேன்" என்றான்".(16)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா, தாயும் மகனும் இப்படி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, மறுபடியும் அவர்கள் அந்த பிராமணன் மற்றும் அவனது மனைவியும் அழுவதைக் கேட்டார்கள்.(17) அப்போது குந்தி, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட கன்றைக் காணச் செல்லும் ஒரு பசுவைப் போல அந்தச் சிறப்புமிகு பிராமணன் இருந்த உள் அறைக்குள் விரைவாகச் சென்றாள்.(18) அங்கே பிராமணன், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் சோகம் நிரம்பிய முகத்துடன் உட்கார்ந்து கொண்டு இருப்பதைக் கண்டாள்.(19)
அவன், "இவ்வுலக வாழ்வு நாணலைப் போன்று உள்ளீடற்றதாகக் கனியற்றதாக இருக்கிறது. இறுதியில் சுதந்திரம் இல்லாமல் {பிறருக்கு அடிமையாகவே} துயரத்துடனேயே முடிகிறது. வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருக்கிறது.(20) வாழ்வு என்றாலே அது துயரம் என்ற நோய்தான். வாழ்க்கை என்பது உண்மையில் துயரங்களின் தொகுப்பு மட்டும்தான்.(21) ஆன்மா ஒன்று. ஆனால் அஃது அறத்தை ஈட்ட வேண்டியிருக்கிறது, பொருள் மற்றும் இன்பத்தையும் ஈட்ட வேண்டியிருக்கிறது. இவை மூன்றையும் ஒரே நேரத்தில் செய்வதால், இவையே ஒன்றுக்குள் ஒன்று அடிக்கடி முரண்பட்டுத் துயரத்தைக் கொடுக்கின்றன.(22) சிலர் நமது விருப்பங்களில் உயர்ந்த நோக்கம் முக்தியடைவது என்கின்றனர். ஆனால் நான் அதை அடையவே முடியாது என்று நம்புகிறேன். பொருளீட்டுவது நரகத்தைத் தருகிறது. பொருளீட்டுதலில் உள்ள நாட்டம் துயரத்தைத் தருகிறது.(23) ஒருவரின் பொருள் மீது மற்றவர் ஆசை கொள்வதால், அந்தப் பொருளை அடைந்த பிறகு பெரும் துயரம் வருகிறது. ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அதற்கு உடைமையாளன் துயரடைகிறான்.(24) நான் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழியை அறியவில்லை. ஆபத்திலிருந்து தப்பித்து, எனது மனைவியுடனும், குழந்தைகளுடனும் இந்தப் பகுதியைவிட்டுப் பறந்து செல்ல என்னால் முடியவில்லை.(25)
ஓ பெண்ணே நினைவுப்படுத்திப் பார், நான் முன்பே வேறு இடத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சொன்னேன்! நீதான் என் பேச்சைக் கேட்கவில்லை.(26) நான் பலமுறை தொடர்ந்து சொல்லியும் நீ "நான் இங்கேயே பிறந்தேன், இங்கேயே வளர்ந்தேன், இஃது எனது மூதாதையர் வீடு" என்றாய்.(27) ஓ பெண்ணே, உனது மதிப்புக்குரிய தந்தையும், தாயும், பல காலத்திற்கு முன்னரே சொர்க்கம் சென்றனர். உனது உறவினர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள். இருப்பினும் நீ இங்கேயே வாழ வேண்டும் என்று ஏன் விரும்பினாய்?(28) உனது உறவினர்கள் மீது கொண்ட பாசத்தால், நான் சொன்னதை நீ கேட்கவில்லை. ஆனால் இன்று நேரம் வந்துவிட்டது, உனது உறவினர்களில் ஒருவர் இறப்பதை நீ காணப் போகிறாய்.(29) அக்காட்சி எனக்கு வருத்தத்தை அளிக்கிறதே! எனது மரணத்திற்கான நேரம் வந்ததாகவே நான் நினைக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரை, என்னைச் சார்ந்தவர்கள் யாரும் இறப்பதை நான் அனுமதியேன்.(30)
எனது நற்காரியங்களில் எல்லாம் நீ துணை புரிந்திருக்கிறாய். சுய நலனைப் பார்க்காமல், என்னிடம் தாயைப் போல அன்பு பாராட்டினாய். தேவர்கள் உன்னை எனக்கு உண்மையான தோழியாக (நட்பாக) கொடுத்திருக்கிறார்கள். நீ மட்டுமே எனக்கு நிரந்தர வசிப்பிடமாவாய்.(31) எனது பெற்றோரால், நீ என்னுடன் இல்லறத்தில் இணைந்தாய். தூய குலத்தில் பிறந்து, நல்ல நிலையில் வளர்ந்து, பிள்ளைகளைப் பெற்று, என்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்து அப்பாவியாக வாழ்ந்து வந்திருக்கிறாய். உன்னை நான் தேர்ந்தெடுத்து, உரிய சடங்குகளுடன் மணந்த காரணத்தால், எனது உயிரைக் காக்கச் சபதமேற்றிருக்கும் உன்னை நான் கைவிட முடியாது. என் மகனை எவ்வாறு என்னால் கைவிட முடியும்?(32-34) இளம் வயதிலிருப்பவனும், தாடையில் முடி முளைக்காதவனுமான (முழு மனிதனாகாத) எனது மகனை நான் எப்படிக் கைவிட முடியும்? நான் ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து அளிப்பதற்காகவே, உலகம் படைத்தோனால் என்னிடம் கொடுக்கப்பட்ட எனது மகளை நான் எப்படிக் கைவிடுவேன். அவள் {மகள்} மூலம் பெறும் மகனால் {பேரனால்} கிடைக்கும் நல்லுலகங்களை நான் எப்படி அடைவேன்?(35,36)
சில மனிதர்கள் மகனிடமே தந்தையின் பாசம் அதிகம் இருக்கும் என்கின்றனர். சிலர் மகளிடம்தான் அதிகம் இருக்கும் என்கின்றனர். ஆனால் எனக்கு இருவருமே சமமாக இருக்கின்றனர்.(37) எவளிடம் எனது நித்திய அருளும், என் பரம்பரையும், மகிழ்ச்சியுமிருக்கிறதோ அந்த எனது அப்பாவி மகளைக் கைவிட எப்படித் துணிவேன்?(38) நான், எனது வாழ்வை துறந்து மறு உலகம் சென்றாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியுமா? இவர்கள் எப்படித் தங்கள் வாழ்வை நகர்த்துவார்கள்?(39) இங்கு இருக்கும் யாரையும் துறப்பது கொடுமையானதே. மறுபுறம், நான் என்னைத் தியாகம் செய்தால், நானில்லாமல் இவர்கள் அழிந்து போவார்கள்.(40) நான் வீழ்ந்துகிடக்கும் துயரமானது பெரியதாகும். இதிலிருந்து தப்பிக்க வழியறியாமல் இருக்கிறேனே. ஐயோ நான் என் நெருங்கியவர்களுடன் எங்குச் செல்வேன். நான் இவர்களுடன் சேர்ந்து மொத்தமாக இறந்து போக வேண்டும். இவர்கள் இல்லாமல் நான் உயிருடன் வாழ முடியாது!" என்றான்".(41)

[1] இந்தப் பழக்கம் திரௌபதியின் திருமணத்திற்குப் பிறகு நினைவுகூரப்படுகிறது.

ஆங்கிலத்தில் | In English |