"Abandon me" said the wife! | Adi Parva - Section 160 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : பிராமணனிடம் அவனது மனைவி பேசியது...
வைசம்பாயனர் சொன்னார், "பிராமணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது மனைவி, "ஓ பிராமணரே! நீர் சாதாரண மனிதரைப் போலத் துயரடையக்கூடாது. இது புலம்புவதற்கான நேரமில்லை.(1) நீர் கல்விமான்; மனிதர்கள் அனைவரும் இறப்பது உறுதி என்பதை நீர் அறிவீர்; தவிர்க்க முடியாதவற்றிற்காக யாரும் வருத்தப்படக்கூடாது.(2) மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் ஒருவனின் சுயத்திற்குப் பயன்படவே ஏற்பட்டனர். புரிந்து கொள்ளும் நல்ல அறிவைக் கொண்ட நீர், உமது துயரங்களைக் கொன்று போடுவீராக. நானே அங்குச் செல்வேன்.(3) நிச்சயமாக இந்தக் காரியமே ஒரு பெண்ணின் உயர்ந்த தெய்வீகக் கடமையாகும். அஃதாவது, அவள் தனது உயிரையே தியாகம் செய்தாவது தனது கணவரின் நலத்தைப் பேண வேண்டும்.(4) அப்படிப்பட்ட எனது செயல் உம்மை மகிழ்விக்கும், இந்த உலகத்திலும், மறு உலகத்திலும் எனக்குப் புகழையுண்டாக்கும்.(5) நிச்சயமாக நான் சொல்லும் இதுவே உயர்ந்த அறமாகும். அதனால் நீர் அறத்தையும், மகிழ்வையும் ஒன்றாக அடையமுடியும்.(6)
மனைவியை ஒருவன் எக்காரணத்திற்காக விரும்புவானோ, அதை நீர் என் மூலமாக அடைந்து விட்டீர். நான் உமக்கு ஒரு மகளையும் ஒரு மகனையும் பெற்றுக் கொடுத்து எனது கடனிலிருந்து விடுபட்டுவிட்டேன்.(7) உம்மால் உமது குழந்தைகளை நன்கு பேணி பராமரித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் என்னாலோ, உம்மைப் போல மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது.(8) நீரே எனது வாழ்வும், செல்வமும், தலைவரும் ஆவீர். உம்மை இழந்தால், பிறகு நானும், இந்த இளம் பிள்ளைகளும் எப்படி வாழ முடியும்?(9) என்னைச் சார்ந்திருக்கும் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு, இவர்களைக் காப்பாற்ற நீர் இல்லாமல், தலைவனில்லாமல் விதவையாகி, அறத்தின் பாதையிலான வாழ்வை என்னால் எவ்வாறு வாழ இயலும்?(10)
நம்பிக்கையற்ற மரியாதையற்ற வீணான மனிதர்கள், இந்த உமது மகளைக் கைப்பற்ற விரும்பினால், நான் அவர்களிடம் இருந்து இவளை எப்படிப் பாதுகாப்பேன்?(11) தரையில் தூக்கியெறியப்பட்ட இறைச்சியை ஆவலுடன் உண்ணும் பறவைகளைப் போலக் கணவனை இழந்தப் பெண்ணை அடைய தீய மனிதர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.(12) நான் நிலையின்றித் தள்ளாடி, நேர்மையான மனிதர்களால் விரும்பப்படும் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்படலாம்.(13) உமது அப்பாவி மகளான இவளை, உமது மூதாதையர்கள் நடந்த வழியில் என்றும் எவ்வாறு என்னால் நடத்திச் செல்ல முடியும்?(14) நான் தலைவனில்லாதிருக்கும் காலத்தில், இந்தக் குழந்தையை {உமது மகனை} உம்மைப்போன்ற அறம்சார்ந்தவனாக எப்படி வளர்க்க முடியும்?(15) தலைவனில்லாத என்னை அதிகாரம் செய்து, சூத்திரர்கள் வேதத்தைக் கேட்க விரும்புவது போல, நம்பத்தகாத மனிதர்கள் உமது மகளின் கரத்தைக் கேட்பார்கள்.(16)
உமது ரத்தமும் குணமும் இல்லாதவர்களுக்கு நான் உமது மகளை அளிக்காவிட்டால், அவர்கள் வேள்வி நெய்யைத் தூக்கிச் செல்லும் காக்கையைப் போல அவளைத் தூக்கிச் செல்வார்கள்.(17) உமது மகன் உம்மைப் போல் இல்லாமல் இருந்து, உமது மகளும் நம்பத்தகாதவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், இந்த உலகத்தின் நேர்மையற்ற மனிதர்களாலும் நான் நிந்திக்கப்படுவேன். அப்படி நிந்திக்கப்படும்போது நிச்சயம் சாவேன்.(18,19) உம்மையும் என்னையும் இழந்த இந்தப் பிள்ளைகள், நீர் வற்றும் போது அழியும் மீனைப் போல அழிந்து விடுவர்.(20)
நீர் {கணவர்} இல்லாமல் மூவரும் அழிவது நிச்சயம். எனவே, நீர் என்னைத் தியாகம் செய்வதே தகும்.(21) ஓ பிராமணரே! பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்த பெண், தனது தலைவனுக்கு முன்பு இறந்து போனால் அதுவே உயர்ந்த தகுதி {புண்ணியம்} என்று நீதிகளை அறிந்த மனிதர்கள் கூறுகிறார்கள்.(22) உமக்காக, மகனையும், மகளையும், உறவினர்களையும், ஏன் உயிரைக் கூட விடத் தயாராயிருக்கிறேன்.(23) தனது தலைவனுக்குப் பிடித்தமான காரியங்களை எப்போதும் செய்யும் பெண்களின் கடமையானது, வேள்விகள், துறவு, நோன்பு மற்றும் தானங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(24) எனவே, நான் செய்யத்துணிவது உமது குலத்துக்கும் உமக்கும் உயர்ந்த அறமாகும்.(25)
குழந்தைகள், உறவினர், மனைவியர் மற்றும் இவ்வுலகில் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும், ஒருவனைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காப்பதற்கே பேணி வளர்க்கப்படுகின்றன என்று ஞானியர் சொல்கின்றனர்.(26) ஒருவன் தன்னை ஆபத்திலிருந்தும், துயரத்தில் இருந்தும் விடுவித்துக் கொள்ளத் தனது செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். அந்தச் செல்வத்தைக் கொண்டுதான் தனது மனைவியைப் பராமரித்துப் பாதுகாக்க முடியும்.(27) எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விபத்துகளுக்கு அளிக்கவே ஒருவனின் மனைவி, மகன், செல்வம், வீடு ஆகியவை அடையப்படுகின்றன என்று உண்மையைக் கற்றவர்கள் தெளிவாக விளக்குகின்றனர்.(28) ஒரு தனி மனிதனின் சுயதத்துக்கு ஈடாக, அவனது உறவினர்கள் அனைவரையும் சேர்த்து நிகர்த்துப் பார்த்தாலும் {எடைபோட்டுப் பார்த்தாலும்}, அஃது ஈடாகாது.(29) எனவே, மரியாதைக்குரியவரே, என்னைக் கைவிட்டு உமது சுயத்தைக் காத்துக் கொள்வீராக. என்னைத் தியாகம் செய்ய எனக்கு அனுமதி கொடுத்து, உமது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வீராக.(30)
நீதிகளை அறிந்தவர்கள், பெண்கள் கொல்லப்படலாகாது என்று தங்கள் உடன்படிக்கைகளில் சொல்கின்றனர். அந்த நீதிகளை ராட்சசர்கள் அறியாதவர்களல்லர். ராட்சசர்கள் ஓர் ஆணைக் கொல்வது நிச்சயமாக இருந்தாலும், அவர்கள் ஒரு பெண்ணைக் கொல்வது ஐயத்திற்கிடமானதே. ஒழுக்க விதிகளை அறிந்த நீர், என்னை ராட்சசன் முன்பு கிடத்துவீராக.(31,32) நான் நிறைந்த மகிழ்ச்சியை அடைந்துவிட்டேன். பல இனிமையானவற்றை அடைந்திருக்கிறேன். மேலும் நிறைந்த ஆன்மத் தகுதிகளையும் ஈட்டியிருக்கிறேன். உம்மால் நான் எனக்கன்பான இந்தப் பிள்ளைகளையும் பெற்றேன். எனவே, நான் சாவதற்கு வருந்தவில்லை.(33) நான் உமக்குப் பிள்ளைகள் பெற்றுக் கொடுத்து வயதாகிவிட்டேன். நான் எப்போதும் உமக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இவை அனைத்தையும் நினைவில் நிறுத்தியே நான் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளேன்.(34) ஓ மரியாதைக்குரியவரே, என்னைக் கைவிட்டு, நீர் மற்றுமொரு மனைவியை அடையலாம். அவள் மூலமாக நீர் ஆன்மத் தகுதிகளை மறுபடியும் அடையலாம்.(35) அதில் பாவமில்லை. ஓர் ஆணுக்கு மறுமணம் என்பது அறச்செயலே. ஆனால், அதுவே பெண்ணுக்கு இரண்டாம் கணவனை அடைந்தாலே பெரும்பாவம் ஆகும்.(36) இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, உமது தியாகம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் நினைவில் கொண்டு, என்னைக் கைவிட்டு உமது சுயத்தையும், உமது குலத்தையும், உமது பிள்ளைகளையும் காத்துக் கொள்ளும்" என்றாள்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா, மனைவியால் இப்படிச் சொல்லப்பட்ட பிராமணன், அவளைக் கட்டியணைத்துக்கொண்டான். துயரத்தால் உந்தப்பட்ட இருவரும் அமைதியாக அழுதனர்".(37)

ஆங்கிலத்தில் | In English |