Lisp of a child! | Adi Parva - Section 161 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 3)
பதிவின் சுருக்கம் : தங்கள் தாயின் பேச்சைக் கேட்ட மகள் தனது தந்தையிடம் பேசியது; பச்சிளம் பாலகனின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பிராமணக் குடும்பம்; அவர்களிடம் சென்ற குந்தி...
வைசம்பாயனர் சொன்னார், "தனது பெற்றோரின் துயர் நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட மகள் பெரும் துயரடைந்து, அவர்களிடம்,(1) "உங்களைக் கவனித்துக் கொள்ள யாருமில்லாதது போல் {அநாதைகள் போல} இவ்வளவு துயரடைந்து நீங்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்? நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, எது சரியோ அதைச் செய்யுங்கள்.(2) குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் என்னைக் கைவிடுவது என்பது ஐயத்திற்கிடமில்லாதது. எப்படியும் என்னைக் கைவிடத்தான் போகிறீர்கள். எனவே, இப்போது என்னைக் கைவிட்டு, அனைத்தையும் காத்துக் கொள்ளுங்கள்.(3) பிள்ளைகள் நம்மைக் காப்பார்கள் (இந்த உலகத்திலும், மறு உலகத்திலும்) என்று எண்ணியே ஒரு மனிதன் அவர்களைப் பெறுகிறான். என்னைப் படகாகப் பயன்படுத்தி இந்தக் கடினகால நீரோடையைக் கடந்து செல்லுங்கள்.(4)
ஒரு பிள்ளை, தனது பெற்றோரை இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் காக்கிறான். ஆகையாலேயே கற்றோர்கள் அந்தப் பிள்ளையைப் புத்ரன் (காப்பவன்)என்று அழைக்கின்றனர்.(5) மூதாதையர்கள் என்னிடமிருந்து மகளின் பிள்ளையை எதிர்பார்ப்பார்கள் (முக்திக்காக). ஆனால், (எனது பிள்ளைகளுக்காகக் காத்திராமல்) நான் எனது தந்தையைக் காப்பதன் மூலம் அவர்களைக் காத்தவளாவேன்.(6) எனது தம்பியான இவன் பச்சிளம் பருவத்தில் இருக்கிறான். எனவே, நீங்கள் அழிந்தால் அவனும் இறப்பது ஐயத்திற்கிடமில்லாதது.(7) எனது தந்தையாகிய நீர் இறந்தால், எனது தம்பியும் உம்மைத் தொடர்வான். பித்ருக்களுக்குக் கொடுக்கப்படும் பிண்டம் கொடுக்கப்படாமல் அவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவார்கள்.(8)
எனது தந்தையாலும் தம்பியாலும் கைவிடப்பட்டு, ஏன் எனது தாயாலும் கைவிடப்பட்டு (கணவரும் பிள்ளையும் இறந்த பிறகு அவளும் உயிருடன் இருக்க மாட்டாளாகையால்) நான் பெரும் துயரத்திற்குள் ஆழ்ந்து முழுவதுமாக அழிந்து போவேன்.(9) நீரும், என் தம்பியும், என் தாயும் இந்த ஆபத்திலிருந்து தப்பித்தீர்களென்றால் நீங்கள் கொடுக்கும் பிண்டத்தால் நமது முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(10) தானே தான் தனக்கு மகன் {நாமே நமக்கு மகனாகப் பிறக்கிறோம்}. மனைவியே ஒருவனுக்கு நட்பு, ஒரு மகளோ எப்போதும் பிரச்சனையின் ஊற்றுக்கண்ணாவாள். அந்த ஊற்றுக்கண்ணை அகற்றி உங்களைக் காத்துக் கொண்டு, எனக்கு அறவழியை அமைத்துக் கொடுங்கள்.(11) ஓ தந்தையே, நான் பெண்ணானதால், உம்மை இழந்து, உதவியற்றுத் துயரத்தில் விழுந்து, அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும்.(12) எனவே, நான் எனது தந்தையின் குலத்தைக் காக்க எண்ணி, எனது அறத்தகுதியின் அடிப்படையில் அந்தக் கடினமான காரியத்தை முடிப்பேன்.(13)
என்னை விட்டுவிட்டு பிராமணர்களில் சிறந்த நீர் அங்கே (ராட்சசனிடம்) சென்றால், நான் மிகவும் வருந்துவேன். எனவே, ஓ தந்தையே, என்னிடம் கருணை கொள்வீராக.(14) ஓ மனிதர்களில் சிறந்தவரே, நமக்காகவும், நமது குலத்துக்காகவும், நமது அறத்தகுதிகளுக்காகவும் எப்படியும் எப்போதாவது பிரிய வேண்டிய என்னை இப்போது கைவிட்டு உங்களைக் காத்துக் கொள்வீராக.(15) ஓ தந்தையே, தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் தாமதம் வேண்டாம். நீர் சொர்க்கத்திற்குச் சென்றதும் நாங்கள் எங்கள் உணவுக்காக அந்நியர்களிடம் நாய்களைப் போலப் பிச்சை எடுத்துத் திரிவதைவிட வலி நிறைந்ததாக வேறு எது இருக்க முடியும்? ஆனால் நீர் உமது உறவினர்களுடன் இந்தச் சிரமத்திலிருந்து காக்கப்பட்டாலோ, நான் மகிழ்ச்சியாகத் தேவர்கள் இருக்கும் பகுதிகளில் வாழ்வேன்.(16,17) இப்படி மகளை அளித்துவிட்டு, தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் படையல் வைத்தால் நன்மை நடக்கும் என்றே நாம் கேள்விப்படுகிறோம்" என்றாள்".(18)
வைசம்பயாணர் தொடர்ந்தார், "அந்த பிராமணன் தனது மனைவியுடன், தனது மகளின் ஒப்பாரியைக் கேட்டு முன்னை விட அதிகத் துக்கம் கொண்டான். அம்மூவரும் சேர்ந்து அழத் தொடங்கினர்.(19) இதைக் கண்ட பச்சிளங்குழந்தையான அவர்களது மகன், இனிமையான குரலில், கண்கள் மகிழ்ச்சியில் பிரகாசிக்க,(20) "அழாதீர்கள், ஓ தந்தையே, நீரோ, ஓ தாயே, நீயோ, ஓ தமக்கையே, நீயோ அழாதீர்கள்" என்று புன்னகைத்துக் கொண்டே அவர்கள் ஒவ்வொருவரையும் அணுகினான்.(21) இறுதியில் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ஒரு புல்லை எடுத்து, " மனிதர்களை உண்ணும் அந்த ராட்சசனை இதைக் கொண்டு நான் கொன்றுவிடுவேன்" என்றான்.(22) அவர்கள் அப்போது பெரும் துயரத்திலிருந்தாலும், குழந்தையின் இனிமையான மழலைப் பேச்சு அவர்களின் முகத்தில் பெரும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தது.(23) பிறகு குந்தி இது தான் தக்க சமயம் என்று நினைத்து, அவர்களை அணுகி, இறந்தவர்களை மீட்கும் அமுதம் போன்ற வார்த்தைகளை அவர்களிடம் பேசி, அவர்களைத் துக்கத்திலிருந்து மீட்டெடுத்தாள்" {என்றார் வைசம்பாயனர்}.(24)

ஆங்கிலத்தில் | In English |