Kunti asked the cause of grief! | Adi Parva - Section 162 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : அந்தக் குடும்பம் துயருற்று அழுவதற்கான காரணத்தை அந்தப் பிராமணனிடம் கேட்ட குந்தி; பகாசுரன் மற்றும் அந்நாட்டின் மன்னன் ஆகியோரைக் குறித்தும்; அந்த ராட்சசனிடம் நகர மக்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்தும் சொன்ன பிராமணன்...
குந்தி, "நான், உங்கள் துயரத்தின் காரணத்தை அறிய விரும்புகிறேன். என்னால் முடியுமென்றால் நான் அதைக் களைந்து விடுவேன்" என்றாள்.(1)
அதற்கு அந்த பிராமணன், "ஓ துறவைச் செல்வமாகக் கொண்டவளே, நிச்சயமாக உன் பேச்சு உனக்குத் தகுதி வாய்ந்ததே! ஆனால், எங்கள் துயரம் மனிதர்களால் களையப்படமுடியாததாகும்.(2) இந்த நகரத்திற்கு அருகில், பகன் என்ற பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருக்கிறான். மனித ஊனுண்ணியான அவனே இந்நகரத்திற்கும், இந்நாட்டிற்கும் தலைவனாவான்.(3) மனித இறைச்சியை உண்டு வாழ்பவனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான அந்த இழிந்த ராட்சசனே இந்நாட்டை ஆள்கிறான். அசுரர்களுக்கும், இந்த நகரத்திற்கும், நாட்டுக்கும் தலைவனாக இருக்கும் அவன், தன் வலிமையால் இவற்றைக் காத்து வருகிறான். எங்களுக்கு எந்த எதிரியிடமிருந்தும் அச்சம் கிடையாது. அவன் காப்பதால், நிச்சயமாக எந்த உயிரினத்திடமிருந்தும் எங்களுக்கு அச்சம் கிடையாது.(4,5)
எனினும், இவற்றிற்கெல்லாம் கூலியாக அந்த மனிதஊனுண்ணிக்கு, ஒரு வண்டிச் சோற்றையும், இரண்டு எருமை மாடுகளையும், மற்றும் இவற்றையெல்லாம் அவ்விடம் எடுத்துச் செல்ல ஒரு மனிதனையும் அனுப்புவதாக அவனுடன் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.(6)
அதன் நிமித்தமாக, இந்நகரத்தின் வீட்டு உரிமையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக அவனுக்கு உணவு அனுப்ப வேண்டும். ஒவ்வொருவருக்கும் அந்த முறைமை பல வருடங்களின் இடைவெளியில் வரும்.(7) யாராவது இந்த முறைமையை மீறத் துணியும்போது, அந்த ராட்சசன், அப்படி மீறுபவனின் குழந்தைகள் மனைவிகள் உட்பட அவனது குடும்பத்தில் அனைவரையும் கொன்று விடுவான்.(8) இந்நாட்டில் வேத்திரகீயம் {வேத்திரகீயக்ருகம்} என்ற நகரத்தில், இப்பகுதியின் மன்னன் வாழ்கிறான். அவன் அரசு நடத்தும் அறிவியலை அறியாதவனாகவும், புத்திக்கூர்மையற்றவனாகவும் இருக்கிறான். அவன் இந்த ராட்சசத் தொல்லைக்கு ஓர் வழிமுறையையும் செய்யவில்லை.(9) பலவீனமான மன்னனான அந்தப் பாவியின் ஆளுகைக்குள் இருக்கும் எங்களுக்கு இந்த நிலை நிச்சயம் வேண்டியதுதான்.(10)
பிராமணர்களை ஒரு நாட்டிற்குள் நிரந்தரமாக வசிக்க வைப்பது என்பது முடியாத காரியம். அவர்கள் யாரையும் நம்பி இராமல், பறவைகளைப் போல் நாடுவிட்டு நாடு சுதந்திரத்துடன் செல்பவர்கள்.(11) ஒருவன் முதலில் (நல்ல) மன்னனை அடைய வேண்டும். பின்பு மனைவியை அடைய வேண்டும், அதன் பிறகு செல்வம் சேர்க்க வேண்டும். இந்த மூன்றையும் ஒருவன் அடைந்தால்தான், அவனால் தனது உறவினர்களையும் பிள்ளைகளையும் காக்க முடியும்.(12) இந்த மூன்றையும் அடைவதில் எனது செயல்கள் தலைகீழாகவே இருக்கின்றன. எனவே, ஆபத்தெனும் கடலில் மூழ்கி மிகவும் சிரமப்படுகிறேன்.(13)
நான் சொன்ன அந்த முறைமை இப்போது என் மேல் விழுந்திருக்கிறது. முன்பு சொன்னது போல அந்த ராட்சசனுக்கான கூலியையும் ஒரு மனிதனையும் உணவாக நான் கொடுக்க வேண்டும்.(14) இதற்காக ஒரு மனிதனை விலைக்கு வாங்க என்னிடம் செல்வம் இல்லை. என்னால் எனது குடும்பத்தை விட்டுப் பிரியவும் முடியாது.(15) இருப்பினும் ராட்சசனிடம் (அவனது பிடியில்) இருந்தும் தப்பிக்க முடியாது. நான் இப்போது தப்பிக்க வழியில்லாமல் துயரம் எனும் கடலில் மூழ்கப்போகிறேன்.(16) நான் இன்று எனது குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு அந்த ராட்சசனிடம் செல்லப் போகிறேன். அவன் எங்கள் அனைவரையும் கொல்லட்டும்" என்றான் {அந்தப் பிராமணன்}".(17)

ஆங்கிலத்தில் | In English |