Nectar words of Kunti! | Adi Parva - Section 163 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : பகாசுரனிடம் தன் பிள்ளையை அனுப்புவதாக அந்தப் பிராமணனிடம் சொன்ன குந்தி; அதை மறுத்த பிராமணன்; குந்தியின் பேச்சு ஏற்றுக் கொள்ளப்பட்டது...
அப்போது, குந்தி, "ஓ பிராமணரே! இந்த ஆபத்திற்காக அஞ்சாதீர். நீர் அந்த ராட்சசனிடம் இருந்து தப்புவதற்கு ஒரு வழியை நான் காண்கிறேன்.(1) உமக்கு ஒரு மகன் தான் இருக்கிறான், அவனும் பச்சிளங்குழந்தையாக இருக்கிறான். இளமையான ஆதரவற்ற ஒரே மகளும் இருக்கிறாள். உமது மனைவி உட்பட இவர்களில் எவரும் ராட்சசனிடம் செல்வதை நான் விரும்பவில்லை.(2) ஓ பிராமணரே! எனக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் ராட்சசனுக்கான அந்தக் காணிக்கையை எடுத்துக் கொண்டு செல்லட்டும்" என்றாள் {குந்தி}.(3)
இதைக் கேட்ட பிராமணன், "என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒருபோதும் நான் இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன். எனது வாழ்வுக்காக, ஒரு பிராமணனின் உயிரையோ அல்லது ஒரு விருந்தாளியின் உயிரையோ நான் துறக்க மாட்டேன்.(4) பாவகரக் காரியங்கள் செய்பவர்களும், தாழ்ந்த பிறப்புப் பிறந்தவர்களும் கூட இதைச் (நீ என்னைச் செய்யச் சொல்வதைச்) செய்ய மறுப்பார்கள். ஒரு பிராமணனின் நன்மைக்காக, ஒருவன் தன்னையோ அல்லது தனது வாரிசையோ தியாகம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.(5) நான் அந்த அருமையான அறிவுரையை மதித்து நடக்க விரும்புகிறேன். ஒரு பிராமணனின் மரணமா? அல்லது எனது மரணமா? என்று வரும்போது நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்.(6)
பிராமணனைக் கொல்வது என்பது பாவத்திலேயே பெரும் பாவமாகும், அதற்கு விமோசனமே இல்லை. ஒரு பிராமணனின் உயிர்த்தியாகத்தைவிட, ஒருவன் தன்னைத் தியாகம் செய்து கொள்வதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.(7) ஓ அருளப்பட்டவளே, நான் என்னைத் தியாகம் செய்வதால், தற்கொலை செய்யும் குற்றவாளி ஆக மாட்டேன். இன்னொருவன் எனது உயிரை எடுக்கும்போது, எந்தப் பாவமும் என்னைப் பற்ற முடியாது.(8) ஆனால் தெரிந்தே நான் ஒரு பிராமணனை மரணத்திற்கு அனுப்பினேன் என்றால், அந்தக் கொடிய பாவகரச் செயலில் இருந்து நான் எப்போதும் தப்ப முடியாது.(9) தனது வீடு தேடி வந்தவரையோ, தன்னிடம் தஞ்சமடைந்தவர்களையோ கைவிடுவதும், தன்னிடம் மரணம் வேண்டுபவனைக் கொல்வதும் கொடூரமான பாவகரச் செயல்களாகும் என்று கல்விமான்கள் கூறியிருக்கிறார்கள்.(10)
துயர் நிறைந்த காலத்தில் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட செயல்களை அறிந்த சிறந்தவர்கள், இது போன்ற கொடூரக் காரியங்களைச் செய்யக்கூடாது என்கின்றனர்.(11) நான் இன்று எனது மனைவியுடன் அழிவதே சிறந்தது. ஆனால் ஒரு பிராமணனின் மரணத்தை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்றான் {அந்தப் பிராமணன்}.(12)
குந்தி, "ஓ பிராமணரே! நானும் ஒரு பிராமணன் எப்போதும் காக்கப்பட வேண்டும் என்று உறுதியான கருத்தையே வைத்திருக்கிறேன். ஐந்து மகன்களுக்குப் பதில் எனக்கு நூறு மகன்கள் இருந்தாலும், நான் எவரிடமும் குறைவான அன்பு வைக்க முடியாது.(13) அவர்கள் அனைவரையும் என்னைப் போலவே நான் நினைப்பேன். ஆனால் இந்த ராட்சசனால் எனது மகனைக் கொல்ல முடியாது. ஏனென்றால் எனது மகன் பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவனாவான். அவனுக்கு மந்திரங்களிலும் நிபுணத்துவம் உண்டு.(14) அவன் அந்த ராட்சசனுக்கு நன்றியுடன் அவனது உணவைக் கொடுப்பான். ஆனால், அவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.(15)
பெரும் உடல் கொண்ட பல ராட்சசர்கள் எனது வீர மகனிடம் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். இறுதியில் அவர்கள் எனது மகன் கையால் கொல்லப்பட்டுள்ளனர்.(16) ஆனால், ஓ பிராமணரே! இக்காரியத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர். ஏனென்றால், இப்படிப்பட்ட சக்தியை அடையவிரும்பும் மனிதர்களின் ஆவலால், எனது மகன்களுக்குப் பிரச்சனைகள் எழும்.(17) தனது குருவுக்குத் தெரியாமல் இந்த ஞானத்தை வேறு ஒருவனுக்கு என் மகன் கொடுத்தால், அவனுக்கு {என் மகனுக்கு} அந்த ஞானம் பயன்படாது என்று ஞானமுள்ளவர்கள் சொல்லியிருக்கின்றனர்" என்றாள் {குந்தி}.(18)
பிருதையால் இப்படிச் சொல்லப்பட்டதும், அந்த பிராமணன் தனது மனைவியுடன் மகிழ்ச்சியடைந்து, அமுதத்தைப் போன்ற குந்தியின் பேச்சை ஏற்றுக் கொண்டான்.(19) அப்போது குந்தி, அந்த பிராமணனை அழைத்துக் கொண்டு, வாயுவின் மகனிடம் (பீமனிடம்) சென்று, காரியத்தை முடித்துக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அதற்குப் பீமன், "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)

ஆங்கிலத்தில் | In English |