Yudhishthira rebuked Kunti! | Adi Parva - Section 164 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : பிச்சை எடுக்கச் சென்ற பாண்டவர்கள் திரும்பி வந்தது; பீமன் பகாசுரனிடம் செல்லப்போவதைக் கேட்டு மிகவும் துயரமடைந்த யுதிஷ்டிரன்; குந்தியைக் கடிந்து கொண்ட யுதிஷ்டிரன்; பீமனை ஆற்றலை எடுத்துச் சொல்லி அவனைத் தேற்றிய குந்தி...
வைசம்பாயனர் சொன்னார், "காரியத்தை முடிப்பதாகப் பீமன் "செய்கிறேன்" என்று உறுதி கூறிய பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த நாளைக்கான தங்கள் பிச்சையைப் பெற்றுப் பாண்டவர்கள் வீடு திரும்பி வந்தனர்.(1) அப்போது பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், பீமனின் முகத்தோற்றத்தை வைத்து, அவன் சாதிக்க நினைத்திருக்கும் காரியத்தின் இயல்பை ஊகித்தான். தனது தாயின் அருகில் அமர்ந்த யுதிஷ்டிரன், அவளிடம் கமுக்கமாக,(2) "ஓ தாயே, பெரும் வலிமைமிக்கவனான பீமன் சாதிக்க நினைக்கும் காரியம் என்ன? அவன் உனது கட்டளையின் பேரில் அக்காரியத்தைச் செய்யப் போகிறானா? அல்லது சொந்த விருப்பத்தில் செய்யப் போகிறானா?" என்று கேட்டான்.(3)
குந்தி, "எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், எனது கட்டளையின் பேரில், ஒரு பிராமணனுக்கு நன்மை செய்து, {ராட்சசனிடம் இருந்து} இந்த நகரத்தை விடுவிக்கும் செயற்கரிய காரியத்தைச் செய்யப் போகிறான்" என்றாள்.(4)
யுதிஷ்டிரன், "ஓ தாயே, என்ன கடுங்காரியம் செய்துவிட்டாய்? இந்தச் செயற்கரிய கடினமான காரியம் தற்கொலைக்கு ஒப்பானதாகும். ஒருவன் தனது சொந்தக் குழந்தையைக் கைவிடுவதைக் கற்றோர் மெச்சுவதில்லை.(5) ஓ தாயே, மற்றவர்களுக்காக உனது சொந்த மகனையே தியாகம் செய்ய ஏன் விரும்புகிறாய்? ஓ தாயே, உனது பிள்ளையை இப்படிக் கைவிடுவதனால், நீ மனிதச் செயல்களுக்கு எதிராக மட்டுமல்ல, வேதங்களின் படிப்பினைகளுக்கும் எதிராகச் செயல்படுகிறாய்.(6) பீமனின் கர வலிமையை நம்பியே நாம் இரவில் மகிழ்ச்சியுடன் உறங்குகிறோம். திருதராஷ்டிரனின் தீய மகன்களிடம் இருந்து நாட்டை மீட்கும் காரியமும் அவனை நம்பியே இருக்கிறது.(7) எந்தப் பீமனின் பேராற்றலை நினைத்து துரியோதனனும் சகுனியும் விழிதட்டாமல் இரவு முழுவதும் உறங்குவதில்லையோ,(8) எந்தப் பீமன் நம்மை அரக்கு மாளிகை அபாயத்திலிருந்து மீட்டானோ, புரோசனனின் மரணத்திற்குக் காரணமான அந்தப் பீமனின் ஆற்றலை நம்பியே, திருதராஷ்டிரனின் மகன்கள் அழிந்து விட்டதாகவும், உலகத்திலுள்ள அனைத்துச் செல்வங்களையும் அடைந்துவிட்டதாகவும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.(9,10) ஓ தாயே நீ அவனைக் கைவிடுவதாக முடிவு செய்துவிட்டாயா? நீ உன் சுயநினைவை இழந்து விட்டாயா? துயரங்கள் மேகமாகச் சூழ்ந்து உனது புத்தியைக் கெடுத்துவிட்டனவா?" என்றான்.(11)
தனது மகனிடம் இருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட குந்தி, "ஓ யுதிஷ்டிரா, விருகோதரனைக் {பீமனைக்} குறித்து நீ வருத்தப்படாதே. எனது புத்தியின் பலவீனத்தால் நான் இந்த முடிவை எடுக்கவில்லை.(12) திருதராஷ்டிரன் மகன்களுக்குத் தெரியாமல் நாம் இந்த பிராமணரின் இல்லத்தில் கவலையில்லாமல் வாழ்ந்து வருகிறோம். அவரும் நம்மைப் பெரிதும் மதிக்கிறார்.(13) ஓ மகனே, அதற்குக் கைம்மாறாக இதைச் செய்யத் தீர்மானித்தேன். செய்ந்நன்றியையும் நற்குணங்களையும் இழக்காதவனே மனிதன் ஆவான்.(14)
ஒருவனுக்குப் பிறர் செய்யும் காரியங்களை விடப் பலமடங்கு அதிகமாக அவன் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அரக்கு மாளிகை நிகழ்ச்சியிலும், ஹிடிம்பனின் அழிவிலும் பீமனின் வீரத்தை நான் கண்டிருக்கிறேன். விருகோதரனிடம் {பீமனிடம்} எனக்கிருக்கும் நம்பிக்கை பெரியது. பீமனது கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானதாகும்.(15,16) அதனாலேயே, அவனால், யானை கனம் கொண்ட உங்கள் ஒவ்வொருவரையும் வாரணாவதத்திலிருந்து சுமந்து கொண்டு வர முடிந்தது. பீமனின் பலத்திற்கு ஈடாக இந்த உலகத்தில் யாரும் இல்லை; இடியைக் கையில் தாங்கி நிற்கும் போர்வீரர்களின் முதன்மையானவனையே {இந்திரனையே} அவன் வென்றுவிடுவான்.(17) அவன் பிறந்தவுடன், எனது மடியில் இருந்து, மலையின் சாரலில் விழுந்தான். அவனது உடலின் கனத்தால் அவன் விழுந்த பாறை துண்டு துண்டாக உடைந்து போனது.(18)
ஓ பாண்டுவின் மைந்தனே, இதிலிருந்தும் நான் பீமனின் பலத்தை அறிந்து கொண்டேன். இந்தக் காரணங்களுக்காகவே, பிராமணனின் எதிரிக்கு எதிராக, நான் அவனை நிறுத்தத் தீர்மானித்தேன்.(19) நான் முட்டாள்தனமாகவோ, அறியாமையாலோ அல்லது ஏதேனும் லாப நோக்கத்தோடோ இப்படிச் செயல்படவில்லை. அறச்செயல் செய்வதற்காகவே இந்த முடிவை வலிந்து எடுத்தேன்.(20) ஓ யுதிஷ்டிரா, இச்செயலால் இரு காரியங்கள் சாதிக்கப்படும்; ஒன்று பிராமணனுக்கான செய்ந்நன்றியைச் செய்வது, மற்றொன்று உயர்ந்த அறத்தகுதியை அடைவது.(21)
பிராமணனுக்கு உதவி செய்யும் க்ஷத்திரியன், அதன் பிறகு ஆனந்தமான உயர்ந்த பகுதிகளை {சொர்க்கத்தை} அடைவான் என்பது எனது உறுதி.(22) அப்படியே ஒரு க்ஷத்திரியனின் உயிரைக் காப்பாற்றும் மற்றொரு க்ஷத்திரியன் மறுவுலகில் பெறுவது போல இவ்வுலகிலும் பெரும் புகழ் பெறுவான்.(23) ஒரு வைசியனுக்கு உதவும் க்ஷத்திரியன் இவ்வுலகத்தில் பெரும் புகழ் பெறுவான்.(24) மன்னர் இனம் தன்னைத் தஞ்சமடையும் சூத்திரனையும் காக்க வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்தப் பிறவியில் அவன் ஓர் அரசகுடும்பத்திலோ அரசவழியிலோ பிறந்து, வளமை பெற்று, மற்ற மன்னர்களின் மரியாதையைப் பெற்றிருப்பான்.(25) ஓ பூருகுலத்தில் முளைத்த வழித்தோன்றலே, கடந்து சென்ற நாட்களில் சிறப்புவாய்ந்த ஞானி வியாசர், கடுந்தவம் செய்து தான் கண்டதை என்னிடம் சொன்னார். எனவே, இந்தக் காரியத்தைச் செய்யும் தீர்மானத்துக்கு நான் வந்தேன்" என்றாள் {குந்தி}.(26)

ஆங்கிலத்தில் | In English |