The Fight between Bhima and Vakasura! | Adi Parva - Section 165 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : மறுநாள் காலையில் பிராமணன் கொடுத்த உணவை வண்டியிலேற்றிக் கொண்டு, பகாசுரன் வசிக்கும் காட்டுக்குச் சென்ற பீமன்; ஓரிடத்தில் அமர்ந்து தான் கொண்டு வந்த உணவை உண்டது; அதைக் கண்டு பீமனுடன் மோத வந்த பகாசுரன்; பகாசுரனை இரத்தம் கக்கச் செய்த பீமன்...
தனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ தாயே, துயருற்ற பிராமணன் மீது இரக்கப்பட்டு, நீ வலிந்து செய்த காரியம் நிச்சயமாக சிறப்பானதேயாகும்.(1) ஓ தாயே, நீ பிராமணர்களிடம் இரக்கப்பட்டு அனுப்புவதால், நிச்சயமாகப் பீமன் அந்த மனித ஊனுண்ணியைக் கொன்று உயிருடன் திரும்புவான்.(2) ஆனால், ஓ தாயே, இந்த நகரத்தில் வசிப்பவர்களிடத்தில் யாதொன்றையும் சொல்லாமல், தனது உறுதிமொழியை {சத்தியத்தைக்} காக்குமாறு அந்த பிராமணரிடம் சொல்வாயாக" என்றான்".(3)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இரவு கழிந்ததும், பாண்டு மைந்தன் பீமன், ராட்சசனுக்கான உணவை எடுத்துக் கொண்டு அந்த நரமாமிச உண்ணி இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(4) பாண்டுவின் வலிமைமிக்க மகன் {பீமன்}, அந்த ராட்சசன் வசித்த கானகத்தை அணுகித் தான் கொண்டு சென்ற உணவைத் தானே உண்ணத் தொடங்கி, அந்த ராட்சசனைப் பெயர் சொல்லி உரக்க அழைத்தான்.(5) பீமனின் வார்த்தைகளைக் கேட்ட ராட்சசன், எரியும் கோபத்துடன் வெளியே வந்து, பீமன் இருக்கும் இடத்தை நெருங்கினான்.(6) பெரும் உடலும், பெரும் பலமும் கொண்டு, கண்கள் சிவக்கச் சிவந்த தாடி மற்றும் தலை மயிருடன் கூடிய அவன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். தனது பாதச் சுவடுகளால் பூமியை ஆழமாக அழுத்தினான்.(7) அவனது வாய் ஒரு காதிலிருந்து அடுத்த காது வரை விரிந்து திறந்திருந்தது. அவனது காதுகள் கணைகளின் முனைகளைப் போல இருந்தன. கடும் முகத்துடன், மூன்று கோடுகளுடன் பள்ளமான நெற்றியும் கொண்டிருந்தான் அந்த ராட்சசன்.(8)
தனது உணவை உண்ணும் பீமனைக் கண்டு, தனது உதடுகளைக் கடித்துக் கொண்டு, கோபத்தால் கண்களை அகல விரித்துப் பீமனிடம்,(9) "என் கண்ணெதிரிலேயே எனது உணவை உண்டு, எமனுலகு செல்ல விரும்பும் இந்த முட்டாள் யார்?" என்றான்.(10)
ஓ பாரதா {ஜனமேஜயா!} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமன், அந்த ராட்சசனை மதிக்காமல் ஏளனமாகச் சிரித்து, முகத்தைத் திருப்பாமலேயே உண்பதைத் தொடர்ந்தான்.(11) இதைக்கண்ட அந்த மனித ஊனுண்ணி, தனது இரு கரங்களையும் உயர்த்திக் கொண்டு பேரொலியுடன் பீமனை அங்கேயே, அப்போதே கொன்று போடுவதற்காக அவனை நோக்கி ஓடினான்.(12) எதிரி வீரர்களை அழிக்கும் விருகோதரன் {பீமன்}, அந்த ராட்சசன் மேல் தன் சிறு பார்வையை மட்டும் வீசி, மீண்டும் அவனை மதிக்காமல், ராட்சசனின் உணவைத் தொடர்ந்து உண்டான்.(13) கோபம் நிறைந்த அந்த ராட்சசன், குந்தியின் மகனான விருகோதரனை, தனது இரு கரங்களையும் ஓங்கிப் பின்னாலிருந்து வலிமையாக அடித்தான்.(14) இப்படித் தாக்கப்பட்ட பீமன், அதைச் சிறிதும் மதிக்காமல், ராட்சசனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தொடர்ந்து உண்டு கொண்டிருந்தான்.(15)
வலிமைமிக்கவனான அந்த ராட்சசன், எரியும் கோபத்துடன், ஒரு மரத்தைப் பிடுங்கி, பீமனைத் தாக்குவதற்காக அவனிடம் ஓடினான்.(16) இதே வேளையில், மனிதர்களில் காளையான பலம்பொருந்திய பீமன், ஓய்வாக மொத்த உணவையும் உண்டு. தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, மோதலுக்காக மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றான்.(17) பிறகு, ஓ பாரதா, பெரும் சக்தி கொண்ட பீமன் ஏளனமாகச் சிரித்து, கோபம் கொண்ட ராட்சசன் வீசிய மரத்தைத் தனது இடது கையால் பிடித்தான்.(18) அந்த வலிமைமிக்க ராட்சசன், பல மரங்களைப் பிடுங்கி வந்து பீமன் மீது எறிந்தான். அந்தப் பாண்டவனும் அதே அளவுக்கு ராட்சசன் மீது எறிந்தான்.(19) பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதனுக்கும் ராட்சசனுக்கும் இடையில் மரங்களைக் கொண்டு நடக்கும் போர் உக்கிரமடைந்து, அந்தப் பகுதியே மரங்களற்றுப் போனது.(20)
அப்போது, அந்த ராட்சசன், தானே பகன் என்று சொல்லிக் கொண்டு, அந்தப் பாண்டவன் மீது பாய்ந்து, பெரும் பலம் வாய்ந்த பீமனைத் தனது கரங்களால் பற்றினான்.(21) அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்டவனும் {பீமனும்}, வலிய கரங்களைக் கொண்ட அந்த ராட்சசனைக் கட்டிப் பிடித்து, உற்சாகமவும் வன்முறையுடனும் தனது சக்தியை வெளிப்படுத்தினான்.(22) அந்த ராட்சசன், பீமனால் இழுத்துச் செல்லப்பட்டும், பீமனைத் தான் இழுத்தும் பெரும் களைப்படைந்தவனான.(23) இந்த இருவரின் பெரும் பலத்தால் பூமாதேவி நடுங்கினாள். பெரும் மரங்கள் துண்டு துண்டாகின.(24)
பீமன், ராட்சசன் களைப்படைந்ததைக் கண்டு, அவனைக் தனது கால் முட்டிகளால் பூமியில் அழுத்தி, பெரும் பலத்துடன் தாக்கத் தொடங்கினான்.(25) பீமன், தனது கால்முட்டியை ராட்சசனின் நடு முதுகில் வைத்துக் கழுத்தைத் தனது வலக்கையால் பிடித்து, அவனது {ராட்சசனின்} இடுப்பு ஆடையை இடது கையால் பிடித்து, பெரும் பலத்துடன் அவனை இரண்டாக மடித்துப் போட்டான். அந்த நரமாமிச உண்ணி {பகாசுரன்} பயங்கரமாக அலறினான்.(26,27) ஓ ஏகாதிபதியே! இப்படிப் பீமனின் முட்டியால் ஒடிக்கப்பட்ட அந்த ராட்சசன், குருதியைக் கக்கத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(28)

ஆங்கிலத்தில் | In English |