The rise of a new festival! | Adi Parva - Section 166 | Mahabharata In Tamil
(பக வத பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : பகன் கொல்லப்பட்டதும், அவனுடைய சொந்தங்கள் பீமனுடன் உடன்படிக்கை செய்து கொண்டது; ஏகச்சக்கர நகரத்தின் வாயிலில் பகாசுரனின் உடலைக் கிடத்திய பீமன்; பிராமணனின் வீட்டை அடைந்து, நடந்த கதையைச் சொன்ன பீமன்; பகனுடைய மரணத்தைத் திருவிழாவாகக் கொண்டாடிய அந்த நகரத்து மக்கள்...
வைசம்பாயனர் சொன்னார், "பெரும் மலையைப் போன்ற பகன், இப்படி (பீமனின் முட்டியால்) ஒடிக்கப்பட்டு, பயங்கரமாகக் கதறியபடியே இறந்தான்.(1) இச்சத்தங்களால் அச்சமடைந்த ராட்சசனின் உறவினர்கள் தங்கள் பணியாட்களுடன் வெளியே வந்தனர்.(2) உணர்வையிழந்து அச்சமடைந்திருக்கும் அவர்களைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தப் பீமன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை (நரமாமிசம் உண்பதைக் கைவிடுவோம் என்று) உறுதியேற்க வைத்து,(3) "இனி மேல் மனிதர்களைக் கொல்லாதீர்கள். அப்படி மனிதர்களைக் கொன்றீர்கள் என்றால், நீங்களும் பகனைப் போலச் சாக வேண்டியதுதான்." என்றான்.(4)
ஓ மன்னா {ஜனமேஜயா} பீமனின் பேச்சைக் கேட்ட ராட்சசர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, பீமன் விரும்பிய உறுதியை ஏற்றனர்.(5) ஓ பாரதா {ஜனமேஜயா} அந்நாளிலிருந்து, (அந்தப் பகுதியைச் சேர்ந்த) ராட்சசர்கள் மனிதர்களுடன் சமாதானமாக வாழ்வதையே அந்த நகரவாசிகள் கண்டனர்.(6) பிறகு பீமன், உயிரற்ற அந்த நரமாமிச உண்ணியை இழுத்துச் சென்று நகரத்தின் வாயில்கள் ஒன்றில் கிடத்தி, யாரும் கவனிக்கும் முன்பே அங்கிருந்து சென்றுவிட்டான்.(7) பகனின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள், பீமனின் பலத்தால் அவன் கொல்லப்பட்டதைக் கண்டு, மிகவும் அஞ்சி, பல திசைகளில் தப்பி ஓடினர்.(8) அதே நேரத்தில், அந்த ராட்சசனைக் கொன்ற பிறகு, பீமன் அந்தணரின் வசிப்பிடத்திற்குத் திரும்பி, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையையும் விவரமாகக் கூறினான்.(9)
அடுத்த நாள் காலையில் வெளியே வந்த நகரவாசிகள், உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்து, தரையில் பிணமாகக் கிடக்கும் ராட்சசனைக் கண்டனர்.(10) பெரும் மலையைப் போன்ற அந்த நரமாமிச உண்ணி, சின்னாபின்னமாகச் சிதைக்கப்பட்டு தரையில் கிடப்பதைக் கண்ட பார்வையாளர்களின் முடிகள் சிலிர்த்துக் கொண்டு நின்றன.(11) அவர்கள் விரைவாக ஏகசக்கரம் திரும்பி, தாங்கள் கண்டதைத் தெரிவித்தனர். ஓ மன்னா, அதன் பிறகு, அந்நகர குடிமக்களில் இளமையானவர்களும், முதுமையானவர்களும் ஆயிரக்கணக்கில் தங்கள் மனைவியருடன் வந்து பகனைக் கண்டு, அதை ஒரு அமானுஷ்ய மனிதனின் சாதனை என்று கருதி மலைத்து நின்றனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, உடனே அவர்கள் தங்கள் தேவர்களிடம் வேண்டிக் கொள்ளத் தொடங்கினர்.(12,13)
அதன்பிறகு, அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்த ராட்சசனுக்கு உணவு எடுத்துச் செல்லும் முறை யாருக்கு வருகிறது என்று அவர்கள் அனைவரும் கணக்கிட்டனர். பிறகு சரியாக உறுதி செய்து கொண்டு, அவர்கள் அனைவரும் (தங்கள் ஆவலைத் தணித்துக் கொள்ள) அந்த அந்தணனிடம் வந்து கேட்டனர்.(14) இப்படியே தொடர்ச்சியாகக் கேட்கப்பட்ட அந்த அந்தணர்களில் காளையானவன், பாண்டவர்களை மறைக்க எண்ணி, குடிமக்களிடம்,(15) "நான் ராட்சசனின் உணவை எடுத்துச் செல்லப் பணிக்கப்பட்ட பிறகு, எனது உறவினர்களுடன் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது மந்திரங்கள் அறிந்த ஒரு உயர் ஆன்ம அந்தணர்,(16) நகரத்தின் துயரத்தை உறுதி செய்து கொண்டு, என்னிடம் வந்து நான் அழும் காரணத்தையும் கேட்டார். அதன் பிறகு அந்த அந்தணர்களின் முதன்மையானவர், புன்னகையுடன் எனக்கு அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து,(17) "இன்று அந்த ராட்சசப் பாவிக்கு நான் உணவு எடுத்துச் செல்கிறேன். நீ எனக்காகப் பயப்படாதே!" என்று சொல்லி,(18) உணவை எடுத்துக் கொண்டு பகன் வசித்த கானகத்திற்குச் சென்றார். நம் அனைவருக்கும் நன்மையாக அமைந்த இந்தக் காரியம் நிச்சயமாக அவராலேயே ஆனது." என்றான்.(19)
பிறகு அந்த (நகரத்தின்) அந்தணர்களும், க்ஷத்திரியர்களும் இதைக் கேட்டு பெரிதும் ஆச்சரியமடைந்தனர். வைசியர்களும், சூத்திரர்களும் இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(20) பிறகு, குடிமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதில் (பகன் மீதிருந்த அச்சத்திலிருந்து விடுவித்த அந்தணரின் {பீமனின்} நினைவாக) அந்தண வழிபாடே முக்கிய சடங்காக இருந்தது[1]" {என்றார் வைசம்பாயனர்}.(21)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 21ம் ஸ்லோகத்தில், "அந்த இயல்புக்கு மிக்க சாதனையைக் கண்டு இவ்வாறு மகிழ்ச்சியடைந்த குடிமக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். பாண்டவர்களும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்" என்றிருக்கிறது. புதிய பண்டிகை குறித்த குறிப்பேதும் இல்லை. கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களனைவரும் மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமுமுற்றவர்களாகி, அப்போதே பிராம்மண பூஜை செய்தனர். பிறகு, கிராமணங்களிலுள்ளவர்கள் அனைவரும் அந்த மிகுந்த ஆச்சரியத்தைப் பார்ப்பதற்கு அந்த நகரத்திற்கு வந்தனர். பாண்டவர்களும் அங்கேயே வசித்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இதன்பேரில் ஆச்சரியமடைந்த திளைத்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும், சூத்திரர்கள் அனைவரும், அந்தப் பிராமணனுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தனர். அந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் அந்த இயல்புக்கு மிக்க ஆச்சரியத்தைக் காண வந்தனர். பிருதையின் மகன்களும் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்தனர்" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |