Supernatural Births! | Adi Parva - Section 167 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : பிராமணன் வீட்டிற்கு வந்த புதிய விருந்தினர்; திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதியின் அமானுஷ்ய பிறப்புகளைக் குறித்துச் சொன்னது; திரௌபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைக் குறித்தும் சொன்னது...
{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, "குடிமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, பாண்டவர்கள் அந்த ஏகச்சக்கர நகரத்தில் முன்பு போலவே தொடர்ந்து வசித்தனர்".
ஜனமேஜயன், "ஓ பிராமணரே! ராட்சசன் பகனைக் கொன்ற பிறகு, மனிதர்களில் புலியான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர், "ஓ மன்னா, ராட்சசன் பகனைக் கொன்ற பிறகும், பாண்டவர்கள் அந்த பிராமணரின் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து, வேதம் படிப்பவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டனர்.(2) சில நாட்களுக்குள், கடும் நோன்புகள் நோற்ற ஒரு பிராமணர் அந்த வீட்டிற்கு வந்து தங்கினார்.(3) அந்த பிராமணர்களில் காளையானவன் விருந்தினர்களை நன்கு உபசரித்து, புதிதாக வந்த பிராமணரையும் தகுதி வாய்ந்த வழிபாடுகள் நடத்தி வரவேற்றுத் தனது இல்லத்தில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்தான்.(4) அப்போது, மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், தங்கள் தாயுடன் அமர்ந்து, புதிய விருந்தினரின் சுவாரசியமான அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.(5)
அந்த பிராமணர் அவர்களிடம் பல்வேறு நாடுகள், புண்ணியம் நிறைந்த இடங்கள், ஆறுகள், மன்னர்களின் பல அற்புதமான மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பற்றியும் விவரித்தார்.(6) இந்த விவரிப்பு முடிந்ததும், ஓ ஜனமேஜயா! அந்த பிராமணர், யக்ஞசேனன் {துருபதன்} மகளான பாஞ்சால இளவரசியின் அற்புதமான சுயம்வரம் குறித்தும்,(7) திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியின் பிறப்புக் குறித்தும், மற்றும் எந்தவிதப் பெண் தொடர்பும் இல்லாமல் துருபதனின் வேள்வியில் பிறந்த கிருஷ்ணையின் (திரௌபதியின்) பிறப்பைக் குறித்தும் சொல்லத் தொடங்கினார்.(8) அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், அந்தச் சிறப்புவாய்ந்த ஏகாதிபதியின் இயல்புக்குமிக்கக் கதைகளைக் கேட்டுக் கொண்டனர். பிராமணர் விவரிப்பை முடித்ததும், மேலும் விவரங்களை அறிய விரும்பி, அதைக் கேட்டுத் தங்கள் ஆவலைத் தணித்துக் கொண்டனர்.(9)
பாண்டவர்கள், "ஓ பிராமணரே! துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனின் பிறப்பு வேள்வி நெருப்பிலா நிகழ்ந்தது? வேள்வி மேடையில் கிருஷ்ணையின் இயல்புக்கு மிக்கப் பிறப்பு எப்படி நேர்ந்தது? துருபதனின் மகன் எப்படி எல்லா ஆயுதப் பயிற்சிகளையும் பெரும் வில்லாளியான துரோணரிடம் கற்றான்? ஓ பிராமணரே! துரோணர் மற்றும் துருபதனின் நட்பு, எப்படி? யாருக்காக? என்ன காரணத்திற்காக உடைந்தது?" என்று கேட்டனர்.(10,11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட அந்த மனிதர்களில் காளையான பிராமணர், திரௌபதியின் பிறப்புக் குறித்து அனைத்து விவரங்களையும் விவரித்தார்".(12)

ஆங்கிலத்தில் | In English |