தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக கருதப்படும் மஹாபாரதம் கும்பகோணப்
பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய
வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து
விட்டன.
இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் புத்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர்.
இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
நேரடியாக சமஸ்கிருதத்தில்
இருந்து, ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதத்தையும் (பதினெட்டு
பர்வங்களையும்) டி.வி.ஸ்ரீனிவாஸசாரியார் அவர்களும் மற்றும் பலரும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்து, திரு. ம.வீ. இராமானுஜாசாரியால்
அவர்களால் தொகுக்கப்பட்டது.
இந்த மாபெரும் பணிக்குப் பின் 27 வருட உழைப்பும் தியாகமும் பல நல்லுள்ளங்கள் செய்த உதவிகளும் உள்ளன. சிலிர்ப்பூட்டும் அந்த வரலாற்றை ”மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியர்” என்ற இந்தக் கட்டுரையில் வாசிக்கலாம்.
இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை நண்பர்
திரு.சிவபிரசாத் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அவர் குறைந்தது நூறு
பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக
வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு
வருவதாகவும் சொல்லியிருக்கிறார்.
இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும்.
விலை ரூ.4000 அல்லது அதற்கு சற்று மேல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது முன்பதிவைச் செய்து கொள்ளலாம்.
மேற்கண்டவை திரு.மாரியப்பன் அவர்கள் சொல்லியது என்று தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்கள்.
கீழ்க்கண்ட விஷயம் திரு.வள்ளுவர் விஸ்வநாதன் (மலேசியா) நமக்குத் தெரிவித்தது.
இந்தப் பதிப்பு வர வேண்டுமென்றால் குறைந்தது இருநூறு பேராவது
முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் இது வரை நூறு பேர் இத்திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.
நண்பர்களே! விரைந்து
முன்பதிவு செய்து கொண்டு உங்கள் ஆதரவைத் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கும்பகோணம் பதிப்பு குறித்து இட்லி வடை வலைப்பூவில் வந்துள்ள சில பின்னூட்டங்களையும் அறிய இதை கிளிக் செய்யுங்கள்.
கும்பகோணம் பதிப்பு குறித்து இட்லி வடை வலைப்பூவில் வந்துள்ள சில பின்னூட்டங்களையும் அறிய இதை கிளிக் செய்யுங்கள்.
ஆகையால்,
ஓ ஏகாதிபதி, காலந்தாழ்த்தாமல், பாண்டவர்கள் தங்கள் மனைவியுடன் அங்கே செல்ல
நீர் அனுமதிக்க வேண்டும். ஓ மன்னா, சிறப்புமிகுந்த பாண்டவர்களுக்கு அங்கே
செல்ல உமது அனுமதி கிடைத்ததும், நான் திருதராஷ்டிரனுக்கு விரைவான தூதர்கள்
மூலம் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன். பிறகு, ஓ மன்னா, பாண்டவர்கள்,
குந்தியுடனும் கிருஷ்ணையுடன் கிளம்பட்டும்" என்றான் {விதுரன்}. - See more
at:
http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section208.html#sthash.dzJDO2tD.dpuf