Vidura said, "Don't Listen to wretches" | Adi Parva - Section 207 | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : விதுரன் பீஷ்மருக்கும், துரோணருக்கும் ஆதரவாகப் பேசுவது; துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனியைப் பாவிகள், முட்டாள்கள், சிறுவர்கள் என்று விதுரன் பழித்தது; துரியோதனன் தவறால் நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தது...
வைசம்பாயனர் சொன்னார், "துரோணர் முடித்ததும், விதுரன் ஆரம்பித்தான், "ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது நண்பர்கள் உமக்கு நன்மையையே சொல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், உமக்கு அதைக் கேட்பதில் விருப்பமில்லை எனவே, அந்த வார்த்தைகளுக்கு உமது காதில் இடம் கிடைக்கவில்லை.(1) சந்தனுவின் மகனும், குருகுலத்தவரில் முதன்மையானவருமான பீஷ்மர் சொன்னது அற்புதமானதும், உமது நன்மைக்கானதும் ஆகும். ஆனால் நீர் அதைக் கேட்க மறுக்கிறீர்.(2) ஆசானான துரோணர் சொல்வதும் உமது நன்மைக்கே, ஆனால் அதைக்கூட ராதையின் மகனான கர்ணன் மதிக்க மறுக்கிறான்.(3) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாலும், மனிதர்களில் சிங்கங்களான இந்த இருவரைவிடச் {பீஷ்மர், துரோணர்} சிறந்த நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்.(4) ஓ மன்னா, வயதில் மூத்தவர்களும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்தவர்களான இந்த இருவரும், எப்போதும் உம்மையும், பாண்டுவின் மகன்களையும் சமமான பார்வையிலேயே மதிக்கிறார்கள்.(5)
ஓ பாரதக் குலத்தின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் இருவரும் அறத்தில் ஆகட்டும், உண்மை பேசுவதில் ஆகட்டும் தசரதனின் மகன் ராமனுக்கும், கயனுக்கும் எந்தவிதத்திலும் இளைத்தவர்கள் இல்லை.(6) இதற்கு முன்பு அவர்கள் உமக்கு எந்தத் தீய ஆலோசனையும் வழங்கியது கிடையாது. ஓ மன்னா, நீரும் அவர்களுக்கு எந்தக் காயத்தையும் ஏற்படுத்தியது கிடையாது. எனவே, எப்போதும் உண்மையுடன் நடந்து கொள்ளும் இந்த மனிதப் புலிகள், குறிப்பாக நீர் அவர்களைக் காயப்படுத்தாது இருக்கும்போது உமக்குத் தீய ஆலோசனையை ஏன் வழங்க வேண்டும்?(7,8) ஞானம் கொண்ட இந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், நேர்மையற்ற ஆலோசனைகளை உமக்கு வழங்கமாட்டார்கள்.(9) ஓ குரு குலத்தின் வழித்தோன்றலே {திருதராஷ்டிரரே}, அறவிதிகளை நன்கு அறிந்த இந்த இருவரும், செல்வத்திற்கு மயங்கி, பாகுபாட்டுடன் உங்களை ஏமாற்ற எதையும் சொல்ல மாட்டார்கள் என்பது என் உறுதியான நிலைப்பாடாகும்.(10)
ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, அவர்கள் சொன்னது அனைத்தும் உமது நன்மைக்கு ஆனதாகவே நான் கருதுகிறேன். ஓ ஏகாதிபதியே, துரியோதனனையும் மற்றவர்களையும் போலவே பாண்டவர்களும் உமது மகன்களே ஆவர் என்பதில் ஐயமில்லை.(11) எனவே, பாண்டவர்களைக் குறித்துத் தீய ஆலோசனைகள் வழங்கும் உமது ஆலோசகர்களுக்கு, உமது நலனில் அக்கறை இல்லை எனக் கொள்வீராக.(12) உமது பிள்ளைகள் குறித்து உமது இதயத்தில் ஏதாவது பாகுபாடு இருக்குமேயானால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அதை வெளிக்கொணர வகைசெய்யும் {உமது இந்த} ஆலோசகர்கள் உமக்கு நன்மையைச் செய்யவில்லை என்பது உறுதியாகும்.(13) எனவே, ஓ மன்னா, இந்தப் பெரும் பிரகாசமுடையவர்களானச் சிறப்பு மிகுந்தவர்கள் {பீஷ்மரும், துரோணரும்}, தீயவற்றிற்கு வழி கோலும் எதையும் சொல்லவில்லை என நான் நினைக்கிறேன். இருப்பினும் நீர் இதைப் புரிந்து கொள்ளவில்லை.(14) வெற்றிகொள்ளப்பட முடியாத பாண்டவர்களைப் பற்றி இந்த மனிதக் காளைகள் {பீஷ்மரும், துரோணரும்} சொன்னவை முற்றிலும் உண்மையே. ஓ மனிதர்களில் புலியே, அதுகுறித்து வேறுவிதமாக நினைக்காதீர். நீர் அருளப்பட்டு இருப்பீராக.(15)
பாண்டுவின் மகனும், அழகனும், வலக்கையையும், இடக்கையையும் இணையான சக்தியுடன் பயன்படுத்துபவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனை} மகவத்தே {இந்திரனே} வந்தாலும் போரில் வெல்ல முடியுமா?(16) பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பெரும் பீமசேனனை தேவர்களாலும் வெல்ல முடியுமா?(17) உயிர்வாழ ஆசைப்படுபவர்கள் யாரேனும், யமனின் பிள்ளைகளைப் போல இருக்கும் அந்த இரட்டையர்களை {நகுலனையும், சகாதேவனையும்} போரில் வெல்ல முடியுமா?(18) அமைதி, கருணை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை {சத்தியம்}, ஆற்றல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து வாழும் பாண்டவர்களில் மூத்தவனை {யுதிஷ்டிரனை} யாரால் எப்படி வெல்ல முடியும்?(19) ராமனை (பலதேவனை {பலராமனைத்}} தங்கள் கூட்டாளியாகக் கொண்டு, ஜனார்த்தனனை (கிருஷ்ணனை) ஆலோசகராகக் கொண்டு, சாத்யகியை தங்கள் ஆதரவாளனாகவும் கொண்ட அவர்கள் ஏற்கனவே எல்லோரையும் போரில் வீழ்த்திவிட்டனர். துருபதனைத் தங்கள் மாமனாராகக் கொண்டு, துருபதனின் மகன்களான, திருஷ்டத்யும்னன் மற்றும் பிருஷதனின் குலத்தில் வந்த பிற மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்கள், நிச்சயம் வெல்ல முடியாதவர்கள் ஆவர்.(20)
ஓ ஏகாதிபதியே, இவையாவற்றையும் மனத்தில் கொண்டு, நாட்டின் மீது அவர்களின் உரிமை கோரல், உங்கள் உரிமையை விடப் பழையது {முதன்மையானது} என்பதை எண்ணி அவர்களிடம் அறத்தின் {தர்மத்தின்} படி நடந்து கொள்வீராக.(21) புரோசனனின் செயலால் உண்டான விளைவில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, வசை {பழிச்சொல்} படிந்த கறை உம்மேல் உள்ளது. இப்போது, பாண்டவர்களிடம் அன்பாக நடந்து கொண்டு, அதைக் கழுவிக் கொள்வீராக.(22) ஓ ஏகாதிபதியே, பாண்டவர்களிடம் உமது அன்பான நடத்தை என்பது, குரு குலத்தைச் சார்ந்த நமது அனைவரின் உயிரையும் காத்து, நமக்குப் பெரிய நன்மையைத் தரும். அது க்ஷத்திரிய குலத்தின் வளர்ச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.(23) நாம் ஏற்கனவே துருபதனிடம் போரிட்டிருக்கிறோம்; இப்போது நாம் அவனைக் கூட்டாளியாக அடைய முடிந்தால், நமது தரப்புக்கு அது பலத்தையே சேர்க்கும்.(24) ஓ மன்னா, தசார்ஹர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களும், பலசாலிகளுமாவர். கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அவர்கள் அங்கேயே இருப்பார்கள். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கேயே நிச்சயம் வெற்றியும் இருக்கும் என்பதை அறிந்து கொள்வீராக.(25)
ஓ மன்னா, தேவர்களால் சபிக்கப்படாமல், சமரசம் மூலம் தடுக்க முடிந்ததைப் போர் மூலம் தடுக்க முற்பட்டால், அவர்களுக்குத் தேவர்களின் சாபம் கிடைக்காதா?(26) பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்த குடிமக்களும், மற்ற குடிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்து, அவர்களைக் காண ஆவலாக உள்ளனர். ஓ ஏகாதிபதி, அவர்களுக்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள்வீராக.(27) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் பாவிகள், முட்டாள்கள் மற்றும் சிறுவர்களாவர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்காதீர்.(28,29)) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் தவறால் நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவர் என்று அனைத்து அறங்களையும் கொண்ட உமக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேன்" என்றான் {விதுரன்}.(30)

ஆங்கிலத்தில் | In English |