Drona said, "Karna! you are evil" | Adi Parva - Section 206B | Mahabharata In Tamil
(விதுராகமன பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : துரோணர் கர்ணனுக்கு மறுமொழி கூறியது; கௌரவர்களின் அழிவைப் பற்றி எச்சரித்தது...
வைசம்பாயனர் தொடர்ந்தார், துரோணர் முடித்ததும், கர்ணன் மறுபடியும், "பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும் உமது செல்வத்தாலும், உமது கருணைகளாலும் அதிகம் கொழுத்துப் போய் இருக்கிறார்கள்[1]. இவர்களை எப்போதும் நீர் நம்பத்தகுந்த நண்பர்களாக மதிக்கிறீர். அப்படிப்பட்ட இவர்கள் இருவரின் ஆலோசனைகளும் உமது நன்மைக்கானதாக இல்லாமல் இருப்பது வேடிக்கையானது அல்லவா?(13) தீய நோக்கம் கொண்டு, தங்கள் இதயத்தின் தீமையை மறைத்து, நல்ல ஆலோசனை வழங்குவதாகச் சொல்பவர்களை ஞானமுள்ளோர் எப்படி அங்கீகரிப்பார்கள்?(14) கேடுகாலத்தில், நண்பர்களால் நிச்சயம் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது. அனைவரின் மகிழ்ச்சியோ, அல்லது நேர்மாறான நிலையோ அவர்களின் விதியைப் பொறுத்தே அமைகிறது.(15) ஞானமுள்ளவனும், முட்டாளும், (வயதில்) இளமையானவனும், முதுமையடைந்தவனும், கூட்டணியுள்ளவனும், கூட்டணி அற்றவனும் - ஆகிய அனைவரும் சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மகிழ்ச்சியற்றும் இருப்பதை எங்கும் காண்கிறோம்.(16)
பழங்காலத்தில் அம்பவீசன் என்ற ஒரு மன்னன் இருந்ததாக நாம் கேட்டிருக்கிறோம். அந்த மகதநாட்டுத் தலைவன் ராஜகிருஹம் என்ற தலைநகரைக் கொண்டிருந்தான்.(17) அப்படிப்பட்ட அவன் தனது காரியங்கள் எதையும் செய்யாது இருந்தான். காற்றைச் சுவாசிப்பது மட்டுமே அவனது முயற்சியாக இருந்தது. அவனது காரியங்கள் அனைத்தும் அமைச்சர்களின் கைகளில் இருந்தன.(18) மஹாகர்ணி என்ற அவனது அமைச்சன், அந்த நாட்டின் தலைமை நிர்வாகியாக ஆனான். அந்நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டவன் என்று தன்னைக் கருதிக் கொண்டு அந்த அமைச்சன், மன்னனை அவமதிக்கத் தொடங்கினான்.(19) அந்தப் பாவி, அந்த மன்னனுக்கு உரிய ராணிகள், செல்வங்கள், ஆட்சி உரிமைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.(20) ஆனால், இவற்றையெல்லாம் அடைந்தும் அவனது பேராசை தணியவில்லை. அஃது இன்னும் கொழுந்துவிட்டெரிந்தது. மன்னனுக்கு உரிய அனைத்தையும் கவர்ந்த அவன், அரியணையையும் கவர்ந்தான்.(21) ஆனால், அந்த ஏகாதிபதி தனது கடமைகளில் கவனமற்று இருந்தும், காற்றைச் சுவாசிப்பதை மட்டுமே செயலாகக் கொண்டிருந்தும் கூட, சிறந்தது அனைத்தையும் பெற்றும், அந்த அமைச்சனால் தனது முதலாளியின் நாட்டை அடைய முடியவில்லை என்று கேள்விப்படுகிறோம்.(22)
ஓ மன்னா, அந்த ஏகாதிபதியின் ஆட்சியுரிமை விதியின் கையில் இருந்தது என்பதைத் தவிர நாம் இதில் வேறு என்ன சொல்ல முடியும்?(23) எனவே, ஓ மன்னா, இந்த நாடு விதியால் உமக்கு அளிக்கப்பட்டது. இந்த முழு உலகமே உமக்கு எதிரியாக ஆனாலும், நிச்சயம் அஃது உம்மிடமே தொடர்ந்து இருக்கும். இருப்பினும், விதி வேறு விதமாகக் கட்டளையிட்டால், நீர் எவ்வளவு முயன்றாலும், அஃது உம்மிடம் இருக்காது.(24) ஓ கல்விமானே, இவையெல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து, உமது அமைச்சர்களின் நேர்மையைப் பற்றியோ, மற்ற குணங்களைப் பற்றியோ தீர்மானித்துக் கொள்வீராக. அவர்களில் யார் தீயவர்கள், யார் ஞானத்துடன் பேசுபவர்கள், நல்லதைச் சொல்பவர்கள் என்பதை உறுதி செய்து கொள்வீராக" என்றான் {கர்ணன்}”.(25)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் மறுமொழியாக, "நீ தீயவன் ஆனதால், உனது தீய நோக்கத்தின் காரணமாகவே இப்படிச் சொல்கிறாய் என்பதற்கு நீயே சான்று பகர்கின்றாய். பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்கவே[2], நீ எங்களிடம் குறை கண்டுபிடிக்கிறாய்.(26) ஆனால், ஓ கர்ணா, நான் சொன்னது அனைத்தும் குரு குலத்தின் வளமைக்காகச் சொன்னது என்பதை அறிந்து கொள்வாயாக. அவையெல்லாம், தீயதைக் கொண்டு வரும் என்று நீ மதித்தால், நமக்கு நல்லது எது என்பதை நீயே தீர்மானித்துக் கொள்வாயாக.(27) நான் சொன்ன நல்ல ஆலோசனைகள் பின்பற்றப்படவில்லையென்றால், அற்ப காலத்திற்குள் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்" என்றார் {துரோணர்}.(28)
[1] பெரியோரைக் கர்ணன் மதிக்காத போக்கு, இங்கிருந்தே தொடங்குகிறது. இதுவே பெரும்போர் வரை நீடிக்கிறது.

[2] கர்ணனின் இந்தப் பிழையை முதலிலேயே துரோணர் சுட்டிக் காட்டிவிடுகிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஆங்கிலத்தில் | In English |