Give me a husband! | Adi Parva - Section 171 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பாஞ்சாலம் செல்லும் வழியில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; திரௌபதியின் முன்ஜென்ம வரலாற்றைச் சொன்னது...
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமசேனன், அர்ஜுனன் மற்றும் இரட்டைர்களிடம் பாஞ்சால பயணத்தைப் பற்றி குந்தி பேசினாள். அவர்களனைவரும், "அப்படியே ஆகட்டும்" என்றனர்.(1) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, குந்தி தனது மகன்களுடன் அந்த (தனது வீட்டில் தங்க இடமளித்திருந்த) பிராமணரை வணங்கிவிட்டு, சிறப்புவாய்ந்தவனான துருபதனின் மகிழ்ச்சி நிறைந்த நகரத்தை {காம்பில்யத்தை} நோக்கிப் புறப்பட்டாள்".(2)
வைசம்பாயனர் சொன்னார், "சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் மாற்றுருவம் கொண்டு பிராமணரின் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஒரு சமயம், சத்தியவதி மைந்தரான வியாசர், அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.(3) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்கள், அவர் வருவதைக் கண்டு, எழுந்திருந்து, வரவேற்பதற்கு எட்டெடுத்து வைத்து, மரியாதையுடன் வணங்கி, அவரெதிரில் அமைதியாகக் கரங்கூப்பி நின்றனர்.(4) இப்படிப் பாண்டவர்களால் வழிபடப்பட்ட அந்த முனிவர் மிகுந்த மனநிறைவையடைந்தார். அவர்களை அமரச் சொல்லி, அவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசி,(5) "எதிரிகளை அழிப்பவர்களே, நீங்கள் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி அறம்சார்ந்த வாழ்வு வாழ்கிறீர்களா? நீங்கள் பிராமணர்களை வழிபடுகிறீர்களா? நீங்கள் தகுதியுடையோருக்கு மரியாதை செலுத்துவதில் பின்தங்கி இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்" என்று கேட்ட அந்த முனிவர்,(6) அறம் சார்ந்த பல வார்த்தைகளையும், விரும்பத்தக்க பல தலைப்புகளிலும் பேசி, அவர்களிடம்,(7) "ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில் வாழ்ந்த, ஒரு சிறப்பு வாய்ந்த முனிவருக்கு, ஓர் அழகான பெண் இருந்தாள். அவள் மெல்லிடையும், அழகான உதடுகளும், அழகான புருவங்களும், அழகான பெண்ணுக்கு உண்டான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தாள்.(8) அவள் தனது சொந்தச் (கடந்தபிறவிச்) செயல்களின் பலனாக நற்பேறற்றவளாக இருந்தாள். கற்புடையவளாக, அழகானவளாக இருந்தும், அந்த மங்கை ஒரு கணவனை அடைந்தாளில்லை.(9) துக்கமான இதயத்துடன், ஒரு கணவனை அடைய, அவள் துறவு நோன்பைப் பயில ஆரம்பித்தாள். தனது துறவின் மூலம் சங்கரனை (மஹாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(10)
அவர் அவளுக்கு நன்மை செய்ய விரும்பி, அந்தச் சிறப்புவாய்ந்த மங்கையிடம், "நீ அருளப்பட்டிரு! விரும்பிய வரத்தைக் கேள்! நீ விரும்பியதைக் கொடுக்க வந்திருக்கும் சங்கரன் நான்!" என்றார்.(11)
தனக்கு நன்மையைப் பெற விரும்பிய அந்த மாது, அந்தத் தலைமைத் தெய்வத்திடம் திரும்பத் திரும்ப, "அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரை எனக்குக் கணவராகக் கொடுப்பாயாக" என்று கேட்டாள்.(12)
அப்போது, பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த ஈசானன் (மஹாதேவன்), "ஓ அருளப்பட்டவளே, பாரத இளவரசர்களில் ஐவரை நீ கணவர்களாக அடைவாய்" என்றான்.(13)
இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, வரம் கொடுத்த அந்தக் கடவுளிடம், "ஓ தலைவா {கடவுளே}, உனது கருணையால் நான் ஒரு கணவரை மட்டுமே அடையவே விரும்புகிறேன்" என்றாள்.(14)
அதற்கு அந்தத் தெய்வம் அருமையான வார்த்தைகளால், "ஓ மாதே, 'எனக்குக் கணவனைக் கொடு' என்று முழுமையாக ஐந்து முறை நீ கேட்டாய்.(15) எனவே, வேறு பிறவியில் நீ ஐந்து கணவர்களை அடைவாய்" என்றான்.
பாரதக் குலத்தின் இளவரசர்களே! {பாண்டவர்களே} அந்தத் தெய்வீக அழகுடைய மங்கைதான் துருபதனின் பரம்பரையில் பிறந்திருக்கிறாள். பிருஷதனின் குலத்தில் வந்த அந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்களாகிய} உங்கள் அனைவருக்கும் மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள்.(16) எனவே, பலம் வாய்ந்தவர்களே, பாஞ்சாலர்களின் தலைநகர் சென்று அங்கே வாழ்வீராக. அவளை மனைவியாக அடைந்த பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை" என்றார்".(17)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அருள்நிறைந்த அந்தச் சிறப்பு வாய்ந்த பெரும்பாட்டன். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். அந்தப் பெருந்துறவி அவர்களை விட்டகன்று, எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார்".(18)

ஆங்கிலத்தில் | In English |