Kunti ready to travel! | Adi Parva - Section 170 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : ஏகச்சக்கர நகரத்தில் வசிக்கத்தொடங்கி அதிக நாட்கள் ஆனதை யுதிஷ்டிரனிடம் சொன்ன குந்தி; குந்தியின் ஆணைக்கிணங்க பாஞ்சாலம் செல்ல ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் சொன்னார், "பிராமணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகன்கள் {ஆசையெனும்} கணையால் தைக்கப்பட்டவர்கள் போல் இருந்தனர். நிச்சயமாக அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரர்கள் தங்கள் மன அமைதியை இழந்திருந்தனர்.(1) சலிப்படைந்தும், கவனக்குறைவுடனும் இருந்த தனது மகன்களைக் கண்ட உண்மையான குந்தி யுதிஷ்டிரனிடம்,(2) "இந்த பிராமணரின் இல்லத்தில் நாம் பல காலத்திற்கு வாழ்ந்துவிட்டோம். இந்த நகரத்தில், பல அழகான இடங்களைக் கண்டும், சிறப்பானவர்களிடம் பிச்சையெடுத்தும் நமது காலத்தை இனிமையாகக் கழித்துவிட்டோம்.(3) நாட்டின் இந்தப் பகுதியில் உள்ள காடுகளையும் அழகிய தோப்புகள் அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டும் கண்டுவிட்டோம்.(4)
ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, நாம் இந்த இடத்திற்கு மிகவும் பழகிவிட்டோம். புதியன எதையும் நாம் இதில் காணவில்லை.(5) ஓ குரு குல வீரர்களே, நீங்கள் இப்போது விரும்பினால் பாஞ்சாலம் செல்லலாம். நாம் அந்த நாட்டைக் கண்டதில்லை. அங்கே வாழ்வது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.(6) ஓ எதிரிகளை அழிப்பவர்களே, பாஞ்சாலனின் நாடானது, அதாவது பிராமணர்களுக்குத் தன்னை அர்ப்பாணித்துள்ள யக்ஞ்சேனனின் நாடு, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.(7) ஒரே இடத்தில் வாழ்வது நல்லதல்ல என்பது எனது கருத்து. எனவே, ஓ மகனே, நாம் அங்கே செல்வது நமக்கு நன்மை பயக்குமானால், நாம் அங்குச் செல்லலாமே" என்றாள்.(8)
இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "எங்களுக்கு நன்மை பயப்பதாக இருப்பினும், அல்லதாக இருப்பினும், உனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எங்கள் கடமையாகும். இருப்பினும் எனக்கு இளையவர்கள் அதை விரும்புகின்றனரா என்பது தெரியவில்லை. அதை அறிந்து கொள்வாயாக" என்றான்".(9)

ஆங்கிலத்தில் | In English |