The Story told by Vasishta to Parasara! | Adi Parva - Section 180 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் பேரனாகப் பராசரர் பிறந்தது; தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்டு உலகத்தை அழிக்க நினைத்த பராசரர்; பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை; செழிப்புடன் வாழ்ந்த பிராமணர்கள்; ஏழ்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்; பிராமணர்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்த க்ஷத்திரியர்கள்; ஒரு பிராமணப் பெண்ணின் தொடையில் இருந்து பிறந்த ஔர்வரின் பிரகாசத்தால் குருட்டுத் தன்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்...
கந்தர்வன் தொடர்ந்தான், "ஓ பார்த்தா, வசிஷ்டரின் ஆசிரமத்தில் வசித்து வந்த அதிருசியந்தி, சக்திரியின் குலத்தைத் தழைக்க வைக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அந்த மகன் இரண்டாவது சக்திரியைப் போன்றே அனைத்திலும் இருந்தான்.(1) ஓ பாரதர்களில் முதன்மையானவனே, அந்த முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர், தானே தமது பேரனின் பிறப்பிற்குப் பின் செய்யும் சடங்குகளைச் செய்வித்தார்.(2) தற்கொலை எண்ணத்திலிருந்த முனிவர் வசிஷ்டர், குழந்தை இருக்கிறது என்று அறிந்ததும் அதிலிருந்து விலகியதால், பிறந்த அந்தக் குழந்தை பராசரன் {இறந்தவரை உயிர் மீட்பது என்று பொருளாம்} என்று அழைக்கப்பட்டான்.(3) அந்த அறம்சார்ந்த பராசரர், தான் பிறந்த நாளிலிருந்து, வசிஷ்டரையே தனது தந்தையாக அறிந்து, அவரிடம் அப்படியே நடந்து கொண்டார்.(4) ஒரு நாள், ஓ குந்தியின் மகனே, அக்குழந்தை தனது தாய் அதிருசியந்தியின் முன்னிலையில், பிராமண முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரை "தந்தையே" என்று அழைத்தான்.(5)
அதிருசியந்தி, 'தந்தையே' என்று தனது மகன் மிகத் தெளிவாகவும், இனிமையாகவும் பேசியதைக் கண்டு கண்களில் நீர் நிறைந்து,(6) "ஓ குழந்தாய், இஃது உனது தாத்தா. இவரைத் தந்தை என்று அழைக்காதே. ஓ மகனே, ஒரு கானகத்தில் வைத்து, ராட்சசன் ஒருவனால் உனது தந்தை விழுங்கப்பட்டார்.(7) ஓ அப்பாவியே, நீ பெரும் மதிப்பு வைத்திருக்கும் இவர் உனது தந்தையில்லை. இந்த மதிப்பு மிக்கவர் உனது தந்தையின் தந்தையாவார்" என்றாள்.(8)
தனது தாயால் இப்படிச் சொல்லப்பட்டவரும், உண்மை பேசுபவருமான அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, பெரும் துன்பத்தில் ஆழ்ந்து, விரைவில் கோபமும் அடைந்து, {உலகத்தின்} மொத்தப் படைப்புகளையும் அழிக்கத் தீர்மானித்தார்.(9) ஓ அர்ஜுனா, பிரம்மஞானிகளில் முதன்மையானவரும், மித்ரவருணனின் மகனும், சிறப்பு வாய்ந்த பெரும் துறவியும், நிதர்சன உண்மையை அறிந்தவருமான வசிஷ்டர், உலகத்தை அழிக்க எண்ணம் கொண்டிருக்கும் தமது பேரனிடம், சில விவாதங்களை முன் வைத்து, அத்தீர்மானத்தை அவரது {தமது பேரனின்} மனத்திலிருந்து நீக்கினார்".(10)
"கந்தர்வன் தொடர்ந்தான், "பிறகு வசிஷ்டர், "கிருதவீர்யன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான். பூமியின் மன்னர்களில் காளையான அவன், வேதமறிந்த பிருகு வம்சத்தவரின் சீடனாக இருந்தான்.(11) ஓ குழந்தாய் {பராசரா}, அந்த மன்னன் சோம வேள்வியை முடித்து, பிராமணர்களுக்கு அரிசி மற்றும் பெரும் செல்வங்களைப் பரிசுகளாகக் கொடுத்து அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(12) அப்போது, அந்த ஏகாதிபதி சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வழித்தோன்றல்களுக்குச் செல்வம் தேவைப்பட்டது.(13) பிருகு குலத்தவர் வளமையாக இருப்பதை அறிந்த அந்த இளவரசர்கள், அந்த பிராமணர்களில் சிறந்தவர்களிடம் பிச்சைக்காரர்கள் வடிவில் சென்றனர்.(14) பிருகு வம்சத்தவரில் சிலர், தங்கள் செல்வங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்தனர், சிலர் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட அச்சத்தினால் (வேறு) பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(15) பிருகு குலத்தவரில் சிலர் க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வேண்டிய அளவுக்குக் கொடுத்தனர்.(16) இருப்பினும், சில க்ஷத்திரியர்கள், ஒரு குறிப்பிட்ட பார்கவரின் இல்லத்தில் நிலத்தைத் தோண்டிப் பெரும் செல்வப்புதையலை அடைந்தனர். அப்புதையல் அங்கிருந்த க்ஷத்திரியக் காளைகளால் கண்டெடுக்கப்பட்டது.(17)
பிருகு குலத்தவரின் வஞ்சகமான இந்த நடத்தையால் கோபம் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்த பிராமணர்கள் தங்களிடம் கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர்களை அவமதித்தனர். அந்தப் பெரும் வில்லாளிகள் பிருகு வம்சத்தவரைத் தங்கள் கூரியக் கணைகளால் கொல்லவும் தொடங்கினர். உலகத்தையே சுற்றி வந்த அந்த க்ஷத்திரியர்கள், பெண்களின் கருவறையில் இருக்கும் பிருகு வம்சத்தவரின் கருவைக் கூட கொன்றனர்.(18,19) பிருகு வம்சம் இப்படி அழிக்கப்பட்ட போது, அக்குலத்தின் பெண்கள் பயம் கொண்டு, யாரும் அணுக முடியாத இமயத்தின் மலைகளுக்குச் சென்றனர்.(20)
அவர்களில் அழகான தொடைகளைக் கொண்ட ஒருத்தி, தனது கணவனின் குலத்தைத் தழைக்க வைக்க, தனது தொடைகளில் ஒன்றில் பெரும் சக்தி கொண்ட ஒரு கருவைத் தாங்கினாள்.(21) இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட பிராமண மங்கையொருத்தி, அச்சத்தினால் பீடிக்கப்பட்டு, க்ஷத்திரியர்களிடம் சென்று உண்மையைச் சொன்னாள்.(22) இதையறிந்த க்ஷத்திரியர்கள் அக்கருவைக் கொல்லச் சென்றனர். அப்பெண் இருந்த இடத்திற்கு வந்த க்ஷத்திரியர்கள், பிரகாசமாக இருந்த அந்தத் தாயாகப் போகிறவளைக் கண்டார்கள்.(23) இதன்பேரில், தொடையிலிருந்த அக்குழந்தை, அவளது தொடையைக் கிழித்துக் கொண்டு, நடுப்பகல் சூரியன் போல வெளியே வந்து,(24) அந்த க்ஷத்திரியர்களின் கண் பார்வையைப் பறித்துத் திகைப்பூட்டினான்.
தங்கள் பார்வையை இழந்த அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர்.(25) தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன் அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம்,(26) "ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள் எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.(27) ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும் எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு நன்மையைச் செய்வீராக" என்றனர்".(28)

ஆங்கிலத்தில் | In English |