The Birth of Asmaka! | Adi Parva - Section 179 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : தற்கொலை முயற்சிகள் நிறைவேறாததால் மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்பிய வசிஷ்டர்; தன் மகனான சக்திரியின் மனைவி அதிருசியந்தி கருவுற்றிருப்பதைக் கண்டு தற்கொலை நினைவை விட்டகன்றது; மருமகளுடன் சென்று கொண்டிருந்த வசிஷ்டரைக் கொல்ல வந்த கல்மாஷபாதன்; கல்மாஷபாதனின் சாபம் தணிந்தது; வசிஷ்டருக்குக் கல்மாஷபாதனின் மனைவியிடம் பிறந்த அஸ்மகன்...
கந்தர்வன் தொடர்ந்தான், "பிள்ளைகள் இல்லாத தனது ஆசிரமத்தைக் கண்ட அந்த முனிவர், மீண்டும் பெரும் துயரம் அடைந்து அந்த இடத்தை விட்டு அகன்றார்.(1) அப்படி அவர் சுற்றித் திரிகையில், ஓ பார்த்தா, மழைக்காலத்தில் பெருகி ஓடிய ஒரு நதி, அதன் கரைகளில் இருந்த கணக்கிலடங்கா மரங்களையும், செடிகளையும் அடித்துச் செல்வதைக் கண்டார்.(2) ஓ குரு குலத்தோனே, இதைக் கண்ட அந்தத் துயரத்திலிருந்த முனிவர், தான் கண்டிப்பாக இதில் மூழ்கிப் போவோம் என்று எண்ணிப் பல கயிறுகளால் தன்னைக் கட்டிக் கொண்டு, தனது துயரத்தை நினைத்து வருந்தி, அந்தப் பெரும் நீரூற்றில் விழுந்தார்.(3,4) ஆனால், ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனா}, அந்த நீரூற்று அவரது கட்டுகளை அறுத்து, அவரைக் கரை ஒதுக்கியது.(5)
அந்த முனிவர் அந்தக் கரையிலிருந்து எழுந்து, தான் கட்டிய கட்டுகளை முழுவதுமாக அவிழ்த்தார். ஆர்ப்பாட்டத்தோடு ஓடிய அந்த நீரோட்டம் அவரது கட்டுகளை அறுத்ததால், அம்முனிவர் {வசிஷ்டர்} விபாசை[1] என்று அந்த ஆற்றை அழைத்தார்.(6) அந்த முனிவர் தான் கொண்ட துயரத்தால், ஓர் இடத்தில் தங்க முடியாதவரானார். அவர் மலைகளின் மேலும், நதிகளோடும், தடாகங்களோடும் திரியத் தொடங்கினார்.(7) அப்படிச் சுற்றித் திரிகையில், கொடூரமான முதலைகள் நிறைந்ததும், பயங்கரமானதுமான (இமயத்திலிருக்கும்) ஹைமாவதி என்ற ஆற்றைக் கண்டு அதில் விழுந்தார்.(8) ஆனால் அந்த ஆறு அந்த பிராமணரை, அணையாத நெருப்புக் குவியலாக நினைத்து, நூறு வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடியது, அது முதல் அந்த ஆறு சதத்ரு[2] என்று அழைக்கப்படுகிறது.(9)
காய்ந்த நிலத்தில் தன்னைக் கண்ட அந்த முனிவர், "என்னால் சுயமாக மரணிக்க முடியவில்லை" என்று சொல்லி, மீண்டும் தனது ஆசிரமத்திற்குச் சென்றார்.(10) கணக்கிலடங்கா பல மலைகளையும், நாடுகளையும் கடந்து, தனது ஆசிரமத்திற்குள் மறு பிரவேசம் செய்தார். அப்போது அவரது மருமகளான அதிருசியந்தியும் அவரைத் தொடர்ந்தபடி அங்கு வந்தாள்.(11)
அவள் தன்னை நெருங்கும்போது, அவருக்குப் பின்புறத்திலிருந்து பொருள் நிரம்பிய ஆறு அருளையும் (வேதாங்கங்கள்) {சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவற்றைக்} கொண்டு வேதம் ஓதும் அறிவார்ந்த ஒரு குரலைக் கேட்டார்.(12) அந்த ஒலியைக் கேட்ட அந்த முனிவர், "யார் என்னைத் தொடர்ந்து வருவது?" என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள், "நான் அதிருசியந்தி, சக்திரியின் மனைவி. நான் தவத்திற்கு என்னை அர்ப்பணித்திருந்தாலும், ஆதரவற்றவளாக இருக்கிறேன்" என்றாள்.(13) அவள் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், "மகளே, வேதங்களை அதன் அங்கங்களோடு உரைக்கும் சக்திரியின் குரலைப் போன்றே, ஒரு குரலை நான் கேட்கிறேன். அந்தக் குரல் யாருடையது?" என்று கேட்டார்.(14) அதற்கு அதிருசியந்தி, "நான் எனது கருவறையில், உமது மகன் சக்திரியின் குழந்தையைச் சுமந்து வருகிறேன். அவன் பனிரெண்டு வருடங்களாக அங்கு இருக்கிறான். வேதங்களை உரைப்பதாக நீர் கேட்கும் அந்தக் குரல் அந்த முனிவனுடையதே {குழந்தையினுடையதே}" என்றாள்".(15)
கந்தர்வன் தொடர்ந்தான், "அவரது மருமகளால் இப்படிச் சொல்லப்பட்ட சிறப்பு மிகுந்த வசிஷ்டர், மிகவும் மகிழ்ந்து, "ஓ, (எனது குலம் தழைக்க) ஒரு குழந்தை இருக்கிறது!" என்று சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்கினார்.(16) அந்தப் பாவமற்றவர், தனது மருமகளுடன் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அப்படி இருக்கையில், ஒரு நாள் ஒரு தனிமையான கானகத்தில் அந்த முனிவர் கல்மாஷபாதனைக் (ராட்சசனைக்) கண்டார்.(17) ஓ பாரதா, கொடிய ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த மன்னன், அம்முனிவரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு எழுந்து, அவரை விழுங்க எண்ணினான்.(18) தீய செயல் புரியும் அந்த ராட்சசனைக் கண்ட அதிருசியந்தி வசிஷ்டரிடம் கவலையும் பயமும் கலந்த குரலில்,(19) "ஓ சிறப்பு மிகுந்தவரே, மரணத்தைப் போன்ற அந்தக் கொடும் ராட்சசன், கையில் தண்டத்துடன் நம்மை நோக்கி வருகிறான்.(20) ஓ சிறப்பு வாய்ந்தவரே, ஓ வேதமறிந்தவரில் முதன்மையானவரே, இவ்வுலகத்தில் உம்மைத் தவிர வேறு எவராலும் இவனை அடக்க முடியாது.(21) ஓ சிறந்தவரே, இந்தப் பயங்கரத் தோற்றம் கொண்ட கொடும்பாவியிடம் இருந்து என்னைக் காப்பாற்றும். நிச்சயமாக அந்த ராட்சசன் நம்மை விழுங்கவே இங்கு வருகிறான்" என்றாள்.(22)
இதைக் கேட்ட வசிஷ்டர், "ஓ மகளே, அஞ்சாதே, எந்த ராட்சசனிடமும் அச்சம் தேவையில்லை. உடனடி ஆபத்தை நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இவன் ஒரு ராட்சசனே இல்லை.(23) இவன் பெரும் சக்தி கொண்டவனும், உலகத்தால் கொண்டாடப்பட்டவனுமான கல்மாஷபாதன் என்ற மன்னனாவான். அப்படிப்பட்டவன் இப்படிப் பயங்கரமான மனிதனாக இந்த வனத்தில் வசிக்கிறான்" என்றார்".(24)
கந்தர்வன் தொடர்ந்தான், "அவன் முன்னேறி வருவதைக் கண்டவரும், பெரும் சக்தி வாய்ந்தவரும், சிறப்பு மிகுந்தவருமான முனிவர் வசிஷ்டர், ஓ பாரதா {அர்ஜுனா} "ஹும்" என்ற தனது தொண்டை ஒலியால் அவனைத் தடுத்தார்.(25) அந்த முனிவர், அவன் மீது புனிதமான நீரைத் தெளித்து, சில மந்திரங்களைச் சொல்லி, அந்த ஏகாதிபதியை அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார்.(26) வசிஷ்டர் மகனின் {சக்திரியின்} சக்தியால் அந்த ஏகாதிபதி பனிரெண்டு வருட காலமாக, கிரகணத்தின்போது ஒரு கிரகத்தால் {ராகுவால்} பீடிக்கப்படும் சூரியனைப் போல பீடிக்கப்பட்டிருந்தான்.(27) ராட்சசனின் பிடியிலிருந்து விடுபட்ட அந்த ஏகாதிபதி அந்தக் கானகத்தில், மாலைநேரத்தில் மேகங்களுக்குப் பின் இருந்து ஒளிரும் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான்.(28) சுய நினைவை அடைந்த அம்மன்னன், அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் கூப்பிய கரங்களுடன்,(29) "ஓ சிறப்பு வாய்ந்தவரே, நான் சுதாசனின் மகன், உமது சீடன். ஓ முனிவர்களில் சிறந்தவரே, உமது விருப்பம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(30)
வசிஷ்டர், "எனது விருப்பம் ஏற்கனவே ஈடேறிவிட்டது. நீ இப்போதே உனது நாட்டுக்குத் திரும்பி, உனது குடிமக்களை {நல்லபடி} ஆள்வாயாக. ஓ மனிதர்களின் தலைவா, இனிமேல் பிராமணர்களை அவமதிக்காதே" என்று பதிலுரைத்தார்.(31)
அதற்கு அந்த ஏகாதிபதி! "ஓ சிறந்தவரே, நான் இனிமேல் மேன்மையான பிராமணர்களை அவமதிக்கமாட்டேன். உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இனி எப்போதும் பிராமணர்களை வழிபடுவேன்.(32) ஆனால், ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இக்ஷ்வாகு குலத்திற்கு நான் பட்ட கடனை அடைக்க என்ன வழி?(33) இக்ஷ்வாகு {இட்சவாகு} குலம் தழைப்பதற்காக, அழகும், சாதனைகளும், நன்னடத்தையும் கொண்ட ஒரு மகனை எனக்குக் கொடுப்பீராக" என்றான்".(34)
கந்தர்வன் தொடர்ந்தான், "இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வசிஷ்டர், "நான் உனக்குக் கொடுக்கிறேன்" என்று அந்தப் பெரும் வில்லாளியான ஏகாதிபதியிடம் சொன்னார்.(35) சில காலம் கழித்து, ஓ மனிதர்களின் இளவரசனே {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதியை அழைத்துக் கொண்டு, இவ்வுலகத்தில் அயோத்தி என்ற பெயரால் அழைக்கப்படும் அவனது தலைநகரத்திற்குச் சென்றார் வசிஷ்டர்.(36) அந்நாட்டுக் குடிமக்கள் குற்றமற்ற அவர்களை வரவேற்று மகிழ்ந்து, தங்கள் தலைவனை {கல்மாஷபாதனை} தேவர்களின் தலைவனைப் போல வரவேற்றனர்.(37) அந்த ஏகாதிபதி, வசிஷ்டருடன், நற்பேறு பெற்ற அந்த நகருக்குள் வெகு காலத்திற்குப் பிறகு நுழைந்தான்.(38) அயோத்தியின் குடிமக்கள், புரோகிதருடன் சேர்ந்து வரும் தங்கள் மன்னனை, மலைகளுக்குப் பின் உதிக்கும் உதயசூரியனைப் போலக் கண்டனர்.(39) அழகில் அனைவரிலும் மேன்மையான அந்த ஏகாதிபதி, இலையுதிர் காலச் சந்திரன், வானத்தை நிறைப்பதைப் போல, முழு அயோத்தியையும் தனது பிரகாசத்தால் நிறைத்தான்.(40)
அந்த அற்புதமான நகரத்தின் தெருக்களிளெல்லாம் நன்றாக நீர் தெளிக்கப்பட்டு, கூட்டிப் பெருக்கப்பட்டு, வரிசையாக அழகான கொடிகள் ஏற்றப்பட்டுச் சுற்றிலும் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதியின் இதயம் மகிழ்ந்தது. ஓ குரு குல இளவரசனே, அந்நகரமே மகிழ்ச்சியில் நிறைந்து, ஆரோக்கியமான குடிமக்களால் நிரம்பி, தேவர்களின் தலைநகரமாம் அமராவதியைப் போல இருந்தது.(41,42) அந்த அரசமுனி தனது தலைநகருக்குள் நுழைந்ததும், அம்மன்னனின் கட்டளையின் பேரில், அரசி வசிஷ்டரை அணுகினாள்.(43) அந்தப் பெரும் முனிவர் அவளிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, உயர்ந்த {தேவர்களின்} விதிப்படி அவளுடன் கலந்தார்[3].(44) சிறிது காலத்தில், அந்த அரசி கருவுற்ற பிறகு, அந்த முனிவர் {வசிஷ்டர்}, மன்னனின் மரியாதையான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(45) அந்த அரசி அக்கருவைத் தனது கருவறையில் பல காலங்களுக்குச் சுமந்தும், ஒன்றும் பிறக்கவில்லை என்பதை அறிந்த அவள், தனது வயிற்றைக் கற்துண்டால் {துண்டு கல்லால்} கிழித்தாள்.(46) அப்போது (அவள் கருத்தரித்து) பனிரெண்டு வருடங்கள் ஆகியிருந்த போது, பௌதன்யம் {பாண்டவ்யம்}[4] என்ற நகரத்தை உருவாக்கிய மனிதர்களில் காளையான அரச முனி அஸ்மகன் அவளுக்கு மகனாகப் பிறந்தான்" {என்றான் கந்தர்வன்}.
அந்த முனிவர் அந்தக் கரையிலிருந்து எழுந்து, தான் கட்டிய கட்டுகளை முழுவதுமாக அவிழ்த்தார். ஆர்ப்பாட்டத்தோடு ஓடிய அந்த நீரோட்டம் அவரது கட்டுகளை அறுத்ததால், அம்முனிவர் {வசிஷ்டர்} விபாசை[1] என்று அந்த ஆற்றை அழைத்தார்.(6) அந்த முனிவர் தான் கொண்ட துயரத்தால், ஓர் இடத்தில் தங்க முடியாதவரானார். அவர் மலைகளின் மேலும், நதிகளோடும், தடாகங்களோடும் திரியத் தொடங்கினார்.(7) அப்படிச் சுற்றித் திரிகையில், கொடூரமான முதலைகள் நிறைந்ததும், பயங்கரமானதுமான (இமயத்திலிருக்கும்) ஹைமாவதி என்ற ஆற்றைக் கண்டு அதில் விழுந்தார்.(8) ஆனால் அந்த ஆறு அந்த பிராமணரை, அணையாத நெருப்புக் குவியலாக நினைத்து, நூறு வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடியது, அது முதல் அந்த ஆறு சதத்ரு[2] என்று அழைக்கப்படுகிறது.(9)
[1] கட்டை அறுத்தது என்ற பொருளைக் கொண்ட சொல்.
[2] நூறாக ஓடியது என்ற பொருளைக் கொண்ட சொல்.
அவள் தன்னை நெருங்கும்போது, அவருக்குப் பின்புறத்திலிருந்து பொருள் நிரம்பிய ஆறு அருளையும் (வேதாங்கங்கள்) {சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவற்றைக்} கொண்டு வேதம் ஓதும் அறிவார்ந்த ஒரு குரலைக் கேட்டார்.(12) அந்த ஒலியைக் கேட்ட அந்த முனிவர், "யார் என்னைத் தொடர்ந்து வருவது?" என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள், "நான் அதிருசியந்தி, சக்திரியின் மனைவி. நான் தவத்திற்கு என்னை அர்ப்பணித்திருந்தாலும், ஆதரவற்றவளாக இருக்கிறேன்" என்றாள்.(13) அவள் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், "மகளே, வேதங்களை அதன் அங்கங்களோடு உரைக்கும் சக்திரியின் குரலைப் போன்றே, ஒரு குரலை நான் கேட்கிறேன். அந்தக் குரல் யாருடையது?" என்று கேட்டார்.(14) அதற்கு அதிருசியந்தி, "நான் எனது கருவறையில், உமது மகன் சக்திரியின் குழந்தையைச் சுமந்து வருகிறேன். அவன் பனிரெண்டு வருடங்களாக அங்கு இருக்கிறான். வேதங்களை உரைப்பதாக நீர் கேட்கும் அந்தக் குரல் அந்த முனிவனுடையதே {குழந்தையினுடையதே}" என்றாள்".(15)
கந்தர்வன் தொடர்ந்தான், "அவரது மருமகளால் இப்படிச் சொல்லப்பட்ட சிறப்பு மிகுந்த வசிஷ்டர், மிகவும் மகிழ்ந்து, "ஓ, (எனது குலம் தழைக்க) ஒரு குழந்தை இருக்கிறது!" என்று சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்கினார்.(16) அந்தப் பாவமற்றவர், தனது மருமகளுடன் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அப்படி இருக்கையில், ஒரு நாள் ஒரு தனிமையான கானகத்தில் அந்த முனிவர் கல்மாஷபாதனைக் (ராட்சசனைக்) கண்டார்.(17) ஓ பாரதா, கொடிய ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த மன்னன், அம்முனிவரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு எழுந்து, அவரை விழுங்க எண்ணினான்.(18) தீய செயல் புரியும் அந்த ராட்சசனைக் கண்ட அதிருசியந்தி வசிஷ்டரிடம் கவலையும் பயமும் கலந்த குரலில்,(19) "ஓ சிறப்பு மிகுந்தவரே, மரணத்தைப் போன்ற அந்தக் கொடும் ராட்சசன், கையில் தண்டத்துடன் நம்மை நோக்கி வருகிறான்.(20) ஓ சிறப்பு வாய்ந்தவரே, ஓ வேதமறிந்தவரில் முதன்மையானவரே, இவ்வுலகத்தில் உம்மைத் தவிர வேறு எவராலும் இவனை அடக்க முடியாது.(21) ஓ சிறந்தவரே, இந்தப் பயங்கரத் தோற்றம் கொண்ட கொடும்பாவியிடம் இருந்து என்னைக் காப்பாற்றும். நிச்சயமாக அந்த ராட்சசன் நம்மை விழுங்கவே இங்கு வருகிறான்" என்றாள்.(22)
இதைக் கேட்ட வசிஷ்டர், "ஓ மகளே, அஞ்சாதே, எந்த ராட்சசனிடமும் அச்சம் தேவையில்லை. உடனடி ஆபத்தை நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இவன் ஒரு ராட்சசனே இல்லை.(23) இவன் பெரும் சக்தி கொண்டவனும், உலகத்தால் கொண்டாடப்பட்டவனுமான கல்மாஷபாதன் என்ற மன்னனாவான். அப்படிப்பட்டவன் இப்படிப் பயங்கரமான மனிதனாக இந்த வனத்தில் வசிக்கிறான்" என்றார்".(24)
கந்தர்வன் தொடர்ந்தான், "அவன் முன்னேறி வருவதைக் கண்டவரும், பெரும் சக்தி வாய்ந்தவரும், சிறப்பு மிகுந்தவருமான முனிவர் வசிஷ்டர், ஓ பாரதா {அர்ஜுனா} "ஹும்" என்ற தனது தொண்டை ஒலியால் அவனைத் தடுத்தார்.(25) அந்த முனிவர், அவன் மீது புனிதமான நீரைத் தெளித்து, சில மந்திரங்களைச் சொல்லி, அந்த ஏகாதிபதியை அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார்.(26) வசிஷ்டர் மகனின் {சக்திரியின்} சக்தியால் அந்த ஏகாதிபதி பனிரெண்டு வருட காலமாக, கிரகணத்தின்போது ஒரு கிரகத்தால் {ராகுவால்} பீடிக்கப்படும் சூரியனைப் போல பீடிக்கப்பட்டிருந்தான்.(27) ராட்சசனின் பிடியிலிருந்து விடுபட்ட அந்த ஏகாதிபதி அந்தக் கானகத்தில், மாலைநேரத்தில் மேகங்களுக்குப் பின் இருந்து ஒளிரும் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான்.(28) சுய நினைவை அடைந்த அம்மன்னன், அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் கூப்பிய கரங்களுடன்,(29) "ஓ சிறப்பு வாய்ந்தவரே, நான் சுதாசனின் மகன், உமது சீடன். ஓ முனிவர்களில் சிறந்தவரே, உமது விருப்பம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(30)
வசிஷ்டர், "எனது விருப்பம் ஏற்கனவே ஈடேறிவிட்டது. நீ இப்போதே உனது நாட்டுக்குத் திரும்பி, உனது குடிமக்களை {நல்லபடி} ஆள்வாயாக. ஓ மனிதர்களின் தலைவா, இனிமேல் பிராமணர்களை அவமதிக்காதே" என்று பதிலுரைத்தார்.(31)
அதற்கு அந்த ஏகாதிபதி! "ஓ சிறந்தவரே, நான் இனிமேல் மேன்மையான பிராமணர்களை அவமதிக்கமாட்டேன். உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இனி எப்போதும் பிராமணர்களை வழிபடுவேன்.(32) ஆனால், ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இக்ஷ்வாகு குலத்திற்கு நான் பட்ட கடனை அடைக்க என்ன வழி?(33) இக்ஷ்வாகு {இட்சவாகு} குலம் தழைப்பதற்காக, அழகும், சாதனைகளும், நன்னடத்தையும் கொண்ட ஒரு மகனை எனக்குக் கொடுப்பீராக" என்றான்".(34)
கந்தர்வன் தொடர்ந்தான், "இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வசிஷ்டர், "நான் உனக்குக் கொடுக்கிறேன்" என்று அந்தப் பெரும் வில்லாளியான ஏகாதிபதியிடம் சொன்னார்.(35) சில காலம் கழித்து, ஓ மனிதர்களின் இளவரசனே {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதியை அழைத்துக் கொண்டு, இவ்வுலகத்தில் அயோத்தி என்ற பெயரால் அழைக்கப்படும் அவனது தலைநகரத்திற்குச் சென்றார் வசிஷ்டர்.(36) அந்நாட்டுக் குடிமக்கள் குற்றமற்ற அவர்களை வரவேற்று மகிழ்ந்து, தங்கள் தலைவனை {கல்மாஷபாதனை} தேவர்களின் தலைவனைப் போல வரவேற்றனர்.(37) அந்த ஏகாதிபதி, வசிஷ்டருடன், நற்பேறு பெற்ற அந்த நகருக்குள் வெகு காலத்திற்குப் பிறகு நுழைந்தான்.(38) அயோத்தியின் குடிமக்கள், புரோகிதருடன் சேர்ந்து வரும் தங்கள் மன்னனை, மலைகளுக்குப் பின் உதிக்கும் உதயசூரியனைப் போலக் கண்டனர்.(39) அழகில் அனைவரிலும் மேன்மையான அந்த ஏகாதிபதி, இலையுதிர் காலச் சந்திரன், வானத்தை நிறைப்பதைப் போல, முழு அயோத்தியையும் தனது பிரகாசத்தால் நிறைத்தான்.(40)
அந்த அற்புதமான நகரத்தின் தெருக்களிளெல்லாம் நன்றாக நீர் தெளிக்கப்பட்டு, கூட்டிப் பெருக்கப்பட்டு, வரிசையாக அழகான கொடிகள் ஏற்றப்பட்டுச் சுற்றிலும் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதியின் இதயம் மகிழ்ந்தது. ஓ குரு குல இளவரசனே, அந்நகரமே மகிழ்ச்சியில் நிறைந்து, ஆரோக்கியமான குடிமக்களால் நிரம்பி, தேவர்களின் தலைநகரமாம் அமராவதியைப் போல இருந்தது.(41,42) அந்த அரசமுனி தனது தலைநகருக்குள் நுழைந்ததும், அம்மன்னனின் கட்டளையின் பேரில், அரசி வசிஷ்டரை அணுகினாள்.(43) அந்தப் பெரும் முனிவர் அவளிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, உயர்ந்த {தேவர்களின்} விதிப்படி அவளுடன் கலந்தார்[3].(44) சிறிது காலத்தில், அந்த அரசி கருவுற்ற பிறகு, அந்த முனிவர் {வசிஷ்டர்}, மன்னனின் மரியாதையான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(45) அந்த அரசி அக்கருவைத் தனது கருவறையில் பல காலங்களுக்குச் சுமந்தும், ஒன்றும் பிறக்கவில்லை என்பதை அறிந்த அவள், தனது வயிற்றைக் கற்துண்டால் {துண்டு கல்லால்} கிழித்தாள்.(46) அப்போது (அவள் கருத்தரித்து) பனிரெண்டு வருடங்கள் ஆகியிருந்த போது, பௌதன்யம் {பாண்டவ்யம்}[4] என்ற நகரத்தை உருவாக்கிய மனிதர்களில் காளையான அரச முனி அஸ்மகன் அவளுக்கு மகனாகப் பிறந்தான்" {என்றான் கந்தர்வன்}.
[3] இது தெய்வீகமாகத் தீண்டுதல்; உடலுறவல்ல என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பிடப்படுகிறது.
[4] மன்மதநாததத்தரின் பதிப்பில் இது பாண்டவ்யம் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் போதனம் என்று சொல்லப்படுகிறது.
ஆங்கிலத்தில் | In English |